விப்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விப்ரோ லிமிடெட்
வகை பொது
நிறுவுகை 1945
நிறுவனர்(கள்) அசிம் பிரேம்ஜி
தலைமையகம் பெங்களூர், கர்நாடகம், இந்தியா
சேவை வழங்கும் பகுதி உலகளவில்
முக்கிய நபர்கள் அசிம் பிரேம்ஜி
(தலைவர்)
டி கே குறின்
(சி.ஈ.ஓ மற்றும் நிருவாக இயக்குனர்)
தொழில்துறை தகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மைs
தகவல் தொழில்நுட்ப ஆலோசனை
சேவைகள் அவுட்சோர்ஸிங்
பிபிஓ
மென்பொருள் சேவை
வருமானம் US$ 6.841 பில்லியன் (2011)[1]
இயக்க வருமானம் US$ 1.270 பில்லியன் (2011)[1]
இலாபம் US$ 1.167 பில்லியன் (2011)[1]
மொத்தச் சொத்துகள் US$ 8.182 பில்லியன் (2011)[1]
மொத்த பங்குத்தொகை US$ 5.280 பில்லியன் (2011)[1]
பணியாளர் 122,385 (March 2011)[2]
பிரிவுகள் விப்ரோ கன்ஸ்யூமர் கேர் & விளக்கு
Wipro EcoEnergy
விப்ரோ உள்கட்டமைப்பு பொறியியல்
விப்ரோ ஜி.இ. மெடிக்கல் சிஸ்டம்ஸ் லிமிடெட்
இணையத்தளம் Wipro.com

விப்ரோ லிமிடெட் (முபச: 507685, தேபசWIPRO, நியாபசWIT) என்பது இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். விப்ரோ 2011ம் ஆண்டு வருவாய் படி இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உள்ளது; 2011 ஆம் ஆண்டு தகவல் சேவை வழங்குநர்கள் பட்டியலில் உலக அளவில் 31 வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் மூன்று பிரிவுகளில் செயல்படுகிறது: தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள், நுகர்வோர் சேவை மற்றும் விளக்குகள்.

வரலாறு[தொகு]

விப்ரோ நிறுவனம் டிசம்பர் 29, 1945 அன்று மும்பையில் மேற்கு இந்திய தயாரிப்புகள் லிமிடெட் எனும் பெயரில், முஹம்மது ஹசம் பிரேம்ஜி மூலம் தொடங்கப்பட்டது. பிறகு இதன் சுருக்கமாக விப்ரோ என அழைக்கபடுகிறது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் காய்கறிகள் மூலம் நெய், வனஸ்பதி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகிய தயாரிப்புகளை மகாராஷ்டிர மாநிலம் ஜலகோன் மாவட்ட அம்ல்னர் என்னும் ஊரில் தயரித்து வந்தது. கிஸான் என்ற பெயரிலும், ஒட்டகம் மற்றும் சூரியகாந்தி பூவை சுலோகமாக வைத்தது. அன்று முதல் இன்று வரை விப்ரோ தங்களது அனைத்து வியாபாரங்களிலும் சூரியகாந்தி பூவை சுலோகமாக வைத்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Wipro". Hoovers. பார்த்த நாள் 2010-09-07.
  2. Qrtr_Results, Dec2010. "WIPRO_Qtr_result_dec_2010". www.wipro.com. பார்த்த நாள் 21 January 2011.
"http://ta.wikipedia.org/w/index.php?title=விப்ரோ&oldid=1362372" இருந்து மீள்விக்கப்பட்டது