வின்டோஸ் செர்வர் 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
[[Image:Windows Server 2003 logo.svg|250px]]
வின்டோஸ் செர்வர் 2003
(மைக்ரோசாப்ட் வின்டோஸ் குடும்பம்)
திரைக்காட்சி
[[Image:Windows Server 2003 Enterprise Edition trial.png|290px]]
வின்டோஸ் 2003 எண்டபிரைஸ் எடிசன் திரைக்காட்சி
விருத்தியாளர்
மைக்ரோசாப்ட்
Web site: வின்டோஸ் செர்வர் 2003
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: 24 ஏப்ரல், 2003 info
தற்போதைய பதிப்பு: 2003 சேவைப்பொதி 2 (5.2.3790.3959) (13 மார்ச், 2007) info
மூலநிரல் : பகிரப்பட்ட மூலம்
அனுமதி: MS-EULA
Kernel type: Hybrid kernel
Support status
பிரதான ஆதரவு 13 ஜூலை 2010.[1]

வின்டோஸ் செர்வர் 2003 மைக்ரோசாப்டினால் வின்டோஸ் 2000 செர்வரின் வழிவந்த வணிகப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு 24 ஏப்ரல் 2003 இல் வெளிவிடப்பட்ட ஓர் வழங்கி (செர்வர்) இயங்குதளமாகும். இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பானது 6 டிசம்பர் 2005 இல் வெளிவந்தது. இதன் வழிவந்த விண்டோஸ் செர்வர் 2008 4 பெப்ரவரி 2008 இல் வெளிவந்தது.

மைக்ரோசாப்ட்டின் கருத்துப்படி இதன் முன்னோரான விண்டோஸ் 2000 செர்வரை விட வினைத்திறனானதாகும். [2]

பொருளடக்கம்

[தொகு] மேலோட்டம்

ஏப்ரல் 24, 2003 இல் வெளிவிடப்பட்ட இந்த இயங்குதளம். [3] விண்டோஸ் எக்ஸ்பி உடன் ஒத்திசைவுடன் வசதிகளையும் கொண்டுள்ளது. 5.2 என்கின்ற பதிப்பெண்ணைக்கொண்ட வின்டோஸ் சேவர் 2003 வின்டோஸ் எக்ஸ்பி உடனான ஒத்திசைவினைக் கொண்டுள்ளது. புதிய கணினிகள் தாக்குதல்களில் இருந்தான சந்தர்பக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்காக வின்டோஸ் 2000 செர்வர் போன்றல்லாது எந்தவொரு செர்வரின் சேவையும் தாமாக ஆரம்பிக்காது. விண்டோஸ் 2003 கூடுதலான ஒத்திசைவுப் பண்புகளைக் கொண்டுள்ளது.

இண்டநெட் இன்பொமேஷன் செர்வர் என்கின்றன இணைய வழங்கியின் மூலநிரலானது மீண்டும் ஏறத்தாழ முழையாகவே பாதுகாப்பு, வினைத்திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மீள் எழுதப்பட்டுள்ளது.

இவ் இயங்குதளமானது விருத்தியில் இருக்கும் பொழுது பல்வேறு பெயர்களை பெற்றது. ஆரம்பத்தில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இது ”விசிலர் சேர்வர்” என்று அறியப்பட்டது. பின்னர் இது விண்டோஸ் 2002 சேர்வர் என்றவாறு கொஞ்சக் காலத்திற்கு அழைக்கப்பட்டு மைக்ரோசாப்ட் டாட்.நெட் ஐப் பிரபலப்படுத்தும் வர்தக முயற்சிகளுள் ஒன்றாக இதை ’’விண்டோஸ் டாட்.நெட் சேர்வர் 2003 பெயர் மாற்றப்பட்டது. எனினும் இதில் டாட்.நெட் தொடர்பான பயங்கள் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் இதில் இருந்த டாட்.நெட் என்ற பெயரை 2002 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த இரண்டாம் சோதனை முயற்சியில் கைவிட்டனர். [4]

