வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) மொழி இடைமுகப் பொதி என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

வின்டோஸ் மொழி இடைமுகப் பொதியானது வின்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகப்பின் மொழியை மாற்றிக்கொள்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் உருவாக்கி வெளியிடப்படும் மென்பொருளாகும். இது வின்டோஸ் எக்ஸ் பீ பதிப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்குகிறது. ஏற்கனவே வெவ்வேறு மொழிகளுக்கென மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது வின்டோஸ் இயங்குதளத்தின் தனித்தனி பதிப்புக்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு தனிப்பதிப்புகளில் இடம்பெறாத மொழிகளை இடைமுகப்பில் இடம்பெறச்செய்வதற்கான தொழிநுட்பமாகவே LIPS எனப்படு மொழி இடைமுகப் பொதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது தமிழ் உட்பட பல மொழிகளில் இப்பொதி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவிறக்கம் செய்யும் போதும் நிறுவும் போதும் போலியில்லாத வின்டோஸ் என்பதை இம் மென்பொருளானது நிச்சயம் செய்த பின்னரே நிறுவிக்கொள்ளும்.

இந்திய மொழிகளில் வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி[தொகு]

இந்திய மொழிகளில் வெளியாகும் எல்லாப் பயனர் மொழி இடைமுகங்களும் ஆங்கிலத்தையே ஆதாரமாக் கொண்டுள்ளன

  1. ஹிந்தி: இதுவே இந்திய மொழிகளின் முதற் பதிப்பாகும். 11 நவம்பர் 2003 இல் வெளிவந்தது. வின்டோஸ் XP சேவைப் பொதி 1 அவசியம் ஆகும். பதிவிறக்கம்
  2. தமிழ்: இதுவே இந்திய மொழிகளில் இரண்டாவதாக வெளிவிடப்பட்டது. 20 மார்ச் 2005 இல் வெளிவந்தது. வின்டோஸ் XP சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்
  3. மராத்தி: 27 மார்ச் 2005 இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்
  4. கொங்கணி மொழி: 27 செப்டம்பர் 2005. இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்
  5. குஜராத்தி: 7 அக்டோபர் 2005 இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்
  6. மலையாளம்: 2 பெப்ரவரி 2006 இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்
  7. கன்னடம்: 15 மார்ச் 2006 இல் வெளிவந்தது. வின்டோஸ் XP சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்

மைக்ரோசாஃப்ட் தகவலிறக்க மையம் கணினியை போலியல்லாத விண்டோஸ் நிறுவல் (WGA) என உறுதிப்படுத்திய பின்னரே இந்த மென்மொருளை தகவலிறக்கம் செய்வதற்கான சுட்டியை வலைப்பக்கத்தில் அளிக்கும். எனவே கொள்கைரீதியாக அசல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்பை வைத்துள்ளவர்கள் அல்லாமல் வேறு ஒருவரும் இதை தகவலிறக்கம் செய்ய இயலாது என்றாலும் ஏற்கனவே பதிவிறக்கபப்ட்ட மென்பொருளை நிறுவ இயலும் தவிர விண்டோஸ் சோதனைப் பதிப்புக்களைப் பயன்படுத்துபவர்களும் இதைப் பதிவிறக்கம் செய்யலாம்.

மைக்ரோசாஃப்ட் கலைச்சொல்லாக்கம்[தொகு]

மொழி இடைமுகப்பு பொதிகளை உருவாக்குவதற்கான கலைச்சொற்களும் இடைமுகப்பு சொற்களும் மைக்ரோசொஃப்ட் சமுதாய கலைச்சொல்லாக்கத்திட்டத்தின் மூலம் பெறப்படுகின்றன. இத்திட்டத்திற்கு பங்களிப்பவர்களுக்கு இந்நிறுவனம் எந்த விதமான ஊதியமும் வழங்குவதில்லை. அனைத்து பங்களிப்பாளர்களும் தன்னார்வலர்களே.

