விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இது வரைக்கும் தமிழ் விக்கியில் நிர்வாக அணுக்கம் திரும்பிப் பெறுதல் தொடர்பாக ஒரு வழிகாட்டல் இல்லை. ஆங்கில விக்கியில் சில நடைமுறைகள் உள்ளன. பார்க்க: en:Wikipedia:Requests for de-adminship--Natkeeran (பேச்சு) 17:15, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா நிருவாகத்திலோ அல்லது கட்டுரைகளிலோ அல்லது உரையாடல்களிலோ பங்களிக்காத ஒருவர் திடீரென முளைத்து வந்து இவ்வாறு கேட்பது ஏற்றுக்கொள்ளப்படலாமா என்பதை கேட்டறிந்து சொல்லுங்கள். ஆங்கில விக்கியில் இது குறித்து விதிமுறைகள் உள்ளதா?--Kanags \உரையாடுக 22:15, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியிலும் தெளிவான நடைமுறை இல்லை. குறைந்தது 5 பயனர்களின் (3 மாதப் பங்களிப்பு, 250 தொகுப்புகள்) ஆதரவு இருந்தாலே நிர்வாக அணுக்கத்தை திரும்பிப் பெற நியமிக்க முடியும் என்று மாதிரி ஒரு நிபந்தனை பொருத்தமாக அமையும். இல்லாவிடின் விசமத் தனமாக நியமனங்கள் வரும், அது தொடர்பாக நிறைய ஆற்றல் வீணாகும். இந்தப் பரிந்துரையை நான் ஆலமரத்தடியில் இட்டுக் கருத்துக் கோரவுள்ளேன். --Natkeeran (பேச்சு) 02:56, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


நியாயம் யார் கேட்க வேண்டும் என்ற நியதி உள்ளதா? ஐபியில் வந்தால் முகம் காட்டாப் பயனர் என விழிப்பீர்கள். பிறகு புதுப் பயனர் என்பீர்கள்?! மேலும் இது அதிகாரிகள் முடிவெடுக்கும் விடயம் என்பதால் வாக்கு தேவையில்லை. சுப்பிரமணி தன் கருத்தைச் சொல்லட்டும், அதற்கேற்ப அதிகாரிகள் முடிவெடுக்கட்டும். --Rajan s (பேச்சு) 00:39, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுப்பிரமணியின் பேச்சுப் பக்கத்தில் இந்த அறிவித்தலை வழங்க முடியாது உள்ளது? யாராவது அவருடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி. --Rajan s (பேச்சு) 01:00, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எதுவும் எடுக்க முடியாது. இத்தகைய கோரிக்கைகளை வைப்பதற்கான ஆகக் குறைந்த தகுதி குறித்த கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. முதலில் அது பற்றித் தெளிவான தீர்மானம் வேண்டும். அதன் பிறகே சுப்பிரமணியிடம் விளக்கம் கேட்கவேண்டுமா அல்லது இக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமா என முடிவு செய்யலாம். -- மயூரநாதன் (பேச்சு) 03:29, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இது தனிப்பட்ட பயனரின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. எனவே இவ்வாறான முன்மொழிவுகளைச் செய்வதற்கான ஒருவரின் தகுதி குறித்தோ அல்லது இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கையாள்வதற்கான சரியான வழிமுறைகள் குறித்தோ தெரியாத போது அப்பயனர் குறித்த குற்றச்சாட்டுகளை இங்கே காட்சிக்கு வைப்பதோ கலந்துரையாடுவதோ தவறான முன்மாதிரி. அதனால், சரியான தீர்மானம் எடுக்கும்வரை இந்தப் பக்கத்தை நீக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 04:17, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 09:09, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

//உணர்வுகள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை// பிரச்சனைக்கு புது வடிவம் கொடுக்காதீர்கள்! சரியான தீர்மானம் எடுக்கும்வரை காத்திருக்கிறேன்!! --Rajan s (பேச்சு) 10:17, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் உண்மையான கருத்துகளையும் வினவல்களையும் ஆதரிக்கிறேன். மேல்-விக்கியில் சென்று முறையிட்டு கைப்பாவை தொடர்புகளை அறியும் அளவிற்கு விக்கி பற்றிய புரிதல் இருக்கும் நீங்கள் [உறுதியாக] புதியவராக இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். ஆனால், அவற்றை ஆராய எனக்கு விருப்பமில்லை. உங்கள் உறுதியான பிடியையும் தெளிவான ஆதாரங்களோடு விளக்கும் பாங்கையும் பார்த்து வியக்கிறேன். உங்களிடமிருந்து சீரிய [கட்டுரைப்] பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன் இராசன் :) தங்களது மறுமொழிகளுக்கும் புதுமொழிகளும் விக்கியில் இதுவரை நாங்கள் எண்ணியிராப் பலவற்றையும் எண்ண வைத்துள்ளன. இதனை நாங்கள் தேய்முகமாக (counter-productive) எண்ணாமல் வளர்முகமாக எண்ணி இந்த முரணைத் தீர்க்கிறோம். எடுத்துக்காட்டியமைக்கு நன்றிகள் இராசன் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:23, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கருத்துக் கோரல் - நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் - நிபந்தனைகள், செய்முறை

பார்க்க: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் - நிபந்தனைகள், செய்முறை --Natkeeran (பேச்சு) 03:14, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இப்பக்கத்தை நீக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 11:48, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
எவரும் தொகுக்க முடியாதவாறு பரணிடலாம்.--Kanags \உரையாடுக 12:08, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--பழ.இராஜ்குமார் (பேச்சு) 12:15, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சிக்கலும் தீர்வும்

இங்கு கடைசியாக முன்வைத்த முறையீட்டைப் பற்றி ஆலமரத்தடியில் பல இழைகளில் பல பங்களிப்பாளர்கள் உரையாடியிருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் இந்தச் சிக்கலின் உட்பகுதிகளாய் நாம் அறிவது:

  1. தேனி. மு. சுப்பிரமணியிடம் விளக்கம் கோரி பல பேச்சுப் பக்கங்களில் சில பயனர்கள் கேட்டிருக்கும் கேள்விகள்
  2. தேனி. மு. சுப்பிரமணியின் மீது கொள்கைமீறல் போன்ற குற்றச்சாட்டுகள்
  3. தேனி. மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை
  4. தேனி. மு. சுப்பிரமணிக்கு எதிராக குற்றம் சாட்டவும் சில இடங்களில் கடுமையாக நடக்கவும் செய்த அடையாளம் காட்டாத பயனரும் இராசன் என்ற புதுப்பயனரும் செயல்பட்ட விதம்

என்னைப் பொருத்தவரை இவை நான்கையும் ஒன்றாகப் போட்டுக் குழப்ப வேண்டியதில்லை. தனித்தனியாகப் பரா்த்தால் விக்கிக் கட்டமைப்புக்குள் தீர்வை எட்ட முடியும்.

  • தேனி. மு. சுப்பிரமணியிடம் விளக்கம் கோரி பல பேச்சுப் பக்கங்களில் சில பயனர்கள் கேட்டிருக்கும் கேள்விகள்

வழமையாக எந்தவொரு பயனரும் மற்றொருவரிடம் அவரது செயல்பாடு தொடர்பாகக் கேள்வி கேட்கலாம். அதில் புதுப்பயனர், அடையாளம் காட்டாதவர் என்றெல்லாம் பாகுபாடில்லை. பண்போடும் முறையாகவும் முன்வைக்க வேண்டும் என்பதே அடிப்படை. இத்தகைய கேள்விகளுக்குப் போதிய இடைவெளிக்குள் தொடர்புடையவர்கள் பதிலளிக்க வேண்டும். இரு தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இணக்க முடிவை எட்ட முடியாவிட்டால் பிறகு தீர்வுமுறையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம். இப்போதைக்கு முதலில் தேனி மு. சுப்பிரமணி விளக்கமளிக்க வேண்டும். அவர் தரப்புக் கேள்விகளையும் தனியாக முன்வைக்கலாம். அதற்கான இடம் இதுவல்ல, அந்தந்த பேச்சுப்பக்கங்களே. இப்போதிருந்தே தேனியார் பதிலளிக்கத் தொடங்கலாம்.

  • தேனி. மு. சுப்பிரமணியின் மீது கொள்கைமீறல் போன்ற குற்றச்சாட்டுகள்

இவ்வாறு குற்றச்சாட்டை வைத்தவர் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் குற்றச்சாட்டையும் அதையும் பிரித்துப் பார்க்கலாம். அதை ஒன்று தேனியாரின் பேச்சுப் பக்கத்தில் வைத்து விளக்கம் கேற்கலாம். அதற்கு அவர் அப்பக்கத்தைத் திறந்து விட வேண்டும். முதல் நிலையில் தீர்வில்லையென்றால் இரண்டாம் கட்டமாக சமுதாய முறையீட்டுக் கூடத்துக்கு இங்குள்ள குற்றச்சாட்டை நகர்த்துவோம். அதுவும் இங்கு இருக்க வேண்டியதல்ல.

  • தேனி. மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை

ஆலமரத்தடி உரையாடலில் பலரும் தெரிவித்தபடி நமக்குத் தெரிவது பின்வருவது:

    • இதுவரை கட்டாய அணுக்க மீளவைக்கு நாம் முறை வகுக்கவில்லை.
    • பொதுவான அறக் கோட்பாட்டின்படி அந்தந்த கொள்கை மீறல்களுக்கு அவ்வவ் கொள்கைகளின்படி தீர்வு கண்டு, ஒருவரின் நிருவாக அணுக்கம் தொடர்பில் மீறல்கள் இருந்தால் மட்டுமே நிருவாக அணுக்கத்தை மீளமைக்க முடியும்.

இப்போது இங்கு வைக்கப்பட்டிருக்கும் முறையீடு குற்றச்சாட்டு மட்டுமே. அதில் உள்ளவற்றில் குற்றம் உள்ளதா என முதலில் பார்க்க வேண்டும். அவ்வாறான சூழலில் வருத்தம் தெரிவித்து, தவறான கருத்துக்குளைத் திரும்பப் பெற்று அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைவடைந்து விட்டால் சிக்கல் அங்கேயே தீர்ந்துவிடும். அப்படியே சமூகத்தினரின் ண்டவடிக்கை வந்தாலும் அது நிருவாக அணுக்கம் தொடர்பான சிக்கலாய் இருந்தால் மட்டுமே இங்கு முன்மொழிய வேண்டும். இப்போது இதை சமுதாய முறையீட்டுக் கூடத்துக்கு நகர்த்துவதுதான் சரி. இனி வருங்காலத்துக்கு நிருவாக அணுக்கத்தை மீறப்பெறுவதற்கான முறையை வகுக்க வேண்டும் (உடனடித்தேவை இல்லை).

  • தேனி. மு. சுப்பிரமணிக்கு எதிராக குற்றம் சாட்டவும் சில இடங்களில் கடுமையாக நடக்கவும் செய்த அடையாளம் காட்டாத பயனரும் இராசன் என்ற புதுப்பயனரும் செயல்பட்ட விதம்

அடையாளம் காட்டாத நிலையிலும் கணக்கு தொடங்கிய பின்னும் இவர் நடந்து கொண்ட விதம் விக்கி நற்பழக்கவழக்கங்களை மீறியதாகப் பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு அவர் வருத்தம் தெரிவித்து, தேவையான இடங்களில் திருத்தம் செய்யாவிட்டால் மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு பாதிப்பின்றி, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கணக்கில் இருந்து பதிபவர் கைப்பாவையாகச் செயலபடுகிறார் என ஐயம் எழுப்பப்பட்டுள்ளது. அது முறையீடாக வந்தால் அதன்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தவிர தேனி மு. சுப்பிரமணிக்கு வேறு ஏதும் முறையீடுகள் இருந்தாலும் அதையும் நாம் தீர்க்க வேண்டும்.

இக்கருத்துக்களில் உடன்பாடு எட்டப்பட்டால் அவ்வடிப்படையில் தீர்வை எட்டலாம். நிற்க.

(விளக்கத்திற்காகப் பின்னால் சேர்த்தது) இப்போது இவையனைத்திலும் ஒருசேர முடிவெடுக்க வேண்டியதில்லை. இவ்வாறு நான்கு பகுதிகளாப் பிரிக்கலாமா வேண்டாமா, அவ்வறை மேலே பரிந்துரைத்த இடங்களில் வைத்துத் தீர்க்கலாமா என்பதற்கு மட்டுமே பின்வரும் வாக்கெடுப்பு. அருள் கூர்ந்து நிலையின் தீவிரம் கருதி அக்டோபர் 23, 2013-ஆம் தேதிக்குள் வாக்களிக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 18:33, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சிக்கலை நான்காப் பிரித்து அவற்றுக்கான இடத்தில் அணுகுதல் (அக்டோபர் 23, 2013 வரை)

மேலே நான்கு சிக்கல்களாகப் பிரித்து அவற்றை முறையான இடத்தில் வைத்து அணுக வேண்டுமெனப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 19:14, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. தனித்தனியாக அணுகினால், முறையிடுவோருக்கு தீர்வு எளிதில் கிட்டும். நான் ஆதரிக்கிறேன். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 19:08, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:36, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. --செல்வா (பேச்சு) 19:59, 19 அக்டோபர் 2013 (UTC) (நான்காகப் பகுக்கலாம். பகுத்துத் தனித்தனியாக தீர்வு காணலாம்)[பதிலளி]
  4. --Kanags \உரையாடுக 21:46, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. --Natkeeran (பேச்சு) 02:00, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. --இரவி (பேச்சு) 02:06, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 03:13, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. --நந்தகுமார் (பேச்சு) 05:43, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --Anton·٠•●♥Talk♥●•٠· 06:59, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:08, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. -- புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:15, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --இரா. செல்வராசு (பேச்சு) 11:41, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:24, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --நந்தினி கந்தசாமி
  15. --சிவகோசரன் (பேச்சு) 09:49, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --அஸ்வின் (பேச்சு) 10:39, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --Rajan s (பேச்சு) 12:13, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --குறும்பன் (பேச்சு) 15:20, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறுப்பு

கருத்து

(காலம் கருதிச் சுருக்கமாகக் கருத்திடவும்)

  1. விக்கி நண்பர்களின் நேரத்தினை உண்ணும் தொகுப்பு போர்கள் ஓய்வு பெற விரைந்து தீர்வு காண இம்முறை உதவும் என்பதால் என் ஆதரவு (பஞ்சாயத்தை சீக்கிரம் முடிச்சுட்டு பங்களிக்க வாங்கப்பூ :-)).--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:37, 19 அக்டோபர் 2013 (UTC)👍 விருப்பம்--பழ.இராஜ்குமார் (பேச்சு) 19:48, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. அடையாளம் காட்டப்படாத பயனராக இருந்தாலும் அடையாளம் காட்டப்பட்ட பயனராகவோ, நிருவாகியாகவோ, அதிகாரியாகவோ இருந்தாலும், விக்கி நற்பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவே நடக்க வேண்டும். இவற்றை மீறினால் உடனே தடை செய்ய வேண்டும் என்றும் பொருள் இல்லை, ஆனால் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கமாகிய கலைக்களஞ்சிய ஆக்கத்துக்கு கடும் ஊறு விளைவிக்குமாறும், தொடர்ந்து த.வி குமுகத்தின் நல்லுணர்வைக் குலைக்குமாறும் தொழிற்பட்டால் தேவையான கால அளவு தடை செய்யலாம். இது பிற தீக்குறும்பு செய்யும் அடையாளம் காட்டப்படாத பயனர் அடிக்கடி தொல்லை செய்தால் செய்வது போன்றும், 3R விதி போன்று தொகுப்புப் போராட்டம் செய்தால், யாராக இருந்தாலும் சிறிது காலம் தடை செய்வது போன்றதுமே என்று நினைக்கின்றேன். இவை யாவற்றிலும் விக்கியின் ஐந்து தூண்களை நினைவில் கொண்டு செயற்படுவது நல்லது. --செல்வா (பேச்சு) 20:22, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. (மேற்கண்ட வேண்டுகோளை நான் புரிந்துகொண்டதன் அடிப்படையில் என் தனிப்பட்ட கருத்து) - எனக்கு மேற்கண்டவை பகுதியாகவோ முழுமையாகவோ புரியாமல் இருக்கும் நிலை இருப்பதால் நான் கருத்தோடு நிறுத்துகிறேன். எனக்கு ஆதரவு வாக்களிக்கப் புரிதல் போதவில்லை என்று எண்ணுகிறேன்.


