வித்து உறங்குநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வித்து உறங்குநிலை (Seed Dormancy) என்பது தாவர விதை அல்லது வித்தானது முளைப்பதற்கு ஏற்ற உகந்த சூழல்காரணிகள் இருக்கும் நிலையிலும் வித்தானது முளைத்தலைத் தடுக்கக் கூடிய ஒரு நிலைமையாகும். உறங்குநிலையில் இல்லாத உயிர் வித்துக்கள் உகந்த வெப்பநிலை, நீர், ஆக்சிசன், தேவையேற்படின் ஒளி அல்லது இருள் போன்றன கிடைக்கும் சூழ்நிலையில் முளைக்க ஆரம்பிக்கும். ஆனால் உறங்கு நிலையிலுள்ள வித்துக்கள் இவ்வாறான உகந்த சூழ்நிலையிலும் முளைப்பதில்லை. அவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னரே தகுந்த சூழல் கிடைத்தால் முளைக்கும்.

பொருளடக்கம்

[தொகு] உறங்கு நிலையை வகைப்படுத்தல்

உறங்கு நிலை அகக் காரணிகளாலான உறங்கு நிலை, புறக்காரணிகளாலான உறங்கு நிலை என இரு பெரும்பாகங்களாக வகைப்படுத்தப்படும்.


அகக் காரணிகளாலான உறங்கு நிலை முளையத்தினுள்ளாக இருக்கும் சில காரணிகளால் உறங்குநிலை ஏற்படும்போது அவை அகக் காரணிகள் எனப்படும். இது மூன்று வகைப்படும்

  • உடற்றொழிலியல் உறங்குநிலை

உடற்றொழிலியல் உறங்குநிலை வேதியியல் மாற்றம் நிகழும் வரை முளைய விருத்தி மற்றும் முளைத்தல் நிகழ்வதைத் தடுக்கிறது.[1]


  • உருவவியல் உறங்குநிலை

வளர்ச்சி குன்றிய மற்றும் மறுபாடில்லாத முளையங்களில் இது நிகழும்.

  • இணைந்த உறங்குநிலை


புறக்காரணிகளாலான உறங்கு நிலை முளையத்திற்கு வெளியாக காணப்படும் காரணிகளாஇ உறங்கு நிலையேற்படுமாயின் அது புறக் காரணிகள் என அழைக்கப்படும். இதுவும் மூன்று வகைப்படும்.

  • பௌதீக உறங்குநிலை

பொதுவாக நீரையும் வளியையும் உட்புக விடாத தன்மையால் இவ்வகையான உறங்குநிலை விதைகளில் ஏற்படும்..[2] விதையைச் சுற்றி உருவாகும் ஒரு ஒரு வகை உறையினால் இவ்வகையான நிலை ஏற்படும். இவற்றின் தடித்த வித்துறை நீர் உட்புகுவதைத் தடுக்கிறது. பொதுவாக அவரையின விதைகளில் இவ்வகையான உறங்குநிலை காணப்படும். அப்படியான வித்துயுறை அகற்றப்படும்போது விதை முளைக்கத் தயாராகும்.

  • பொறிமுறை உறங்குநிலை

விதையின் உறையானது மிகவும் கடினமாக இருப்பதனால், முளையம் முளைக்கும்போது, அது வெளியேற முடியாத நிலை இருக்குமாயின் அது பொறிமுறை உறங்குநிலை எனப்படும்[3].

  • இரசாயன உறங்குநிலை

முளையத்தை மூடியிருக்கும் உறையில் காணப்படும் சில வளர்ச்சிக் காரணிகளின் தாக்கத்தால் விதை முளைக்க முடியாத தன்மையைக் கொண்டிருத்தலாகும். விதைகளை நீரில் ஊறப்போடுவதாலோ, அல்லது நீரில் கழுவுவதாலோ இவ்வகையான உறங்கு நிலையைப் போக்கலாம்.

[தொகு] உறங்கு நிலையைக் கலைத்தல்

[தொகு] தாவரங்களும் உறங்கு நிலைக்காலமும்

[தொகு] உறங்குநிலையின் நன்மைகள்

[தொகு] ஆதாரங்கள்

  1. Fenner, Michael; Thompson, Ken (2005), "The ecology of seeds", Publisher Cambridge University Press: 98, ISBN 9780521653688, http://books.google.com/?id=bzflp9q5tNIC&pg=PA97, retrieved 2009-08-15 
  2. Chawla, H. S. (2002), Introduction to plant biotechnology, Vol 2, Science Publishers, pp. 32, ISBN 9781578082285, http://books.google.com/?id=RgQLISN8zT8C&pg=PA32, retrieved 2009-08-15 
  3. http://trc.ucdavis.edu/egsutter/plb171/lecturespdf4/5-Seed%20dormancy02.pdf
"http://ta.wikipedia.org/w/index.php?title=வித்து_உறங்குநிலை&oldid=709392" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்