யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விரலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அ 16 ஜி.பை விரலி

ஒரு விரலி USB 1.1. அல்லது 2.0 இடமுகப்புடன் ஒருங்கிணைந்த ஃபிளாஷ் மெமரி தரவு சேமிப்பு கருவியைக் கொண்டது. விரலிகள் ஃபிளாப்பி தகடுகளை விட சிறியதாகவும், 1 அவுன்ஸ் (28 கிராம்) எடையை விட குறைந்தவையாகவும், வெளியே எளிதில் எடுக்கவும், பல முறை தரவுகளை சேமிக்கக் கூடிய வகையிலும் இருக்கும்.[1] சேமிப்பு அளவுகள் ஒரு சில மெகாபைட்களில் இருந்து 256 கிகாபைட்கள் (GB)[2] வரை கூட இருக்கலாம். அளவில் தொடர்ந்து வளர்ச்சியும், அளவைப் பொறுத்து விலையும் மாறி வரும். சில 1 மில்லியன் எழுத அல்லது அழிக்கும் சுழற்சியை அனுமதிக்கின்றது.[3][4] இவை 10 வருடங்கள் வரை தரவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம்.[5]

ஃபிளாப்பி தகடுகள் எதற்காக உபயோகப்படுத்தப்பட்டனவோ அதே போலவே USB ஃபிளாஷ் தகடுகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றில் நகரும் பாகங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் இவை நம்பகத்தன்மை மிக்கவையாகவும், எளிதில் உடையாத வகையிலும், ஆயிரம் மடங்குகள் சேமிப்பு அளவு மிக்கவையாகவும், சிறியதாகவும், வேகம் மிக்கவையாகவும் உள்ளன. தோராயமாக 2005 ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான மடிக்கணினிகள் மற்றும் மேஜை கணினிகளோடு ஃபிளாப்பி தகடுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய கணினிகள் ஃபிளாப்பி தகடுகளை முற்றிலும் நிறுத்தி விட்டு விரலிகளுக்கு மாறிவிட்டன.

Unix போன்ற முறைகள், Linux, Mac OS X, Windows போன்ற நவீன இயக்க முறைகளுக்கு உகந்த USB அதிக சேமிப்பு தரத்தை ஃபிளாஷ் டிரைவ்கள் உபயோகிக்கின்றன. பெரிய ஆப்டிகல் தகடு டிரைவ்களை விட USB 2.0 விற்கு உகந்த USB டிரைவ்கள் அதிக தரவுகளை சேமிக்க மற்றும் வேகமாக தரவுகளை மாற்றவும் செய்யும் மற்றும் Microsoft Xbox 360 போன்ற பல மற்ற முறைகளாலும் படிக்க இயலும்.

ஒரு ஃபிளாஷ் டிரைவில் எதுவுமே இயந்திரத்தனமாக நகராது; டிரைவ் என்ற வார்த்தையே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், கணினிகள் ஃபிளாஷ்-டிரைவ் தரவை ஒரு இயந்திர தகடு டிரைவில் எப்படி தரவு படித்து எழுதுகின்றனவோ அப்படியே இதிலும் செய்கின்றன. கணினி செயற்படுத்தும் அமைப்பிலும் பயன்படுத்துபவர் இடைமுகப்பிலும் காணப்படும் சேமிப்பை மற்றொரு டிரைவ் என்றே கருதுகிறது.[4] ஃபிளாஷ் டிரைவ்கள் இயந்திரஙகளாக பார்க்கும்போது மிகவும் உறுதியானவையாக இருக்கின்றன. சுற்று மற்றும் கனெக்டர் உடையாத வரையில் இது எந்த அழுத்தத்தையும் தாங்கும் சக்தியுடையதாக உள்ளது.

ஒரு ஃபிளாஷ் டிரைவ் மின் துகள்கள் மற்றும் ஒரு USB இணைப்பு கருவி ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு சிறிய அச்சு செய்யப்பட்ட மின் தொடர்பு அட்டையை உள்ளடக்கி இருக்கும். இவை மின்சாரத்தால் காப்பிடப்பட்டு, பிளாஸ்டிக், இரும்பு அல்லது ரப்பரினால் ஆன பெட்டியில் பாதுகாக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக இதை ஒரு பை அல்லது சாவி கொத்தில் வைத்து எடுத்துச் செல்லலாம். USB இணைப்புக் கருவி ஒரு எடுக்கக்கூடிய மூடியால் பாதுகாக்கப்படலாம் அல்லது டிரைவின் உள்ளேயே இழுத்துக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கலாம். ஆனால், அது பாதுகாக்கப்படவில்லை என்றாலும் பாழாவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெருவாரியான ஃபிளாஷ் டிரைவ்கள் பொதுவான வகை-A USB இணைப்பை உபயோகிக்கின்றது,. இது ஒரு தனிப்பட்ட கனிணியில் ஃபிளாஷ் டிரைவை சொருக ஏதுவாக ஆக்குகிறது, ஆனால் மற்ற இடமுகப்புகளுக்கான டிரைவ்களும் உள்ளன.

பெருவாரியான விரலிகள் தங்களுக்கான மின்சாரத்தை USB இணைப்பில் இருந்தே பெற்றுக் கொள்ளும், அவற்றிற்கு தனியாக பேட்டரிகள் தேவைப்படாது. டிஜிட்டல் ஒலிதம் கருவியின் செயல்பாட்டோடு ஃபிளாஷ் டிரைவ் வகை சேமிப்பு இணைந்த கருவிகளுக்கு பாடல் கருவி வேலை செய்ய பேட்டரி தேவைப்படும்.

தொழில்நுட்பம்[தொகு]

மைக்ரோபிராஸசர் தொழில்நுட்பத்தின் recentவளர்ச்சிகளால் சாத்தியமான சிறிய அளவு மற்றும் குறைந்த மின்சாரத்தை செலவழித்தல், குறைந்த கட்டணம் என பல பழைய தொழில்நுட்பங்களை ஃபிளாஷ் மெமரி இணைக்கிறது. மெமரி சேமிப்பு முந்தைய தொழில்நுட்பங்களான EPROM மற்றும் EEPROM ஆகியவற்றை சார்ந்தது. இவை மிகக் குறைவான சேமிப்புத் திறனோடு இருந்தது. மேலும் எழுத மற்றும் படிக்க மிகவும் மெதுவாக மற்றும் அதிக மின்சாரம் தேவைப்படும் மின் இயக்க வழியும் தேவைப்படுவதாகவும் இருந்தது. மேலும், இதில் மறுமுறை எழுத, துணுக்கில் உள்ள அனைத்தையும் அழிக்க வேண்டும்.

அழிக்கப்படும் பகுதிகளை சிறிய "பலுக்களாக" உடைத்து மற்றவற்றை பாதிக்காத வகையில் ஒன்றை மட்டும் அழிக்கும் வகையில் வண்பொருள் வடிவமைப்பாளர்கள் பின்னர் EEPROMகளை கண்டுபிடித்தனர். ஒரு குறிப்பிட்ட மெமரி பகுதியின் உட்பொருட்களை மாற்றுவதில், அனைத்து பலுக்களையும் ஒரு ஆஃப்-சிப் மெமரிக்கு நகல் எடுத்தல், பலுக்களை அழித்தல், பஃபரில் உள்ள தரவுகளை தேவைப்படி மாற்றுதல், மற்றும் அதே பலுவில் மறுமுறை எழுதுதல் ஆகியவை அடங்கும். இதற்காக பெரிய அளவில் கனிணியின் ஆதரவு தேவைப்பட்டது மற்றும் PC-சார்ந்த EEPROM ஃபிளாஷ் மெமரி கனிணிகள் தங்களுக்கென்று செயல்படும் மைக்ரோபிராஸசர் முறையோடு பெரும்பாலும் வந்தன. ஃபிளாஷ் டிரைவ்கள் கிட்டத்திட்ட இவைகளின் சிறிய வடிவங்களாகும்.

தொடராக உபயோகப்படுத்தக் கூடிய சேமிப்புத் திறனை சாத்தியமாக்கக் கூடிய USBயால் ஆன செமி கண்டக்டர் நினைவு முறை போன்ற அதி வேக தொடர் தரவு இடமுகப்புகளின் வளர்ச்சி மற்றும் அதே நேரத்தில் சிறிய, அதி வேக, குறைந்த – மின் செயலுடைய மைக்ரோபிராஸசர் முறைகளின் வளர்ச்சியும் இவற்றை மிகச் சிறிய கணினிகளில் பொருத்துவதற்கு உதவின. தொடர் உபயோகத்திற்கு ஒத்த உபயோகத்தை விட மெமரி சிப்களுக்கு மிகக் குறைவான மின் இணைப்புகளே தேவைப்படுகின்றன. இது மல்டி-கிகாபைட் டிரைவ்களை தயாரிப்பதை எளிமையாக்கி உள்ளது.

கணினிகள் modernஃபிளாஷ் மெமரி முறைகளை வன் தகடுகள் போலவே உபயோகப்படுத்துகின்றன. வன் தகடுகளில் தகவல்கள் சேமிக்கப்படும் இடத்தின் மீது கட்டுப்பாட்டு முறைகளுக்கு முழு கட்டுப்பாடும் இருக்கும். உண்மையான EEPROMஐ எழுதுதல் மற்றும் அழிக்கும் முறைகள், முன்பு விவரிக்கப்பட்ட முறைகளைப் போலவே இருக்கும்.

பல குறைந்த-விலை MP3 கருவிகள் பொதுவான ஃபிளாஷ் கட்டுப்பாட்டு மெமரி கட்டுப்பாட்டு மைக்ரோ பிராஸசரோடு ஒரு கூடுதல் மென்பொருள் மற்றும் ஒரு பேட்டரியை கூட்டி அவை பாடல்களை ஒலிபரப்பும் கருவிகளாக செயல்பட செய்கின்றனர். பல இது போன்ற கருவிகள் பொதுவான ஃபிளாஷ் டிரைவ்களைப் போல எந்த வகையான கோப்புகளையும் சேமிப்பதற்குப் பயன்படுத்தலாம்.

வரலாறு[தொகு]

முதல் வணிகரீதியான உற்பத்தி பொருள்[தொகு]

ட்ரெக் டெக்னாலஜி மற்றும் IBM முதலில் வணிக ரீதியாக 2000 ஆம் ஆண்டில் முதல் USB ஃபிளாஷ் டிரைவ் விற்பனை செய்யத் தொடங்கியது. சிங்கப்பூரை சேர்ந்த டிரெக் டெக்னாலஜி “தம்ப் டிரைவ்” என்ற பெயரில் ஒன்றை விற்பனை செய்தது மற்றும் IBM அதனுடைய விற்பனை பொருளான “டிஸ்க் ஆன் கீ” (M-சிஸ்டம்ஸ் என்ற இஸ்ரேலிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது) என்ற இது போன்ற டிரைவ்களை வட அமெரிக்காவில் விற்பனை செய்தது. IBMன் USB ஃபிளாஷ் டிரைவ்கள் டிசம்பர் 15, 2000 முதல் கிடைக்கப்பெறும் வகையில் செய்யப்பட்டது மற்றும் இவற்றின் சேமிப்புத் திறன் 8 MB ஆகவும், அப்போது பொதுவாக இருந்த ஃபிளாப்பி தகடுகளை விட 5 மடங்கு அதிக சேமிப்பு அளவு உடையதாக இருந்தது.

2000 ஆம் ஆண்டு லெக்ஸார் ஒரு காம்பாக்ட் ஃபிளாஷ் (CF) அட்டையை USB இணைப்பு மற்றும் நினைவு அட்டை எழுதுதல்/படிக்கும் கருவி மற்றும் USB கேபிள் ஆகியவற்றோடு அறிமுகப்படுத்தியது. இதனால் USB hub இன் தேவை நீங்கியது.