இராஜன் விக்கிமரபு மீறி பேசினார் என்று அவரத் தடை செய்ய வழிவகுக்கும் முடிவை எதிர்க்கிறேன். மேலும், தேனி. மு. சுப்ரமணி பல்லாண்டுகளாக விக்கியில் பங்களித்து வரும் பயனர் என்ற முறையில் விக்கிமரபு அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் - எனவே, அவரும் பதில் தாக்குதல் நடத்தி இராஜனையும் ஐ.பி. பயனரையும் ஒருமையில் சாடவே செய்துள்ளார். இது நிர்வாக அணுக்கம் பெற்ற ஒருவர் செய்யத்தகாத [இந்த ஊடகத்தில்] விடயம். எனவே, இராஜனின் முறையான [அனைத்தையும் இல்லை] வேண்டுகோள்களை கூடிய விரைவில் பரிசீலித்து, தேனி. மு. சுப்ரமணியிடம் தனிமனிதத் தாக்குதலுக்கு ஒப்பாக சில இடங்களில் நடந்து கொண்டதற்கும் [இவர் புதுப்பயனர் என்பதை நான் நம்ப அணியமாக இல்லை; மேல்-விக்கி வரை சென்று முறையிடும் புரிதல் உடையவர் விக்கிக்குப் (முழு விக்கிக்கும்) புதியவராக இருக்க வாய்ப்பில்லை], தெரிந்தவர்தான் கருத்திடுகிறார் என்று தெரிந்தும் [எழுத்து நடை வைத்துக் கண்டறிந்தேன் எனக் கூறியிருந்தார்] இராஜனிடமும் ஐ.பி. பயனரிடமும் விக்கிமரபற்று நடந்த தேனி. மு. சுப்ரமணியத்துக்கும் சமமான அளவில் தடைகளாயினும், அணுக்க மீட்பாயினும் தரப் பணிக்கிறேன். எதாயினும் இருவருக்கும் ஒன்றே என்பது என் நிலைப்பாடு. மேலும், நிர்வாகி அணுக்கத்திலிருந்து செய்தமையின் காரணமாக பிற பயனர்களுக்குத் தொகு தடை விதிப்பதை போன்றே தேனி. மு. சுப்ரமணியத்துக்கும் நிர்வாக அணுக்கத்திலிருந்து [தொகுத்தலிலிருந்து இல்லை] குறிப்பிட்ட காலம் விடுப்போ/தடையோ அளிக்கவும் பணிக்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 03:07, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 15:20, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  1. I will communicate after அக்டோபர் 24, 2013. I don't want any discussion before or on அக்டோபர் 24, 2013. --Rajan s (பேச்சு) 12:14, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சூர்யபிரகாஷ், இராஜன் இருவருக்குமிடையிலான தொடர்பு நிலை குறித்து யாராவது கண்டறிந்தால் நல்லது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:59, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இராசன் அவர்கள் யாருடைய கைப்பாவையும் அல்ல இங்கு பார்க்கவும். --குறும்பன் (பேச்சு) 15:20, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இராஜன் விக்கிமரபு மீறி பேசினார் என்று அவரத் தடை செய்ய வழிவகுக்கும் முடிவை எதிர்க்கிறேன். மேலும், தேனி. மு. சுப்ரமணி பல்லாண்டுகளாக விக்கியில் பங்களித்து வரும் பயனர் என்ற முறையில் விக்கிமரபு அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் - எனவே, அவரும் பதில் தாக்குதல் நடத்தி இராஜனையும் ஐ.பி. பயனரையும் ஒருமையில் சாடவே செய்துள்ளார் (இராசன் இவராக இருக்கும் என்ற ஐயத்தின் அடிப்படையில் அவ்வாறு நடந்து கொண்டதாக கருதுகிறேன்). இது நிர்வாக அணுக்கம் பெற்ற ஒருவர் செய்யத்தகாத [இந்த ஊடகத்தில்] விடயம். (பெரும் பகுதி சூரியா எழுதியதை வெட்டி ஒட்டினேன்) சூரியா சொல்வது சரி என்று எனக்கு படுகிறது. --குறும்பன் (பேச்சு) 15:20, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்


கீழ்க்கண்ட 786hajaவின் கருத்து தடைசெய்யப்பட்ட கைப்பாவைக் கணக்கின் வழியே எழுதப்பட்ட ஒன்று. மேலும் இக்குற்றச்சாட்டுகள் முறையாக நிறுவப்படாதவை. --இரா. செல்வராசு (பேச்சு) 03:12, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

  1. //தேனி. மு. சுப்பிரமணியிடம் விளக்கம் கோரி பல பேச்சுப் பக்கங்களில் சில பயனர்கள் கேட்டிருக்கும் கேள்விகள்// கேள்வி கேட்டவர்கள் இரவி, சூர்ய பிரகாசு, புருனோ மூவர் மட்டும் தான். (ஐபி, புரொச்சி சேவர்கள் ஊடாக கேள்வி கேட்டவரும், இராசன் எனும் பயனர் கணக்கும் இம்மூவரில் ஒருவருடையது.)
  1. //தேனி. மு. சுப்பிரமணியின் மீது கொள்கைமீறல் போன்ற குற்றச்சாட்டுகள்// கொள்கைமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இரவி, சூர்ய பிரகாசு, புருனோ மூவர் மட்டும் தான். (ஐபி, புரொச்சி சேவர்கள் ஊடாக கேள்வி கேட்டவரும், இராசன் எனும் பயனர் கணக்கும் இம்மூவரில் ஒருவருடையது.)
  1. //தேனி. மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை// நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற வேண்டிய கோரிக்கை வைப்பவர்கள் இரவி, சூர்ய பிரகாசு, புருனோ மூவர் மட்டும் தான். (ஐபி, புரொச்சி சேவர்கள் ஊடாக கேள்வி கேட்டவரும், இராசன் எனும் பயனர் கணக்கும் இம்மூவரில் ஒருவருடையது.)
  1. //தேனி. மு. சுப்பிரமணிக்கு எதிராக குற்றம் சாட்டவும் சில இடங்களில் கடுமையாக நடக்கவும் செய்த அடையாளம் காட்டாத பயனரும்...// அதுவும் இரவி, சூர்ய பிரகாசு, புருனோ மூவர் மட்டும் தான். (ஐபி, புரொச்சி சேவர்கள் ஊடாக கேள்வி கேட்டவரும், இராசன் எனும் பயனர் கணக்கும் இம்மூவரில் ஒருவருடையது.)
பி.கு 1: சுந்தர் நியாயமாக நடந்துக்கொள்பவர் என்றாலும் தனது தனிப்பட்ட நண்பர் எனும் வகையில் இரவியின் கருத்துக்களுடன் இசைந்து போகும் போக்கை கடைப்பிடிப்பது சில இடங்களில் தென்படுகிறது. இது சரியன்று. அன்டன் "அளர்ச்சி" இந்த வாதத்தில் கருத்திட முன்வந்திருந்தாலும் அவருக்கு இந்த மோதலில் நோக்கம் புரியாதுள்ளவராக உள்ளார்.
பி.கு. 2: ஐபி, புரொச்சி சேவர்கள் ஊடாக கேள்வி கேட்டவரும், இராசன் எனும் பயனர் கணக்கும் யாருடையது என தீர்மானிக்கவும், அந்த நபர் யார் (மூவரில்) என நீங்கள் விளங்கிக்கொள்ளவும், அதற்கான அடிப்படை என்ன என்பதற்கும் என்னால் விளக்கம் தரமுடியும்.(நாளை) --786haja (பேச்சு) 20:43, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:41, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தேனி சுப்பிரமணி, தடை செய்யப்பட்ட ஒரு கைப்பாவைக் கணக்கின் கருத்துக்கு விருப்பம் போட்டுள்ளீர்கள். இதற்கும் நான் விளக்கம் கோர வேண்டுமா இல்லை விருப்பத்தை மீளப் பெற்றுக் கொள்கிறீர்களா? முடியலை... :( --இரவி (பேச்சு) 04:10, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
கைப்பாவை ஒன்றின் கருத்துக்கு மறுப்பளிப்பதோ அல்லது ஆதரவாகக் கருத்திடுவதோ தடை செய்யப்பட்டுள்ளதா? அப்படி ஒரு விதி உள்ளதா?.--Kanags \உரையாடுக 04:18, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பார்க்க: https://en.wikipedia.org/wiki/Wikipedia:COMMON#Use_common_sense :) --இரவி (பேச்சு) 04:24, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

;அட நீங்களா? [முன்பே தட்டச்சிட்டேன்; ஆனால், தொகுமுரண் ஏற்பட்டதால் இங்கு இடம்பெறுகிறது] வணக்கம் ஹொங்கொங் [நீங்கள் அப்படித்தானே எழுதத் தொடங்கினீர்கள்?!] அருண் - HK Arun - நான் கூறவில்லை - மேல்-விக்கியில் ஆய்வு செய்து கூறியுள்ளனர் இங்கு சொடுக்கிப் பார்க்கவும். நன்றாகத்தானே பங்களித்துக் கொண்டிருந்தீர்கள்!? ஆங்காங் தொடர்பான கட்டுரைகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடிப்பதாய் என்னிடம், பாலாவிடம், கனகுவிடமெல்லாம் கூறினீர்களே!! [H K Arun பயனர் கணக்கின் பேச்சினைப் பார்க்கவும்] எதற்கு இத்தனை கைப்பாவைக் கணக்குகள்? :( அதுவும், பல கொள்கை முடிவெடுக்கும் இடங்களிலும் குறுக்கீடுகள் :( எது உங்களை இப்படிச் செயல்பட வைத்தது என்று தெரியவில்லை. எதுவாக இருப்பினும் தற்போது அதுகுறித்து உரையாடும் நிலையில் யாரும் இலர். உங்களிடம் வினா கேட்கப்பட்டுள்ளது. அதற்காவது H K Arun கணக்கிலிருந்து நாங்கள் பதிலை எதிர்பார்க்கலாமா? அல்லது மேலும் சில கைப்பாவைகள் உருவாக்கி மீண்டும் ஏதேனும் பைட்-போர் [Byte-War] தொடங்க விழைந்துள்ளீரா என்று அறியவும் விருப்பம். ஏனெனில், கட்டுரை உருவாக்க வேலைகளும், பராமரிப்புப் பணிகளும் முடங்கியுள்ளன. முனைப்புடைய பங்களிப்பாளர்கள் பலரும் இங்கு குவிந்துள்ளனர். புதிதாக நிர்வாகப் பொறுப்பேற்றவர்கள் [உங்கள் வாக்குகளைக் கழித்துப் பார்த்தாலும் அவர்கள் நிர்வாகிகளே என்பதில் நான் உறுதியாக உள்ளேன்] இது போன்ற உரையாடல்களில் வெகுவாகக் குழம்பியுள்ளனர். வயது குறைந்த சிறுவர்கள் என்ன உரையாடப்படுகிறது என்றே அறியாமல் விருப்பங்களையும் +1களையும் அளித்துக் கொண்டுள்ளோம். அருள்கூர்ந்து உங்கள் குங்ஃபூ திறனையெல்லாம் விசைப்பலகையின் மீது காட்டி வீணடிக்க வேண்டாம். தயவுசெய்து வானூர்தியிலேயே பறந்து கொண்டிராமல் [இதுவும் நீங்கள் கூறியதே] மண்ணில் என்ன நடக்கிறது என்று சற்று அறியவும் அருண். அருள்கூர்ந்து குங்ஃபூ வித்தை எதையும் என் மீது பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். நான் அடி தாங்கமாட்டேன் :( -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 04:27, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. அதில் கூறியவை எள்ளல் நோக்கில் கூறப்பட்டவை அல்ல. மிகவும் திறனுடன் பணியாற்றிய ஒரு பயனர் இத்தகு செயல்களில் ஈடுபடுகிறாரே என்ற குற்ற உணர்வுடன்தான் [நானும் விக்கிச்சமூகத்தில் ஒருவன் என்ற முறையில் - அவரை இப்படிச் செயல்பட வைத்ததற்காக] அதனை எழுதினேன். அது எள்ளல் எனக் கருதின் என் நடையைப் பொறுத்தருள்க. கனக்ஸ், சுந்தர், செல்வா, இரவி - எடுத்தாண்டமைக்கு நன்றிகள் பல. தனிப்பட்ட முறையில் அருணுக்கு வருத்தத்தையும், தவறாக நினைத்திருப்பின் மன்னிப்பையும் தெரிவிக்கிறேன். இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. விக்கியையும் அதன் பங்களிப்பாளர்களையும் நான் மதிக்கும் விதம் virtual-ஆக சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், என் வாழ்வுக்குப் பெரிதும் உதவிய விக்கியையும் அதன் கூறுகளையும் [சமூகம், சமூகத்தினர்] நான் பெரிதும் மதிக்கிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:22, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சூரியா, அடக்கத்துடன் உங்கள் கருத்தைத் தெரிவிப்பது எல்லோருக்கும் நல்லது. தடை செய்யப்பட்ட ஒரு பயனரை விளித்துக் கருத்துத் தெரிவிக்கக்கூடாது என இரவி மேலே கூறியுள்ளார்.--Kanags \உரையாடுக 04:42, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சிறீரதன், ஒரு ஆதாரமற்ற அவதூறுச் செய்தி, அதுவும் தடை செய்யப்பட்ட பயனர் கணக்கில் இருந்து வரும் செய்திக்கு விருப்பம் இடுவது தகுமா என்பதே நான் கேட்டது. தடை செய்யப்பட்ட கைப்பாவை கணக்கை இயக்கிவரை விளித்து கருத்து சொல்வது ஏற்புடையதே. --இரவி (பேச்சு) 13:36, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சூரியா, அருண் தனது நிலையை விளக்குவதற்கு ஒரு வார காலம் தர வேண்டும். அதற்கடுத்து கைப்பாவையைப் பயன்படுத்துபவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்க வேண்டும். இதில் எங்குமே யார் மீதும் நையாண்டிக்குச் சிறிதும் இடம் இல்லை. உங்கள் கருத்தையும் மீளப்பெற்றுக் கொள்வது நல்ல முன்மாதிரியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 05:22, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும் கனக்ஸ், இரவி. கருத்துகளைத் திரும்பப் பெறுகிறேன். இதுபோல் இனி ஏதும் நடக்காது என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:28, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

