விருபக்ஷ ராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜயநகரப் பேரரசு
சங்கம மரபு
ஹரிஹர ராயன் I 1336-1356
புக்கா ராயன் I 1356-1377
ஹரிஹர ராயன் II 1377-1404
விருபக்ஷ ராயன் 1404-1405
புக்கா ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபக்ஷ ராயன் II 1465-1485
பிரௌத ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கன் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ண தேவ ராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கா I 1572-1586
வெங்கடா II 1586-1614
ஸ்ரீரங்கா II 1614-1614
ராமதேவா 1617-1632
வெங்கடா III 1632-1642
ஸ்ரீரங்கா III 1642-1646

விருபக்ஷ ராயன் (கி.பி. 1404-1405) சங்கம மரபைச் சேர்ந்த, விஜயநகரப் பேரரசர்களில் ஒருவனாவான். பேரரசனாக இருந்த இரண்டாம் ஹரிஹரன் இறந்த பின்னர், விஜயநகரத்தின் அரசுரிமைக்காக அவனுடைய மகன்களான முதலாம் தேவ ராயன், இரண்டாம் புக்கா ராயன், விருபக்ஷ ராயன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. முடிவில் விருபக்ஷ ராயன் அரசனானான் எனினும், இவனால் நீண்ட காலம் அரசாள முடியவில்லை. சில மாதங்களிலேயே அவன் கொலை செய்யப்பட்டான்.

விருபக்ஷ ராயனின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியதானதால், அவனது ஆட்சி பற்றிச் சொல்லுவதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால், இவன் காலத்தில், கோவா, சாவுல் (Chaul), டாபோல் (Dabhol) உள்ளிட்ட ஏராமான நிலப்பரப்பை விஜயநகரம் இழந்துவிட்டதாகப் பயணி பெர்னாவோ நூனிஸ் (Fernao Nuniz) குறிப்பிட்டுள்ளார். மேலும் விருபக்ஷ ராயன் கொடூரமானவனாக இருந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாது பெண்களுடனும், குடியிலுமே காலத்தைக் கழித்ததாகவும் நூனிஸ் எழுதியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விருபக்ஷ_ராயன்&oldid=1554433" இருந்து மீள்விக்கப்பட்டது