விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்
| Содружество Независимых Государств (СНГ)
விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (CIS)
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
|
உறுப்பு நாடு இணை உறுப்பினர் விலக விருப்பம் தெரிவித்த நாடு சில திட்டங்களில் பங்குபற்றும் நாடு
|
||||
| தலைமையகம் | மின்ஸ்க், பெலாரஸ் | |||
| வகை | பொதுநலவாயம் | |||
| Membership | 9 உறுப்பு நாடுகள் 1 இணை உறுப்பினர் 1 பங்குபற்றுனர் |
|||
| தலைவர்கள் | ||||
| - | நிறைவேற்றுச் செயலர் | சேர்கி லெபதேவ் | ||
| அமைப்பு | டிசம்பர் 21, 1991 | |||
| மக்கள்தொகை | ||||
| - | 2008 மதிப்பீடு | 277,983,490 | ||
விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (Commonwealth of Independent States) என்பது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள் அடங்கிய ஒரு பிரதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் பெலாரஸ், ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்டது. மேற் காட்டிய தேதியில் இம் மூன்று நாடுகளின் தலைவர்களும் இணைந்து சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, அதனிடத்தில் விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். 1991 டிசம்பர் 21 இல், ஆர்மேனியா, அசர்பைஜான், கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தாஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய மேலும் எட்டு நாடுகள் இவ்வமைப்பில் இணைந்தன. ஜார்ஜியா இரண்டு ஆண்டுகள் கழித்து இதில் இணைந்து கொண்டது. 1993 டிசம்பர் நிலைப்படி 15 முன்னாள் சோவியத் குடியரசுகளில் 12 இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் ஆகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்ததால் எஞ்சிய மூன்று பால்ட்டிக் நாடுகளான எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா என்பன இவ்வமைப்பில் இணைவது இல்லை என முடிவு செய்திருந்தன.