786haja, எனது மேற்கூறிய கருத்துகள் சிக்கலை அவிழ்த்துத் தீர்வுகாணும் நோக்கில் மட்டுமே. அவ்விசயத்தில் நல்லெண்ண நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் என்னைப் பொதுவாக நியாயமாக நடப்பவனாகக் குறிப்பிட்டதற்கு நன்றி. இது தேனி மு. சுப்பிரமணியோ மீது ஒருவர் வைத்துள்ள முறையீடு என்பதால் அவரை மையமாக வைத்து எழுதினேன். இருந்தாலும் இது குற்றச்சாட்டு மட்டுமே என தடித்த எழுத்தில் தந்துள்ளதையும் கவனிக்க வேண்டும். வேறு பயனர் எவருக்கும் இரவி, சூரியா, புருனோ, இராசன் உட்பட வேறு எவர்மீதும் முறையீடுகள் இருந்தால் கட்டாயம் அதைத் தொடர்புடைய பேச்சுப் பக்கங்களில் முன்வைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 06:09, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சூரியா தான் தெரிவித்த கருத்துக்களை மறைத்து விட்டார். இது ஏற்புடையதல்ல. எழுதுவதற்கு முன் இதை யோசித்திருக்க வேண்டும். கட்டுரை தொடர்பற்று பயனரின் மேல் வைக்கப்படும் அவதூறுகளை மீள்விக்க முடியாது என இரவி வேறோர் இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சூரியா, உங்கள் கருத்தை மீள்விக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 06:37, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சிறீதரன், இங்கு நான் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு: கட்டுரை தொடர்பற்று பயனரின் மேல் வைக்கப்படும் அவதூறுகளுக்கு இது பொருந்தாது. கட்டுரையை மீள்விப்பது போல் மனித உணர்வுகளையும், ஒருவர் இன்னொருவர் மேல் வைத்திருக்கும் மதிப்பீட்டையும், அவதூறுகளால் ஏற்படும் மன உளைச்சலையும், கால இழப்பையும் மீள்வித்து விட முடியாது. என்னுடைய கருத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆதாரம் இல்லாமல் வைக்கும் குற்றச்சாட்டுகளை அடித்துத் திருத்துவதையும், வரலாற்றில் இருந்து முற்றிலும் நீக்குவதையும் நான் வரவேற்கிறேன்.--இரவி (பேச்சு) 13:36, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்ய வேண்டும். பயனர் பேச்சுப் பக்க உரையாடல் என்றால் தக்க இடங்களில் தக்கவாறு உரையை நீக்கலாம். ஆனால் (கட்டுரைப் பெயர்வெளியைத் தாண்டி) வரலாற்றில் இருந்து நீக்குவதை மிக மிக அரிதாக மட்டுமே செய்ய வேண்டும் என நான் உறுதிபட நம்புகிறேன். இல்லையெனில் தொடர்பு அறுதல் போன்ற சிக்கல்களோடு முக்கியமாக தேவையற்ற தணிக்கைக்கு முற்காட்டாகிவிடும். அவதூறு என முடிவு செய்யும் கருத்தை நடுக்கோடிட்டு அடிப்பதோடு, ஒரு கட்டம் கட்டி அதன் தொடக்கத்திலும் இறுதியிலும் இடையிலுள்ள தகவல் தவறென நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கலாம். (எ.கா. en:Wikipedia:Requests_for_adminship/Prathamprakash29) தனிநபர் பற்றி விக்கிக்குத் தொடர்பில்லாத சொந்த தகவல்களை வெளியிட்டால் அது ஒருவருக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்றால் வரலாற்றிலிருந்து நீக்கலாம். -- சுந்தர் \பேச்சு 11:29, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், முற்றிலும் வரலாற்றில் இருந்து நீக்குவது அரிதினும் அரிதாக இருக்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு கைப்பாவை கணக்கில் இருந்து வந்த அவதூறு என்று தெளிவாக நிறுவப்பட்ட பிறகும் கூட ஏன் ஒருவர் கூட (இதை நிருவாகிகள் / அதிகாரிகள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. அனைத்துப் பயனர்களும் செய்யலாம்) இன்னும் அக்கருத்துகளை நீங்கள் கூறியவாறு அடித்துக் காட்டி கட்டம் கட்டிச் சுட்டக் கூட முன்வரவில்லை. நேரம் இல்லையா? மனசாட்சி இல்லையா? இராசன் யார் என்று அறிவதற்குக் காட்டப்பட்ட மெனக்கெடலில் 1% கூட அறியப்பட்ட கைப்பாவை கணக்குகளின் கருத்துகளைத் திருத்துவதற்குக் காட்டப்படவில்லையே? இது தான் நடுநிலையா? இந்தச் சூழலில் எப்படி நல்லெண்ண நன்னம்பிக்கை கொள்வது? --இரவி (பேச்சு) 18:11, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
கைப்பாவைக் கணக்கில் இருந்து வந்தால் தான் அவதூறா? யாரிடம் இருந்து வந்தாலும் அவதூறு அவதூறுதான். என்னைப் பொறுத்தவரை முறையான பயனர்களிடம் இருந்து வரும் அவதூறு விக்கியில் இருப்பது அதைவிட மோசமானது. அண்மைக் காலத்தில் பல அவதூறுகள் தமிழ் விக்கியின் பல பக்கங்களில் தாராளமாக விதைக்கப்பட்டுள்ளன. இவற்றை அவரவர்களே நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஒருவரும் அதற்குச் செவி சாய்க்கவில்லை. நீக்குவதானால் எல்லாவற்றையும் நீக்கவேண்டும். ஒன்றை மட்டும் நீக்குவதால் என்ன பயன்? மனச்சாட்சி என்பதும், அவதூறுகளால் பாதிக்கப்படுவதும் எல்லோருக்கும் ஒன்றுதான். சிலருக்குத் தான் மனம் வேதனைப்படும், மற்றவர்களுக்கு மனம் கல்லால் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று எதிர்பார்ப்பது நியாயம் ஆகாது. எல்லா அவதூறுகளையும் இனங்கண்டு நீக்கவேண்டும் எனக் கோருவதுதான் நியாயம்.--மயூரநாதன் (பேச்சு) 19:35, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதன், அவரவர் மீதான அவதூறுகளைப் பற்றி முறையிடவும் தவறு என்று நிறுவி அவதூறுகள் மீது நடவடிக்கை கோரவும் இங்கு தடை ஏதும் இல்லையே? மற்ற அவதூறுகள் அப்படியே இருக்கின்றன என்ற காரணத்தால், நான் முறைப்படி வைக்கும் வேண்டுகோளையும் கண்டும் காணாமல் இருப்பது ஏற்புடையதன்று. மனச்சாட்சி என்ற சொல்லாடலை நீங்கள் ஆலமரத்தடியில் பயன்படுத்தியதால் தான் நானும் பயன்படுத்த நேர்ந்தது. மற்றபடி, மனச்சாட்சியுடன் செயல்படுங்கள் என்று வேண்டவும் மற்றவர்கள் அதனை ஏற்றுச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவும் விக்கிப்பீடியா ஒரு நீதி போதனை வகுப்பு இல்லை. தெளிவான கொள்கைகளை உருவாக்கி அதனை உறுதியுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு விக்கிச்சமூகத்து உண்டு. அவதூறு செய்த கைப்பாவைக் கணக்குகள் வாழ்நாள் முழுக்க தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, அந்தக் கணக்குகளின் மூலமாக வந்த அவதூறுகளை அவற்றின் வழியாகவே நீக்க முடியாது. கைப்பாவையை இயக்கிய அருண் ஆகத்துக்குப் பிறகு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கவில்லை. ஒரு வேளை அவர் மீண்டும் பங்களிக்க வந்தால் அவருக்கு மனச்சாட்சி இருக்கிறதா என்று கேட்டுப் பார்க்கிறேன் :) ஆகவே, அருணே நீக்கினால் ஒழிய என் மீதான அவதூறு அப்படியே நீடிக்க வேண்டும் என்பது தான் உங்கள் நிலைப்பாடா? --இரவி (பேச்சு) 19:59, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இரவி, உங்களைப் பற்றிய அவதூறு என நினைக்கும் கருத்தின் கீழ், அதனை மறுத்து நீங்கள் ஒரு மறுமொழியை எழுதிவிட்டால் போயிற்று! உங்கள் பக்கச் சார்பும் பதிவாகி விடும். அதை விடுத்துப் பிற பயனர்கள் ஏன் அதனை நீக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் மேல் நம்பிக்கை இல்லையா என்று நீங்கள் உணர்ச்சிவயப்படுவது போல் தெரிகிறது. ஆனால், விக்கிச் சமூகத்தில் செயல்பாடுகள் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதாலும், நீங்கள் கேட்பது போல் செயல்படுவது ஒருபக்கச்சார்பு போலத் தோற்றம் அளிக்கலாம் என்பதாலும் எல்லோருக்கும் தயக்கம் இருக்கலாம். இதனை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். --இரா. செல்வராசு (பேச்சு) 02:37, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், 👍 விருப்பம், 👍 விருப்பம் --யோகிசிவம் (பேச்சு) 16:57, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

