விக்கிப்பீடியா பேச்சு:விக்கி விடுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிவிடுப்பு என்பது அனுமதி என்பதை விட தனியே அறிவிப்பு என்பதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு இத்தகைய அனுமதி முறை தேவையா?--சஞ்சீவி சிவகுமார் 06:12, 23 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தாங்கள் வலிந்து அமலாக்கப்பட்ட விக்கி விடுப்பு பற்றி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். அதற்கான வெளி இணைப்பை இணைத்துள்ளேன். இது அனுமதி பெற வேண்டியதன்று. எனக்கு முக்கியமான பட்ட மேற்படிப்புத் தேர்வுகள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். எனக்கு இணைய இணைப்பும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இச்சமயத்தில் நானே புகுபதிகை செய்தாலும் என்னைப் புகுபதிகை செய்ய விடாமல் இருக்கவே இந்த சாவா நிரல். விக்கி விடுப்பு வழங்கப்பட வேண்டியதன்று; எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. :-) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:41, 23 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]