1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில் USB ஃபிளாஷ் டிரைவ்களை கண்டுபிடித்ததாகக் கூறும் ஷென்சென் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான நெடாக் டெக்னாலஜிக்கு 2002 ஆம் ஆண்டு [6] இந்தக் கருவிக்காக சீனக் காப்புரிமை வழங்கப்பட்டது.[7]

ட்ரெக் டெக்னாலஜி மற்றும் நெடாக் டெக்னாலஜி இரண்டும் தங்களது காப்புரிமையை பாதுகாக்க முயன்றுள்ளன. ட்ரெக் சிங்கப்பூரில் ஒரு வழக்கில் வெற்றிபெற்றது.[8] ஆனால் UKவில் உள்ள ஒரு நீதிமன்றம் அதன் ஒரு UK காப்புரிமையை ரத்து செய்தது.[9] ட்ரெக் மற்றும் நெடாக்கின் காப்புரிமைகளை மதிக்காமல் USB ஃபிளாஷ் டிரைவ்களை தயாரிக்கும் PNY டெக்னாலஜீஸ்,[7] Lenovo,[10] aigo,[11] Sony,[12][13][14] மற்றும் தாய்வானின் Acer மற்றும் தாய் குவேன் எண்டர்பிரைஸ் கோ,[14] ஆகியவற்றிற்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தது.

இரண்டாவது சந்ததி[தொகு]

நவீன ஃபிளாஷ் டிரைவ்களில் USB 2.0 இணைப்பு சாத்தியம் உள்ளது. ஆயினும், தற்போது முழு 480 Mbit/s USB 2.0 அதி விரைவு குறிப்பீடு ஆதரவுகளை NAND ஃபிளாஷில் உள்ள தடங்கல்கள் காரணமாக அவை உபயோகிப்பதில்லை. தற்போது கிடைக்கக்கூடியதாக இருக்கும் விரைவான டிரைவ்கள் இரட்டை அலைவரிசை கட்டுப்பாட்டு கருவியை உபயோகிக்கின்றன. இருப்பினும், அவற்றில் தற்போதைய வன்தட்டுகளில் சாத்தியமாகும் மாற்று விகிதத்தை விட மிகக் குறைவாகவே இருக்கின்றன.

ஒட்டுமொத்த தகவல் மாற்று வேகம் அதிக அளவில் வித்தியாசப்படும் மற்றும் வாங்கும் முன் இவற்றை சோதிப்பது அவசியம். வேகங்கள் Mபைட்/விநாடி, Mபிட்/விநாடி அல்லது “180X” போன்ற (150 KiB/விநாடியின் 180 மடங்கு) ஆப்டிகல் டிரைவ் பெருக்கிகள். எடுத்துக்காட்டாக இருக்கின்ற வேக டிரைவ்கள் ஒரு விநாடிக்கு 30 மெகாபைட் வரை படிக்கக் கூடும் என்றும் அதன் பாதி வேகத்தில் எழுத முடியும் எனக் கூறுகின்றன. பழைய 12 Mbit/விநாடி “USB முழு வேக” கருவிகளின் திறன் அதிகபட்சமாக எல்லை 1 MB/விநாடி ஆக இருக்கின்றது.

வடிவம் மற்றும் செயல்படுத்துதல்[தொகு]

கருவியின் ஒரு பக்கத்தில் ஒரு ஒற்றை மேல் (male) வகை-ஏ USB இணைப்பு பொறுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பெட்டியின் உள்ளே ஒரு அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பலகை இருக்கும். இந்த பலகையில் சில மின் சர்க்யூட்கள் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான மேற்பரப்பில்-வைக்கப்படும் ஒருங்கிணைந்த சர்க்யூட்களும் (ICகள்) இருக்கும். பொதுவாக, இதில் ஒரு IC USB போர்ட்டுக்கு இடமுகப்பை அளிக்கும், மற்றொன்று ஆண்போர்டு மெமரி செயல்படுத்தும் மற்றும் இன்னொன்று ஃபிளாஷ் மெமரி ஆகும்.

ஹோஸ்ட்டுடன் தொடர்பு கொள்ள USB அதிக சேமிப்பு டிரைவ் வகை பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன.

style="background: #E7E7E7;" align="center" colspan=2
ஒரு பொதுவான USB ஃபிளாஷ் டிரைவின் உள் பாகங்கள்
1 USB இணைப்பு
2% USB அதிக அளவு சேமிப்பு கட்டுப்பாட்டு கருவி
3 சோதனை புள்ளிகள்
4% ஃபிளாஷ் மெமரி சிப்
5. கிரிஸ்டல் ஆஸிலேட்டர்
6 LED
7 எழுதுதலை-தடுக்கும் விசை மாற்று சாதனம் (ஸ்விட்ச்) (விருப்புரிமை)
8 இரண்டாவது ஃபிளாஷ் மெமரி சிப்பிற்கான இடம்

மிக முக்கியமான உட்பொருட்கள்[தொகு]

ஒரு ஃபிளாஷ் டிரைவில் பொதுவாக 4 பாகங்கள் உண்டு:

  • ஆண் (மேல்) வகை-ஏ USB இணைப்பு – பிரதான (ஹோஸ்) கணினிக்கு ஒரு இடமுகப்பை அளிக்கிறது.
  • USB அதிக சேமிப்பு கட்டுப்பாட்டு சாதனம் – USB ஹோஸ் கட்டுப்பாட்டு சாதனத்தை செயல்படுத்துகிறது. இந்த கட்டுப்பாட்டு சாதனத்தில் சிறிய அளவில் ஆண்சிப் ROM மற்றும் RAM உடன் கூடிய சிறிய மைக்ரோ கட்டுப்பாட்டு சாதனம் இருக்கும்.
  • NAND ஃபிளாஷ் மெமரி சிப் – தரவுகளை சேமிக்கும். டிஜிட்டல் புகைப்படக் கருவிகளிலும் NAND ஃபிளாஷ் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகிறது.
  • கிரிஸ்டல் ஆஸிலேட்டர் – கருவியின் முக்கிய 12 MHz கடிகார சைகையை உருவாக்குகிறது. கருவியின் தரவு வெளிப்பாட்டை பகுதி-பூட்டப்பட்ட சுழற்சிமூலம் கட்டுப்படுத்துகிறது.

கூடுதல் உட்பொருட்கள்[தொகு]

ஒரு பொதுவான கருவியில் இவையும் இருக்கலாம்:

  • ஜம்பர்கள் மற்றும் சோதனை ஊக்குகள் – ஃபிளாஷ் டிரைவ்கள் செய்யப்படும் போது அல்லது மைக்ரோ பிராஸசரில் குறியீடுகளை ஏற்றும் போது சோதனை செய்யப் பயன்படுகிறது.
  • LEDகள் – தரவு மாற்றங்களை குறிக்கின்றது அல்லது தரவு எழுதுதல் மற்றும் படித்தல்.
  • எழுதுதலை-தடுக்கும் விசை மாற்று சாதனங்கள் – மெமரியில் தரவு எழுத அனுமதித்தல் அல்லது தடுத்தல்
  • உபயோகப்படுத்தப்படாத இடம் – இரண்டாவது மெமரி சிப் பொருத்திக்கொள்ள இடம் அளிக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு ஒரு சேமிப்பு அளவு கருவிக்கு மேல் இருக்க தேவையான ஒற்றை அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பட்டை வைத்துக்கொள்ள இந்த இரண்டாவது இடம் அனுமதிக்கின்றது.
  • USB இணைப்பு கவர் அல்லது மூடி – சேதமடையும் அபாயத்தை தவிர்க்கின்றது, புழுதி மற்றும் மற்ற சேதமாக்கும் பொருட்கள் உட்செல்வதை தடுக்கிறது மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கின்றது. சில ஃபிளாஷ் டிரைவ்களில் உள்ளிழுக்கக்கூடிய USB இணைப்புகளை உபயோகிக்கின்றன. மற்றவற்றில் சுழல்பொருத்து (திரும்பக்கூடிய) ஏற்பாடு இருக்கும், இதனால் எதையும் வெளியே எடுக்காமல் USB இணைப்பை பாதுகாக்க முடியும்.
  • போக்குவரத்து உதவி – ஒரு சாவிகொத்தில் அல்லது லாண்ட்யார்டு (கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வகையில் உள்ள ஒரு கயிறு) உடன் இணைத்துக்கொள்ள உதவும் வகையில் மூடி அல்லது உடம்பில் ஒரு துவாரம் பொதுவாக இருக்கும். உடலை இணைக்காமல் மூடியை மட்டும் இணைத்தால், டிரைவ் தொலைந்து போக வாய்ப்பிருக்கிறது.
  • ஒரு மெமரி அட்டை படிக்கும் கருவியைப் போல சில டிரைவ்கள் விரிவாக்கக் கூடிய சேமிப்பை உள்ளே அடங்கும் மெமரி அட்டை மூலம் வழங்குகிறது.[15][16]

பொட்டலப்படுத்துதலின் அளவு மற்றும் அழகு[தொகு]

ஃபிளாஷ் டிரைவ்கள் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன, சில நேரங்களில் கனமானதாக அல்லது சிறிய விலைகுறைந்ததாக, வடிவங்கள் மற்றும் அளவுகள், அது போலவே இக்குரா சுஷி ஆகும்

சில தயாரிப்பாளர்கள் தங்களது பொருட்களை வித்தியாசப்படுத்திக் காட்ட அதிகமான வடிவங்களை உபயோகிக்கின்றனர். இதனால் USB இணைப்பை இணைப்பது கடினமாக்கப்படுகிறது. ஒரு கணினியில் உள்ள USB போர்ட் இணைப்புகள் அருகருகே இருப்பதனால், ஒரு USB இடத்தில் பிளாஷ் டிரைவ் இணைக்கப்படும் போது அது மற்றொன்றை தடுக்கும். இது போன்ற கருவிகள் தனியாக நீட்டிக்கும் கேபிள்களோடு விற்கப்பட்டால் மட்டும் அது USB சின்னம் கொண்டிருக்கலாம்.

கைக்கடிகாரங்கள், பேனாக்கள் மற்றும் சிவிஸ் மிலிட்டரி கத்தி போன்ற பொதுவாக கொண்டு செல்லப்படும் பொருட்களோடு USB ஃபிளாஷ் டிரைவ்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது; மற்றவை வித்தியாசமான பொம்மை கார்கள் அல்லது LEGO செங்கற்கள் போன்றவற்றோடு பொருத்தப்படுகிறது. சிறிய அளவு, எடுத்துச் செல்ல வசதியான மற்றும் குறைந்த விலை ஆகியவை USB ஃபிளாஷ் டிரைவ்களை கேஸ் மோல்டிங் செய்வதற்கு மிகுந்த பிரபலமான உபயோகப் பொருளாகி உள்ளன.

கனமான அல்லது பெரிதான வடிவமைக்கப்பட்டுள்ளவை, ஒரு USB இடத்தோடு இணைக்கப்படும் போது சரியாக செயல்பட முடியாமல் செய்து விடும். இந்த நிலையை மாற்ற ஒரு USB விரிவாக்க கேபிளை உபயோகிக்கலாம். இது போன்ற கேபிள்கள் USB உடன் பொருந்துபவையாக உள்ளது. ஆனால் USB தரத்தை ஒத்தவை அல்ல.[17][18]

கோப்பமைப்பு[தொகு]

பெரும்பாலான ஃபிளாஷ் டிரைவ்கள் FAT அல்லது FAT 32 கோப்பமைப்பு முறையில் முன்-வடிவமைக்கப்பட்டே கிடைக்கின்றன. இந்தக் கோப்பமைப்பு எல்லா இடத்திலும் பரவியிருப்பதால் USB ஆதரவுள்ள பெரும்பாலும் எந்த ஹோஸ்ட் சாதனத்தாலும் இதை அணுக முடிகிறது. தரநிலையான FAT பராமரிப்பு பயன்பாடுகள் (எ.கா. ScanDisk) சிதைந்த தரவுகளை மீட்கப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், ஹோஸ்ட் முறைமைக்கு ஃபிளாஷ் டிரைவானது ஒரு USB-இணைக்கப்பட்ட வன்-இயக்ககமாகவே தோன்றும் என்பதால் ஹோஸ்ட் முறைமை ஆதரிக்கும் எந்த கோப்பு அமைப்பிலும் டிரைவை மறுவடிவமைப்பு செய்துகொள்ள முடியும்.