செல்வராசு, முதலில் நல்லெண்ண நகர்வாக, கைப்பாவைக் கணக்கின் கருத்தை மங்கலாக்கிக் காட்டியதற்கு நன்றி. இது ஒரு முறையான கணக்கின் கீழ் வந்திருந்த அவதூறுக் கருத்து என்றால் நீங்கள் கூறுவது போல் மாற்றுக் கருத்தைப் பதிவு செய்து விட்டு நகர்ந்து போவதில் எனக்கு ஏற்பே. ஆனால், இது கைப்பாவைக் கணக்கின் மூலம் வந்தது. அதுவும் தவறு என்று புறவயமாக நிறுவக்கூடிய அவதூறைக் கொண்ட கருத்து. இது தவறு என்று முறையாக நிறுவப்பட்டு விட்டது. இதில் என் பக்கச் சார்பு என்றும் மறுபக்கச் சார்பு என்றும் ஏதும் இருக்க முடியாது. உண்மை என்று ஒன்று மட்டுமே இருக்க முடியும். நடுநிலையாக அணுகுபவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். இங்கு கைப்பாவை கணக்கின் கீழ் வந்த அவதூறுகளை நடுக்கோடிட்டு அடித்துத் திருத்தலாம் என்று ஏற்கனவே இணக்க முடிவு இருக்கிறது. இந்த இணக்க முடிவைச் செயற்படுத்துவது விக்கிச்சமூகத்தின் கடமை. இதில் தயங்குவதற்கு ஒன்றும் இல்லை. இதை நானே கூட செயற்படுத்த முடியும். ஆனால், அப்படி கைப்பாவை கணக்கின் 786hajaவின் கருத்தை அடித்துத் திருத்த முனைந்த போது, நான் ஏதோ தேனி சுப்பிரமணியின் கருத்தை நீக்குவது போன்று தவறுதலாக பார்க்கப்பட்டது. எனவே தான், விக்கிச்சமூகமே இதனைச் செய்யட்டும் என்று பொறுத்திருக்கிறேன்.
ஒருவர் எண்ணற்ற கைப்பாவை கணக்கு தொடங்கி எவ்வளவு வேண்டுமானாலும் எத்தனைப் பக்கங்களில் வேண்டுமானாலும் தொடர்ந்து அவதூறு செய்யலாம். தவறாக குற்றம் சாட்டப்படுபவர்கள் எருமைத் தோலுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். அவதூறு தவறு என்று முறையாக நிறுவினாலும் பாதிக்கப்பட்டவர்களே ஒவ்வொரு பக்கமாக போய் தன்னைத் தீக்குளித்து நிறுவிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். விக்கிச்சமூகம் ஒரு நடவடிக்கையும் எடுக்காது. என்பது தான் இந்த அத்தியாயம் மூலமாக நான் புரிந்து கொள்ளும் செய்தி. நெடுநாள் பயனர்களுக்கே இந்த நிலை தான் என்றால் புதிய பயனர்களை என்னவென்று பங்களிக்க அழைத்து வருவது? நீங்கள் சுட்டியது போல் இவ்விசயம் ஒரு முன்மாதிரியான செயற்பாடாக பார்க்கப்படும். விக்கிச்சமூகம் இந்த அவதூறைப் பொறுப்பெடுத்து நீக்குவதே நல்ல முன்மாதிரியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 06:42, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இரவி, 1) நீங்கள் சுட்டிய இடத்திலேயே கைப்பாவைக் கணக்கரின் தொகுப்பை நீக்குவது பற்றி இருவிதமாகவும் கருத்துப் பதிவாகியுள்ளது. அதனால், அவசரமாக ஏதும் செய்யாமல் இதனை யோசித்துச் சரியான முறையில் செய்வதே சரியானது. அவ்வாறு செயல்படப் பிற நிர்வாகிகளுக்கு நேரத்தை வழங்க வேண்டும். அவசரத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாக்கக்கூடாது. 2) நீங்கள் அடித்துத் திருத்திய ஒன்றைப் பற்றிய மயூரநாதனின் குறிப்புக்கு அவர் வழங்கிய விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா எனப் புரியவில்லை. ஆனால் வெளிப்பார்வையாளனாக எனக்குப் புரிகிறது. நடந்தவை எல்லாம் வெளிப்படையானது. எதுவும் (நீங்கள் செய்ததோ, அதற்கான மறுமொழிகளோ) தவறெனத் தெரியவில்லை. ஆனால், அங்கும் யாரோ உங்களைக் குற்றம் சாட்டுவதாக நீங்கள் எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது. 3) உணர்ச்சிவயப்பட்டு நீங்கள் எழுதவில்லை என்று நீங்கள் கூறினாலும், பல இடங்களில் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும் ஒருவருக்கு அப்படித் தோன்றும் என்றே நான் கருதுகிறேன். (எனக்கும்). கவனிக்க: இவற்றைத் 'தவறு' என்று நான் கூறவில்லை. இன்னும் சற்றுப் பொறுமையாக எண்ணிப் பார்க்கலாம் என்கிறேன். 4) அவதூறு என்று நீங்கள் இவ்வளவு தூரம் வருந்தி அதற்கெதிராக இத்தனையிடங்களில் போராடும் அளவிற்கு அதில் ஒரு விசயமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். சுந்தர் பகுத்திருந்த நான்கு புள்ளிகளை வெட்டியொட்டி, இவற்றையெல்லாம் வேறு ஐ.பி வழியாகச் செய்தது இந்த மூவர் தான் என்று யாரோ ஊர்பேர் தெரியாத ஒரு பயனர் எழுதினால், இருக்கும் எல்லோரும் அதை நம்பிவிடப் போகிறோமா? இனிவரும் பயனர்கள் அதைக் கண்டு தவறான அபிப்பிராயத்தைக் கொள்ளப் போகிறார்களா? (இப்போதே, இதெல்லாம் என்ன எங்கு என்று தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பெருஞ்சிக்கலாய் இருக்கிறது!). இதையே ஒரு முறையாகப் பதிவு செய்திருக்கும் பயனரோ, நிர்வாகிகளோ யாரேனும் சொல்லியிருந்தால் கூட அதைப் பற்றிக் கவலை கொள்ளலாம். அப்போதும் ஒரு மறுப்பைப் பதிவு செய்து, அல்லது அது தவறு என்று நீரூபிக்கும் வழியைச் செய்துவிட்டால் போகிறது. உங்களுடைய ஏரணத்தின்படி மேல்-விக்கிக்குச் சென்று xyz-பயனரும் செல்வராசும் (உதாரணத்துக்கு) ஒருவரா; அது அவரது கைப்பாவைக் கணக்கா என்று கேட்டாலே அதை அவதூறாகக் கொள்ளலாமன்றோ? 5) விக்கி போன்ற பொது இடத்தில், எவ்வளவு தான் ஆரம்பநாள் முதலாகக் கடும் உழைப்பை நல்கியிருந்தாலும், வெறும் நம்பிக்கையின் பேரில் முடிவெடுக்கச் சொல்வது முறையானதன்று. உண்மைத் தரவுகள் என்ன, தகவல்கள் என்ன என்று ஆய்ந்து வெளிப்படையாகச் செயல்படுவதே சிறப்பானது. இல்லையெனில் உங்களுக்கு வேண்டியவர்களின் சார்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதே குற்றச்சாட்டாக வரும். 6) தேனி சுப்பிரமணியத்தின் மீதான குறைகளுக்கும் இதுவே அடிப்படையாக இருக்கவேண்டும். சுந்தரின் நான்கடித் திட்டமும், அதற்கான நற்கீரன் அமைத்துச் சோடாபாட்டில் முதலானோர் இருக்கும் குழுச் செயல்பாடும் அப்படிப்பட்டதே என்று வரவேற்கிறேன். --இரா. செல்வராசு (பேச்சு) 22:24, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
செல்வராசு, என்னுடைய பார்வையில் தொடக்கத்தில் நன்னயமின்றி சேகரன் வைத்த விமரிசனம்சாடலை தக்கவாறு மறுத்துவிட்டதாக நாம் அனைவரும் எண்ணி அதைப் பெரிதுபடுத்தவில்லை. இரவியின் உளச்சூழலிலும் உளைச்சலிலும் அது வழக்கத்துக்கும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தியிருந்திருக்கிறது. தவிர அதன்பின்னால் தேனி சுப்பிரமணியின் தூண்டுதல் இருந்திருக்கும் வாய்ப்பை நாம் நல்லெண்ண நம்பிக்கை காரணமாக அழுத்தமாக ஒதுக்கிவிட்டோம். பலவும் விக்கிக்கு வெளியில் நடந்ததால் நம்மால் அவற்றை முன்னிட்டு நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தேனி சுப்பிரமணியுடன் விக்கிக்கு வெளியே உரையாடியபோது அரசுடன் அணுகுதல், சலுகைகளைப் பெறுதல் முதலியவற்றைக் குறித்தெல்லாம் முன்னொருமுறை அவருடன் வேறுபட்டிருக்கிறேன். விக்கிக் கொள்கைக்கு முரணாகவும் நடந்துள்ளது. ஆனால், சான்றில்லாத அவ்வுரையாடலை வைத்து அவரை எப்படி குற்றம் சாட்ட முடியும்? ஆனால் இதைத் தெரிந்தும் அதை எப்படி ஒதுக்குவது என்று இரவியும் கூடுதல் உளைச்சலடைந்திருந்தார். ஆனால், அதன் வெளிப்பாடாக அவர் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டது மிகவும் தவறான விதம். அவரே பின்னால் அதைக்கண்டால் வருந்தக்கூடும். இதற்கிடையே சிக்கல் வளர்ந்து இரவிக்கு ஆதரவாக இராசன் என்பவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அவர் வேறு யாரோ பழக்கமான விக்கிப்பீடியரின் உள்ளீட்டுடன் இயங்குவதாக எண்ணுவதற்கு இடமும் உள்ளது. அது யாரென நிறுவும்வரை நாம் அனைவரும் நல்லெண்ண நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நேர்மையான கேள்விகளை மட்டும் முன்வைக்கலாம். (அதற்கும் இராசன் பதிலளிக்கவில்லை.) இடையில் புருனோவும் பல உரையாடல்களில் களைப்படையச் செய்துவிட்டார். விக்கியில் இதுவரை இல்லாத அளவுக்குத் தனிநபர்களைக் குறிவைத்து உரையாடல்கள் விலகிச் சென்றுவிட்டன. இவற்றிலெல்லாம் எரிச்சலடைந்து விட்டதால் வழக்கமாக நாம் பொறுப்பெடுத்து நடவடிக்கை எடுப்பதும் கிட்டத்தட்ட நின்றுபோய் விட்டது. இரவி மீதான கூடுதல் எதிர்பார்ப்பை அவர் சில இடங்களில் பொய்த்ததாலும் (உணர்ச்சிவசப்பட்டு) அவருக்குச் சார்பாக வந்த உரையாடல்களில் இருந்த கடுமை காரணமாகவும் உண்மையில் தேனி சுப்பிரமணிக்கு எதிரான நேர்மையான கேள்விகள் மீது நாம் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டோம். அது தவறுதான்.
ஆனால், விக்கியில் எத்தகைய தவறையும் சரிக்கட்ட முடியும். (வேறு சூழலில்) தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு அந்தச் சாடல் பெரிய காரணமில்லை. நீங்கள் வடிவமைத்ததுபோல (நன்றி!) தக்க இடங்களில் அடித்தும் மங்கியும் மாற்றலாம். பின்னால் நடந்தவற்றில் பல இடங்களில் நம் கையை மீறிச் சென்றுள்ளது. அதில் இரவியின் பங்கும் கட்டாயம் உள்ளது. நம் கையை மீறிச் சென்றவற்றை என்ன செய்வது எனத் தெரியவில்லை. இரவி நன்னயம் கருதித் தனது பல குற்றச்சாட்டுக்களைப் பின்னெடுத்தார். ஆனால், ஏற்கனவே இருந்த எரிச்சலில் அதை நாம் வரவேற்று மற்ற சிக்கல்களைத் தீர்க்க முனையவில்லை. நல்லெண்ண நம்பிக்கை அடிப்படையிலும் மேலே விளக்கிய எரிச்சலினாலும் தேனி சுப்பிரமணியைக் காட்டிலும் அவருக்கு எதிரான கேள்விகளை (பி.கு.அதாவது அவருக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை) மட்டும் நெருக்குவதாக எனக்கும்கூடச் சில இடங்களில் பட்டது. எனது ஏமாற்றத்தை ஆலமரத்தடியிலும் பதிந்திருந்தேன். ஆனால் அந்த ஏமாற்றம் முழுவதையும் செல்வா மீதும் மயூரநாதன் மீதும் தவறாகச்சாற்றி இரவி தனிமடலில் ஒருமுறை கொட்டிவிட்டார். அவர்கள் உள்நோக்கம் இன்றிச் செயல்பட்டார்கள் என்பதையும், அனைவரும் இருபுறமும் கட்டாயம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பதையும் நினைவூட்டியபின் மன்னிப்பும் கேட்டார். ஆனால் அதன்பின்னர் நிலைமை இவ்வளவு கீழே சென்றிருக்க வேண்டியதில்லை. பழைய உரையாடலில் வந்து இரவி மயூரநாதன் கேட்டிருந்த கேள்விகளுக்குக் கீழே இரவி ஏன் அப்படி எழுதினார் எனப் புரியவில்லை. இந்த விசயத்தில் பாதிப்பு ஏற்பட்டது என்பதற்காக விக்கியே அழிந்தாலும் பரவாயில்லை என்பதுபோல இரவி எண்ணியது உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. தவறான உள்நோக்கத்தின் அடிப்படையில் வந்த ஒரு குறைகாணும் விமரிசனத்தைக் கொண்டு இவ்வளவு தொலைவு சென்றிருக்கவே கூடாது.
இந்தச்சிக்கலைத் தீர்க்க வேண்டுமானால் இடையில் ஏற்பட்ட சறுக்கல்களை அனைவரும் மறந்து எஞ்சியுள்ள சில விசயங்களுக்கு மட்டும் தீர்வு கண்டால் மட்டுமே முடியும்.-- சுந்தர் \பேச்சு 13:49, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் சுந்தர். இவற்றை எல்லாம் கடந்து மீண்டும் முதன்மையான பணியில் ஈடுபட வேண்டும். இனியேனும் பயனர்கள் பொறுமை காத்துத் தனிநபர் தாக்குதலில் ஈடுபடாமல் தொடர வேண்டும். இன்னும் இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து மேலே நகர்வோம். தேனி சுப்பிரமணி தொடர்பான கேள்விகளை அதற்கான குழு பரிசீலிக்கிறது என்பதால் நான் ஏதும் கருத்துகள் கூறவில்லை. மற்றபடி விக்கிக்குப் பின்னடைவு ஏற்படுத்துமாறு செயல்பட்டிருந்தால் அதற்கான நடவடிக்கை தேவை தான். உங்கள் நெடிய விளக்கத்திற்கு நன்றி. பின்னணியில் நடைபெற்ற சிலவற்றை நான் அறிந்திருக்கவில்லை. --இரா. செல்வராசு (பேச்சு) 02:36, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
செல்வராசு, என்னுடைய வலைப்பதிவில் விக்கி தொடர்பாகவும் மற்றவை குறித்தும் இதை விட மோசமாக வந்த வசைகளை எல்லாம் அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, இங்கு பார்க்கலாம். அடித்துத் திருத்தவும் இல்லை. மறுமொழியை நீக்கவும் இல்லை. மாற்றுக் கருத்தைப் பதிவு செய்து கடந்து போயிருக்கிறேன். பெரும் கருத்து முரண் ஏற்பட்டவர்களுடன் வேறு களங்களில் இணைந்தும் பணியாற்றியிருக்கிறேன். தமிழ்மணம் குழுவினருடன் போடாத குசுத்தியா :) எனவே, உணர்ச்சி மேலிட்டு இந்த விசயத்தை அணுகவில்லை. என்னைத் தாண்டி மற்ற சிலர் மீதும் அவதூறு இருக்கிறது. இதனை விக்கிச்சமூகம் சரியாக கையாள வேண்டிய கடமை உண்டு என்று மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். தெரிந்தே அவதூறுகளை நீடிக்க விடுவது தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சறுக்குப் பாதையாகவே அமையும். நன்றி.--இரவி (பேச்சு) 07:33, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
\\நெடுநாள் பயனர்களுக்கே இந்த நிலை தான் என்றால் புதிய பயனர்களை என்னவென்று பங்களிக்க அழைத்து வருவது\\ புதுப்பயனரான நான்! எனது மன நிலை.?.!.?.. அருள் கூர்ந்து.... உணர்ச்சிவயப்படவேண்டாம். உங்களின் மீது நல்ல மதிப்பீடு உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்:\\இரவி அவர்களின் கடுமையான உழைப்புக்கு ஒரு பாராட்டு!!!. ஒருவரே அனைத்தையும் செய்து சோர்ந்து போனார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பற்றி விவாதித்திருந்தால் சீர்படுத்திருக்கலாம்?! திட்டமிடலில் சறுக்கலா? அல்லது திட்டமிடவில்லையா? வேலைப் பங்கீடு இல்லை. இது குறித்து இரவி அவர்களிடம் குறைந்த பட்சம் பேசியிருக்க வேண்டும். மல்லைக்கு பேருந்தில் செல்லும் போது தான் இரவி அவர்களை சந்தித்தேன். புதிய இடம், புதியகளம், அதனால் அமைதி காத்தேன்\\.எனது கருத்தை பதிவு செய்துள்ளேன். நன்றி.--யோகிசிவம் (பேச்சு) 16:57, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சூரியப் பிரகாசு, நீங்கள் மன்னிப்பு வேண்டியது நல்ல செயல், ஆனால் நீங்கள் எழுதியதை அழிக்கக்கூடாது. நடுக்கோடிட்டு வரிகளை அடித்துக் காட்டலாம். --செல்வா (பேச்சு) 06:45, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
(தொகுத்தல் முரண் காரணமாக மீண்டும் பதிவது)இவ்வாறான சூழலில் அடித்து எழுதுவதே முறை. ஏனெனில் அதற்குப்பின் வந்த கருத்துக்கள் தொடர்பறுந்து போயுள்ளன. சூரியா அக்கருத்தை மீள்வித்து, அடித்தெழுதி, விள்ளம் எதுவுமிருந்தால் பின் குறிப்பாகச் சேருங்கள். -- சுந்தர் \பேச்சு 06:47, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அவ்வாறே செய்ததற்கும் நல்லெண்ணத்தைக் காட்டும் விளக்கத்தைச் சேர்த்ததற்கும் நன்றி, சூரியா. உங்களைப்போலவே இங்குள்ள பலரும் குறிப்பாக நானும் விக்கியில் கூட்டுழைப்பின் வழியாக நிறையப் பண்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:48, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இந்தக்கணக்கு இப்போது தடைசெய்யப்பட்டுவிட்டதால் பதிலை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இவ்வுரையாடலில் இரவி, சூரியா, புருனோ ஆகிய மூவரில் ஒருவர்தான் இராசனின் கணக்கை இயக்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரமில்லாமல் இப்படிக் கூறுதல் அவதூறாகும். தேவைப்பட்டால், அக்கருத்துக்கான அடிப்படையை விளக்கி முறையாகக் கைப்பாவை அறிதல் வேண்டுகோள் விடுக்கலாம். அல்லது செல்வா இராசனின் பேச்சுப்பக்கத்தில் கேட்டுள்ளது போல விளக்கம் கோரலாம். ஆனால், இங்கே கைப்பாவைக் கணக்கிலிருந்து ஒரு பொறுப்பற்ற அவதூறு பதியப்பட்டுள்ளது. அதற்கு தேனி மு. சுப்பிரமணி போன்ற நெடுநாள்ப் பங்களிப்பாளர் விருப்பம் தெரிவித்திருப்பது நல்லதல்ல. அதை அவர் விலக்கிக் கொள்ள வேண்டும். நான் கருத்து விடுபாட்டை போற்றுவதால் அழுத்திச் சொல்லவில்லை. அவதூறு நடைபெறாமலும் அதே வேளை கருத்து விடுபாட்டையும் காக்கும் வண்ணம் நடப்பது கம்பிமேல் நடப்பதைப்போலவுள்ளது. அனைவரும் கூடுதல் நல்லெண்ண நம்பிக்கை கொண்டாலொழிய இதற்குத் தீர்வு இல்லை. :( -- சுந்தர் \பேச்சு 03:44, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், தங்களின் நிலையை என்னால் உணர முடிகிறது. இருப்பினும், தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எனது கருத்துகள் குறித்த கருத்து வேறுபாடுகளுக்குப் பின்பு #தேனி. மு. சுப்பிரமணி 2 - அனைவருக்கும் நன்றி எனும் தலைப்பிலான உரையாடல் மூலம் நான் விலகிக் கொள்வதாக அறிவித்த பின்பு, பல பயனர்களின் (தாங்கள் உட்பட) வேண்டுகோளுக்கும், என்னுடன் கனடாவிலிருந்து செல்வாவும், சேலத்திலிருந்து தகவலுழவனும் நீண்ட நேரம் தொலைபேசியின் பேசியதற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிற நிலையில் நான் # திரும்பப் பெறுகிறேன் என்று எனது கருத்தைப் பதிவு செய்த பின்பே அடையாளம் காட்டாமலும், பின்னர் போலியான பயனர் கணக்கைத் தொடங்கியும், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என்னை மன வேதனைப்படுத்தியிருக்கிறார்கள். என் மீது குற்றம் சுமத்தியவர்கள், விளக்கம் கேட்பவர்கள் உரையாடல்களில் இருந்து அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று நானும் நூற்றுக்கும் அதிகமான குற்றங்களைக் கண்டறிந்து காட்சிப்படுத்த முடியும். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் எவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமென்று விரும்பினேனோ அவற்றுக்குப் பதிலளித்து விட்டேன். தமிழ் விக்கிப்பீடியாவில் நான் இனியும் தொடர்வது எனக்கு இழுக்காகவே அமையும் என்றே கருதுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சித்தவர்களை முதலில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

786haja என்பவரும், இந்தக் கணக்கை இயக்கியவருடனும் எனக்கு எவ்விதத் தொடர்பில்லாவிட்டாலும், இவரின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியாதாக நான் கருதியதாலேயே எனது விருப்பத்தைப் பதிவு செய்தேன். தடை செய்யப்பட்ட கணக்குக்கு விருப்பம் தெரிவித்ததை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற தங்களின் விருப்பத்திற்கேற்ப அதை விலக்கிக் கொள்கிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:32, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் உங்கள் விருப்பதை விலக்கிக் கொண்டதற்கு நன்றி, தேனி மு. சுப்பிரமணி. அது தடைசெய்த கணக்கு என்பதால் அவ்வாறு கோரவில்லை, அதன் உள்ளடக்கத்தில் இருந்த கருத்துக்களின் காரணமாகவே கோரினேன் எனத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட மற்ற கவலைக்குறியவற்றை அந்தந்த இழைகளில் உரையாடி, தேவைப்பட்டால் இருசாராரும் இறங்கி வந்து நல்ல தீர்வை எட்ட வேண்டும் என விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:36, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • பயனர் அருண் கைப்பாவைக் கணக்கான (786haja) ஒன்றில் இருந்து எழுதியது பல குழப்பங்களையும் அவதூறுகளையும் நிறுவப்படாத கருத்துகளையும் கூறுகின்றது (எ.கா. புருனோ மேலே கூறியவற்றில் பலவற்றிலும் பங்குகொள்ளவில்லை ஆனால் அவர் பெயர் தவறாகச் சுட்டப்பெறுகின்றது. தேனி சுப்பிரமணியின் பக்கத்தில் புருனோ குற்றம் சாட்டவில்லை). முதலில் பயனர் அருண் இடமிருந்து தெளிவான விளக்கம் வேண்டப்படவேண்டும். அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். புருனோ மீது சாட்டப்பட்ட தனிமாந்தப் பொய்க்கூற்றுகள் திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் யாவருமே (பயனர்க்ளும் நிருவாகிகளும், அதிகாரிகளும்) பொறுப்பாகவும் சற்று அமைதியாகவும் நடந்துகொள்ள வேண்டிய நேரம் இது. இனிதே முடிந்த 10-ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்குப் பிறகு வந்த குறை-நிறைகள் அலசல் இன்னும் நன்முறையில் நடந்திருக்கவேண்டும், ஆனால் கடந்த 20 நாள்களாக அது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே நான் வேண்டுவது. இனி வரும் கருத்தாடல்கள் கூடுதல் பொறுப்புடன் இருகக்ட்டும்- நாம் விளக்கம் கேட்பது, அறம் வேண்டுவது, ஒருவது மீது இன்னொருவர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முறைகேடுகள் பற்றியெல்லாம் கேட்பது ஆகிய எல்லாம். இதில் பங்குள்ளவர்கள்-அல்லது-இழுக்கப்பட்டவர்கள் ஒரு 5-6 பேரோ என்னவோதான். இந்த குழப்ப நிலையை கருத்தில் கொண்டு புதிய நடவடிக்கைகளுக்கான வழிமுறைகள் முதலியன கட்டியெழுப்ப வேண்டியுள்ளன. இவற்றுக்கு உதவ முன்வாருங்கள். சுந்தர் நல்ல வரைவைத் தந்துள்ளார். --செல்வா (பேச்சு) 04:06, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:35, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
786haja இட்ட அவதூறுக்கு தேனி சுப்பிரமணி இட்ட விருப்பம் அப்படியே உள்ளது. விருப்பத்தை விலக்கிக் கொள்கிறேன் என்று மட்டும் தேனி சுப்பிரமணி சொன்னால் போதுமானதா? தவறான கருத்தை அடித்துக் காட்டி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற அறிவுரை எல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் தானா? :) இது தான் நடுநிலையா? --இரவி (பேச்சு) 18:17, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

