விக்கிப்பீடியா பேச்சு:விரைவுப்பகுப்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பயனர் வார்ப்புரு[தொகு]

இக்கருவியை நிருவிய பின் {{பயனர் ஹாட்கேட்}} என்ற வார்ப்புவை உங்கள் பயனர் பக்கத்தில் இட்டால் இது தொடர்பாக ஐயம் எழுப்பும் புதிய பயனர்களுக்கு இப்பக்கத்தை பார்க்க சொல்லி உதவலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 08:30, 1 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தலைப்பு தமிழாக்கம்[தொகு]

இதனைப் பொருத்தமான தமிழ்த் தலைப்பொன்றாக மாற்ற வேண்டும். அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் ஹாட்கேட் (heart gate, hart gate ...) என வாசிக்கும் போது என்னவோ போல இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 03:03, 15 மே 2012 (UTC)[பதிலளி]

விரை பகு, விரைவுப் பகுப்பு?--இரவி (பேச்சு) 05:44, 17 மே 2012 (UTC)[பதிலளி]

பாஃகிம் கூறியது போலவே நானும் உணர்ந்தேன்!!!! ஃகாட் கேஅட் (hot cat) என்பது விரைவாய் இணைப்பு ஏற்படுத்துவது என்பதால் விரைவிணைப்பி அல்லது விரைவுப்பகுப்பி எனலாம். சரேல்பகுப்பி என்றும் கூறலாம் :) --செல்வா (பேச்சு) 19:31, 19 மே 2012 (UTC)[பதிலளி]
ஆமாம். விரைவுப்பகுப்பி, விரைவிணைப்பி இரண்டும் நன்றாக உள்ளது. --Natkeeran (பேச்சு) 19:33, 19 மே 2012 (UTC)[பதிலளி]
வேறு கருத்துகள் ஏதும் உள்ளனவா? விரைவுப்பகுப்பி என்று மாற்றலமா? --செல்வா (பேச்சு) 00:59, 28 மே 2012 (UTC)[பதிலளி]

கருவியின் பெயருக்கு மாற்றுக் கருத்தல்ல. ஆனால் விரைவுப்பகுப்பி 'மீடியாவிக்கி'க்கு நீளமாக இருக்கிறது :( ஏனென்றால் தொகுத்தல் சுருக்கம் 255 பைட்டுகள்(பார்க்க வழு 4715) தான் சேமிக்கும். இதனால் எடுத்துக்காட்டாக "ஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழ் நூல்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:த.." போன்று வெட்டப்பட்ட வரும். இது தொகுத்தல் சுருக்கத்தின் பயன் இல்லாமல் செய்கிறது. விரைவுப்பகுப்பி ஹாட்கேடை விட நீளமாக இருக்கும்.இந்த தொகுத்தல் சுருக்கம்(அண்மைய மாற்றங்களில், கவனிப்புப்பட்டியலில்) பழைய பயனர்கள் தான் பயன்படுத்துகிறார்கள் என்பதால் வி.ப என்று சுருக்கிப்பயன்படுத்தினால் தொகுத்தல் சுருக்கத்தினுள் அனேக செய்தி அடங்க வாய்ப்பு அதிகமாகும். புது பயனர்கள் வி.ப

உரலியை சொடுக்கி தெரிந்துகொள்ளலாம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 03:21, 28 மே 2012 (UTC)[பதிலளி]
தொகுப்புச் சுருக்கத்தில் மட்டும் வி. ப. என்றும் மற்ற இடங்களில் விரைவுப் பகுப்பி என்றும் குறிப்பிடலாம்--இரவி (பேச்சு) 14:02, 28 மே 2012 (UTC)[பதிலளி]

பகுப்பு தவறாக நீக்கம்[தொகு]

சகோ, என்ன விக்கிப்பீடியா கருவிகள் பகுப்பு விரைவு பகுப்பி கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுளதே. இதில் கொடுமை என்ன என்றால் அது நீக்கப்பட்டதும் விரைவு பகுப்பியை கொண்டே! :)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:33, 1 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

அறியாமல் - ஐ அழுத்தியிருப்பார் என நினைக்கிறேன் தென்காசியாரே, மீண்டும் சேர்த்துள்ளேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:06, 2 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்களுக்கு பகுப்பு இணைத்தல்[தொகு]

இக்கருவியை கொண்டு வார்ப்புருக்களுக்கு பகுப்பு இணைக்க முடியாதோ? அல்லது நான் தவறாக உபயோகிக்கிறேனா? - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 07:07, 18 பெப்ரவரி 2015 (UTC)

தெளிவற்ற நிறுவல் வழிமுறை[தொகு]

இக்கருவியின் நிறுவல் வழிமுறையில் "மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்வாக எழுதப்பட்டிருக்கும் பத்தி தெளிவற்று உள்ளது. அதனை எளிமைப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 07:13, 18 பெப்ரவரி 2015 (UTC)