டிஃப்ராக்மெண்ட்டிங்  : ஃபிளாஷ் டிரைவ்களை டிஃப்ராக்மெண்ட்டிங் செய்ய முடியும், ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் (ஃபிராக்மெண்ட்) செல்லும் இயந்திர அமைப்பு எதுவும் இல்லை என்பதால் இதனால் சிறிதளவே பயனுள்ளது. ஃபிளாஷ் டிரைவ்கள் பெரும்பாலும் பெரிய அகப் பிரிவு அளவைக் கொண்டிருக்கலாம், ஆகவே டிஃபிராக்மெண்ட் செய்வதென்பது சில பகுதிகளை மட்டும் அணுகவதே ஆகும். டிஃபிராக்மெண்ட்டிங் தேவையற்ற பல எழுதுதல் செயல்பாடுகளைச் செய்வதால் டிரைவின் ஆயுளைக் குறைக்கிறது.[4]

சமப் பகிர்ந்தளிப்பு  : சில கோப்புகள் எந்த குறிப்பிட்ட பகுதியையும் மையமாகக் கொள்ளாமல், நினைவக சாதனத்தின் முழுப் பகுதிக்கும் (எ.கா. , ஒரு கோப்பகத்திற்கு என்பது போல்) பயன்பாட்டைப் பகிர்ந்தளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன; எளிய ஃபிளாஷ் நினைவக சாதனங்களின் ஆயுளை இந்த சமமான பகிர்ந்தளிப்பு நீட்டிக்கிறது. சில USB ஃபிளாஷ் டிரைவ்கள் சாதனத்தின் ஆயுளை நீட்டிப்பதற்காக, அதன் மென்பொருள் கண்ட்ரோலரிலேயே உள்ளமைக்கப்பட்டவாறு இந்த செயலம்சத்தைக் கொண்டுள்ளன, மற்றவை அவ்வாறு கொண்டிருக்கவில்லை, ஆகவே இறுதிப் பயனரானவர் இந்தக் காரணத்திற்காக கோப்பமைப்பை மாற்றுவதற்கு முன்னர் சாதனத்தின் இந்த குறிப்பு விவரத்தைச் சோதித்துக்கொள்ள வேண்டும்.[5]

வன்-இயக்ககம்: பிரிவுகள் 512 பைட்டுகள் நீளமுடையவை, வன்-இயக்ககங்களுடனான இணக்கத்தன்மைக்காக, முதல் பிரிவானது ஒரு பிரதான தொடக்கப் பதிவு (மாஸ்டர் பூஸ்ட் ரெக்கார்டு) மற்றும் ஒரு பிரிப்பு அட்டவணை (பார்ட்டிஷன் டேபிள்) ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். ஆகவே, USB ஃபிளாஷ் டிரைவ் யுனிட்கள் வன்-இயக்ககங்களைப் போலவே பிரிப்பு செய்ய முடியும்.

போலி தயாரிப்புகள்[தொகு]

போலி USB ஃபிளாஷ் டிரைவ்கள் இருப்பது பொதுவானது. பொதுவாக இந்த குறைந்த கொள்ளளவுள்ள USB டிரைவ்கள் அதிக கொள்ளளவுள்ள டிரைவ்களைப் போலத் தெரியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டவை (எ.கா. ஒரு 2GB டிரைவ் 8GB டிரைவ் என்று கூறி விற்கப்படும்). இவற்றை ஒரு கணினியில் செருகும்போது அவை விற்கப்படும் போது கூறியதைப் போலவே அதிக கொள்ளளவு உடையனவாகவே காண்பிக்கப்படும், ஆனால் அவற்றில் தரவுகளை எழுதும் போது எழுதுதல் தோல்வியடையும் அல்லது டிரைவ் செயலிழக்கும் அல்லது முன்னரே உள்ள தரவை மேலெழுதிவிடும். போலி USB டிரைவ்களைக் கண்டறிய மென்பொருள் கருவிகள் உள்ளன[19].

பயன்கள்[தொகு]

தனிப்பட்ட தரவு கொண்டுசெல்லல்[தொகு]

ஆவணங்கள், படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற தனிப்பட்ட கோப்புகளைக் கொண்டு செல்வதும் சேமித்து வைப்பதுமே ஃபிளாஷ் டிரைவின் மிகவும் பொதுவான பயனாகும். ஆபத்துக்காலங்களிலும் பேரழிவு ஆயத்தத்திற்கும் மெடிக் டேக் ஃபிளாஷ் டிரைவ்களில் சில நபர்கள் மருத்துவ விழிப்பூட்டல் தகவல்களையும் சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.

தரவுகள், பயன்பாடு மற்றும் மென்பொருள் கோப்புகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்தல்[தொகு]

பல்வேறு சூழல்களிலும் (பாதுகாப்பாக அல்லது வேறு விதத்தில்) பரவலாக ஃபிளாஷ் டிரைவ்கள் பயன்படுத்துவதால், தரவு மற்றும் தகவல் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியப் பிரச்சனையாகவே உள்ளது. தரவுக்கான அதிகரிக்கப்பட்ட பாதுகாப்புக்காக, உயிர்ப்புள்ளியியல் மற்றும் மறையீடாக்கம் ஆகியவற்றின் பயன்பாடு பொதுவானதாகிவருகிறது; FreeOTFE மற்றும் TrueCrypt போன்ற OTFE முறைமைகள் இந்த விஷயத்தில் பயனுள்ளவை, ஏனெனில் அவை அதிக அளவிலான தரவுகளை ஊடுருவும் தன்மையுடன் பரிமாற்றம் செய்யக்கூடியவை. சில சந்தர்ப்பங்களில் ஒரு பாதுகாப்பான USB டிரைவ் வன்பொருள் அடிப்படையிலான மறையீடாக்க இயக்க அம்சத்தைப் பயன்படுத்தலாம், அது தரவுகளை வலிமையாக மறையீடாக்கம் செய்ய மென்பொருளுக்கு பதிலாக வன்பொருள் தொகுதிக்கூறைப் பயன்படுத்தலாம்.

கணினி நிர்வாகம்[தொகு]

ஃபிளாஷ் டிரைவ்கள் கணினி மற்றும் நெட்வொர்க் நிர்வாகிகளிடையே பிகவும் பிரபலமான பயனுடையவை, அவர்கள் தங்கள் உள்ளமை தகவல்கள் மற்றும் கணினிப் பராமரிப்பு, சிக்கல்தீர்த்தல் மற்றும் மீட்பு போன்றவற்றுக்குத் தேவையான மென்பொருள் ஆகியவற்றை ஏற்றிக்கொள்ள இவற்றைப் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்ட PCகளுக்கு பரிமாற்றம் மற்றும் மீட்பு மென்பொருளை ஏற்றுவதன் மூலம் ஹோஸ்ட் கணினியின் ஒரு பகுதியிலுள்ள தரவைக் காப்பகப்படுத்த உதவியாக இருக்கவும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். டிரைவ்களின் சேமிப்பளவு இப்போது மிகவும் அதிகரித்துள்ளதால், கணினியின் மறுநிறுவல் அல்லது புதுப்பித்தல் செயல்பாடுகளின் போது தேவைப்படுகின்ற எண்ணற்ற CD ROMகள் மற்றும் நிறுவிகளையும் இவை இடமாற்றம் செய்துவிட்டன.

பயன்பாடுகளைக் கொண்டுசெல்பவை[தொகு]

ஃபிளாஷ் டிரைவ்கள் ஹோஸ்ட் கணினியில் நிறுவும் அவசியம் இல்லாமலே இயங்கக்கூடிய பயன்பாடுகளைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தத்துவத்தின் படி, தனிப்பட்ட எந்த பயன்பாடும் இதே வகையில் பயன்படுத்தப்படும் நிலையில், பல நிரல்கள் தரவுகள், உள்ளமைவுத் தகவல்கள் போன்றவற்றை ஹோஸ்ட் கணினியின் வன்-இயக்ககம் மற்றும் ரெஜிஸ்ட்ரியில் சேமிக்கின்றன

U3 நிறுவனம் (தாய் நிறுவனம்: SanDisk மற்றும் பிற) ஒரு சிறப்பு ஃபிளாஷ் டிரைவிலிருந்து Microsoft Windows க்காக வடிவமைக்கப்பட்ட பயன்பாடுகளின் தனிப்பயன் பதிப்புகளை வழங்குவதற்காக டிரைவ் உற்பத்தியாளர்களுடன் பணிபுரிகிறது; U3-இணக்கமுள்ள சாதனங்கள் Windows இல் இயங்கும் ஒரு கணினியில் செருகப்பட்டதும் ஒரு மெனுவை தானாகவே ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. ஹோஸ்ட் கணினியில் எந்த தரவையும் விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், அதற்கேற்றவாறு U3 தளத்திற்காக பயன்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்தத் தளத்தில் ஆர்வமுள்ள ISVகளுக்கான மென்பொருள் சட்டக அமைப்பினையும் U3 வழங்குகிறது.

சீடோ என்பது ஒரு மாற்றுத் தயாரிப்பாகும், இயக்ககத்தில் இவற்றைப் பயன்படுத்தவும் இயக்கவும் Windows பயன்பாடுகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியது அவசியமில்லை என்பதே இவற்றுக்கிடையே உள்ள முக்கிய வேறுபாடாகும்.

இதே போல், நிறுவும் அவசியம் இல்லாமல் ஒரு ஃபிளாஷ் டிரைவிலிருந்து ஒரு மென்பொருளை இயக்க VMware ThinApp (Windowsக்கானது) அல்லது RUNZ (Linuxக்கானது) போன்ற பிற பயன்பாட்டுக் மெய்நிகராக்கல் தீர்வுகள் மற்றும் பெயர்த்தகு பயன்பாடு உருவாக்கிகளையும் பயன்படுத்தலாம்.

பல்வேறு பரந்துபட்ட இலவசமாகவே கிடைப்பதும் ஹோஸ்ட் கணினியின் இயக்ககங்களில் அல்லது ரெஜிஸ்ட்ரியில் எதையும் சேமிக்கும் அவசியமின்றி Windows ஐ இயக்கும் கணினிகளில் இயங்கக்கூடியதுமான பெயர்த்தகு பயன்பாடுகளை, பெயர்த்தகு மென்பொருளின் பட்டியலில் காணலாம்.

கணினி தடயவியல் மற்றும் சட்ட அமலாக்கம்[தொகு]

Microsoft உருவாக்கிய Computer Online Forensic Evidence Extractor (COFEE) பயன்பாட்டைக் கொண்டு செல்வதற்கான பயன்பாடு கொண்டு செல்லும் அம்சமாக USB ஃபிளாஷ் டிரைவைப் பயன்படுத்தியது, அதன் பயனின் சமீபத்திய முன்னேற்றமாகும். COFEE என்பது கையகப்படுத்தப்பட்ட குற்றவாளிகளின் கணினிகளிலிருந்து டிஜிட்டல் ஆதாரங்களைத் தேடிப் பிரித்தெடுப்பதற்கான பயன்பாடுகளின் தொகுப்பாகும்.[20] எவ்விதத்திலும் இந்த தடயவியல் மென்பொருளானது ஆய்வு செய்யப்படும் கணினியின் தகவல் எதனையும் மாற்றியமைக்கக்கூடாது; பிற தடயவியல் மென்பொருள் தொகுப்புகள் CD-ROM அல்லது DVD-ROM ஆகியவற்றிலிருந்து இயங்குபவை, ஆனால் அவை இயங்குவதற்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஊடகத்தில் அவற்றில் தரவுகளைச் சேமிக்க முடியாது (இருப்பினும் புற இயக்ககங்கள் அல்லது மெமரி கார்டுகள் போன்ற இணைக்கப்பட்ட பிற சாதனங்களில் தரவை எழுதக்கூடும்).

