விக்கிப்பீடியா பேச்சு:மைல்கற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2000 கட்டுரைகள் எண்ணிக்கையை அடைந்த நாளை / மாதத்தை யாரும் சுட்ட இயலுமா? 1000, 2000, 4000, 8000, 16000 என்று இரட்டிப்பு வரிசையில் மைல்கற்களை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இல்லாவிட்டால், ஒவ்வொரு ஆயிரம் கட்டுரையையும் எண்ணிக் கொண்டிருப்போம் (என்ன இருந்தாலும் நம்ம உழைப்ப ஆச்சே :)!). உயிரினப் பெருக்கத்திலும் இந்த இரட்டிப்புக் காலம் வளர்ச்சி விகிதத்தை அளப்பதற்கு உதவுகிறது. பயனர் எண்ணிக்கைக்கான மைல்கற்களையும் 1000த்திலிருந்து பதியலாம். (எனினும், சில சமயங்கள் ஒரே பயனரே பல்வேறு பயனர் பெயர்களை கொண்டிருப்பதும், பதிந்த பின் திரும்பியே வராத விக்கியிடைப் பயனர்களும் இப்பட்டியலில் இருப்பர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்)--ரவி 21:29, 30 ஆகஸ்ட் 2006 (UTC)

1,00,000 கட்டுரைகள் எட்டுவது எப்போது?[தொகு]

1,00,000 கட்டுரைகள் எட்டுவது எப்போது என்று ஒரு ஊகம் செய்வோமா :) ? என் கணிப்பு / ஊகம் - 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகே !!--ரவி 00:36, 2 ஏப்ரல் 2008 (UTC)

நான் ஊகம் ஏதும் செய்யவில்லை, ஆனால் நாம் ஆண்டொன்றுக்கு 3000-4000 கட்டுரைகள் என்னும் வீதத்தைக் கூட்ட வேண்டும். இதற்கு எல்லோரும் உழைப்பு நல்க வேண்டும். கூடுதலான பயனர்களும் வருதல் வேண்டும். எக்காரணங்களாலும் பங்களிக்க முடியாமால் இருக்கு பழைய பயனர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலான புதுப்பயனர்கள் வந்து கூடுதலான அளவில் கட்டுரையாக்கம் செய்தல் வேண்டும். ஒரு நாளைக்கு நாம் ஏறத்தாழ 10 கட்டுரைகள்தாம் எழுதுகிறோம். இது 30 ஆகக் கூடவேண்டும். முதலில் ஆண்டொன்றுக்கு 8000-10000 கட்டுரைகள் எழுதும் நிலையை அடைய வேண்டும். ஏப்ரல் 26 ஆகிய இன்று 18,000 கட்டுரைகளை எட்டியுள்ள்ளோம். ஆனால் ஏப்ரல் 26, 2007 அன்று நாம் 10,000 கட்டுரைகளை எட்டினோம். இவ்வளர்ச்சி போதாது. கட்டுரை ஆழம் சற்று பெருகி உள்ளது, ஆனால் கட்டுரைகளின் எண்ணிக்கை வளர்ச்சி இன்னும் போதிய வளர்ச்சி அடையவில்லை என்பதே என் கருத்து. எந்தக் காலப்ப்குதியிலும் குறைந்தது 30-50 பயனர்கள் பங்களிக்கும் நிலை வரவேண்டும். நல்ல தமிழில் எழுதக்கூடிய அறிவார்ந்த தமிழர்ர்கள் நானறிய பல நூற்றுவர் உள்ளனர் ஆனாலும் அவர்கள் தமிழ் விக்கியின் வாய்ப்பையும் தேவையையும் போதிய அளவு உணரவில்லை அல்லது உணர நாம் உழைக்கவில்லை. மிகப்பெரும் வளர்ச்சி நாம் அடைவோம் என நான் மிகவும் நம்புகிறேன். இப்பொழுது உழைப்பவர்கள் ஒரு சிறிதும் தளராமல் தொடர்ந்து உழைத்து வருவது மிகத்தேவை. --செல்வா 17:48, 26 ஏப்ரல் 2009 (UTC)