786haja, Vaarana18 ஆகியவை கைப்பாவை கணக்குகள் என்று தீர்ப்பு வந்து ஒரு மாத காலம் முடிந்து விட்டது. கைப்பாவை கணக்கின் மூலம் வந்த அவதூறுகளை அடித்துத் திருத்தலாம் என்ற இணக்க முடிவு இருந்தும், அதனை விரைந்துச் செயற்படுத்த விக்கிசமூகம் தவறிவிட்டது. மற்ற இடங்களில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்தால் தான், இப்பிரச்சினையையும் கவனிப்போம் என்ற வகையில் அணுகுவது விக்கி வழிமுறைகளுக்கு முரணானது. ஆதாரமே இல்லாமல் மூவர் மீதும் வெளிப்படையாக பெயர் சொல்லிக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கும் இராசன் என்னும் பயனர் கணக்குக்கும் தொடர்பில்லை என்று விக்கி முறைகளுக்கு உட்பட்டு நிறுவிய பிறகும் கூட இவர்கள் கைப்பாவைகளையோ கையாட்களையோ இயக்குகிறார்களோ என்ற வகையில் தொடர்ந்து ஐயப்பாடுகளைக் கிளப்பும் போக்கே காணப்படுகிறது. ஒரு பக்கம் இராசன் பழி வாங்க முனைகிறார் என்ற கருத்தையும் மறுபக்கம் இராசனை இரவி அறிந்திருக்கலாம் அல்லது அவருக்கு உள்ளீடுகளைத் தந்து கொண்டிருக்கலாம் என்ற கருத்தையும் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதாலும், இந்த அவதூறை நீக்குகிறோம் என்ற சாக்கில் மற்ற பல வழமையான பயனர்களின் கருத்துகளையும் தன்னிச்சையாக ஒரு குழு தணிக்கை செய்வதற்கு இது ஒரு முற்காட்டாக அமைந்து விடக்கூடாது என்பதாலும், 786haja, Vaarana18 ஆகிய கைப்பாவைக் கணக்குகளில் இருந்து வந்த அவதூறுகளை கோடிட்டு அடித்துத் திருத்த வேண்டும் அல்லது வரலாற்றில் இருந்துமுற்றிலும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். தற்போது நிலவி வரும் சிக்கல் தீர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு, கைப்பாவைக் கணக்கின் தொகுப்புகள் குறித்த கொள்கையை முறையாக கொண்டு வர முனைவேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:01, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரவி, நீங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறித் தந்திருக்கும் இரு இணைப்புக்கள் என்னுடைய பதிவுகளைக் குறித்துள்ளவை.

இதற்கான முழு ஏரணத்துடன் நான் நேரடியாக உங்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். அதற்கு நீங்கள் விளக்கம் ஒன்றையும் தந்துள்ளீர்கள். உங்களுக்குத் தெரியுமா தெரியாதா போன்ற கேள்விகளில் தெரியாது என்பதற்கு யாரும் சான்று கேட்கப் போவதில்லை. அந்த அடிப்படையிலும் உங்கள் சொல்லின்மீதான நம்பிக்கையின் அடிப்படையிலும் தெரியாது என்பதை விளக்கமாக ஏற்றுக் கொண்டும் நான் கீழே பதிவிட்டிருந்தேன். அதைக் கண்டபிறகும் இங்குவந்து போக்கு என்று உள்நோக்கம் கற்பிப்பதை ஏற்க முடியாது. அதுகுறித்து உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் தயங்காமல் அந்த இழையில் தொடர்ந்திருக்கலாமே?

அப்படி நான் நினைக்கவும் இல்லாமல் ஓரிடத்திலும் கூறாத பொழுது இப்படி திரித்துக் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேறு யாராவது இயக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறுவது உங்களைக் கூறுவதாக எப்படி ஆகும்? இராசனின் கணக்கை யாராவது ஒரு வழக்கமான பயனர் இயக்கியிருக்கும் (நேரடியாக இல்லாமல் கையாள் போன்று) வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறேன். பொது அறிவுதானே அது? அதுவும் அன்டன் நானாக இருந்தால் அதைக் கையாளாகத்தான் கருதியிருப்பேன் என்று குறிப்பிடதற்கான ஏற்புமொழியாகவே. இரவிக்கு அந்த நபரைத் தெரியுமா என்று கேட்பதற்கு உங்கள் சில நிலைத்தகவல்களை (இப்போது எனக்கு அணுக்கம் இல்லாமலிருக்கும் நிலைத்தகவையும் சேர்த்து) அடிப்படையாக வைத்துக் கேட்டேன் எங்குமே நீங்கள் இயக்குவதாகச் சொல்லவில்லையே? என் தொடக்கவரியே இரவி, இராசனின் கணக்கை நீங்கள் இயக்கவில்லை என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்களோ வேறு பயனரோ நேரடியாக இயக்குவதற்கான சான்று எதுவும் தென்படவில்லை என்பது கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. பயனர்_பேச்சு:Ravidreams#வாக்குமூலம் அதில் (விக்கியில் இராசன் இவரா அவரா என்ற தேவையற்ற ஊகங்களுக்கு முடிவு கட்டுவதற்காக நான் முன்வைத்த கைப்பாவை அறிதல் விண்ணப்பத்தில் சான்றில்லை என்று முடிவு வந்ததைக் கொண்டாடுவம் நோக்கில்) உங்களது முறையற்ற பதிவு (// இரவி: மாட்டாமல் திருடுவாரே திருடர் மற்றெல்லாம் தரும அடி வாங்குவார் - டுபாக்குறள் 1. //) என் முயற்சியை ஏளனப்படுத்துவதாக இருப்பதைச் சுட்டிக் காட்டியும் துளியும் வருத்தம் தெரிவிக்காமல் வன்மையாக எதைக் கண்டிக்கிறீர்கள் எனப் புரியவில்லை. இதைத் திரும்பப் பெறுங்கள், அவதூறு, வெட்ட வேண்டும், மறைக்க வேண்டும் என்றெல்லாம் இங்கு நான் கோரப்போவதில்லை. என்னைப் பொருத்தவரை என்னுடைய மறுப்பையும் உண்மையைக் காட்டும் இந்தப் பதிவையும் குறிப்பிடாமல் இனி ஆங்காங்கே தவறான பொருள் தருமாறு பதிய வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொண்டு நிறுத்திக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:44, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

// இந்த அவதூறை நீக்குகிறோம் என்ற சாக்கில் மற்ற பல வழமையான பயனர்களின் கருத்துகளையும் தன்னிச்சையாக ஒரு குழு தணிக்கை செய்வதற்கு இது ஒரு முற்காட்டாக அமைந்து விடக்கூடாது என்பதாலும், 786haja, Vaarana18 ஆகிய கைப்பாவைக் கணக்குகளில் இருந்து வந்த அவதூறுகளை கோடிட்டு அடித்துத் திருத்த வேண்டும் அல்லது வரலாற்றில் இருந்துமுற்றிலும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். தற்போது நிலவி வரும் சிக்கல் தீர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு, கைப்பாவைக் கணக்கின் தொகுப்புகள் குறித்த கொள்கையை முறையாக கொண்டு வர முனைவேன். //

விக்கியில் வரக்கூடிய இடரைப் பற்றிய புரிந்துணர்வையும் அதை நோக்கிய நன்னகர்வையும் வரவேற்கிறேன், இரவி. -- சுந்தர் \பேச்சு 11:17, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சூர்யபிரகாஷ்க்கு அறிவுரை

தங்களுடைய பல உரையாடல்களில் பிறரைக் குறை சொல்லும் போக்கு அதிகமாகத் தென்படுகிறது. தங்களின் செயல்பாட்டில் அவசரமும், தேவையற்ற விவாதப் போக்கும் இருந்து வருகிறது. இளம் வயதினரான தாங்கள் மேலும் பல வளர்ச்சிகளை அடைய வேண்டியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு பொதுத்தளங்களில் நன்முறையில் சிந்தித்துச் செயல்பட வேண்டுகிறேன்.

விக்கியின் மூலம் பல செயற்பாடுகளைக் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிடும் நீங்கள் விக்கியின் வழியாகச் சில நற்பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:14, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இங்கு ஏற்கனவே பழ இழைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவ்வுரையாடலைச் சூரியாவின் பேச்சுப்பக்கத்திற்கோ அந்தக் கருத்தரிதல் பக்கத்தின் பேச்சுப்பக்கத்துக்கோ நகர்த்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:38, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பரிந்துரைக் குழு

சுந்தர் பரிந்துரைத்த முறையைப் பெரும்பான்மைப் பயனர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அதன் படி பகுதி 1, பகுதி 2 ஆகியன ஓரளவு முடிந்துள்ளன. பகுதி 3 "னி. மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை" என்பது ஆகும். இதனை நடுநிலையாக நின்று பரிந்துரை செய்ய விக்கி நிர்வாகிகள் பயனர்கள் கொண்ட சிறு குழு ஒன்றை அமைப்பது பொருத்தம் என்று கருதுகிறேன். அந்தக் குழு, தனித்தனியாக அணுகப்பட்ட விடயங்களைத் தவிர்த்து நிர்வாக அணுக்கத்தை திரும்பப் பெறுவதற்கு தகுந்த குற்றச்சாட்டுக்கள் உண்டா என்று விவாதிக்கும். சிறிய குழு திறனாகச் செயற்படுவதற்கு 5-7 பேர் இருந்தால் சிறப்பானது என்பதால் 7 பேர் இந்தக் குழுவில் இருப்பார்கள். இந்த உரையாடல்களில் தீவர உரையாடல்களில் ஈடுபடாதவர்கள் குழுவில் பங்கு வகிப்பார்கள். பிணக்குத் தீர்வுமுறை இன்னும் இன்னும் இறுதி படாத நிலையில் இருப்பதால் இது பரிந்துரைக்கப்படுகிறது. இவர்கள் நியமிப்பது என்று பரிந்துரைத்தால், மேற்கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அப்படி இல்லை என்று பரிந்துரைத்தால் இது தொடர்பான உரையாடல்கள் முடிவுக்கு வரும். --Natkeeran (பேச்சு) 02:15, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன், தவிர்க்கமுடியாத காரணத்தால் என்னால் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும்போது பொறுப்பெடுத்துக் கொண்டமைக்கு நன்றி. என்னுடைய தனிக்கருத்து: மூன்றாம் பகுதி தேனி மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கம் பற்றியது. அதற்கான முடிவை எட்டுவதற்கு முதல் இரண்டு பகுதிகள் தேவை என்றே தோன்றுகிறது. முதலில் அவர்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சரியா தவறா எனப் பார்க்க வேண்டும். அவை தவறு என்றால் மூன்றாம் பகுதி தேவையில்லை. அவர் ஏதும் கொள்கைகளை மீறியிருந்தால் அடுத்து அவை நிருவாக அணுக்கம் தொடர்பானவையா, நிருவாக அணுக்கத்தை மீளப்பெறும் அளவுக்குத் தீவிரமானவையா என்று அறிந்து முடிவெடுக்கலாம். அதற்கு முன்னர் மூன்றாம் பகுதியை முடுக்கிவிட வேண்டுமா என எண்ணிப் பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 12:13, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--செல்வா (பேச்சு) 13:39, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், உங்கள் கருத்துக்களுக்கு ஏற்றவாறு குழுவின் நோக்கம் திருத்தப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 14:02, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 02:53, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

குழுவின் நோக்கம்

  • விக்கிப்பீடியா_பேச்சு:நிர்வாக_அணுக்கத்தைத்_திரும்பப்_பெறுதல்#சிக்கலும் தீர்வும் பகுதி 1, பகுதி 2 இல் குறிப்பிட்ட விடயங்கள் நீக்கலாக பிற விடயங்களை அலசி முன்வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுக்கள் நிர்வாக அணுக்கம் திரும்ப பெற வேண்டிய அளவுக்கு பாரதூரமானதா என்று முடிவெடுக்க வேண்டும். அதாவது சிக்கல் தீர்வில் பரிந்துரைக்கப்பட்டதற்கு ஏற்ப "இப்போது இங்கு வைக்கப்பட்டிருக்கும் முறையீடு குற்றச்சாட்டு மட்டுமே. அதில் உள்ளவற்றில் குற்றம் உள்ளதா என முதலில் பார்க்க வேண்டும்". இவ்வாறு முடிவெடுக்கும் போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட தொனி, சூழல், அதைப் தொடர்புடையவர்கள் தீர்க்க முன்வந்த பண்புகள், பிற பயனர்கள் கீழே தந்துள்ள கருத்துக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • "நிருவாக அணுக்கம் தொடர்பான சிக்கலாய் இருந்தால் மட்டும்", நிரிவாக அணுக்கம் திரும்ப் பெறுவது தொடர்பான முன்மொழிவை இக் குழு செய்யும். (நியமிப்பது, இல்லை, முடிவு தொடர்பான காரணங்கள், கருத்துக்கள் ஆகியவற்றைச் முன்வைக்கும்.)
  • அவ்வாறு இல்லாவிடின் இவற்றில் எந்த தகுந்த முறையீடுகள் சமுதாய முறையீட்டுக் கூடத்துக்கு நகர்த்தப்படலாம் என்று பரிந்துரை செய்யும்.
  • செயற்பாடு தொடங்கிய முன்னர் ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்களை மட்டும் ஆராய்ந்தல் போதுமானது. இல்லாவிடின் இந்தச் செயலாக்கம் முடிவற்று தொங்கி விடும்.

காலக் கோடு

  • குழுவை இறுதிப்படுத்தல் - அக்டோபர் 30
  • குழு முடிவை முன்வைத்தல் - நவம்பர் 7, நவம்பர் 12, நவம்பர் 16 - குழுவின் கருத்துக்கள் தொகுத்துத் தருவதற்காக காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கால நீட்டிப்புக் கோரப்பட்டுள்ளது.
  • முடிவு அறிவுப்பு - நவம்பர் 17

குழு

நிருவாக அணுக்கம் பெற்றவர்கள்
  1. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:08, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. அஸ்வின் (பேச்சு) 10:00, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. --சோடாபாட்டில்உரையாடுக 12:22, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பயனர்கள்
  1. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:05, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 06:48, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கருத்துக்கள்

நடுநிலையாளர்கள் இங்கு இருக்க வேண்டாமா?

  • ஸ்ரீதர் - இவர் 10 ஆண்டுவிழா பற்றி சுப்பிரமணி கருத்து முரண்பாடு கொண்டிருந்தபோது சுப்பிரமணிக்கு சிறந்த வழிகாட்டுனர் பதக்கம் வழங்கியவர். அதன்பின் பயனர்:Selvasivagurunathan m பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டுள்ளார்.
  • பழ.இராஜ்குமார் - இப்பக்கத்தில் தேனி. எம். சுப்ரமணி அவர்கள் நிர்வாகியாக பணியாற்றிய போது அவர் ஒரு நிருவாகியாக தமிழ் விக்கியில் செய்த நற்பணிகள் ஏதேனும் சொல்ல இயலுமா? என்று சுப்ரமணிக்கு சார்பாக கேள்வி எழுப்பியவர்.