இயக்க முறைமைகளைத் தொடங்குதல்[தொகு]

தற்போதைய பெரும்பாலான PC ஃபர்ம்வேர் USB டிரைவிலிருந்து கணினியைத் தொடங்குவதை(பூட்டிங்) அனுமதிக்கின்றன, இதனால் ஒரு தொடங்கக்கூடிய(பூட்டபில்) ஃபிளாஷ் டிரைவ் மூலமாக இயக்க முறைமையைத் தொடங்க முடிகிறது. அது போன்ற ஒரு உள்ளமைப்புக்கு Live USB என்று பெயராகும்.

Live USB ஐ பொதுவான பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்த முடியும் என்ற வேளையில், அளவு மற்றும் நினைவக அமைப்பு ஆகியவற்றால் மாற்று அம்சங்களுடன் ஒப்பிடுகையில் இவை மோசமானவையாகவே கருதப்படுகின்றன. அவை பெரும்பாலும் சிறப்பு அவசியங்கள் அல்லது தற்காலிகப் பணிகள் போன்றவைக்கு மட்டுமே பொருத்தமானவை, எடுத்துக்காட்டுகள் பின்வருவன:

  • குறைந்தபட்சமானவற்றை ஏற்றுவதற்கு, உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான கடினப்படுத்தப்பட்ட கெர்னலுக்கு (எ.கா. நெட்வொர்க் ரௌட்டர், ஃபயர்வால்).
  • இயக்க முறைமை நிறுவல் அல்லது டிஸ்க் குளோனிங் செயல்பாடுகளில் உதவுதல், பெரும்பாலும் ஒரு நெட்வொர்க்கில் இந்த செயல்கள் நிகழ்கின்றன.
  • பிரதான இயக்க முறைமை ஏற்றப்படாமலே வைரஸ் சுத்தப்படுத்தல், தாழ் நிலை தரவு பழுதுநீக்கம் போன்ற பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு.

வின்டோஸ் விஸ்டா (Windows Vista) மற்றும் வின்டோஸ் 7 ரெடிபூஸ்ட் (Windows 7 ReadyBoost)[தொகு]

Windows Vista மற்றும் Windows 7 இல், ReadyBoost அம்சமானது இயக்க முறைமை நினைவகத்தை அதிகரிக்க சில ஃபிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கின்றது (இருப்பினும் Windows Vista இன் ReadyBoost செயல்திறன் ஃபிளாஷ் நினைவகத்தின் 4 GB மட்டுமே என்ற வரம்புக்குட்பட்டது.)[21]

ஆடியோ பிளேயர்கள்[தொகு]

பல நிறுவனங்கள் சிறிய திட-நிலை டிஜிட்டல் ஆடியோ பிளேயர்களை தயாரிக்கின்றன, மேலும் அவை அவற்றுடன் ஒலி வெளியீடு மற்றும் எளிய பயனர் இடைமுகம் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஃபிளாஷ் டிரைவ்களையும் தயாரிக்கின்றன. Creative MuVo, Philips GoGear மற்றும் iPod shuffle ஆகியவை இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்த பிளேயர்களில் சில, உண்மையான USB ஃபிளாஷ் டிரைவ்களும் அதே நேரத்தில் மியூஸிக் பிளேயர்களும் ஆகும்; மற்றவை பொதுவான தரவு சேமிப்பு அம்சங்களை ஆதரிப்பதில்லை.

சிறிய பிளேயர்களில் பெரும்பாலானவை, நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட ரிச்சார்ஜபிள் பேட்டரியால் இயங்குகின்றன, அவற்றை USB இடைமுகத்திலிருந்து சார்ஜ் செய்ய முடியும்.

இசை சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்தல்[தொகு]

டிஜிட்டல் ஆடியோ கோப்புகள் மற்ற கோப்புகளைப் போலவே ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பப்பட முடியும், மேலும் அவற்றை இணக்கமான மீடியா பிளேயரைக் (DRM-பூட்டிய கோப்புகளுக்கான எச்சரிக்கையுடன்) கொண்டு இயக்கவும் முடியும். மேலும், இல்லங்களுக்கான பெரும்பாலான Hi-Fi மற்றும் கார் ஸ்டீரியோ ஹெட் யுனிட்கள் இப்போது USB போர்ட் வசதியுடனே வருகின்றன. இதனால் ஒரு USB ஃபிளாஷ் டிரைவில் உள்ள பல்வேறு வடிவமைப்புகளில் உள்ள மீடியா கோப்புகளை அந்தந்த வடிவமைப்புகளை ஆதரிக்கும் சாதனங்களின் வழியாக நேரடியாக இயக்க முடிகிறது.

கலைஞர்கள் தங்கள் படைப்புகளை USB ஃபிளாஷ் டிரைவ்களாகவே வழங்கினர் அல்லது விற்றனர், இதற்கான முதல் எடுத்துக்காட்டு நிகழ்வானது 2004 இல் நிகழ்ந்தது, அப்போது ஜெர்மானிய இசைக்குழு WIZO, அதன் ஆல்பமான "Stick EP" ஐ USB டிரைவாக மட்டுமே வெளியிட்டது. அதில் ஐந்து உயர்-பிட்வீத MP3களுடன் ஒரு வீடியோ, படங்கள், பாடல் வரிகள் மற்றும் கிட்டார் அட்டவணை ஆகியனவும் இருந்தன. அதைத் தொடர்ந்து, கான்யே வெஸ்ட்,[22] நைன் இன்ச்ச் நெயில்ஸ், கிளி மினோகு[23] மற்றும் ஆயுமி ஹமாசக்கி [24] ஆகிய குழுக்களும் தங்கள் இசைகளையும் விளம்பரங்களையும் USB ஃபிளாஷ் டிரைவ்களிலேயே வெளியிட்டனர்.

ஆர்கேடுகளில்[தொகு]

ஆர்கேடு கேமான இன் த க்ரூவ் என்ற விளையாட்டிலும் மிகவும் பொதுவாக இன் த க்ரூவ் 2 இலும், உயர் ஸ்கோர்கள், ஸ்கிரீன்ஷாட்கள், டேன்ஸ் எடிட்கள் மற்றும் அமர்வு முழுமைக்குமான கோம்போ இசை ஆகியவற்றைப் பரிமாற்ற ஃபிளாஷ் டிரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன. மென்பொருள் மறுஆய்வு 21 (R21) இன் படி, போட்டியாளர்கள் இந்த அம்சம் உள்ள எந்த சாதனத்திலும், தனிப்பயன் பாடல்களையும் சேமித்து வைக்கவும் இயக்கவும் முடியும். ஃபிளாஷ் டிரைவ்கள் பயன்படுத்துவது பொதுவானதாகிவிட்ட நிலையில், அது Linux க்கு இணக்கமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஆர்கேடு கேம்களின் பம்ப் இட் அப் NX2 மற்றும் பம்ப் இட் அப் NXA ஆகிய விளையாட்டுகளில், பூட்டு நீக்கப்பட்ட பாடல்களுக்கான "சேவ் ஃபைலாக" சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஃபிளாஷ் டிரைவ் பயன்படுத்தப்பட்டது, மேலும் அது கேமின் வேர்ல்டு மேக்ஸ் மற்றும் பிரெயின் ஷவர் பிரிவுகளிலும் இடம்பெற்றது.

ஆர்கேடு கேமான டான்ஸ் டான்ஸ் ரெவல்யூஷன் X இல், அதன் சோனி பிளேஸ்டேஷன் 2 உடன் தயாரிப்பிலிருந்து இணைப்பு அம்சமாக இருக்க வேண்டிய அவசியத்திற்காக பிரத்யேகமான USB ஃபிளாஷ் டிரைவ் கொனாமியால் தயாரிக்கப்பட்டது.

பிராண்ட் மற்றும் தயாரிப்பு விளம்பரம்[தொகு]

விலை குறைந்த ஃபிளாஷ் டிரைவ்கள் கிடைப்பதால், அவற்றை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிகிறது, குறிப்பாக கணினி மற்றும் தொழில்நுட்ப தொழிற்துறை வட்டங்களில் இது சாத்தியமாகிறது (எ.கா. தொழில்நுட்பம் ட்ரேட் ஷோஸ்). அவை இலவசமாக வழங்கப்படலாம், மொத்த விலையை விடவும் குறைந்த விலையில் விற்கப்படலாம் அல்லது வேறு பிற தயாரிப்புகளை வாங்கும் போது அதற்கான சலுகையாக வழங்கப்படலாம்.

வழக்கமாக, அது போன்ற டிரைவ்கள் நிறுவனத்தின் லோகோவுடன் தனிப்பயன் முத்திரையிட்டே கிடைக்கும், அது மனப்பகிர்வு மற்றும் பிராண்ட் விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான ஒரு வகை விளம்பரப்படுத்தலாகும். டிரைவ் காலி டிரைவாக இருக்கலாம் அல்லது சில படங்கள், ஆவணங்கள் வலை இணைப்புகள் Flash அனிமேஷன் அல்லது பிற மல்டிமீடியா உள்ளடக்கத்துடன் இலவச அல்லது விளக்க மென்பொருள் ஆகியவற்றையும் கொண்டிருக்கலாம். சில முன்-ஏற்றப்பட்ட டிரைவ்கள் படிக்க மட்டுமே கூடியன, மற்றவை ஒரு பகுதி படிக்க மட்டுமே ஆனதும் மற்றும் ஒரு பகுதி எழுதக்கூடியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இரட்டை-பிரிப்பு டிரைவ்கள் மிகவும் விலை உயர்ந்தவை.

Microsoft Windows தானியக்கம்(ஆட்டோரன்) அம்சத்தைப் பயன்படுத்தி ஃபிளாஷ் டிரைவ்களை செருகிய உடனடியாக அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள விளக்கங்கள், வலைத்தளங்கள், கட்டுரைகள் மற்றும் பிற மென்பொருள் ஆகியவற்றைத் தொடங்குமாறு அவற்றை அமைக்க முடியும்.[25] தானியங்கும் மென்பொருள் இதே போல் அனைத்து கணினிகளிலும் இயங்கும் என்று கூற முடியாது, மேலும் பாதுகாப்பை முக்கியமாகக் கருதும் பயனர்களால் இந்த அம்சம் பொதுவாக முடக்கப்பட்டிருக்கும்.

மறுபிரதி[தொகு]

சில மதிப்புக்கூட்டு மறுவிற்பனையாளர்கள் இப்போது ஃபிளாஷ் டிரைவை, சிறு வணிகத்தின் ஆயத்தத் தயாரிப்பு தீர்வுகளின் (எ.கா. விற்பனைப் புள்ளி அமைப்புகள்) ஒரு பகுதியாகப் பயன்படுத்துகின்றனர். டிரைவானது ஒரு மறுபிரதி எடுக்கும் மீடியமாகப் பயன்படுத்தப்படுகிறது: வணிகம் முடிந்த பிறகு, ஒவ்வொரு நாள் இரவும் டிரைவ் செருகப்பட்டு, ஒரு தரவுத்தள மறுபிரதி டிரைவில் சேமிக்கப்படுகிறது. மாற்றாக, வணிகம் நடக்கும் போது நாள் முழுவதும் டிரைவ் செருகியே இருக்கும், அவ்வப்போது தரவுத்தளம் புதுப்பிக்கப்படலாம். இரு முறைகளிலும் டிரைவானது இரவு அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

  • இது இறுதிப் பயனருக்கு மிகவும் எளியதாகும், மேலும் இதை செய்வது சாத்தியமே ஆகும்;
  • டிரைவானது சிறியதும் வசதியானதும் ஆகும், பாதுகாப்புக்காக பெரும்பாலும் இதை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதே வழக்கம்;
  • டிரைவானது, டேப்களை விடவும் எந்திரவியல் செயல்களினாலும் மேலும் காந்தவியல் ரீதியாகவும் எளிதில் உடையக்கூடியனவல்ல;
  • கொள்ளளவானது பெரும்பாலும் முக்கிய தரவுகளின் மறுபிரதிப் படங்களுக்குப் போதிய அளவு அதிகமாகவே உள்ளன;
  • மேலும் ஃபிளாஷ் டிரைவ்கள் மற்ற பிற மறுபிரதி அமைப்புகளை விட மிகவும் விலை குறைந்தவை.