மொத்த சொற்களின் எண்ணிக்கை கணிப்பு முறை என்ன?[தொகு]

--Natkeeran 17:32, 26 ஏப்ரல் 2009 (UTC)

உறுதியாகத் தெரியாது ஆனால், இரண்டு வெற்றிட இடைவெளிக்கு இடையே உள்ளதை ஒரு சொல்லாகக் கொள்வர் என நினைக்கிறேன். எனவே நாம் "படிக்கத்தெரிந்தவன்" என்று எழுதினால் அது ஒரு சொல்லாக இருக்கும். "படிக்கத் தெரிந்தவன்" என்று எழுதினால் இரண்டு சொற்களாக இருக்கும். வேறு எப்படியும் சொற்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம் (முடியாது என்று பொருளில்லை).--செல்வா 17:50, 26 ஏப்ரல் 2009 (UTC)
அவ்வாறே செய்வர் என்று நினைக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளை இலக்கணப் பகுப்பாய்வு செய்து கணிக்கும் அளவிற்கு இன்னமும் மென்பொருட்கள் உருவாகவில்லை. தமிழ் போன்ற ஒட்டுநிலை மொழியைப் பகுப்பாய்வு செய்தால் நன்றாகப் பிரிக்க முடியும். ஆனால், அதற்கான இலக்கணப் பகுப்பாய்விகளை இன்னும் எழுதவில்லை. ஈசுவரும் (பயனர்:Mojosaurus) நானும் மிக மெதுவாக இதை வளர்த்தெடுத்து வருகிறோம். -- சுந்தர் \பேச்சு 18:00, 26 ஏப்ரல் 2009 (UTC)

இருபத்து ஏழாயிரம் கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா ஆனது 2011ஆம் ஆண்டு சனவரி திங்கள் 9ஆம் நாள் 27,000 கட்டுரைகளை எட்டியதாக அறிவிக்கப்பட்டது. அதன் திரைப் பிடிப்பு இங்கே காணவும். (பெரிதாக்கிப் பார்க்கவும்)

தமிழ் விக்கிப்பீடியா 27,000 கட்டுரைகளை எட்டியதன் திரைப் பிடிப்புப் படம் --சூர்ய பிரகாசு.ச.அ. 13:51, 9 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கட்டுரையில் உள்ள வரைபடத்தை இற்றைப்படுத்த முடியுமா ?--மணியன் 04:08, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]

ஒரு பயனருக்கு ஒரு கட்டுரை[தொகு]

இப்போது பதிவு செய்த பயனர் எண்ணிக்கை 55,587. கட்டுரைகள் எண்ணிக்கை 55,594. இன்றோ நாளையோ ஏதேனும் சில மணித்துளிகள் இவை இரண்டும் ஒரே எண்ணாக இருக்கும். நடு இரவில் விக்கிப்பீடியாவில் உலாவினால் இது போன்ற மைல்கற்கள், புள்ளி விவரங்கள் தட்டுப்படும் :) சில நாட்கள் முன் கட்டுரை எண்ணிக்கை 55,555 என்று வந்தது. அதைப் படம் பிடித்து வைத்துள்ளேன் :)--இரவி (பேச்சு) 21:45, 11 செப்டம்பர் 2013 (UTC)

நானும் நினைத்திருந்தேன். இனி, வித்தியாசமான சாதனை ஒன்றை செய்யப்போகிறேன். ஒரே எண்ணே எல்லா இலக்கங்களிலும் (55555, 66666,....) இடம் பெறும் கட்டுரைகள் அனைத்தும் நானே உருவாக்குவேன். அவற்றின் அளவும் ஏறக்குறைய அதே எண்ணிலோ, அல்லது அதே எண்ணில் குறைந்த இலக்கங்களுடன் கூடியவாறு அமைத்துக் கொள்வேன். எப்படி நம் சாதனை! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:02, 13 செப்டம்பர் 2013 (UTC)
அடடா ஆச்சரியக்குறி :)--இரவி (பேச்சு) 19:08, 13 செப்டம்பர் 2013 (UTC)