விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் மருத்துவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உசாத்துணைகள் 1[தொகு]

பல்வேறு மருத்துவத் தகவல்கள் கொண்ட கையேடுகள், வழிகாட்டல்களை பல்வேறு நாட்டு நலத் துறை வலைத்தளங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எ.கா கனடா, அசுத்திரேலியா, ஐக்கிய இராச்சியம் உட்பட்ட நாடுகளில்.

எ.கா:

மருத்துவம் தொடர்பான கூகுள் கட்டுரைகளை உரை திருத்த உதவுங்கள்[தொகு]

மருத்துவம் தொடர்பான கூகுள் கட்டுரைகளை உரை திருத்த உதவுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 20:20, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

மருத்துவக் கலைக்களஞ்சியம்[தொகு]

மருத்துவக் கலைக்களஞ்சியம்] 13 தொகுதிகளும் என்னிடம் உள்ளன. அண்மையில் இந்தியா சென்றபொழுது வாங்கி வந்தேன். யாருக்கும் ஏதும் செய்திகள்/குறிப்புகள் சரிபார்ப்பு செய்ய உசாத்துணைக்கு வேண்டும் எனில் என்னால் உதவ முடியும். நற்கீரனிடமும் என்னிடமும் கனடாவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட 34-தொகுதி அறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. எனவே மருத்துவம் சார்ந்த கட்டுரைகளுக்கு ஏதும் உதவிகள் வேண்டும் எனில் தயங்காது கேளுங்கள். --செல்வா (பேச்சு) 15:20, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி செல்வா, அவற்றில் உள்ள கலைச்சொற்கள் எவ்வாறு உள்ளன என்பதை அறிய ஆவலாக உள்ளது. மேலும் இவற்றை தபால் பொதியில் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு எடுக்கலாமா? --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:29, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வெள்ளைக் கருக்கும் மஞ்சள் கருக்கும் சண்டை[தொகு]

முட்டையில் உள்ள வெள்ளை மஞ்சள் கரு பற்றிய கருத்துகள் ஒவ்வொரு மாதிரி இருக்கு. ஒருத்தர் வெள்ளைக் கரு நல்லதுங்குறார். இன்னொருத்தர் மஞ்சள் தான் நல்லதுன்னு சொல்லி அடிக்க வர்றார். இந்த சிக்கல் பற்றிய கட்டுரை உண்டா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:13, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வெள்ளைக் கரு என்பது புரதக் கூழ்மமன்றி வேறொன்றில்லை. இன்றியமையா அமினோ அமிலங்கள் இருபதும் வெண்கருவில் உள்ளதால் வெண்கரு ஆகச் சிறந்த புரதமாகும். மஞ்சள் கருவில் புரதமற்ற ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துகள், நுண்தாதுக்கள், கொலசுடிரால் எனப் பல மஞ்சள் கருவில் உள்ளன. நீங்கள் கூறும் ”ஒருத்தர்” யார் என்பதைப் பொறுத்தே யாருக்கு எது நல்லது என முடிவு செய்ய முடியும். எவ்வித நோயுமற்ற இளம் வயது ஆண் ஒரு நாளைக்கு இரண்டு முழு முட்டைகள் சாப்பிடலாம். கொலசுடிரால் அதிகமுள்ளோர், உடற்பயிற்சி செய்வோர் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:15, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]