இந்த சிறிய சாதனங்களை தொலைத்துவிடுவதும் மிக எளிதாகும், உரிமையற்ற நபர்கள் கள்ளத்தனமாக மறுபிரதியெடுக்கவும் இதில் வாய்ப்புள்ளது.

அனுகூலங்களும் தீமைகளும்[தொகு]

அனுகூலங்கள்[தொகு]

ஃபிளாஷ் டிரைவ்களில் சேமிக்கப்படும் தரவுகள் கீறல்கள் மற்றும் தூசி ஆகியவற்றால் பாதிக்கப்படாதவை, மேலும் ஃபிளாஷ் டிரைவ்கள் எந்திரவியல் ரீதியாக மிகவும் உறுதியானவை, இதனாலேயே அவற்றை எளிதில் தரவுகளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தவும் அவற்றை எப்போதும் கைகளிலேயே தயாராக வைத்திருக்கவும் முடிகிறது. பெரும்பாலான தனிநபர் கணினிகள் USB ஆதரவு கொண்டவைas of 2009.

ஃபிளாஷ் டிரைவ்கள் மற்ற பல அகற்றக்கூடிய மீடியாவை விடவும் தரவுகளை மிகவும் அடர்த்தியாக சேமிக்கின்றன. 2009 இன் மத்தியில், 256 GB டிரைவ்கள் கிடைத்தன, அவை ஒரு DVD அல்லது ப்ளூ-ரே டிஸ்கை விட பல மடங்கு தரவுகளைச் சேமிக்கும் திறன் கொண்டவையாக இருந்தன.

வன்-இயக்ககங்களுடன் ஒப்பிடுகையில், ஃபிளாஷ் டிரைவ்கள் குறைந்த அளவு மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன, உடையக்கூடிய நகரும் பகுதிகளைக் கொண்டிருக்கவில்லை, மேலும் குறைந்த கொள்ளவுக்கானவை மிகவும் லேசாகவும் சிறியனவாகவும் உள்ளன.

ஃபிளாஷ் டிரைவ்கள் USB மொத்த சேமிப்பக சாதன வகையைச் செயல்படுத்துகின்றன, ஆகவே மிகவும் சமீபத்திய இயக்க முறைமைகளும் எந்த சாதன இயக்கிகளையும் நிறுவாமலேயே அவற்றைப் படிக்கவும் அவற்றில் தரவுகளை எழுதவும் முடியும். ஃபிளாஷ் டிரைவ்கள், பின்னணியில் உள்ள பல்வேறு ஃப்ளாஷ் நினைவக சாதனங்களின் சிக்கலான செயல்படுத்தல் விவரங்களை மறைத்து, எளிய ப்ளாக்-கட்டமைப்புடன் கூடிய லாஜிக்கல் யூனிட்டை ஹோஸ்ட் இயக்க முறைமைக்கு வழங்குகின்றன. இயக்க முறைமையானது எந்த வகை கோப்பமைப்பையும் அல்லது ப்ளாக் அணுகல் முறையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சில கணினிகள் ஃபிளாஷ் டிரைவ்களிலிருந்தும் தொடங்க(பூட்-அப்) முடியும்.

சில ஃபிளாஷ் டிரைவ்கள் நீரில் மூழ்கடித்த பின்னரும் கூட அவற்றிலிருந்த தரவுகளைப் பத்திரமாக வைத்துள்ளன,[26] இயந்திரத்தில் துவைத்த பின்னரும் கூட இது சாத்தியமாகிறது, இருப்பினும் இது வடிவமைப்பில் கருத்தில் கொள்ளப்பட்ட ஒரு அம்சமல்ல, ஆகவே இந்த அம்சங்களை நம்பியிருக்கக்கூடாது. மின்சாரம் செலுத்தப்படும் முன்பு, ஃபிளாஷ் டிரைவை ஒருமுறை முழுவதும் காலியாக்கி பின்னர் அதைப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் அதில் எந்த சிக்கலும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது என அறியப்படுகிறது. சேனல் ஃபைவின் கேட்ஜட் ஷோ ஒரு ஃபிளாஷ் டிரைவை புரொப்பேனைக் கொண்டு சமைத்தது, உலர் பனி கொண்டு உறைய வைத்தது, பல்வேறு அமில திரவங்களில் நனைத்தது, அதன் மேல் ஒரு ஜீப்பை ஓட்டியது, ஒரு மார்ட்டரைக் கொண்டு அதை ஒரு சுவரில் வேகமாக எறிந்தது. கணினி இயக்ககங்களிலிருந்து இழந்த தரவுகளை மீட்டுத் தரும் ஒரு நிறுவனம் டிரைவிலிருக்கும் அனைத்து தரவுகளையும் மீட்டெடுத்துக் காட்டியது.[27] சோதனையில் பயன்படுத்தப்பட்ட, ஒளியியல் அல்லது காந்தவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.

குறைபாடுகள்[தொகு]

அனைத்து ஃபிளாஷ் நினைவக சாதனங்களைப் போலவும், ஃபிளாஷ் டிரைவ்கள் தோல்வியடையும் முன்பாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எழுதுதல் மற்றும் அழித்தல் செயல் சுழற்சிகளை மட்டுமே கொண்டுள்ளன.[28][29] ஒரு பயன்பாட்டு மென்பொருள் அல்லது ஓர் இயக்க முறைமையை இயக்க ஒரு ஃபிளாஷ் டிரைவைப் பயன்படுத்தும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதையும் இட வரம்புகளையும் சரிசெய்ய சில டெவலப்பர்கள் (Live USB இல் Linux போன்ற)[30] இயக்க முறைமைகளின் சிறப்புப் பதிப்புகள் அல்லது ஃபிளாஷ் டிரைவ்களிலிருந்து இயக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட (Mozilla Firefox போன்ற) பொது இட பயன்பாடுகளை உருவாக்கினர். இவை வழக்கமாக அளவுக்காக மேம்படுத்தப்பட்டவை மேலும் தற்காலிக இடை நிலைக் கோப்புகளைச் சேமிக்க ஃபிளாஷ் டிரைவைப் பயன்படுத்தாமல், கணினியின் பிரதான RAM ஐப் பயன்படுத்தும் வகையில் உள்ளமைக்கப்பட்டவை.

பெரும்பாலான USB ஃபிளாஷ் டிரைவ்கள் எழுதுதல்-பாதுகாக்கப்பட்ட செயலம்சத்தைக் உடன்கொண்டு வருவதில்லை, இருப்பினும் சில மட்டும் டிரைவின் மேலேயே ஒரு சுவிட்சைக் கொண்டுள்ளன, ஹோஸ்ட் கணினி அதில் ஏதேனும் எழுதுவதை அல்லது தரவுகளை மாற்றுவதைத் தடுக்க அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுதுதல்-பாதுகாப்பு இருப்பதால் ஒரு சாதனம், USB ஃபிளாஷ் டிரைவை வைரஸ் பாதிக்கும் ஆபத்து எதுவும் இன்றி, வைரஸால்-பாதிக்கப்பட்ட ஹோஸ்ட் கணினிகளைச் சரிசெய்ய ஏற்றதாகிறது.

சிறிய அளவில் இருப்பதால் உள்ள குறைபாடு என்னவெனில் அவற்றை எளிதில் எங்கேனும் வைத்துவிட்டு மறந்து விடலாம், அல்லது தொலைத்துவிடலாம். அதில் இருக்கும் தரவானது மிகவும் முக்கியமானதாக இருப்பின், இது குறிப்பிடத்தக்க சிக்கலாகும் (தரவுப் பாதுகாப்பு என்பதைக் காண்க). இதன் விளைவாக சில உற்பத்தியாளர்கள் அவர்களின் டிரைவ்களுக்கு மறையீடாக்க வன்பொருளைச் சேர்த்துள்ளனர்— இருப்பினும் மென்பொருள் மறையீடாக்க முறைமைகளும் இதையே செய்கின்றன, மேலும் அனைத்து USB ஃபிளாஷ் டிரைவ்களுக்கும் எங்கும் கிடைக்கக்கூடியனவாக உள்ளன. மற்றவை சாவிச் சங்கிலிகள்(கீ செயின்), கழுத்துச் சங்கிலி மற்றும் லான்யார்ட் போன்றவற்றில் இணைத்துக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளன.

புற வன்-இயக்ககங்கள் போன்ற மற்ற பிற எடுத்துச்செல்லக்கூடிய சேமிப்பக சாதனங்களுடன் ஒப்பிடுகையில், USB ஃபிளாஷ் டிரைவ்கள் ஒவ்வொரு சேமிப்பு அலகுக்கும் அதிக விலையைக் கொண்டுள்ளன, மேலும் ஒப்பீட்டில் குறைந்த கொள்ளளவில் மட்டுமே கிடைக்கின்றன; ஆனால் வன்-இயக்ககங்கள் குறைந்தபட்ச விலையைக் கொண்டுள்ளன, ஆகவே குறைந்த கொள்ளளவுகளில் (16 GB மற்றும் அதற்கும் குறைந்த), கிடைக்கக்கூடிய வன்-இயக்ககங்களை விடவும் USB ஃபிளாஷ் டிரைவ்கள் மிகவும் விலை குறைந்தவையே.[31]

பிற பெயர்த்தகு சேமிப்பக சாதனங்களுடன் ஒப்பீடு[தொகு]

டேப்[தொகு]

தற்போதைய டேட்டா டேப் கேர்ட்ரிட்ஜ்கள், ஃபிளாஷ் டிரைவ்களின் பயன்பாடுகளை அவ்வளவாக பாதிப்பதே இல்லை: டிரைவ் மற்றும் மீடியா ஆகியன மிகவும் செலவுள்ளன, மேலும் அதிக கொள்ளளவு மற்றும் வேகமான பரிமாற்ற வேகங்கள் மற்றும் சேமிப்புத் தரவு கொண்டவை அது மட்டுமின்றி தொடர்ச்செயல் தன்மை கொண்டவை. பெரும்பாலான நிறுவனங்களுக்கு டிஸ்க்-அடிப்படையிலான மறுபிரதியானது பிரதானமான ஊடகமாக இருக்கும் வேளையில், மோசமான சூழல்களில் தரவுகளை வேறு இடத்திற்கு மறுபிரதியெடுத்துச் செல்வதற்கு டேப் மறுபிரதியே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. LTO டேப்கள் என்பதைக் காண்க.

ஃப்ளாப்பி டிஸ்க்[தொகு]

ஃபிளாஷ் டிரைவ் மற்றும் ஒரு 3.5-இன்ச்ச் ஃப்ளாப்பி டிஸ்க் - அளவு ஒப்பீடு

ஃப்ளாப்பி டிஸ்க்குகள் தற்கால கணினிகளில் இருப்பது அரிது, சாதாரண தேவைகளுக்காக இப்போது அது பயன்படுத்தப்படுவதில்லை, இருப்பினும் தேவையானால் அக மற்றும் புற டிரைவ்களைப் பொருத்திக்கொள்ளலாம். USB இல்லாத மிகப் பழைய கணினிகளிலிருந்து தரவுகளை எடுக்க அல்லது அவற்றில் தரவைச் சேர்க்க அல்லது ஃப்ளாப்பி டிஸ்க்குகளிலிருந்து தொடங்க (பூட்டிங்) ஃப்ளாப்பி டிஸ்க்குகள் பயன்படும், மேலும் அதனால் அவை சில வேளைகளில் BIOS சிப்கள் போன்றவற்றிலிருந்து ஃபர்ம்வேரை மாற்றப் பயன்படுகின்றன. பழைய Yamaha இசை கீபோர்டுகள் போன்ற அகற்றப்படக்கூடிய சேமிப்பகங்களைக் கொண்ட சாதனங்களும் ஃப்ளாப்பி டிஸ்க்குகளைச் சார்ந்து இயங்குபவையே, அவற்றைச் செயலாக்க கணினிகளுக்கு ஃப்ளாப்பி டிஸ்க்குகள் அவசியப்படும். புதிய சாதனங்கள் USB ஃபிளாஷ் டிரைவ் ஆதரவு கொண்டவையாக வடிவமைக்கப்படுகின்றன.

