விண்டோசுத் துருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்டோஸ் துருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விண்டோசுத் துருவி
Windows Explorer Icon.png
மைக்ரோசாப்ட் விண்டோஸ் இன் ஒரு பாகம்.
WindowsExplorerTamil.jpg
Details
சேர்த்திருக்கும் இயங்கு தளங்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95இலிருந்து
முன்வந்தது விண்டோஸ் 3.1எக்சுவின் கோப்பு மேலாளர்
Related components
துவங்கு மெனு

விண்டோசுத் துருவி (ஆங்கிலம்: Windows Explorer, விண்டோஸ் எக்ஸ்புளோரர்) என்பது விண்டோஸ் 95இலிருந்து அமைக்கப்பட்ட மைக்ரோசாப்ட் விண்டோசு இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்டு வரும் கோப்பு முகாமை முறைமையின் வரைவியல் முகமாகும்.[1] விண்டோஸ் துருவி இன்றியும் கணினியைக் கட்டுப்படுத்த முடியும் (உதாரணமாக, கட்டளை விழிப்பூட்டு மென்பொருளின் மூலம் கணினியைக் கட்டுப்படுத்த முடியும்.). விண்டோஸ் துருவி உள்பகுதி வட்டு சியில் (அல்லது கணினியில் விண்டோசு நிறுவப்பட்டிருக்கும் செலுத்தியில்) Windows என்ற கோப்புறையினுள் காணப்படும்.[2]

பொருளடக்கம்

[தொகு] திறக்கும் விதம்

முகப்புத் திரையில் உள்ள என் கணினி படவுரு மீது இரு தடவைகள் சொடுக்குவதன் மூலம் அல்லது விசைப்பலகையின் விண்டோஸ் சாவியையும் பேரெழுத்து இயையும் ஒரே சமயத்தில் அழுத்துவதன் மூலம் அல்லது இயக்கு... கட்டளையில் explorer.exe என்று தட்டச்சிட்டு இயக்குவதன் மூலம் அல்லது துவங்கு மெனுவில் என் கணினி என்பதைச் சொடுக்குவதன் மூலம் அல்லது துவங்கு மெனுவில் அனைத்து நிரல்கள் என்ற தெரிவினுள் சென்று, உபகரணங்கள் என்ற தெரிவிலுள்ள Windows துருவி என்பதைச் சொடுக்குவதன் மூலம் விண்டோஸ் துருவியைத் திறக்க முடியும்.[3][4]

[தொகு] கருவிப் பட்டைகள்

விண்டோஸ் துருவி மென்பொருளில் மூன்று கருவிப் பட்டைகள் காணப்படும். அவையாவன:-

  • நிலையான பொத்தான்கள்
  • முகவரிப் பட்டி
  • இணைப்புகள்[5]

[தொகு] நிலையான பொத்தான்கள்

நிலையான பொத்தான்கள் கருவிப் பட்டையில் பின்னால், முன்னால், மேலே, தேடல், கோப்புறைகள், காட்சிகள் போன்ற பொத்தான்கள் காணப்படும்.[6] இதில் உள்ள கருவிகளை மாற்றுவதற்கு, காட்சி என்பதைச் சொடுக்க வரும் பட்டியில் கருவிப்பட்டிகள் என்ற தெரிவினுள் சென்று விருப்பமாக்கல்... என்பதில் சொடுக்கி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.[7]

[தொகு] முகவரிப் பட்டி

முகவரிப் பட்டியின் மூலம் கணினியில் உள்ள கோப்புறைகளுக்குள் பிரவேசிக்க முடியும்.[8] அதே போல, முகவரிப் பட்டியில் வலைக் கடப்பிடங்களின் உரலிகளைத் தட்டச்சுச் செய்து வலைக் கடப்பிடங்களைப் பார்வையிட முடியும்.[9] இந்தப் பட்டியைக் கட்டளைக் கோடாகவும் கட்டளை விழிப்பூட்டு மென்பொருளுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

[தொகு] இணைப்புகள்

இக்கருவிப் பட்டையில் பயனர் அடிக்கடி செல்லும் வலைப் பக்கங்களின் உரலிகளைச் சேமித்து அவற்றுக்குச் சுலபமாகச் செல்ல முடியும்.[10]

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசுத்_துருவி&oldid=1110204" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்