விஜயலட்சுமி பண்டிட்
| விஜயலட்சுமி நேரு பண்டிட் | |
விஜயலட்சுமி நேரு பண்டிட் |
|
|
ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர்
|
|
| பதவியில் செப்டம்பர் 15, 1953 – செப்டம்பர் 21, 1954[1] |
|
| முன்னவர் | Lester B. Pearson |
|---|---|
| பின்வந்தவர் | Eelco N. van Kleffens |
|
|
|
| பதவியில் 1967-1971 |
|
| முன்னவர் | ஜவஹர்லால் நேரு |
| பின்வந்தவர் | வி. பி. சிங்க் |
| தொகுதி | ஃபுல்பூர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | 18 ஆகஸ்ட், 1900 |
| இறப்பு | 1 திசம்பர், 1990 |
| வாழ்க்கைத் துணை |
ரஞ்சித் சீதாராம் பண்டிட் |
| பிள்ளைகள் | நயன்தாரா சாஹல் |
| சமயம் | இந்து சமயம் |
| கையொப்பம் | |
விஜயலட்சுமி பண்டிட் (Vijaya Lakshmi Pandit) நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
இந்திரா காந்தியைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.
1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.
இவரது மகள் நயன்தாரா சஹால் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.