--Rajan s (பேச்சு) 07:12, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் Rajan s!
  1. குழுவில் என்னுடைய பெயரை நான் சேர்க்காத நிலையில், எனது நடுநிலைமை குறித்த கேள்வியினை எழுப்புதல்... நியாயமன்று.
  2. உடன் பணியாற்றும் பயனர் எனும் முறையில் தேனி. எம். சுப்பிரமணியின் பக்கத்தில் எனது வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
  3. கடந்த ஒரு மாத காலமாக நடந்துவரும் பிரச்சனைகளில் நான் நடுநிலையுடனே நடப்பதனை எனது உள்ளமும், உடன் பணியாற்றும் பயனர்களும் அறிவர்.
  4. அனைத்து முன்னெடுப்புகளையும் ஐயத்திற்கு உட்படுத்தினால், தீர்வுகள் கிடைப்பது மிகக் கடினம் என்பது எனது கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:49, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் செல்வசிவகுருநாதன்! நீங்கள் என்னை தப்பாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள். செல்வசிவகுருநாதன் பேச்சுப்பக்கத்தில் ஸ்ரீதர் கருத்திட்டுள்ளார் என்பதே என் சுட்டிக்காட்டல். உங்களை நான் தப்பாக குறிப்பிடவில்லை. உங்கள் நடுநிலைமை குறித்த கேள்வியும் எனக்கில்லை. நன்றி! வணக்கம்! --Rajan s (பேச்சு) 11:25, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இராஜ்குமாரின் கேள்வி நடுநிலையைத் தாண்டியதாக கருதவில்லை. ஸ்ரீதரின் உரையாடல்களைக் கவனித்ததில் மிக நடுநிலையாக அணுகக் கூடியவர் என்றே கருதுகிறேன். எனினும் உங்கள் கூற்றுக்களை கருத்தில் எடுத்து perception of bias தவிர்ப்பதற்கா அவர் குழுவில் இடம்பெற மாட்டார். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:54, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அன்ரன்

சிக்கலும் தீர்வும் என்ற பகுதியில் 4 வகை படிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட பயனர்களும் ஆதரவளித்திருக்க "நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு" உருவாக்கம் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. இது குழுவில் உள்ள அங்கத்தவர்கள் நடுநிலை பற்றிய கேள்வியல்ல. ஒரு நடைமுறை இருக்கையில் புதிதாக ஒரு குழு அமைத்து செயற்படுவது, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் செயற்பாட்டைக் குழப்புவதாக அமையும்.

அல்லது, இது நடுவர் தீர்ப்பாய சபையா (Arbitration Committee)? அப்படியாயின் விக்கி நடைமுறைக்கேற்ப உருவாக்கப்படல் வேண்டும். மேலும், பரிந்துரைக் குழு என்ன செய்யும், அதன் அணுகு முறை என்ன என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. விக்கியின் கொள்ளை, நடைமுறையில் இது எக்கோணத்தில் அமைகிறது. புதிதாக எழுந்துள்ள சிக்கலுக்கு புதிதாக, முறையான அமைப்பில்லாத குழுவின் தாக்கம், மற்றும் அதில் பங்கு பற்றும் பயனர்களின் நேர விரயம் என்பன கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். பரிந்துரைக்குப் பின்??

ஏற்கெனவே பரிந்துரைத்த படிமுறையில் அடைவில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தவிர்த்தல், மெளனம் என்ற போக்குகள் காணப்படுகின்றன. முரண்பாட்டுத் தீர்வில் இது ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே பலர் களைத்தும், மனத்தாக்கத்திற்கும் ஆளாகியுள்ளனர். எனவே, இன்னொரு புது முயற்சி தேவையா? எனவே, 3வது பகுதியாக குறிப்பிட்டுள்ள "சமுதாய முறையீட்டுக் கூடத்துக்கு நகர்த்துவது" என்பதை முன்னெடுக்கலாம்.

மேலும், நுணுக்கமாக ஆராய்ந்தால் பகுதி 1, பகுதி 2 இல் முக்கியமான பிணக்கு தீர்த்தல் மற்றும் விக்கி தொடர்புடைய விடயங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றை எவை எவையென கூறி இன்னுமொரு முன்-பின் கருத்திடலை ஏற்படுத்த விரும்பவில்லை. இங்கு முன்வைக்கப்பட்டுள்ள "சிக்கலும் தீர்வும்" போக்கின் நிலையின் பின் கருத்திடுகிறேன்.

தீபாவளி கொண்டாட இருக்கும் பயனர்கள் நலன் கருதி, இந்த "சிக்கலும் தீர்வையும்" பின்போடலாமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 15:10, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அன்ரன். நான் உட்பட பல பயனர்கள் களைத்துப் போனார்கள் என்பது உண்மையே. "சமுதாய முறையீட்டுக் கூடத்துக்கு நகர்த்துவது" என்பதை ஏற்றுக் கொண்டாலும், உரையாடல்களின் வரலாற்றாஇக் கவனிக்கலியில் இந்தக் குறிப்பிட்ட விடயத்தில் அது இந்த செயலாக்கத்தை விட சிக்கலானது என்பது என் கருத்து. மேலும் பிணக்குத் தீர்வுமுறை இறுதிப்படுத்தப்படவில்லை. அதுவரைக்கும், இந்தக் குறிப்பிட்ட விடயத்தை இழுத்தடிக்க விரும்பவில்லை. --Natkeeran (பேச்சு) 15:41, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • நற்கீரன், உங்கள் செயல்களின் நன்னோக்கு புரிகின்றது, ஆனால் சற்றுப் பொறுமையாக நகர வேண்டும் என்று நினைக்கின்றேன். தக்க வழிமுறைகள் வகுக்கும் முன் இப்படி அவசரப்பட வேண்டிய தேவை ஏதும் இல்லை. இராசன் (Rajan s) முன் வைத்த குற்றச்சாட்டுகளைக் கருதவேண்டும் என்பது தேவை, மறுக்கவில்லை ஆனால் தக்க முறையில் அணுக வேண்டும். அணுகவில்லை எனில் யாரும் வந்து யார் மீதும் இப்படிக் குற்றம் சாட்டி த.வி-யை குலைக்கலாம். இராசன் தன் பேச்சுப்பக்கத்திலும், பிற இடங்களிலும் கூறிய கூற்றுகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. இப்பொழுது உருவாக்கப்படும் குழுவின் நோக்கம், அதற்கான முறைமை, அவர்களுக்கான நடைமுறைகள் ஏதும் வகுக்காமல் எப்படி இக்குழுவை அமைப்பீர்கள்? --செல்வா (பேச்சு) 02:53, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • இங்கே பயனர் இராசனுக்கு நான் விடுத்தக் கேள்விகளும் அதற்கு முன் விடுத்தக் கேள்விகளுக்கும் தக்க மறுமொழிகள் தரவில்லை அவர். அவர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.--செல்வா (பேச்சு) 05:18, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் கேட்கும் கேள்விகள் தனி மனித அந்தரங்கத்தில் தலையிடும் விடயங்கள். என் பேச்சுப் பக்கத்தில் சில கேள்விகளை வைத்துள்ளேன். படித்துவிட்டுப் பதில் தாருங்கள். அதன்பின் கேள்வி கேளுங்கள். ஒழுங்கு முறை தேவை! --Rajan s (பேச்சு) 03:25, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சில ஐயங்கள் - மயூரநாதன்

நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் எவ்வித வழிமுறைகளும் இல்லாத நிலையில், ஒரு பயனருக்கு மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அப்பயனர்மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுப்பதற்காக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இவ்விடயத்தில் ஈடுபாடு காட்டிவந்த சுந்தர் தனிப்பட்ட சில காரணங்களினால் சிலகாலத்துக்கு விக்கிப் பணிகளில் ஈடுபட முடியாததால், இவ்விடயத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அக்கறை காட்டும் நற்கீரனுக்கு நன்றி. அவரது இந்த நல்லெண்ண முயற்சியை ஆதரிக்கும் அதே வேளை இந்தச் சிக்கல் தீர்வுகளோடு தொடர்புடைய எனது சில ஐயங்களையும் கருத்துக்களையும் தமிழ் விக்கிப்பீடியாச் சமூகத்தின் முன் வைக்க எண்ணுகிறேன். எந்த விசாரணைக்கும் முன்னர் தமிழ் விக்கிச் சமூகம் இவற்றுக்கான விடையைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

  1. இப்படியான ஒரு நிலைமை தமிழ் விக்கியில் இப்போது தான் முதன் முதலாக எழுந்துள்ளது. எனவே இது தொடர்பிலான நமது செயற்பாடுகளும், கைக்கொள்ளும் வழிமுறைகளும், எடுக்கும் முடிவுகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை விக்கியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடியன என்பதோடு. வெளியில் இருப்பவர்கள் மத்தியில் உருவாகக்கூடிய தமிழ் விக்கிபற்றிய கருத்தில் பெரும் தாக்கத்தையும் உண்டுபண்ணக்கூடியது. அது மட்டுமன்றி, இதை நாம் சரியாகக் கையாளாவிட்டால், ஒரு நீண்டகாலப் பயனருடைய மன உணர்ச்சிகளோடு விளையாடியது மட்டுமல்லாமல், அப்பயனருடைய பல ஆண்டுகால உழைப்பையும் அவமதிப்பதாகவும் முடியும். இந்நிலையில், எவ்வித முறையான வழிமுறைகளும் இன்றி அவசர அவசரமாக முடிவெடுக்க முயல்வதற்கு குற்றஞ்சாட்டியவரும், அவரை ஆதரிக்கும் பிற பயனர்களும் கொடுக்கும் அழுத்தம் ஒரு காரணமா?
  2. தீர்வுக்கான குழு அமைப்பதில் குற்றஞ்சாட்டியவரின் கருத்துக்கு மதிப்பளித்து அக்குழுவில் பணியாற்ற முன்வந்த பயனர் ஒருவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அப்படியாயின், குழுவில் இடம்பெறும் உறுப்பினர் குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவரின் சம்மதமும் பெறப்படுமா?
  3. பிரச்சினையை நான்காகப் பிரித்துத் தனித்தனியாகக் கையாளலாம் என்ற அடிப்படையிலேயே செயற்பாடுகள் அமைந்துள்ளன. அப்படியாயின் ஒவ்வொரு விடயமும் குறுகிய நோக்கில் பார்க்கப்படுமா அல்லது அதன் பின்னணிகளோடு சேர்த்துப் பார்க்கப்படுமா? எடுத்துக்காட்டாக குற்றஞ்சாட்டப்பட்ட பயனரின் நிர்வாக அணுக்கம் நீக்குதல் தொடர்பில் ஆராயும்போது, குற்றத்தின் பின்னணி, குற்றஞ்சாட்டுவதன் பின்னணி போன்றவையும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமா?
  4. குறித்த பயனர்மீது கொண்டுவரப்பட்ட குற்றச் சாட்டுகள் சில பல மாதங்களுக்கு முற்பட்டவை. இவற்றைப் பயன்படுத்தி இப்போது நிர்வாக அணுக்க நீக்கக் கோரிக்கையை முன்வைத்திருப்பதன் நோக்கம் பத்தாண்டுக் கூடல் ஏற்பாடுகள் தொடர்பில் குறை கூறியதற்குப் பழி வாங்குவதற்காக இருக்கக்கூடிய சாத்தியம் கவனத்தில் கொள்ளப்படுமா?.
  5. குற்றஞ்சாட்டுபவர் தனது பேச்சுப் பக்கத்தில் விடப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களில் இருந்து, விக்கிக்கு வெளியே, குற்றஞ்சாட்டப்பட்டவருடன் அவருக்குச் சில தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிய வருகிறது. இதனால், வெளிப் பகைமையை விக்கியூடாக வெளிக்காட்டும் ஒரு முயற்சியாக இது இருக்கக்கூடிய சாத்தியம் கவனத்தில் கொள்ளப்படுமா?.
  6. குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றச் சாட்டுகளில் "தனிமனிதத் தாக்குதல்", "வன்சொற்கள் பயன்பாடு" போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட பின்னரும், அதற்குச் சற்று முன்னரும் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு செய்த பயனர்களும், அனானிகளும் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதோடு, வன்சொற்களையும் பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் குற்றச்சாட்டுகளுக்காகத் தரப்பட்டுள்ள ஆதாரங்களுட் சில மேற்படி தாக்குதல்களுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டவர் அளித்த பதில்களில் இருந்து பெறப்பட்டவையாகக் காணப்படுகின்றன. எனவே இந்தச் சூழல்கள் அனைத்தும் ஒரு சேரப் பார்க்கப்படுமா அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றச் சாட்டுகள் மட்டும் கவனத்தில் கொள்ளப்படுமா?
  7. எந்தவொரு பிணக்குத் தொடர்பான விசாரணையின்போதும், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது குற்றம் காணப்பட்டால் தண்டனையை ஏற்றுக்கொள்ளவேண்டிய பொறுப்பு இருக்கும் அதே வேளை, குற்றச்சாட்டுகள் பிழையான நோக்கத்துடன் அல்லது நியாயத்துக்குப் புறம்பாக வைக்கப்பட்டதாகத் தெரியவந்தால் அதற்கான தண்டனையைப் பெறுவதற்கான பொறுப்பு குற்றம் சாட்டுபவருக்கும் இருக்கவேண்டும். தற்போது கையாளப்படும் விடயத்தில் குற்றஞ்சாட்டுபவரின் கணக்கு இக் குற்றச் சாட்டை முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. கூடிய பட்சம் இதை மட்டுமே தடை செய்யமுடியும். குற்றம் சாட்டுபவரின் வாக்குமூலத்தின் படி, அவர் ஏற்கெனவே பதிவு செய்யாமலேயே பங்களித்து வந்திருக்கிறார். ஆங்கில விக்கியிலும் முனைப்பான பங்களிப்புச் செய்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். ஆங்கில விக்கியில் தானியங்கி இயக்குவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே ஆங்கில விக்கியில் அவருக்குக் கணக்கு இருக்க அல்லது இருந்திருக்க வேண்டும். எனவே குற்றஞ்சாட்டுபவர் தனக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும் வகையில் இவ்வாறான விடயங்கள் ஆராயப்படுமா?