[தொகு] புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள்

  • இண்டநெட் இன்பமேஷன் சேவிசஸ் 6 ஆம் பதிப்பு, குறிப்பிடத்த மேம்படுத்தல்களூடான பதிப்பு
  • நிறுவும் பொழுது தானகவே பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளும், இதன் உடன் உள்ளிணைந்த தீச்சுவர் மற்றும் பொதுவான சேவைகள் இயக்கத்தில் இருக்காது.
  • சேர்வரை நிர்வாகித்தல் - நிர்வாகக் கருவிகள் ஊடாக எந்தெந்த சேவைகளை செர்வர் வழங்கும் எனத் தீர்மானித்தல்
  • மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் டிரைக்ரி
  • மேம்படுத்தப்பட்ட குழுப் பாலிசிகள் ஊடாக கையாளும் மற்றும் நிர்வாகிக்கும் வசதிகள்.
  • மேம்படுத்தப்பட்ட ஸ்கிரிப்டிங், மற்றும் கட்டளைகள். இது விண்டோஸ் சேர்வர் 2008 இல் முழுமையான கட்டளைப் பணிச்சூழலை இற்கான ஓர் பிள்ளையார் சுழி.
  • மேம்படுத்தப்பட்ட வன்வட்டு நிர்வாகம். திறக்கப்பட்ட நிலையில் உள்ள கோப்புக்களைக் கூட பக் அப் எடுக்கும் வசதி.
  • வன்பொருளூடாக கண்காணிப்பு நாய்க் கடிகாரம். இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் சேர்வர் இயங்காவிட்டால் மீள் சேர்வரை ஆரம்பிக்கும் வசதி.

[தொகு] பதிப்புக்கள்

விண்டோஸ் 2003 பல்வேறுபட்ட பதிப்புக்களில் வெளிவந்துள்ளது. இது பல்வேறு பட்ட வணிகப் பயனர்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் குறுகிய மேலோட்டத்திற்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் செர்வர் 2003 பதிப்பு ஓப்பீடு ஐப் பார்க்கவும். பொதுவாக விண்டோஸ் சேர்வர் எல்லாப் பதிப்புக்களுமே கோப்புக்கள், அச்சியந்திரங்களைப் பகிரும் வசதியுடன் பிரயோகங்களுக்கான வழங்கியாகவும் செயற்படும்.

[தொகு] ஸ்மோல் பிஸ்னஸ் எடிசன்

ஸ்மோல் பிஸ்னஸ் எடிசன் சிறிய வணிக அமைப்புக்களைக் குறிவைத்து பூரண தீர்வொன்றை வழங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். இங்கு தொழில் நுட்பங்களானது ஒருங்கிணைக்கபப்ட்டு தீர்வுகளாக றிமோட் டெஸ்க்டாப் வேக்பிளேல் போன்ற தீர்வுகள் வழங்கப்பட்டது.

ஸ்மோல் பிஸ்னஸ் ஸ்ராண்டட் கூட்டு முயற்சி மென்பொருளான எடிசன் ஷெயார் பாயிண்ட் சேர்வர், மின்னஞ்சலுக்காக மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ் செர்வரையும், தொலைநகல் (பாக்ஸ்) செர்வர் மற்றும் பயனர்களைத் திறப்பட நிர்வாகிப்பதற்காக ஆக்டிவ் டிரைக்டிரியையும் உள்ளடக்கியுள்ளது. இம்மென்பொருளானது அடிப்படையான தீச்சுவர் (பயர்வால்), டீஎச்சீபி என்கின்ற கணினிகளுக்கு ஐபி முகவரிகளை வழங்கும் சேவை, மற்றும் நாட் என்கின்ற ஐபி முகவரிகளை மாற்றீடு செய்யும் முறையிலான ரவுட்டிங்கை 2 நெட்வெர்க் காட் அல்லது 1 நெட்வேர்க் காட் மற்றும் ஒரு வன்பொருள் ரவுட்டர் ஊடாக ஆதரிகின்றது.

