வில்லெம் ரோண்ட்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வில்ஹெம் ராண்ட்ஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லெம் ரோண்ட்கன்
Wilhelm Röntgen
வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன்
வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன்
பிறப்பு மார்ச்சு 27, 1845(1845-03-27)
லென்னெப், புரூசியா
இறப்பு பெப்ரவரி 10 1923 (அகவை 77)
மியூனிக், இடாய்ச்சுலாந்து
தேசியம் செருமனியின் கொடி செருமனி
துறை இயற்பியலாளர்
நிறுவனம் இசிட்ராசுபேர்கு பல்கலைக்கழகம்
ஓஃகெனைம்
கியீசன் பல்கலைக்கழகம்]]
வூர்ட்ஃசுபேர்க் பல்கலைக்கழகம்
மியூனிக் பல்கலைக்கழகம்
Alma mater ETH சூரிக்
சூரிக் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர் ஆகஸ்ட் குண்ட்
முக்கிய மாணவர் எர்மன் மார்ச்,
ஆப்ராம் இயோஃப்
அறியப்பட்டது ஊடுகதிர்கள்
பரிசுகள் 1901 இல் இயற்பியலில் நோபல் பரிசு
ரோண்ட்கனால் எடுக்கப்பட்ட ஆல்பேர்ட் ஃவான் கோல்லிக்கர் என்பவரின் கையின் ஊடுகதிர் அலைப் படிமம்

வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen, இடாய்ச்சு ஒலிப்பு: [ˈvɪlhɛlm ˈʁœntɡən];Wilhelm Conrad Röntgen, மார்ச் 27, 1845பெப்ரவரி 10, 1923) என்பவர் இடாய்ச்சுலாந்தைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்பு [தொகு]

வில்லெம் ரோண்ட்கன் மார்ச் 27, 1845 இல் இடாய்ச்சுலாந்தின் லென்னெப் என்ற இடத்தில் ஒரு துணி தயாரிக்கும் வியாபாரி ஒருவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். மார்ச் 1848 இல் வியாபார நிமித்தம் நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். வில்லெம் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை உட்ரெக்ட்டு தொழில்நுட்பக் கல்லுரியில் உயர் கல்வியையும் பயின்றார். பள்ளி ஆசிரியர் ஒருவரின் படத்தை அவருக்கு மரியாதை இல்லாதவாறு, இவருடன் பயின்ற மாணவ்ர் ஒருவர் வரைந்தார் என்றும், அவர் யார் என்று இவர் அடையாளம் காட்ட மறுத்தார் என்று இவரைக் கல்லுரியில் இருந்து வெளியேற்றினார்கள். பிறகு இவரால், பிற இடாய்ச்சு அல்லது டச்சுப் சிம்னாசியம் என்னும் பள்ளிகள் எதிலும் சேர இயலவில்லை[1].

1865 இல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பொலிடெக்னிக் கல்லூரியில் (ETH Zurich) சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869 இல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.

தொழில் [தொகு]

1874 இல் ரோண்ட்கன் இசுட்ராசுபேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். 1875 இல் ஓஃகெனைம் (Hohenheim), வூர்ட்டென்பர்கு (Württemberg)- இல் விவசாயக் கல்லூரியில் பேராசிரியரானார். 1876 இல் இசுட்ராசுபூர்க் திரும்பி அங்கு இயற்பியல் பேராசிரியரானார். 1879 இல் கெயிசன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் 1888 இல் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழத்திலும் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார். 1900 இல் மியூனிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதி வரையில் அங்கு இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார்.

குடும்பம் [தொகு]

  • மனைவி: அன்னா பேர்த்தா லூடுவிகு (1872 - 1919)
  • பிள்ளைகள்: யோசபீன் பேர்த்தா லூடுவிகு (வளர்ப்பு மகள், அன்னாவின் சகோதரர் மகள்)

விருதுகள் [தொகு]

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு இவருக்கு 1901 இல் வழங்கப்பட்டது. இப்பணப்பரிசு முழுவதையும் அவர் தனது பல்கலைக்கழகத்துக்கே வழங்கி விட்டார். தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் பெற அவர் மறுத்து விட்டதும் அல்லாமல் தான் கண்டுபிடித்த கதிர்களுக்கு தனது பெயரை சூட்டவும் அவர் மறுத்து விட்டார்.[மேற்கோள் தேவை].

படிமங்கள் [தொகு]

இவற்றையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. Friedman, Meyer; Friedland, Gerald W. (16 November 1998). Medicine's 10 Greatest Discoveries. New Haven, CT: Yale University Press. p. 115. ISBN 0300075987. 
  2. ஒலிப்பு: /rʌntˈɡɛniəm/ runt-gen-ee-əm

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_ரோண்ட்கன்&oldid=1347980" இருந்து மீள்விக்கப்பட்டது