விநாயகர்
விநாயகர் என்ற பெயர் இந்து சமய ஆண்பால் கடவுள்களுள் ஒன்றான யானை முகத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள உருவத்தை குறிக்கும்.
பொருளடக்கம் |
காணபத்தியம் [தொகு]
இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணபத்தியம் எனும் பிரிவு இக்கடவுளை மையப்படுத்தியதே ஆகும்.
இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.
புராணக் கதை [தொகு]
கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.
திருவுருவ விளக்கம் [தொகு]
திருவடி [தொகு]
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு [தொகு]
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள் [தொகு]
கொம்புகள் [தொகு]
தாழ்செவி [தொகு]
32 விநாயகர் மூர்த்தங்கள் [தொகு]
- பால கணபதி
- தருண கணபதி
- பக்தி கணபதி
- வீர கணபதி
- சக்தி கணபதி
- துவிஜ கணபதி
- சித்தி கணபதி
- உச்சிட்ட கணபதி
- விக்ன கணபதி
- க்ஷிப்ர கணபதி
- ஏரம்ப கணபதி
- லட்சுமி கணபதி
- மஹா கணபதி
- விஜய கணபதி
- நிருத்த கணபதி
- ஊர்த்துவ கணபதி
- ஏகாட்சர கணபதி
- வர கணபதி
- திரயாக்ஷர கணபதி
- க்ஷிப்ரபிரசாத கணபதி
- ஹரித்திரா கணபதி
- ஏகதந்த கணபதி
- சிருஷ்டி கணபதி
- உத்தண்ட கணபதி
- ரணமோசன கணபதி
- துண்டி கணபதி
- துவிமுக கணபதி
- மும்முக கணபதி
- சிங்க கணபதி
- யோக கணபதி
- துர்க்கா கணபதி
- சங்கடஹர கணபதி
விநாயகரின் வேறு பெயர்கள் [தொகு]
- பிள்ளையார்
- கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
- ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
- கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
- விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
விநாயக சதுர்த்தி [தொகு]
வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.
தமிழ் நாட்டின் சிறப்பு [தொகு]
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.
மேலும் பார்க்க [தொகு]
- ஓம்
- பிள்ளையார் சுழி
- கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
- திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்
- உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்
Gallery [தொகு]
Gallery of free to use images
வெளிப்புற இணைப்பு [தொகு]
- முக்குறுனிப்பிள்ளையார் பற்றிய சுவையான தகவல்
- விநாயகர் திருவுருவங்கள்
- விநாயகரின் வடிவங்கள்
- விநாயகர் சில சுவையான தகவல்கள்
- விநாயகரை வழிபடுவதன் விவரங்கள்