வித்யாசாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வித்யாசாகர்
பிறப்பு வெங்கடாசலம்.
நவம்பர் 25, 1976.
சென்னை ,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம் குவைத்
தேசியம் இந்தியர்
கல்வி இளங்கலை பொறியியல் பட்டம்
(இயந்திரவியல்)
பணி தரக் கட்டுப்பாடு மற்றும்
தர நிர்ணயத் துறை மேலாளர்.
பணியகம் எண்ணெய் மற்றும் வாயுசார் நிறுவனம்,
குவைத்
பெற்றோர் கோவிந்தன் (தந்தை)
கெம்பீஸ்வரி (தாய்)
வாழ்க்கைத் துணை செல்லம்மாள்
பிள்ளைகள் முகில்வண்ணன் (மகன்),
வித்யா பொற்குழலி (மகள்)
உறவினர்கள் சகோதரர்கள் - 3,
சகோதரி - 1
வலைத்தளம்
www.vithyasagar.com

வித்யாசாகர் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வளர்ந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞர். வெங்கடாசலம் எனும் இயற்பெயருடைய இவர் இளங்கலை இயந்திரப் பொறியாளர். குவைத்தில் எண்ணெய் சார்ந்த நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டுத் துறையில் மேலாளராகப் பணி புரிந்து வரும் இவர் 1998 ஆம் ஆண்டு முதல் சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை, புதினம் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

இவர் கீழ்க்காணும் நூல்களை எழுதியிருக்கிறார்.

 1. சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய் (சிறுகதை)
 2. விற்கப்படும் நிலாக்கள் (குறும் புதினங்கள்)
 3. வீழ்ந்தது போதும்; வாழ்ந்து காட்டு (கவிதை)
 4. திறக்கப்பட்ட கதவு (குறும் புதினம், சிறுகதை)
 5. கனவுத் தொட்டில் (புதினம்)
 6. வாயிருந்தும் ஊமை நான் (சிறுகதை)
 7. இதோ என் வீர முழக்கம் (கவிதை)
 8. சாமி வணக்கமுங்க (ஆன்மிக விளக்கக் கதைகள்)
 9. Dreams Cradle (கனவு தொட்டிலின் ஆங்கில மொழிபெயர்பு புதினம்)
 10. பிரிவுக்குப் பின் (கவிதை)
 11. எத்தனையோ பொய்கள் (சிறுங்கவிதை)
 12. அவளின்றி நான் இறந்தேனேன்று அர்த்தம் கொள் (காதல் கவிதைகள்)
 13. விடுதலையின் சப்தம் (ஈழக் கவிதைகள்)
 14. கண்ணடிக்கும் கைதட்டும் ; ஆனால் கவிதையல்ல (கவிதை)
 15. சில்லறை சப்தங்கள் (சமூகக் கவிதை)
 16. உடைந்த கடவுள் (சிறுங்கவிதை)
 17. கத்தாமா (சிறுகதை)
 18. வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை (சமூகக் கவிதை)
 19. அரைகுடத்தின் நீரலைகள் (சமூகக் கவிதை)
 20. ஞானமடா நீயெனக்கு (பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உணர்வுகள்
 21. கொழும்பு வழியே ஒரு பயணம் (ஈழவிடுதலை பற்றிய நாவல்)
 22. பறக்க ஒரு சிறகு கொடு (காதல் கவிதைகள் மட்டும்)
 23. கண்ணீர் வற்றாத காயங்கள்.. (ஈழவிடுதலையும் போராளிகள் பற்றிய குறிப்பும்)
 24. நீயே முதலெழுத்து (சமூக கவிதைகள்)
 25. அம்மாயெனும் தூரிகையே.. (சமூக கவிதைகள்)

சிறப்புகள்[தொகு]

 • தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் உள்ள பாடம் ஒன்றில் மண்சார்ந்த கவிதைகள் எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள செய்தியில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. [1]
 • இவர் எழுதிய மாவீரர் தினப்பாடல் ஜீடிவியில் ஒளிபரப்பப்பட்டது.[2]

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

 • குவைத் நீதியின் குரல் மாத இதழ் வழங்கிய வெண்மனச் செம்மல் விருது.[சான்று தேவை]
 • கலைமகள் இதழ் நடத்திய அமரர் ராமரத்னம் குறும் புதினம் போட்டியில் முதல்பரிசு.[சான்று தேவை]
 • உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய கவிதைக்கான "கவிமாமணி" விருது.[சான்று தேவை]
 • உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய எழுத்தாளர்களுக்கான "இலக்கியச் செம்மல் விருது" (மூன்று பிரிவுகளில்).[சான்று தேவை]
 • உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை வழங்கிய கட்டுரைக்கான "தமிழ்மாமணி" விருது[சான்று தேவை]
 • குவைத் தமிழோசைக் கவிஞர் மன்றம் வழங்கிய "பன்னூற் பாவலர்" விருது[சான்று தேவை]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடப்பகுதி
 2. மாவீரர் தினப்பாடல்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாசாகர்&oldid=1321131" இருந்து மீள்விக்கப்பட்டது