ஸ்மோல் பிஸ்னஸ் பிரிமியம் பதிப்பானது மேலுள்ள வசதிகளுடன் மைக்ரோசாப்ட் சீக்குவல் சேர்வர் 2000 மற்றும் மைக்ரோசாப்ட் இண்டநெட் செக்கியூரிட்டி அண்ட் அக்சல்ரேஷன் சேர்வர் 2004 ஐயும் உள்ளடக்கியுள்ளது.

[தொகு] வெப் எடிசன்

விண்டோஸ் சேர்வர் 20003 வெப் எடிசனானது இணையம் சார் பிரயோகங்கள், இணையப் பக்கங்கள், எக்ஸ் எம் எல் ஊடான இணைய சேவைகளை உருவாக்குவதற்கென உருவாக்கப் பட்டதாகும். இது பிரதானமாக இண்டநெட் இன்பமேஷன் செர்வர் 6 ஊடான ஓர் இணைய வழங்கியாகத் ஓர் விரைவாகப் பிரயோகங்களை .நெட் இன் முக்கியமாகன பாகமான ஏஎஸ்பி.நெட் ஊடாகப் பிரயோகங்களை விருத்தி செய்வதற்கென உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பதிப்பில் வாங்கி (கிளையண்ட்) அணுக்க அனுமதி உள்ளடக்கப்படவில்லை அத்துடன் இதில் டேமினல் செர்வர் உள்ளடக்கப்படவில்லை. எனினும் றிமோட் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஓரே நேரத்தில் அதிகபட்சமாகப் 10 பயனர்களே ஒரு பகிரப்பட்ட கோப்புறையை (போல்டர்) அணுகமுடியும். இதில் மைக்ரோசாப்ட் சீக்குவல் செர்வரையோ அல்லது எக்ஸ்சேஞ் சேர்வரையோ இதில் நிறுவ இயலாது. எனினும் இதில் சேவைப் பொதி 1 ஐப் பிரயோகித்த பின்னர் மைக்ரோசாப்ட் டேட்ட பேஸ் என்ஜின் சீக்குவல் செர்வர் 2005 எக்ஸ்பிரஸ் எடிசன் ஆகிய பதிப்புக்களை ஆதரவளிக்கின்றது. டாட்.நெட் பிரேம் வேர்க் 2.0 விண்டோஸ் சேர்வர் 2003 உடன் உள்ளிணைக்கப்படாவிட்டாலும் விண்டோஸ் மேம்படுத்தலுடாகத் தனியே நிறுவிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 2003 வெப் எடிசன் ஆகக்கூடுதலாக 2 செயலிகளை (புரோசசர்) களை ஆதரிக்கின்றது. இது ஆகக்கூடுதலாக 2 ஜிகாபைட் அளவிலான ராம் என்கின்ற தற்காலிக நினைவகத்தை ஆதரிக்கின்றது. வெப் எடிசன் டொமைன் கண்டோரலாகச் செயற்படவியலாது. [5]மேலும் இதுவே விண்டோஸ் சேர்வர் கிளையண்ட்டின் அணுக்க மட்டுப்பாடு இல்லாத பதிப்பாகும்.