ஒளியியல் ஊடகம்[தொகு]

எழுதக்கூடிய மற்றும் மீண்டும் எழுதக்கூடிய பல்வேறு வகை CD மற்றும் DVDகள், 2008 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு வகையான பெரும்பாலான கணினிகளால் பெயர்த்தகு சேமிப்பக மீடியா ஆதரவைக் கொண்டிருந்தன. CD-R, DVD-R மற்றும் DVD+R ஆகியவை ஒரு முறை மட்டுமே எழுதப்படக்கூடியவை, RW வகைகள் 1,000 அழித்தல்/எழுதுதல் செயல் சுழற்சிகள் வரை திறன் கொண்டவை, நவீன NAND-அடிப்படையிலான ஃபிளாஷ் டிரைவ்கள் பெரும்பாலும் 500,000 அல்லது அதற்கும் அதிகமான அழித்தல்/எழுதுதல் செயல் சுழற்சிகள் வரை தாங்கும் திறன் கொண்டவை.[32] DVD-RAM டிஸ்க்குகள் அதிகமாக மீண்டும் எழுதப்படக்கூடிய சூழல்களுக்கான தரவுச் சேமிப்புக்கான ஒளியியல் டிஸ்க்குகளாகும்.

ஒளியியல் சேமிப்பக சாதனங்களே வன்-இயக்ககங்களுக்கு அடுத்தபடியான மிகவும் செலவு குறைவான மொத்த சேமிப்பக சாதனங்களாகும். அவை அவற்றின் ஃப்ளாஷ்-அடிப்படையிலான உடன் தயாரிப்புகளை விடவும் மெதுவாக இயங்குபவையாகும். தரநிலையான 12 செ.மீ. ஒளியியல் டிஸ்க்குகள் ஃபிளாஷ் டிரைவ்களைவிடப் பெரியவை, மேலும் எளிதில் சேதமடையக்கூடியவை. வணிக அட்டை CD-Rகள் போன்ற சிறிய ஒளியியல் மீடியாவும் உள்ளன, அவை கிரெடிட் கார்டுகளைப் போன்ற அளவிலேயே இருக்கும், மேலும் சிறிது கையாள வசதி குறைந்தவையாகும், ஆனால் அதிக கொள்ளளவு கொண்டவை 8 செ.மீ. பதிவுசெய்யக்கூடிய CD/DVDகள். சிறிய டிஸ்க்குகள் சாதாரண டிஸ்க்குகளை விடவும் மிகவும் விலை உயர்ந்தவை, மேலும் எல்லா இயக்ககங்களிலும் அவை இயங்குவதில்லை.

யுனிவெர்சல் டிஸ்க் ஃபார்மேட் (UDF) பதிப்பு 1.50 மற்றும் அதற்கு மேம்பட்ட பதிப்புகள், ஸ்பேரிங் அட்டவணைகள் மற்றும் மெய்நிகராக்கல் ஒதுக்கீட்டு அட்டவணைகள், டிஸ்க்கின் முழுப் பரப்பிற்கும் பயன்பாட்டை பகிர்ந்தளிப்பது மற்றும் ஆயுளை நீட்டிப்பது போன்ற மீண்டும் எழுதக்கூடிய டிஸ்க்குகளை ஆதரிக்கும் விதத்திலான வசதிகளைக் கொண்டுள்ளன, ஆனால் பல பழைய இயக்க முறைமைகள் இந்த வடிவமைப்பை ஆதரிப்பதில்லை. DirectCD மற்றும் InCD போன்ற பேக்கட்-எழுதுதல் முறை பயன்பாடுகள் கிடைக்கின்றன, ஆனால் (UDF தரநிலையின் அடிப்படையிலமைந்திருந்தாலும்) இவை எல்லா விதத்திலும் படிக்கக்கூடிய விதத்திலல்லாத டிஸ்க்குகள் ஆகும். மௌண்ட் ரெயினர் தரநிலையானது CD-RW மீடியாவில் உள்ள இந்த சிக்கலை, அதன் மேல் பகுதியில் பழைய கோப்பமைப்புகளை இயக்கி, குறைபாட்டு நிர்வாகத்தை செயல்படுத்துவதன் மூலம் சமாளிக்கிறது, ஆனால் அதற்கு CD/DVD பர்னர் மற்றும் இயக்க முறைமை ஆகிய இரண்டின் ஆதரவும் அவசியம். தற்போது தயாரிக்கப்படும் பல டிரைவ்கள், மௌண்ட் ரெயினர் தரநிலையை ஆதரிப்பதில்லை, மேலும் Windows XP மற்றும் அதற்கு முந்தையவை மற்றும் 2.6.2 க்கும் பழைய Linux கெர்னல்கள் போன்ற பெரும்பாலான பழைய இயக்க முறைமைகள் இதை ஆதரிப்பதில்லை (பிந்தைய பதிப்புகள் ஆதரிக்கின்றன). CDகள்/DVDகளே அதிக அளவிலான தகவல்களை குறைந்த செலவில் பதிவு செய்வதற்கான சிறப்பான வழியாகும், மேலும் தனித்து இயங்கக்கூடிய பிளேயர்களில் பெரும்பாலானவற்றால் அவற்றைப் படிக்கவும் முடியும் என்பது மற்றொரு நன்மையாகும், ஆனால் மிகப் பெரிய அளவிலான தகவல்களில் சிறிய மாற்றம் செய்வதானால் கூட அதற்கு அவை மிகவும் சிக்கலானவை. இதைச் செய்வதற்கான ஃபிளாஷ் டிரைவ்களின் திறனே ஒளியியல் மீடியாவை விடவும் இதனைச் சிறப்பானதாக்குகிறது.

ஃப்ளாஷ் மெமரி கார்டுகள்[தொகு]

ஃப்ளாஷ் மெமரி கார்டுகள், எ.கா. செக்யூர் டிஜிட்டல் கார்டுகள் பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கொள்ளளவுகளில் கிடைக்கின்றன, மேலும் பல நுகர்வோர் சாதனங்களில் அவை பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அனைத்து PCகளும் USB போர்ட்களைக் கொண்டுள்ளதால் USB ஃபிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும் மெமரி கார்டு ரீடர்கள் தரநிலையான உபகரணமாக பொதுவாக வழங்கப்படுவதில்லை (குறிப்பாக டெஸ்க்டாப் கணினிகளுடன்). பொதுவான பல வடிவமைப்புகளையும் படிக்கக்கூடிய விலை குறைந்த கார்டு ரீடர்கள் கிடைக்கின்றன, ஆனால் இதன் விளைவாக பெயர்த்தகு உபகரணங்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து இரண்டாகிறது (கார்டு மற்றும் ரீடர்).

சில உற்பத்தியாளர்கள் "பெஸ்ட் ஆஃப் போத் வேர்ல்ட்ஸ்" தீர்வினை நோக்கமாகக் கொண்டு, USB ஃபிளாஷ் டிரைவ்களின் அளவு மற்றும் வகையைக் கொண்டு அணுகக்கூடிய ரீடர்களை உற்பத்தி செய்கின்றனர் (எ.கா. கிங்ஸ்ட்டன் மொபைல்லைட்,[33] சாண்டிஸ்க் மொபைல்மேட்.[34]) இந்த ரீடர்கள், (SD, microSD அல்லது மெமரி ஸ்டிக் போன்ற) குறிப்பிட்ட மெமரி கார்டு வடிவமைப்புகளின் தொகுதிக்கு மட்டுமே பொருந்தக்கூடிய வரையறையைக் கொண்டவை, மேலும் பெரும்பாலும் கார்டை முழுவதுமாக மூடியே வைத்திருக்கின்றன, நீடித்திருத்தல் எடுத்துச்செல்லுதல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன, அவை ஒரு ஃபிளாஷ் டிரைவுக்கு சமமாகவே இருக்கின்றன. மினி-ரீடர் மற்றும் ஒரு மெமரி கார்டின் தொகுப்பின் விலையானது அதனுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளளவுள்ள ஒரு USB ஃபிளாஷ் டிரைவை விட அதிகம் என்றாலும், கார்டு ரீடர் + கார்டு சொல்யூஷன் பயன்பாட்டிற்கான கூடுதல் நெகிழ்தன்மையை வழங்குகிறது, மேலும் ஒரு விதத்தில் "எல்லையில்லா" கொள்ளளவு கொண்டுள்ளது.

மெமரி கார்டுகளின் ஒரு கூடுதல் நன்மை என்னவெனில் நுகர்வோர் சாதனங்கள் பல (எ.கா. டிஜிட்டல் கேமராக்கள், போர்ட்டபிள் மியூசிக் பிளேயர்கள்) (சாதனங்களில் USB போர்ட் இருப்பினும்) USB ஃபிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்த முடியாது, ஆனால் அந்த சாதனங்கள் பயன்படுத்தும் மெமரி கார்டுகளை, கார்டு ரீடர் கொண்டுள்ள PCகளால் படிக்க முடியும்.

புற வன்-இயக்ககம்[தொகு]

குறிப்பாக USB இன் வருகைக்குப் பின்னர் புற வன்-இயக்ககங்கள் பரவலாக கிடைக்கக்கூடியதாகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாகவும் மாறிவிட்டன. புற வன்-இயக்ககங்கள் ஒரு கிகாபைட்டுக்கான விலையில் ஃபிளாஷ் டிரைவ்களை விடக் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன, மேலும் அதிக கொள்ளளவிலும் கிடைக்கின்றன. சில வன்-இயக்ககங்கள் மாற்று மற்றும் USB 2.0 ஐ விட அதிக வேகமான இடைமுகங்களை ஆதரிக்கின்றன (எ.கா. IEEE 1394 மற்றும் eSATA). எழுதுதல்களுக்கும் மற்றும் அடுத்தடுத்த பிரிவுகளைப் படிப்பதற்கும் (எடுத்துக்காட்டுக்கு, ஃபிராக்மெண்ட் செய்யப்படாத கோப்பு), பெரும்பாலான வன்-இயக்ககங்கள் தற்போதைய NAND ஃப்ளாஷ் மெமரியைக் காட்டிலும் அதிக நீடித்தத் தன்மையுள்ள தரவு வீதங்களை வழங்குகின்றன.

திட-நிலை நினைவகத்தைப் போலல்லாமல் வன்-இயக்ககங்கள் அதிர்ச்சியினால் பாதிக்கப்படக்கூடியவை, எ.கா., குறுகிய உயரத்திலிருந்து விழுதல் போன்ற செயல்களால் பாதிக்கப்படும், மேலும் அதிக உயரத்தில் இயங்குவதில் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன, அவற்றின் கேஸ்டிங்கினால் மூடப்பட்டிருந்தாலும், எல்லா காந்தவியல் மீடியா போலவே வலுவான காந்தப்புலத்திற்குட்படும் போது இவையும் பாதிக்கப்படுகின்றன. வன்-இயக்ககங்கள் வழக்கமாக ஃபிளாஷ் டிரைவ்களை விட மொத்த நிறையைப் பொறுத்தவரை மிகவும் பெரியன மற்றும் உறுதியானவையாகும், இருப்பினும் ஒரு சேமிப்பலகுக்கான நிறையைக் கணக்கிடுகையில் வன்-இயக்ககங்கள் சில நேரங்களில் நிறை குறைவானவையாக உள்ளன. வன்-இயக்ககங்கள் கோப்பு ஃபிராக்மெண்ட்டேஷனாலும் பாதிக்கப்படக்கூடியவை, அந்தச் செயலானது அணுகல் வேகத்தைக் குறைக்கிறது.