இங்கே முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகள் எந்த ஒரு தனிப்பட்ட பயனருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ வைக்கப்படவில்லை. இவற்றின் நோக்கம் தமிழ் விக்கி சரியான பாதையிலிருந்து வழுவிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கே. எனவே பிற பயனர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இக்கேள்விகள் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் --மயூரநாதன் (பேச்சு) 19:07, 29 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 04:50, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ---செல்வா (பேச்சு) 05:12, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  1. ஓம். சுந்தரின் "சிக்கலும் தீர்வும்" முறை ஏற்றுக் கொள்ளப்பட்டு சில நாடுகளுக்கு பின்னரே எனது செயலாக்கத்தை அந்த முறையின் "தேனி. மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை" என்ற மூன்றாவது கூற்றுக்கு ஓர் அணுகுமுறையாக முன்னெடுத்துள்ளேன். இந்த முறையைப் பயனர்கள் ஏற்றுக் கொண்ட பின் பல நாட்கள் சென்றபின்னர், கேள்விகள் ஆலமரத்தடியில் எழுப்பப்பட்ட பின்னர் இச் செயலாக்கம் முன்னெடுக்கப்பட்டது.
  2. இல்லை. ஏன் விலக்கப்பட்டது தொடர்பாக காரணம் தர்ப்பட்டுள்ளது. perception of bias தவிர்ப்பதற்காக.
  3. இந்தனைக் குழு தீர்மானிக்கும்.
  4. ஓம். இதனை குழு கருத்தில் எடுக்கும்.
  5. ஓம். இதனை குழு கருத்தில் எடுக்கும்.
  6. ஓம். இதனை குழு கருத்தில் எடுக்கும்.
  7. இந்தச் செயற்பாட்டில் இல்லை. ஆனால் சிக்கலும் தீர்வும் நான்காவது படியாக இது முன்னெடுக்கப்படும். இந்தக் குழுவின் முடிவுகள் அந்தப் படிக்கு உதவும். --Natkeeran (பேச்சு) 14:09, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கம் மீளப் பெறுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருப்பது இராசன். இவருடைய பயனர் கணக்குக்கும் ஏற்கனவே உள்ள எந்தப் பயனர் கணக்குக்கும் தொடர்பில்லை என்று மேல் விக்கியில் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில்

//பத்தாண்டுக் கூடல் ஏற்பாடுகள் தொடர்பில் குறை கூறியதற்குப் பழி வாங்குவதற்காக இருக்கக்கூடிய சாத்தியம் கவனத்தில் கொள்ளப்படுமா?//

என்று மயூரநாதன் குறிப்பிட்டுள்ளார். அதற்குச் செல்வாவும் யோகிசிவமும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். யார் பழி வாங்க எண்ணுகிறார்கள், அதற்கான ஆதாரம் என்ன என்று வெளிப்படையாக பதிவு செய்ய முடியுமா? பத்தாண்டு நிகழ்வுக்காக கடுமையான உழைப்பைத் தந்து, சொல்லடிகளையும் பெற்றுக் கொண்டு, விக்கி முறைகளைப் பின்பற்றி அமைதியாக இருப்பவர்களை நீங்கள் பாராட்ட வேண்டாம். பதக்கம் தர வேண்டாம். இப்படி அவமானப்படுத்தாமல் இருந்தால் போதும். நன்றி.--இரவி (பேச்சு) 18:32, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

குற்றச் சாட்டுகளில் மிகப் பெரும்பாலானவை பல மாதங்களுக்கு முற்பட்டவை அப்போது குற்றச் சாட்டு எதுவும் கொண்டுவரப்படவில்லை. பத்தாண்டுக் கொண்டாட்டம் குறித்துக் குற்றம் சொன்னதற்குப் பிறகு கொண்டுவரப்படுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று தெரிய வேண்டும். குற்றஞ் சாட்டியவர் ஒரு பதிவு செய்த பயனர் தானே. இதில் நான் என்ன வெளிப்படையாகச் சொல்ல இருக்கிறது. அந்தப் பயனர் குற்றச்சாட்டு வைப்பதற்காகவே பதிவு செய்துகொண்டவர். அவர் பத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காகக் கடுமையாக உழைத்ததாகவும் எனக்குத் தெரியவில்லை. விக்கி முறைகளைப் பின்பற்றி அமைதியாக இருந்ததாகவும் தெரியவில்லை.---மயூரநாதன் (பேச்சு) 19:05, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் இராசனைத் தான் குறிப்பிட்டீர்கள் என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 19:17, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதுப் பயனர்கள் வர வேண்டும் என்று பலவாறு முயல்கிறோம். இவ்வாறு வருகிறவர்கள், கட்டுரையாக்கம் முதலிய பணிகளை மட்டும் செய்ய வேண்டும், கேள்விகள் ஏதும் கேட்கக்கூடாது என்று எண்ணுகிறீர்களா? இப்பிரச்சினையில் இரு பக்க நோக்கு இருக்க முடியாது என்கிறீர்களா? ஒரு பக்கம் மட்டுமே சரி, மறு பக்கம் கேள்வி கேட்பவர்கள் எவரும் பழி வாங்கவே செயல்பட முடியும் என்று கருதுகிறீர்களா? அடையாளம் காட்டாமல் கேள்விகள் வந்தால், அடையாளத்துடன் வர வேண்டும் என்கிறீர்கள். புதிய பயனர் கணக்கில் இருந்து கேள்வி வந்தால் முகமூடியைக் கழற்றி விட்டு வர வேண்டும் என்று சவால் விடுகிறீர்கள். பழி வாங்குவதற்காக கேள்வி கேட்பதாக கூறுகிறீர்கள். நெடுநாள் பயனர் ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பி வந்து கேள்வி கேட்டால் இத்தனை நாள் பங்களிக்காமல் கேள்வி கேட்க மட்டும் ஏன் வந்தீர்கள் என்கிறீர்கள். சரி, என்னைப் போன்றவர்கள் கேட்டால் நிருவாகப் பொறுப்பில் இருப்பவர் இப்படிக் கேட்கலாமா என்கிறீர்கள். பொறுப்பைத் துறந்து விட்டுக் கேட்டால் கூட முன்பு பொறுப்பில் இருந்தவர் இப்படிக் கேட்கலாமா என்பீர்கள் போல் இருக்கிறது :) ஆக மொத்தம், கேள்விகளே கேட்காதீர்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்லி விட வேண்டியது தானே? பொறுப்புத் துறப்பாக ஒன்று சொல்லி விடுகிறேன்: தேனி சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தை நீக்குவது பற்றி எனக்கு கருத்து ஏதும் இல்லை. ஆனால், அது பற்றி ஒரு எந்த ஒரு பயனரும் முறையிட சரியான நேரம் என்றோ தவறான நேரம் என்றோ ஏதும் இல்லை. ஒரு பயனர் கேட்கும் கேள்விகளின் உண்மையை மட்டும் ஆராய்ந்தால் போதும். --இரவி (பேச்சு) 19:29, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
கேள்வி கேட்கக் கூடாது என்று யார் சொன்னது? கேள்வி கேட்பது வேறு ஒரு நீண்டநாள் பயனரின் நிர்வாக அணுக்கத்தை நீக்கக்கோருவது வேறு. அதற்குச் சில வழிமுறைகள் இருக்க வேண்டும். திடீரென ஒருவர் முளைத்து வந்து ஒரு பயனர்மீது அவதூறு சொல்ல முடியாது. குற்றஞ் சுமத்துபவர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். யாரும் கேள்வி கேட்கலாம் என்றால், இன்னொருவர் அதற்கு எதிர்க் கேள்வி கேட்கவும் உரிமை உண்டு தானே? குற்றஞ் சுமத்துபவரின் உள்நோக்கங்களைச் சந்தேகிப்பதற்கும் அது குறித்துக் கேள்வி எழுப்பவும் எல்லாப் பயனர்களுக்கும் உரிமை உண்டு. உள்நோக்கம், பின்னணி என்பவற்றைப் பொறுத்துத்தான் உண்மைக்கும் மதிப்பு ஏற்படும். அது குறித்து நிச்சயம் ஆராயத்தான் வேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 19:59, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கேள்வி கேட்கக் கூடாது என்று யார் சொன்னது என்று கேட்டிருக்கிறீர்கள். தேனி சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்துக்குத் தொடர்பற்று புருனோ ஒரு கேள்வி எழுப்புகிறார். அவரைப் பார்த்து

//புருனோ எங்கிருந்து திடீரென முளைத்தார் (இராசனைப் போல) என்று தெரியவில்லை. இவரை நான் விக்கி 10 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் இங்கு காண்கிறேன். நீங்களும் கட்டாய விக்கி விடுப்பில் இருந்தீர்களா?//

என்று இங்கு சிறீதரன் கூறியுள்ளார். புருனோ இந்தியா டுடே இதழில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக கருத்து கூறுவது பிரச்சினையில்லை. தமிழ் விக்கிப்பீடியாவிலும் தமிழ் விக்சனரியிலும் நீண்ட ஆண்டுகளாக விட்டு விட்டேனும் தொடர் பங்களிப்புகளைத் தருவது பிரச்சினை இல்லை. சென்னையில் கூடல் நிகழ்வில் கலந்து கொள்வது பிரச்சினை இல்லை. நீங்கள் விரும்பும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. நமது பரப்புரை காணொளிகளில் பங்காற்றினால் பிரச்சினை இல்லை. தமிழ் விக்கிப்பீடியா சார்பாக கல்லூரிகளில் நடக்கும் பரப்புரை முயற்சிகளில் கலந்து பங்காற்றினால் பிரச்சினை இல்லை. ஆனால், கேள்வி கேட்டால் பிரச்சினை :)

ஏன் இவர் நிருவாகியாகத் தொடர வேண்டும்? ஏன் இவரது நிருவாக அணுக்கத்தை மீளப் பெறக்கூடாது? என்பது கூட ஒரு கேள்வி தான். நிருவாக அணுக்கம் நீக்கல் குறித்த உரையாடல் தொடர்பாக

//ரோட்டில் நின்றவர் போனவர் எவரும் ஒரு கணக்கை ஆரம்பித்து ஒரு நிருவாகியை நீக்கப் பிரேரிக்கலாமா?// என்று இராசனைக் குறித்து சிறீதரன் இங்கு கேட்டுள்ளார்.

நிருவாக அணுக்கத்தைப் பெறுவதற்காக யார் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம் என்றால் மீளப் பெற கோருவதற்கும் ஒரு பயனருக்குச் சிறப்புத் தகுதிகள் தேவையில்லை என்பது தானே முறை? ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நிருவாகிகளைப் பரிந்துரைத்து நேரத்தை வீணாக்குவார்களோ என்று வராத பதற்றம் ஏன் நிருவாகப் பொறுப்பை நீக்கக் கோருவதற்கும் வருகிறது? :)

//அதற்குச் சில வழிமுறைகள் இருக்க வேண்டும். // என்று கூறும் நீங்கள் குறைந்தது 1000 தொகுப்பு இருக்கவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் கூறியவாறு 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்கள் தானியங்கிகளையும் சேர்த்து 76 பேர் மட்டுமே. அதுவும் ஓராண்டுக்கு முன்பிருந்து இருப்பவர்கள் என்று பார்த்தால் இத்தொகை இன்னும் குறையும். ஆக, ரோட்டோரத்தில் நின்றவர் போனவர் மட்டுமன்று, தமிழ் விக்கிப்பீடியாவின் 58008 பதிவு செய்த பயனர்களில் ஆகக் கூடுதலாக 76 பேர் மட்டுமே ஒருவரின் நிருவாக அணுக்கத்தை நீக்கக் கோர முடியும். அதாவது தமிழ் விக்கிப்பீடியர் தொகையில் 0.1% வீதம் பேருக்குத் தான் இந்த உரிமை இருக்கலாம். இந்த 76 பேரிலும் 39 பேர் நிருவாகிகள். ஆக நிருவாகியல்லாத 37 பேர் தான் இந்தப் பணியைச் செய்ய முடியுமா? :) நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள சட்டங்கள் இயற்றுவது போலத் தான் நீங்கள் கூறும் நடைமுறையும் :) நிருவாகப் பணி என்பது துப்புரவுப் பணி தானே? அது என்ன புனிதத் தொப்பியா அல்லது அதிகாரச் செங்கோலா? இருக்கிற 39 நிருவாகிகளில் பாதி பேர் முனைப்பான பங்களிப்பில் இல்லை. எஞ்சியோர் ஒவ்வொருவர் மீதும் நாளும் இது போன்ற முறையீடு வரும் என்று அஞ்சி வழிமுறைகளை வகுக்கும் அளவுக்கு அனைவரும் அவ்வளவு மோசமாக நிருவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் :) இத்தனைக்கும், சுந்தர் பரிந்துரைத்த பிணக்குத் தீர்வு முறைகளைப் பின்பற்றினாலே 99% முறையீடுகள் தீர்ந்து விடும். நிருவாக அணுக்கம் தொடர்பான முறையீட்டை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு பதற்றம்? --இரவி (பேச்சு) 20:32, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

// திடீரென ஒருவர் முளைத்து வந்து ஒரு பயனர்மீது அவதூறு சொல்ல முடியாது. குற்றஞ் சுமத்துபவர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். //

786haja, Vaarana18 ஆகியவை திடீரென முளைத்து வந்த கைப்பாவை கணக்குகள். அவை என் மீது சுமத்தியவை அவதூறு தாம். பல முறை வேண்டிய பிறகும் இந்த அவதூறை நீக்குவதற்கு எந்த வித முயற்சியும் எடுக்காத நீங்கள், தேனி சுப்பிரமணி நோக்கி கேள்வி கேட்கும் இராசன் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பது நடுநிலையான செயற்பாடு இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 21:14, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

786haja, Vaarana18 ஆகிய இரு கணக்குக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அருனைத் தொடர்பு கொள்ள முயன்றும் இதுவரை முடியவில்லை. ரவி, தேனி ஆகிய இருவர் மீது நியாமற்ற, ஆதாரபூர்வமற்ற அவதூறுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கி இதுவரை இவ்வாற ஒன்றைச் சந்திக்க வில்லை என்பதால் நாம் வேகமாக இவற்றை எதிர்கொள்ளவில்லை. ஆனால் எதிர்காலத்தில் வேகமாக இம் மாதிரித் அவதூறுகள் தடுக்கும் வண்ணம் நிர்வாகிகள் செயற்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 04:35, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நிர்வாகிகள் தமது பொறுப்பை series ஆக எடுத்து அணுகினால் இந்த மாதிரிச் சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். நாம் அவதூறுகளை விதைப்பவர்களை, விக்கி நற்பண்புகளை மதிக்காமல் செயற்படுபவர்களுக்கு பெரும் மதிப்பும் மன்னிப்பும் அளித்து ஊடாடுவதானேலேயே சில சிக்கல்கள் தேவையற்று இழுத்தடிக்கப்படுகின்றன. சில சிக்கல்களை நிர்வாகிகள் மட்டும் வாக்குப் பதிவு செய்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும். நிர்வாகப் பொறுப்பு என்பது வெறும் துப்புரவாக்கப் பணி மட்டும் இல்லை. அது விக்கிச் சமூகத்தில் நல்ல முறையில் பங்காற்றியதற்கான ஒர் அடையாளம். இல்லாவிடின் விசமிகள், trolls, spammers ஆகியோருக்குப் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். --Natkeeran (பேச்சு) 04:49, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன், என் மீது மட்டுமன்று சூரியா, புருனோ ஆகிய இருவர் மீதும் இங்கு நான்கு முறை மீண்டும் மீண்டும் அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. இராசனின் கணக்குக்கும் இம்மூவரின் கணக்குக்கும் தொடர்பில்லை என்று கைப்பாவைச் சோதனையில் முடிவாகியுள்ளது. இந்தச் சோதனை முடிவு போதாது என்று கருதுகிறீர்களா? அப்படியெனில், மேற்கொண்டு உண்மை அறிய என்ன நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்? மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் இல்லை என்றால், ஏன் இந்த அவதூறுகளை நீங்கள் கோடிட்டு அடுத்து கட்டம் கட்டி அறிவிக்க முன்வரக்கூடாது?

