விசயன் (இலங்கை அரசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விஜயன் அல்லது விஜய என்பன் இலங்கையின் முதலாவது அரசனாக மகாவம்சம் கூறுகிறது. இன்றைய கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் தனது தந்தையினால் துரத்திவிடப்பட்டவன் என்றும் இலங்கையை கி.மு 483 தொடக்கம் கி.மு 445 வரை ஆட்சி செய்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. [1]

விசயனின் வருகை[தொகு]

மகாவம்சக் கூற்றின் படி காட்டு மிருகமான சிங்கத்திற்கு பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயனாவான். இவன் சிங்கபாகு ஆட்சி செய்த லாலா நாட்டு மக்களுக்கு மிகவும் கொடுமையானவனாகவும் வன்முறைமிக்கவனாகவும் இருந்தான். இதனால் மக்கள் அவனது தந்தையான சிங்கபாகுவிடம் முறையிட்டனர். தொடர்ந்தும் இவனது தொந்தரவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் கோபப்பட்ட மக்கள் அவனை கொன்றுவிடும் படி முறையிட்டனர். இருப்பினும் தனது தந்தையின் கூற்றுக்கும் அடங்காததனால். கடைசியாக சிங்கபாகு விசயனையும் அவனது 700 நண்பர்களையும் பாதி மொட்டையடித்து ஒரு கப்பலில் ஏற்றி கடலில் விட்டனர். அவர்களது குழந்தைகளையும், மனைவிகளையும் கூட வெவ்வேறு கப்பலில் ஏற்றி கடலில் விடப்பட்டனர். விசயன் சுப்பராகா எனும் இடத்தில் கரையொதுங்குகிறான். ஆயினும் அங்கேயும் அவனதும் அவனது நண்பர்களதும் தொல்லைகள் அதிகரிக்கவே அங்கிருந்தும் கடத்தப்படுகின்றனர். கடைசியாக (இன்றைய இலங்கையில்) தம்பபண்ணி எனும் இடத்தில் கரையொதுங்குகின்றனர். [2]

பதினெட்டு வயதை அடைந்த போது, அவனுடைய முறையற்ற நடத்தை காரணமாக, அவனது நண்பர்கள் 700 பேருடன் சேர்த்து வங்க தேசத்தில் லாலா எனும் நாட்டிலிருந்து அவனுடைய தந்தையால் நாடுகடத்தப் பட்டான். அவர்கள் கப்பலில் செல்லும் போது புயல் வீசவே கப்பல் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது. விஜயன், அங்கே இயக்கர் தலைவி குவேனியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள்.

ஆனால் பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே, குவேனியை துரத்திவிட்டு பாண்டி நாட்டு மதுராபுரியிலிருந்து அரசகுமாரியை வருவித்து மணந்து முடிசூடிக் கொண்டான்.

சான்றுகள்[தொகு]

  1. Wilhelm Geiger | Introduction Page XXXV
  2. The Coming of Vijay | Page 53-54
"http://ta.wikipedia.org/w/index.php?title=விசயன்_(இலங்கை_அரசன்)&oldid=1341752" இருந்து மீள்விக்கப்பட்டது