பயன் வழக்கழிந்த சாதனங்கள்[தொகு]

ஆடியோ டேப் கேசட்டுகள் தரவு சேமிப்புக்காக இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. உயர் கொள்ளளவு கொண்ட ஃப்ளாப்பி டிஸ்க்குகள் (எ.கா. Imation SuperDisk) மற்றும் Iomega Zip மற்றும் Jaz driveகள் போன்ற அகற்றப்படக்கூடிய காந்தவியல் மீடியா கொண்ட பிற வகை டிரைவ்கள் வழக்கழிந்துவிட்டன, மேலும் இப்போது அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய சந்தையில், டேப் & டிஸ்க்குக்கான இந்த பழைய டிரைவ்களை ஒத்ததாக உள்ள தயாரிப்புகள் கிடைக்கின்றன (SCSI1/SCSI2, SASI, மேக்னட்டோ ஆப்டிக், ரிக்கோ ZIP, ஜாஸ், IBM3590/ ஃபியுஜிட்சூ 3490E மற்றும் பெர்னௌலி போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்) உருவாக்கத்தின் உயர் தயாரிப்புகளாக காம்பேக்ட் ஃப்ளாஷ் சேமிப்பக சாதனங்கள் - CF2SCSI.

பாதுகாப்பு[தொகு]

மறையீடாக்கம்[தொகு]

USB ஃபிளாஷ் டிரைவ்கள் மிகவும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஊடகமாக இருப்பதால் அவை எளிதாக தொலைக்கப்படலாம் அல்லது திருடப்படலாம். அனைத்து USB ஃபிளாஷ் டிரைவ்களும், FreeOTFE மற்றும் TrueCrypt போன்ற மூன்றாம் தரப்பினர் டிஸ்க் மறையீட்டாக்க மென்பொருள் அல்லது காப்பகங்களை ZIP மற்றும் RAR ஆக மறையீடாக்கம் செய்யக்கூடிய நிரல்களைப் பயன்படுத்தி அவற்றில் உள்ள உள்ளடக்கத்தை மறையீடாக்கம் செய்துகொள்ளலாம். இந்த நிரல்களில் சில நிறுவப்படாமலே பயன்படுத்தப்படலாம். செயல்படுத்தப்படக்கூடிய கோப்புகளை USB டிரைவில் மறையீடாக்கம் செய்யப்பட்ட படங்களுடன் சேர்த்து சேமிக்கலாம். மறையீடாக்கம் செய்யப்பட்ட பிரிப்பானது சரியான இயக்க முறைமையைக் கொண்டுள்ள பல கணினிகளால் அணுகப்பட முடியும், இருப்பினும் தரவுகளை அணுகுவதற்கு, பயனர்களுக்கு நிர்வாக அனுமதிகள் தேவைப்படலாம்.

மற்ற ஃபிளாஷ் டிரைவ்கள் பயனர்களை பல்வேறு அளவுகளிலான பொதுவான மற்றும் பாதுகாப்பான பிரிப்புகளை உள்ளமைக்க அனுமதிக்கின்றன, மேலும் வன்பொருள் மறையீடாக்க அம்சத்தையும் வழங்குகின்றன.

புதிய ஃபிளாஷ் டிரைவ்கள், பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உயிர்ப்புள்ளியியல் கைரேகை பதிவையும் ஆதரிக்கின்றன. 2005 இன் மத்தி வரை, இது பல புதிய USB ஃப்ளாஷ் சேமிப்பக சாதனங்களில் வழங்கப்பட்ட தரநிலையான கடவுச்சொல் பாதுகாப்புக்கான அதிக செலவு கொண்ட மாற்று வழியாகும். பெரும்பாலான கைரேகை ஸ்கேனிங் டிரைவ்கள் மென்பொருள் இயக்கிகளின் மூலம் கைரேகைகளை செல்லுபடியாக்கம் செய்ய ஹோஸ்ட் கணினிகளின் இயக்க முறைமைகளையே சார்ந்துள்ளன, பெரும்பாலும் டிரைவை Microsoft Windows கணினிகளுக்கு மட்டுமே என்று வரையறைக்குள் வைத்துள்ளன. இருப்பினும், அங்கீகரிப்பு எதுவும் இல்லாமலே தரவுக்கான அணுகலை வழங்குவதை அனுமதிக்கக்கூடிய கண்ட்ரோலர்களைப் பயன்படுத்தக்கூடிய கைரேகை ஸ்கேனர்களைக் கொண்ட USB டிரைவ்களும் உள்ளன.[35]

சில உற்பத்தியாளர்கள் ஃபிளாஷ் டிரைவ் வடிவத்தில் உடலியல் அங்கீகரிப்பு டோக்கன்களைப் பயன்படுத்துகின்றனர். இவை, மறையீடாக்கத் திறவுகோல்களைக் கொண்டிருப்பதன் மூலம் அல்லது பொதுவாக இலக்கு கணினியில் உள்ள பாதுகாப்பு மென்பொருளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மிக முக்கியமான அமைப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. அமைப்பில் ஃபிளாஷ் டிரைவ் செருகப்படாமல் இலக்கு கணினி இயங்காத வகையில் இந்த அமைப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த "PC லாக்" சாதனங்களில் சில, பிற கணினிகளில் செருகப்பட்டால் இயல்பான ஃபிளாஷ் டிரைவ்கள் போலவே இயங்குகின்றன.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்[தொகு]

பெரிய நிறுவனங்களுக்கு, இந்த ஃபிளாஷ் டிரைவ்கள் முக்கியமான பாதுகாப்பு சவாலை முன்வைக்கின்றன. அவற்றின் சிறிய அளவு மற்றும் பயன்படுத்துவதற்கான எளிமையின் காரணமாக கவனிக்கப்படாத பார்வையாளர் அல்லது பணியாளர்கள் மிக ரகசியமான தரவுகளை கள்ளத்தனமாக வெளியில் எடுத்துச்சென்றுவிடலாம், இதைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பு குறைவு. பெருநிறுவன மற்றும் பொது கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்த விரும்புபவர்கள், USB போர்ட்களின் மூலம் ஃபிளாஷ் டிரைவைப் பயன்படுத்தி கீபோர்டு லாக்கர்கள் அல்லது பேக்கட் ஸ்னிஃபர்கள் போன்ற தீய மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான ஆபத்து உள்ளது.

USB டிரைவிலிருந்து தொடங்குமாறு (பூட்டபில்) அமைக்கப்பட்ட கணினிகளில், கடவுச்சொல்லால் அந்தக் கணினிகள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் அதிலுள்ள கோப்புகளை, பூட்டபில் பெயர்த்தகு இயக்க முறைமையைக் கொண்ட ஃபிளாஷ் டிரைவைப் பயன்படுத்தி அணுக முடியும். கடவுச்சொல்லானது மாற்றப்படலாம்; அல்லது கடவுச்சொல் கண்டுபிடிக்கும் நிரலைப் பயன்படுத்தி கடவுச்சொல்லானது செயலிழக்கச்செய்யப்படலாம், மேலும் அதனால் கணினிக்கான முழு கட்டுப்பாட்டையும் ஒருவர் பெறலாம். கோப்புகளை மறையீடாக்கம் செய்வதால் இந்த வகையான பாதிப்புகளிலிருந்து குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கிடைக்கிறது.

USB ஃபிளாஷ் டிரைவ்கள் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ தீம்பொருள் மற்றும் தானியங்கு வார்ம்களை ஒரு நெட்வொர்க்கில் பரப்பிவிடவும் பயன்படுத்தப்பட முடியும்.

சில நிறுவனங்கள் ஃபிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன, மேலும் சில கணினிகள், நிர்வாகிகளைத் தவிர்த்து பிற பயனர்கள் யாரும் USB மொத்த சேமிப்பக சாதனங்களைச் செருக முடியாதபடி உள்ளமைக்கப்பட்டிருக்கின்றன; பிற நிறுவனங்கள் USB பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மூன்றாம் தரப்பினர் மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. மென்பொருளைப் பயன்படுத்துவதால் நிர்வாகி USB பூட்டு அம்சத்தை வழன்குவது மட்டுமின்றி CD-RW, SD கார்டுகள் மற்றும் பிற நினைவக சாதனங்களையும் கட்டுப்படுத்த முடிகிறது. இதனால் பணியிடத்தில் USB ஃபிளாஷ் டிரைவ்களின் பயன்பாட்டைத் தடுக்கும் கொள்கைகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த முடிகிறது. குறை-தொழில்நுட்ப பாதுகாப்பு தீர்வுகளில் சில நிறுவனங்கள் கணினிகளில் USB போர்ட்களைத் துண்டிக்கின்றன அல்லது USB சாக்கெட்களை ஈபாக்ஸி கொண்டு நிரப்புகின்றன.

பாதுகாப்பு தோல்விகள்[தொகு]

USB டிரைவ்களைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதுகாப்புத் தோல்விகளுக்கான எடுத்துக்காட்டுகளில் பின்வருவனவும் அடங்கும்:

  • அமெரிக்காவில்:
    • முன்னாள் மாணவர்கள் 6,500 பேரின் பெயர், தரங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு எண்கள் உள்ளிட்ட தரவுகளைக் கொண்டிருந்த USB டிரைவ் திருடுபோனது. [36]

பெயரிடுதல்[தொகு]

ஆகஸ்டு 2008 இல், இந்தச் சாதனங்களுக்கான பொதுவான பெயராக "USB ஃபிளாஷ் டிரைவ்" நிலைபெற்றது, மேலும் பெரும்பாலான பெரிய உற்பத்தியாளர்கள்[37] அவர்களின் விற்பனைத் தொகுப்புகளுக்கு அதே போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர், இருப்பினும் குழப்பம் விளைவிக்கும் சாத்தியமுள்ள மாற்று வழிகளும் (Memory Stick அல்லது USB memory key போன்றவை) இன்னும் உள்ளன.

முன்னர் எண்ணற்ற வெவ்வேறு பிராண்ட் பெயர்கள் மற்றும் சொற்கள் பயன்படுத்தப்பட்டனcurrently, மேலும் USB ஃபிளாஷ் டிரைவ்களை உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்தவும் நுகர்வோர் ஆராய்ச்சி செய்யவும் கடினமான ஒன்றாகியது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில பெயர்கள், Cruzer, TravelDrive, ThumbDrive மற்றும் Disgo போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களின் வர்த்தக முத்திரைகளையே குறிக்கின்றன.

தற்போதைய மற்றும் எதிர்கால மேம்பாடுகள்[தொகு]

குறைக்கடத்தி நிறுவனங்கள், பல்வேறு ஃபிளாஷ் டிரைவ் செயலம்சங்களை ஒரே சிப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம் ஃபிளாஷ் டிரைவில் உள்ள சாதனங்களின் விலைகளைக் குறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன, இதனால் பகுதி-எண்ணிக்கை மட்டும் பேக்கேஜ் விலையையும் குறைக்கின்றன.

சந்தையில் உள்ள ஃபிளாஷ் டிரைவ் கொள்ளளவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. As of 2008 சில உற்பத்தியாளர்கள் 256 MB மற்றும் சிறிய சாதனங்களை தொடர்ந்து உற்பத்தி செய்தும் வருகின்றனர்; மேலும் பல உற்பத்தியாளர்கள் 512 MB கொள்ளளவு ஃப்ளாஷ் நினைவகங்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டனர். அதி வேகம் என்பது தற்கால ஃபிளாஷ் டிரைவ்களின் தரநிலையாகிவிட்டது, மேலும் 2009 வரையில் 256 GB வரையிலும் உள்ள கொள்ளளவுகளும் சந்தையில் வந்துவிட்டன.

லெக்ஸர் நிறுவனமானது, பல்வேறு ஃப்ளாஷ் மெமரி கார்டுகளை இடமாற்றுவதற்காக மிகச் சிறியதாக இருக்கக்கூடிய ஒரு USB ஃப்ளாஷ் கார்டை அறிமுகப்படுத்த உள்ளது,[38][39]. ப்ரீடெக் அதே போன்ற ஒரு கார்டை அறிமுகப்படுத்தியது, அதுவும் எல்லா USB போர்ட்களிலும் செருகப்படக்கூடியது, ஆனால் லெக்ஸரின் மாடலை விட கால்பகுதி தடிமனே கொண்டதாகும்.[40] சாண்டிஸ்க்கில் SD ப்ளஸ் என்னும் தயாரிப்பு ஒன்று உள்ளது, அது ஒரு USB இணைப்பானுடன் கூடிய செக்யூர்டிஜிட்டல் கார்டாகும்.[41]

சாண்டிஸ்க் நிறுவனம் ஃபிளாஷ் டிரைவ்களின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு மற்றும் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டுபாடு ஆகியவற்றை அனுமதிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, அது குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்துவதற்கானதாகும். இந்தத் தொழில்நுட்பம் FlashCP என்றழைக்கப்படுகிறது.