மொழி இடைமுகப்பு பொதியானது எப்போதும் இலவசமாகவே வழங்கப்படும் என சமுதாய கலைச்சொல்லாக்கதிட்டத்தின் ஒப்பந்தத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளிக்கிறது. எவ்வாறாயினும் இயங்குதளத்தை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சந்தைத் தேவைகளுக்காக இத்திட்டம் மூலம் சமுதாய உழைப்பை சுரண்டுகிறது என்றவாறான எதிர்நிலை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொழில் நுட்பத் தகவல்கள்[தொகு]

நிறுவுதல்[தொகு]

Windows Tamil Language Interface Pack Licence Agreement.PNG

தமிழ் வின்டோஸ் எக்ஸ்பி மொழி இடைமுகப் பொதியை நிறுவலானது இடைமுகங்களை நிறுவுவதைப் போன்றதே. முதலில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 4.36MB அளவான இக்கோப்பின் பெயர் LIPSetup.msi ஆகும். ஏனைய மொழிகளுக்கானதும் இதே கோப்புப் பெயருடன் இருக்கும் எனினும் கோப்பின் அளவு மொழிகளிற்கு ஏற்ப மாறுபடும்.

  • வின்டோஸ் எக்ஸ்பி தமிழ் மொழி இடைமுகப் பதிப்பின் உரிம ஒப்பந்தை வாசித்து ஏற்றுக்கொள்ளவும்
Windows Tamil Interface Pack Readme.PNG
  • மேலே தொடர முன் அறிவுறுத்தல்களை வாசித்தறியவும். அங்கே வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் என்று குறிப்பிடப் பட்டுள்ளதை அவதானிக்கவும்(கவனிக்கவும்).
Windows Tamil Interface Pack Install Confirmation.PNG
  • நீங்கள் வின்டோஸ் எக்ஸ்பி தமிழ் இடைமுகப் பதிப்பை நிறுவ இருக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சாளரம்.
Installing Language Group Files.PNG
    • நீங்கள் இதுவரை இயங்கு தளத்தை ஒருங்குறி (யுனிக்கோட்) முறையில் பார்க்கவோ உள்ளீடு செய்வதற்கு வசதிகளைச் செய்யவில்லையாயின் மாத்திரமே இந்த சாளரத்தை காண்பீர்கள்.
Files Needed.PNG
    • விண்டோஸ் எக்ஸ்பி இறுவட்டு (CD) CD தட்டில் இல்லையெனில் உட்புகுத்துமாறு கோரும். (நீங்கள் இதுவரை இயங்கு தளத்தை யுனிக்கோட் முறையில் பார்க்கவோ உள்ளீடு செய்வதற்கு வசதிகளைச் செய்யவில்லையாயின் மாத்திரமே இந்த சாளரத்தைக் காண்பீர்கள்.)
Updating System.PNG
  • இயங்கு தள மேம்படுத்தல்
Windows Tamil Interface pack is successfully installed.PNG
  • இயங்குதளமானது வெற்றிகரமாக நிறுவப்பட்டவுடன் வலப்பக்கமுள்ள செய்தியைக்காட்டும்.
Windows Tamil Interface Pack restart computer once installed.PNG

பாவித்தல்(பயன்படுத்துதல்)[தொகு]

Windows XP Tamil LIP Interface.PNG
Windows XP Tamil LIP Control Pannel.PNG
  • கணினியின் கட்டுப்பாட்டுப் பகுதியும் இப்போது தமிழாக்கமடைந்திருக்கும்
Right Click My Computer Windows XP Tamil LIP.PNG
  • நீங்கள் என் கணினியை right click செய்யும் போது தமிழ் தேர்வுகளைக் காணலாம்.
Right click windows XP Tamil LIP desktop.PNG
  • உங்கள் desktopஐ right click செய்யும் போது தமிழ் தேர்வுகளைக் காணலாம்.
Dialog Box Windows XP Tamil LIP.PNG
  • உரையாடல் பெட்டிகளும்(Dialogue Box) தமிழாக்கப்பட்டிருக்கும்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி

மொழி இடைமுகப் பொதி

மைக்ரோசாப்ட் ஆபிஸ்

மைக்ரோசாப்ட் விண்டோசு

வெளி இணைப்புக்கள்[தொகு]