[தொகு] ஸ்ராண்டட் எடிசன்

விண்டோஸ் சேர்வர் 2003 ஸ்ராண்டட் எடிசன் சிறிய வணிக அமைப்புக்களில் இருந்து நடுத்தர வணிக அமைப்புக்களை குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும். ஸ்ராண்டட் எடிசன் கோப்புக்கள் மற்றும் அச்சியந்திரங்களைப் பகிர முடிவதோடு பாதுகாப்பான முறையில் இணையத்தை அணுகவும் உதவி செய்கின்றது. பிரயோகங்களை உருவாக்குவதிலும் உதவி செய்கின்றது. இந்தப் பதிப்பானது 4 மையச் செயலிகளை ஆதரிப்பதுடன் 4 ஜிகாபைட் அளவிலான தற்காலிக நினைவகம் (ராம்) ஐயும் ஆதரிக்கின்றது. இது 64 பிட் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. ஸ்ராண்டட் எடிசன் 32 ஜிகாபைட் தற்காலிக நினைவகத்தை (ராம்) ஐக் கையாளும் வசதி படைத்தது. விண்டோஸ் சேர்வர் 2003 ஆனது மாணவர்களுக்கான இலவசப்பதிப்பாகவும் மைக்ரோசாப்ட்டின் டீரிம்பார்க் திட்டம் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

[தொகு] எண்டபிரைஸ் எடிசன்

விண்டோஸ் 2003 எண்டபிரைஸ் எடிசன் மத்திய மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதாகும். இது 8 மையச் செயலிகளை ஆதரிக்கின்றது. இதன் 32 பிட் பதிப்பானது 32 ஜிகாபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தை ஆதரிக்கின்றது. இதன் 64 பிட் பதிப்பானது 1 டெராபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தைக் கையாளக் கூடியது.

[தொகு] டேட்டா செண்டர் எடிசன்

விண்டோஸ் சேர்வர் டேட்டா செண்டர் எடிசனானது கூடுதல் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது 32பிட், இட்டானியம் புரோசர்கள், 64 பிட் புரோசர்களை ஆதரிக்கும். இதன் 32 பிட் பதிப்பானது ஆக்கக்கூடுதலாக 32 செயலிகளையும் 64 பிட் பதிப்பானது ஆகக் கூடுதலாக 64 புரோசர்களையும் ஆதரவளிக்கும். 32பிட் கட்டுமானமானது ஆகக்கூடுதலாக 128 ஜிகாபைட் அளவிலான நினைவகத்தை ஆதரவளிக்கின்றது. 64பிட் பதிப்பானது ஆகக்கூடுதலாக 2 டெராபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தை ஆதரவளிக்கின்றது. விண்டோஸ் 2003 டேட்டா செண்டர் எடிசனானது ஒரு பிரயோகத்திற்கான புரோசசரையும் நினைவகத்தையும் மட்டுப்படுத்த வல்லது.

[தொகு] பதிப்புக்களின் ஒப்பீடு

விண்டோஸ் சர்வர் 2003 பதிப்புக்களும் வசதிகளும்
வன்பொருள் வெப் ஸ்ராண்டட் எண்டபிறைஸ் டேட்டா செண்டர்
செயலி 2 4 8 32/64(64 பிட்)
தற்காலிக நினைவகம் ஜிகாபைட்டில் (RAM) 2 4 32/64 (64பிட்) 64/512(64பிட்)
டொமைன் கண்டோலர் இல்லை ஆம் ஆம் ஆம்
கிளஸ்டர் ஆதரவு இல்லை இல்லை 8 இணைப்பு(8 node) 8 இணைப்பு (8 node)
64பிட் ஆதரவு இல்லை ஆம் ஆம் ஆம்

[தொகு] உசாத்துணைகள்

  1. Microsoft (2008-03-08). "Windows server 2003 Lifecycle Policy". Microsoft.
  2. மைக்ரோசாப்ட் (2007-02-19). "வின்டோஸ் சேவர் 2003: மென்பொருள் மேலோட்டம்". மைக்ரோசாப்ட். (ஆங்கிலத்தில்)
  3. மைக்ரோசாப்ட் (2003-04-24). "விண்டோஸ் 2003 உலகளாவிய ரீதியில் இன்றுமுதற் கிடைக்கும்". மைக்ரோசாப்ட். பார்க்கப்பட்ட நாள் 2006-11-13.
  4. விண்டோஸ் சர்வரின் அடையாளப் பிரச்சினைகள்
  5. "Compare the Editions of Windows Server 2003". Microsoft. பார்க்கப்பட்ட நாள் 2006-09-02.
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்