USB-அல்லாத இடைமுகங்களுக்கான ஃபிளாஷ் டிரைவ்கள்[தொகு]

ஃபிளாஷ் டிரைவ்களில் பெரும்பாலானவை USB ஐப் பயன்படுத்துகின்றன, ஆனால் சில ஃபிளாஷ் டிரைவ்கள் IEEE1394 (FireWire) போன்ற இடைமுகங்களையும் பயன்படுத்துகின்றன,[42][43] அவை USB டிரைவ்களுடன் ஒப்பிடுகையில் அவற்றில் உள்ள நன்மை என்னவெனில் IEEE1394 நெறிமுறையானது வழங்குகின்ற குறைதபட்ச தாமதத்தன்மையும் CPU பயன்பாடும் ஆகும், ஆனால் நடைமுறையில், USB இடைமுகங்கள் பரவலாக உள்ள காரணத்தால், வெளிவந்த IEEE1394-அடிப்படையிலான டிரைவ்கள் அனைத்தும் பழைய மெதுவான ஃபிளாஷ் மெமரி சிப்களைப் பயன்படுத்தின[44], மேலும் 2009 வரை எந்த உற்பத்தியாளரும் IEEE1394 ஃபிளாஷ் டிரைவ்களை நவீன வேக ஃப்ளாஷ் நினைவகத்துடன் விற்பனை செய்யவில்லை, மேலும் தற்போது கிடைக்கும் மாடல்களின் அதிகபட்ச கொள்ளளவானது, உற்பத்தியாளரைப் பொறுத்து 4GB,[45] 8GB [43] அல்லது 16GB மட்டுமே உள்ளது. FireWire 400 போர்ட்களில் இணைக்கப்பட வேண்டிய FireWire ஃபிளாஷ் டிரைவ்கள் FireWire 800 போர்ட்களிலோ அதே போல் ஒன்றையொன்று மாற்றியோ இணைக்கப்பட முடியாது.

2008 இன் பிற்பகுதியில், eSATA இடைமுகத்தைப் பயன்படுத்தக்கூடிய ஃபிளாஷ் டிரைவ்கள் கிடைக்கத் தொடங்கின. USB ஃபிளாஷ் டிரைவுடன் ஒப்பிடுகையில் eSATA ஃபிளாஷ் டிரைவின் ஒரு நன்மை என்னவெனில் அதிகரிக்கப்பட்ட வெளியீடு உள்ளீடு விகிதமாகும், இதனால் தரவுகள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும் வேகம் அதிகமாகிறது.[46] இருப்பினும், ஃபிளாஷ் டிரைவ்களுக்காக eSATA ஐப் பயன்படுத்துவதில் சில குறைபாடுகளும் உள்ளன. eSATA இணைப்பானானது பிரதானமாக, தங்கள் உள்ளமைக்கப்பட்ட தனிப்பட்ட மின் சப்ளையைக் கொண்டுள்ள வெளிப்புற வன்-இயக்கக டிரைவ்களுடன் பயன்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டது. ஆகவே, USB ஐப் போலல்லாமல் ஒரு eSATA இணைப்பான், சமிக்ஞையனுப்பல் மற்றும் தரவுப் பரிமாற்ற செயல்களுக்குத் தேவையானதைத் தவிர வேறு கூடுதல் மின் திறன் எதையும் வழங்குவதில்லை. அதாவது, ஒரு eSATA ஃபிளாஷ் டிரைவுக்கு USB போர்ட் அல்லது அதனை இயக்க புற மின் மூலம் ஏதேனும் ஒன்று தேவை. கூடுதலாக, செப்டம்பர் 2009 வரை, eSATA இடைமுகம் பெரும்பாலான இல்லக் கணினிகளில் மிகவும் பொதுவான பயன்பாட்டில் இல்லை, ஆகவே அது போன்று அமைக்கப்பட்ட ஃபிளாஷ் டிரைவ்களில் eSATA இடைமுகத்தினால் வழங்கப்படும் அதிகரிக்கப்பட்ட செயல்திறனின் நன்மைகளை சில கணினிகளே பயன்படுத்திக்கொள்கின்றன. இறுதியாக, eSATA-அமைக்கப்பட்ட மடிக்கணினிகள் நீங்கலாக, ஒன்று அல்லது மேற்பட்ட eSATA இணைப்பான்களைக் கொண்டுள்ள பெரும்பாலான இல்லக் கணினிகள் வழக்கமாக கணினிப் பெட்டியின் (கேஸ்) பின்புறம் போர்ட்களைக் கொண்டிருக்கின்றன, இதனால் சில சந்தர்ப்பங்களில் அதை அணுகுவது கடினமானதாகிறது, மேலும் இதனால் ஃபிளாஷ் டிரைவைச் செருகுவதும் அகற்றுவதும் கடினமாகிறது.

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
USB flash drives
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  • USB ஃபிளாஷ் டிரைவ் அல்லையன்ஸ்

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-23. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  2. "கிங்ஸ்ட்டன் அன்வெயில்ஸ் 256GB தம்ப்", MobileWhack.com, ஜூலை 20 2009, வலைப்பக்கம்: மொபைல்வேக்-கிங்ஸ்ட்டன்-256GB பரணிடப்பட்டது 2012-03-22 at the வந்தவழி இயந்திரம்
  3. "இமேஷன் ஸ்வைவல் ப்ரோ ஃபிளாஷ் டிரைவ்", About.com, 2008, வலைப்பக்கம்: AboutCom-ஸ்வைவல்-ப்ரோ-ஃப்ளாஷ் பரணிடப்பட்டது 2011-01-16 at the வந்தவழி இயந்திரம்.
  4. 4.0 4.1 USB ஃபிளாஷ் டிரைவ்கள் தரவுகளைப் படித்தல், எழுதுதல் மற்றும் அழித்தலை அனுமதிக்கின்றன, இதில் சில, ஒவ்வொரு நினைவக செல்லிலும் 1 மில்லியன் எழுதுதுதல்/அழித்தல் செயல் சுழற்சிகளை அனுமதிக்கின்றன. ஒரு நாளுக்கு 100 முறை பயன்படுத்தினால், 1 மில்லியன் செயல் சுழற்சிகள் 10,000 நாட்கள் அல்லது இருபத்தேழு ஆண்டுகள் பயன்படும். சில சாதனங்கள், குறைவாகப் பயன்படுத்தப்பட்ட நினைவகங்களின் பகுதிகளுக்கு தானியங்கு மாற்றச் செயலின் மூலம் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.
  5. "USB ஃபிளாஷ் டிரைவ் 10-ஆண்டு தயாரிப்புகள்", ட்ரேட் மீடியா லிமிட்டெட், செப்டம்பர் 2009, வலைப்பக்கம்: [1]
  6. நெட்டாக் கம்பெனி இண்ட்ரடக்ஷன் பரணிடப்பட்டது 2012-06-10 at the வந்தவழி இயந்திரம் நெட்டாக் அதிகாரப்பூர்வ தளம்
  7. 7.0 7.1 நெட்டாக் டைம்லைன் பரணிடப்பட்டது 2012-06-10 at the வந்தவழி இயந்திரம் நெட்டாக் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
  8. "Singapore firm wins patent on thumb drive". The Straits Times. http://www.bangkokpost.com/breaking_news/breakingnews.php?id=70859. பார்த்த நாள்: 2006-08-01. 
  9. "Patent decision".
  10. நெட்டாக் அண்ட் ஹுவாக்கி செட்டில் சூட்[தொடர்பிழந்த இணைப்பு] JLM பசிஃபிக் எப்போக்
  11. G. ஃப்ராங்க் டெங்: அன் IPR வாரியர் லீடிங் அ நியூ இண்டஸ்ட்ரி பரணிடப்பட்டது 2012-07-15 at the வந்தவழி இயந்திரம் நெட்டாக் அதிகாரப்பூர்வ தளம்
  12. [2] - க்ஸையோகுவாங் YANG, ஜோங்ஸி லா ஆஃபிஸ்
  13. ஃப்ளாஷ் மெமரி டிஸ்க் மார்க்கெட் அண்டர் ஃபயர் க்ஜின்ஹுவா - ஆங்கிலம் 2006-10-17 13:31
  14. 14.0 14.1 ஸ்டார்ம்[தொடர்பிழந்த இணைப்பு] நெட்டாக் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
  15. http://www.ces-show.com/2006/review/pny/pny_usb_flash_drive.html
  16. http://www.techchee.com/2008/05/20/bluetrek-bizz-an-expandable-usb-drive-and-a-bluetooth-headset-in-one/
  17. USB 1.0 Spec Position on Extension Cables and Pass-Through MonitorsPDF (13.7 KiB)
  18. USB 2.0 Specification Engineering Change Notice (ECN) #1: Mini-B connectorPDF (958 KiB)
  19. USB ஃப்ளாஷ் கருவிகள்
  20. "Microsoft device helps police pluck evidence from cyberscene of crime". The Seattle Times. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
  21. Brinkmann, Martin (2008-11-01). "Windows 7 to Extend Readyboost". Windows 7 News. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12.
  22. CHR – அவைலபிள் ஃபார் ஏர்-ப்ளே பரணிடப்பட்டது 2012-05-25 at Archive.today. FMQB. அணுகப்பட்டது செப்டம்பர் 23 2007
  23. [3]
  24. "PART ONE/// WITH HEARTS AS ONE USB Wristband". Hillsong.com. Archived from the original on 2008-03-31. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
  25. USB ஃபிளாஷ் டிரைவ் ஆட்டோ ரன் செட்டப், Flashbay.com கட்டுரை
  26. "Kingmax Super Stick". பார்க்கப்பட்ட நாள் 2006-08-01.
  27. டெஸ்ட்டிங் ரிமூவபிள் மீடியா ஆன் த கேட்ஜெட் ஷோ.
  28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-13. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  29. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-10-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  30. http://linux-usb.sourceforge.net/USB-guide/x498.html
  31. ஃப்ளாஷ் மெமரி வெர்சஸ். HDD - ஹூ வில் வின்? - STORAGE search .com கட்டுரை
  32. எ மில்லியன் சைக்கிள்ஸ் இன் ட்ரேட் அட்வெர்ட்ஸ்
  33. "MobileLite 9-in-1 Reader". Kingston Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-04-08.
  34. "MobileMate Memory Stick Plus 4-in-1 Reader". Sandisk Corporation. பார்க்கப்பட்ட நாள் 2009-04-08.
  35. ஆக்சஸ் டு ப்ரொட்டெக்டெட் டேட்டா ஏரியாஸ் வித்தவுட் ரைட் ஃபிங்கர்ப்ரிண்ட்
  36. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-18. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  37. குளோபால் சோர்சஸ் லிஸ்ட்
  38. "லெக்ஸர் அன்வெயில்ஸ் நியூ USB கார்ட் ஃபார்ம் ஃபேக்டர் அண்ட் இண்ட்ரட்யூசஸ் நியூ USB ஃப்லாஷ்கார்ட்". Archived from the original on 2006-10-20. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  39. "USB ஃப்ளாஷ்கார்ட்(UFC) ஹைலைட்ஸ்". Archived from the original on 2006-02-24. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  40. ப்ரெடெக் i-டிஸ்க் டைமண்ட் (மிகச் சிறிய USB ஃபிளாஷ் டிரைவ்)
  41. "SanDisk Ultra II SD Plus Cards". SanDisk. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
  42. http://www.faqs.org/patents/app/20080222349
  43. 43.0 43.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-16. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  44. http://reviews.cnet.com/1990-3201_7-6278177-1.html
  45. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-12. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
  46. http://www.legitreviews.com/article/877/3/


"https://ta.wikipedia.org/w/index.php?title=யுஎஸ்பி_ஃபிளாஷ்_டிரைவ்&oldid=3792629" இலிருந்து மீள்விக்கப்பட்டது