வில்லெம் கெய்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) என்பவர் ஒரு கீழ்த்திசை நாடுகளின் மொழியறிஞர் ஆவார். குறிப்பாக இரானிய மற்றும் இந்திய மொழி குடும்பங்களின் பழமையான பண்பாடுகளை ஆய்வுநோக்கில் கற்றுச் சிறந்த இவர், பாளி மொழியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் சிங்களம், மாலைத்தீவு மொழி போன்றவற்றிலும் சிறப்பாற்றல் கொண்டவர். இவர் செருமன் நாட்டைச் சேர்ந்தவர். இவரே மகாவம்சம் நூலை மொழிப்பெயர்த்தவாரவர்.

இலங்கை வரலாற்றில்[தொகு]

இலங்கை வரலாற்றில் இவரது பெயர் அழியாதப் பெயராக நிலைத்து விட்ட ஒன்றாகும். 1895ம் ஆண்டு இலங்கைக்கு பயணித்த இவர் இலங்கை சிங்கள மொழியையும் கற்றுச் சிறந்தார்.[1]. இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்த இவர் 6ம் நூற்றாண்டுகளின் மகாநாம தேரர் எனும் பிக்குவினால் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலை பாளி மொழியில் இருந்து செருமன் மொழிக்கு 1908ம் ஆண்டு மொழிப்பெயப்பு செய்தார். அதன் பின்னர் 1912ம் ஆண்டு மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார்.[2][3] இந்த நூல் வரலாற்றாசிரியர்களிடையே மிகவும் பிரசித்திப்பெற்றதுடன், இலங்கை வரலாறு தொடர்பாக பல நூல்கள் வெளிவரவும் காரணமாகின. இதனை கெய்கர் மகாவம்சம் என்றழைப்போரும் உள்ளனர்.

1989ம் ஆண்டுகளின் இலங்கை அரசு, இவரது உருவ தபால் தலை வெளியிட்டு இவரை கௌரவப் படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.[4].

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_கெய்கர்&oldid=1360073" இருந்து மீள்விக்கப்பட்டது