இங்கு என் மீதான கைப்பாவை கணக்கு மூலமான தனிமாந்தத் தாக்குதல் இருக்கிறது. இங்கு மூவர் மீதான ஆதாரமற்ற அவதூறு இருக்கிறது. இங்கு கைப்பாவை கணக்கின் கீழ் வந்த அவதூறுகளை நடுக்கோடிட்டு அடித்துத் திருத்தலாம் என்று ஏற்கனவே இணக்க முடிவு இருக்கிறது. இதை இந்த விக்கிச்சமூகத்தில் உள்ள யாராவது ஒருவர் செயற்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்? செய்ய முடியுமா முடியாதா? இல்லை, அருணே வந்து தான் நீக்க வேண்டும் என்பது தான் உங்கள் நிலைப்பாடு என்றால் தெளிவாக தெரிவித்து விடுங்கள். நன்றி. பி.கு. நிருவாகிகள் என்பவர்கள் விக்கிச்சமூகத்தின் இணக்க முடிவுகளைச் செயற்படுத்துபவர்கள் தாம். நிருவாகிகள் மட்டும் கூடி சில முடிவுகளை எடுக்கலாம் என்பது விக்கி முறைகளுக்கு முரணானது. இது பற்றி பொருத்தமான இடத்தில் உரையாடுவோம்.--இரவி (பேச்சு) 05:38, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இவை நீக்கப்பட வேண்டும். நீக்கப்படும். இடைப்பட்ட தொகுப்புகளை நீக்குவதில் நுட்ப முறையில் எனக்குப் பரிச்சியம் இல்லை. நிர்வாகிகள் மட்டும் முடிவெடுத்தல் ஏன் விக்கி முறைக்கு முரணானது. இந்த நடைமுறை யேர்மன் விக்கி போன்ற பிற விக்கிகளில் உள்ளன. --Natkeeran (பேச்சு) 14:26, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இரவி, நடுநிலை, மனச்சாட்சி என்பதற்கெல்லாம் என்ன பொருள் வைத்துக்கொண்டு நீங்கள் இங்கே கருத்திடுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. நடுநிலை என்றால் பக்கச் சார்பின்றி நடக்கவேண்டும். நியாயத்தின் படி நிற்கவேண்டும். அவதூறுகளை நீக்கவேண்டும் என்று மற்றவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதாக இருந்தால் நீங்கள் அந்தக் குற்றத்தைச் செய்யாதவராக இருக்க வேண்டும். இந்த உங்கள் கருத்தின் இறுதியில் பிற்குறிப்பாக இட்டுள்ள அவதூறுக் கருத்து, பத்தாண்டு விழாவுக்குப் பின் இடம்பெற்றுவரும் வாதங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட மிக மோசமான அவதூறுக் கருத்துக்களில் ஒன்று என்பது எனது கருத்து. உங்களுடைய இந்தக் கருத்தை நிரூபிக்க சான்றுகளைச் சமர்ப்பித்திருப்பதாகக் கூறியுள்ளீர்கள். நீங்கள் சமர்ப்பித்த கடிதத்தில் உங்களுடைய கருத்துக்களுக்கு எந்தச் சான்றும் கிடையாது. "விக்கிப்பீடியர் என்ற போர்வையின் மூலம் .......நாடுகிறார்கள்" என்பதும் "தமிழ் விக்கிப்பீடியாவின் நலனை ..... தயங்க மாட்டார்கள்" என்பதும் உங்களுடைய விளக்கம் மட்டுமே. அதை நீங்கள் சமர்ப்பித்த ஆவணத்தில் இருந்து நிரூபிக்க முடியாது. அது மட்டுமன்றிப் பின்னர் வந்த பல அவதூறுக் கருத்துக்கள் முன்வைக்கப் படுவதற்குக் காரணமாக அமைந்ததும் உங்களுடைய இந்தக் கருத்தே. (கைப்பாவைக் கணக்கில் இருந்து பதியப்பட்ட முதல் கருத்தைப் பாருங்கள் நீங்கள் பயன்படுத்திய அதே Format பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காண்பீர்கள்). ஆனால் இந்த உங்கள் கருத்தை நீக்க முடியாது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இந்தக் கருத்தை விட்டுவிட்டு மற்றவர்களின் கருத்துக்களை மட்டும் நீக்கக் கோருவதோ, நீக்குவதோ நடுநிலையும் ஆகாது. நியாயமும் ஆகாது. எல்லா அவதூறுக் கருத்துக்களையும் நீக்குவதற்கு எல்லாப் பயனருக்குமே உரிமை உண்டு. அக் கருத்துக்களை முன்வைத்தவர்கள் தாமே முன்வந்து கௌரவமாகத் தமது கருத்துக்களை நடுக்கோடிட்டு நீக்குவார்கள் என இன்னும் நம்புவதால்தான் இக்கருத்துக்கள் இன்னும் இருக்கின்றன. இதை அவர்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும் விரைவில் எல்லாம் நீக்கப்படும். அப்போது கைப்பாவைக் கருத்தும் நீக்கப்படும். உங்கள் குறையும் தீரும். ---மயூரநாதன் (பேச்சு) 17:54, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


மயூரநாதன், பி,கு 2 இக்கு அவதூறு என்று கணிப்பின் குறிப்பிடத்தக்க விக்கி பங்களிப்புக்கள் எதுவும் செய்யாத Gcsekaran கூறிய பெரும்பாலான கருத்துக்கள், அவரை வழிமொழிந்து தேனி கூறிய பல கருத்துக்களும் மிகப் பாரதூரமான அவதூறே. அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியபோது, எந்தவித எதிர்க்கருத்துக்களையும் வலுவாக நான் உட்பட யாரும் பதிவு செய்யவில்லை. வெளிப்படையாகக் கூறுவது ஆயின் அந்த உரையாடல் சூட்டில் பி.கு 2 Gcsekaran, தேனி ஆகியோரைச் சுட்டியே முன்வைக்கப்பட்டுள்ளது. ரவியை இக் கருத்துக்களை தவிர்த்து இருக்கலாம் என்னும் போது அவர்கள் இருவரும் பல கருத்துக்களை தவிர்த்து இருக்கலாம் என்பது கண்கூடு. இந்தப் பெரும் சறுக்கலில் எம்மைத் தள்ளி விட்டவராக Gcsekaran னின் நியாமற்ற, பொறுப்பற்ற, தவறான கருத்துக்களையே பார்க்கிறேன். அந்தக் கருத்துக்களை வழிமொழிந்த நிர்வாகியான தேனியும் இதற்கு உதவி உள்ளார். இந்தச் சாக்கடைக்குள் ரவி இழுபட்ட போது, இன்னும் பொறுமையாக இந்த விடயங்களைக் கையாண்டு இருக்கலாம் என்பது தற்போது தெரிகிறது. ஆனால் இந்த விடயத்தை கையாண்ட விதம் தொடர்பான அனைத்து விக்கி நிர்வாகிகளும் பயனர்களும் பொறுப்பு எடுக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 19:32, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் வணக்கம்! நம்மிடையே வளர்ந்துவரும் கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு தீர்வினை நோக்கி நாம் நகர வேண்டும் என்பதனை நான் வலியுறுத்த விரும்புகிறேன். பதில்களை எழுதிஎழுதி அனைவரும் களைத்துவிட்டோம். இணையதளத்தின் மூலமான ஒரு ‘Conference call’க்கு ஏற்பாடு செய்து, நாம் அதில் உரையாடினால் என்ன?அனைவருக்கும் பொருத்தமான வார விடுமுறை நாளொன்றில் நாம் இதனைச் செய்யலாம். இது ஒரு நற்பலனை விளைவிக்கும் என நம்புகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நற்கீரன் கடைசியாக மேலே நீங்கள் தெரிவித்துள்ள கருத்துடன் ஒத்துப் போகிறேன். உள்நோக்கம் இல்லாவிட்டாலும்கூட நம் அனைவர் சார்பிலும் ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அது இரவி மீதான கூடுதல் உரிமையுணர்வினாலும் வேறுபல முறைமைத்தனச் சிக்கல்களினாலும் (systemic issues) ஏற்பட்டது என்பதை இரவியும் எண்ணிப் பார்க்க வேண்டும். பின்னர் சிக்கல் வளர்ந்தபோது நம்மில் பலரும் மேலும் சறுக்கியிருக்கிறோம். தவிர, பல இழைகள் விக்கிக்கு வெளியே ஓடியதும் ஒரு காரணம்.
இரவி, சீறீதரன் சொன்னதையும் மயூரநாதன் விருப்பம் போட்டதையும் வேறு பலவற்றையும் இணைத்து ஒரு உணர்வடிப்படை (rhetoric) வாதத்தை மேலே வைத்துள்ளீர்கள். (பின்னர் சேர்த்தது: நீங்கள் சுட்டியுள்ள சிறீதரனின் கருத்துக்கள் தவறானவை தான்.) அதை நீங்களே ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன். அந்த வாதத்தில் உள்ள ஏரணச் சறுக்கங்கள் பல, false equivalence முதலியன. இவ்வளவு ஒத்திசைவான போக்குக்கு நடுவிலும் உங்களையும், புருனோவையும், சூரியாவையும், இராசனையும் ஒன்றாக அணி சேர்ந்து செயல்படுவதாகப் பெரும்பாலானோர் பார்க்காத போதும் (கைப்பாவைக் கணக்கைத் தவிர) நீங்கள் சிறீரதனுடனைய கருத்து, மயூரநாதன் வெவ்வேறு இடங்களில் தெரிவித்த கருத்துக்கள், போட்ட விருப்பங்கள் இவற்றையெல்லாம் ஒன்றாகப் போட்டுள்ளீர்கள். அது சரியா என எண்ணிப் பாருங்கள். அது போல பல இடங்களில் நீங்கள் என்று கிட்டத்தட்ட ஒட்டுமொத்த விக்கிச்சமூகத்தையே ஒன்றாக விளித்துக் குற்றம் சாற்றுகிறீர்கள். அதுவும் சரியா என எண்ணிப் பாருங்கள். அப்படி ஒட்டுமொத்த விக்கிச்சமூகமும் உங்களுக்கு எதிராகச் செயல்பட ஏதாவது காரணம் இருக்க முடியுமா? (பி.கு. இந்த நிகழ்வையொட்டி எத்தனைபேர் உங்களைப் பாராட்டியிருக்கிறோம், பதக்கமளித்துள்ளோம், அதை எத்தனை பேர் விரும்பியுள்ளார்கள் என்று பாருங்கள். என்னைப் பொருத்தவரை தமிழ் விக்கி வரலாற்றில் அதிகப்படியான பாராட்டு இது. நிகழ்வுக்கும் உங்கள் உழைப்புக்கும் பொருத்தமானதும் கூட. அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.) அப்படி உங்களுக்குத் தோன்றினால் அது நீங்கள் மொத்த சிக்கலையும் ஒருமுறை மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக உணர்த்தவில்லையா? முதன்முறையாக விக்கியில் ஒருவர் என்ன சொன்னார் என்பதைவிட, அங்கு நீங்கள் ஏன் இதைச் சொல்லவில்லை, அதை ஏன் வன்மையாகக் கண்டிக்கவில்லை என்று கேட்கும் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.
மயூரநாதன், முறை என்று வந்துவிட்டால் குற்றம் சாட்டுபவரின் நோக்கத்தைத் தனியே பிரித்துவிடுவதுதான் நல்லது (குற்றச்சாட்டுக்கும் அதற்கும் முடிச்சு் போடுவது தவறு). அதற்கு ஏதும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் தனியாக எடுக்கலாம். உள்நோக்கக்குறை என்பது நல்லெண்ண நம்பிக்கைச் சறுக்கல். அதையெல்லாம் உண்மையில் பார்த்தால் கொள்கை வகுத்துச் செயற்படுத்துவது இயலாதென்றே நினைக்கிறேன். நல்லெண்ண நம்பிக்கை என்பது ஒரு absolute நிலை. ஒருவர் கருவுற்றிருப்பதைப்போல. அது அவ்வாறு கட்டில் இருக்கும்போது சிறப்பாக இருக்கும். ஆனால் அதில் உள்ள ஒரு "குறை" என்னவெனில், குளத்தில் கலக்கும் நஞ்சு போல மொத்தமாக உருக்குலைக்கவும் முடியும். அவ்வாறான சூழலில் கொள்கை, கோட்பாடு வழிகாட்டல் போன்றவற்றைத்தான் நாட வேண்டியிருக்கும். -- சுந்தர் \பேச்சு 08:25, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நான் விடுப்பிலிருந்து வந்ததால் சிறிது சிறிதாக இப்போதுதான் உரையாடலைப் படித்து வருகிறேன். விடுபட்ட கருத்துகள்: இரவியின் மேலேயுள்ள வாதத்தில் உள்ள முதற்பகுதியில் வரும் உணர்வடிப்படை வாதத்தைத்தான் மறுக்கிறேன். மற்றபடி கேள்வி கேட்கும் உரிமையைப் பற்றிய கருத்தில் உடன்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:02, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள்

உரையாடலை இங்கு தொடரவும்: விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:43, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்

நிருவாகப் பொறுப்பில் இருந்து ஒருவரை (தேனி சுப்பிரமணி) நீக்க வேண்டும் என்று புதிதாகப் பதிவு செய்த ஒருவர் (பயனர்:Rajan s) குற்றச்சாட்டுகள் பதினொன்றை வைத்துள்ளார். இவற்றில் பலவற்றையும் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே கேள்வி. எனவே அவர் இட்ட குற்றச்சாட்டுகளைக் கீழே தந்து, அவை பற்றிய என் கேள்விகளை எழுப்புகின்றேன், எனக்குத் தோன்றிய கருத்துகளையும் பகிர்கின்றேன்.
1. இவர் பயனர்களை அனுசரித்துப் போகும் போக்கற்றவர். கட்டுரை உருவாக்கி ஒரு சில நிமிடங்களில் நீக்கி விடுவார் அல்லது நீக்கல் / விக்கியாக்கம் வார்ப்புரு இட்டுவிடுவார். ஆனால் அவர் இரு வரி உட்பட்ட சிறு கட்டுரைகள் முதல் ஆதாரமற்ற/தகுந்த ஆதாரமற்ற கட்டுரைகளை உருவாக்குகிறார்.

ஆதாரம்:
  • முதலில் கூறிய இவர் பயனர்களை அனுசரித்துப் போகும் போக்கற்றவர். என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதற்குச் சான்றாக அவர் தந்துள்ளவை எவ்வாறு பொருந்தும்? கட்டுரையை நீக்கினால், மற்ற நிருவாகிகளிடம் வேண்டி மீட்கலாமே. காரணம் கேட்கலாமே. தேனி குறுங்கட்டுரைகள் எழுதுகின்றார், எழுதியுள்ளார் என்பதற்காக அவருடைய நிருவாகப் பொறுப்பை நீக்க வேண்டுமா? ஆதாரம் இல்லாத கட்டுரைகளை எழுதினால், ஒன்று ஆதாரம் வேண்ட வேண்டும் அல்லது அவற்றை நீக்க விண்ணப்பம் வைக்கலாம். இதற்காக நிருவாகப் பொறுப்பை நீக்க வேண்டுகோள் விட வேண்டுமா?
//ஆதாரம் இல்லாத கட்டுரைகளை எழுதினால், ஒன்று ஆதாரம் வேண்ட வேண்டும் அல்லது அவற்றை நீக்க விண்ணப்பம் வைக்கலாம்.// இப்படிச் செய்யப்பட்ட கட்டுரைகள் கனகு, செல்வகுரு ஆகியவர்களால் காரணமின்றி மீளமைக்கப்பட்டுள்ளதே அறிவீர்களா? விண்ணப்பங்கள் அவர்களால் நிராகரிக்கப்பட்டதே?

2. விக்கி பற்றி அவதூறு பரப்பிய தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியிட்டுள்ளார். மேலும் ‘’பயனர்கள் பலரும் விரும்புகின்றனர்’’ என தற் கூற்றுக்கு ஆதாரமாக மற்றப் பயனர்களை வலிந்து குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிட்ட ‘’பயனர்கள் பலர்’’ என்பது யார்?

ஆதாரம்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு90# முதற்பக்கக் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளா?, பயனர் பேச்சு:Theni.M.Subramani# விக்கி வியாபாரம்
  • இது பிழைதான் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேனி சுப்பிரமணி அந்தத் திருத்தத்தை வெளியிட வேண்டும். இந்தப் பிழை பெரிய பழிதூற்றலா? இதற்காக நிருவாகப் பொறுப்பைத் திரும்பப்பெறவேண்டுமா? இவர் குறிப்பிட்ட ‘’பயனர்கள் பலர்’’ என்பது யார்? என்பது அவ்வளவு பெரிய கேள்வியா?
இவர் எப்படி மற்றப் பயனர்களைச் சுட்டிக்காட்டுவது? இப்படிச் செய்யலாமா?

3. முதற்பக்க கட்டுரைகள் தரமற்றவை என்பதற்காக கம்ப்யூட்டர் இதழில் விக்கியை மட்டம் தட்டிய இவர் நடைமுறையை மீறியும், தரமற்ற முதற்பக்க கட்டுரைகளை காட்சிப்படுத்தியுமுள்ளார்.

ஆதாரம்: விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 8, 2013, விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 29, 2013 (ஆழிப்பேரலை)
  • தரமற்ற முதற்பக்கக் கட்டுரைகளை இவர் காட்சிப்படுத்தினால், அவற்றை மற்றவர்கள் மாற்றியிருக்க முடியுமே. அவருக்கு இது பற்றிக் குறிப்புகள் எழுதியிருக்கலாமே. அண்மையில் செப்டம்பரில் சில பயனர்கள் (அன்டன்) அப்படி குறிப்புகள் எழுதிக் கேள்விகள் கேட்டனர். இது நிருவாகப் பொறுப்பைப் பறிக்கும் அளவுக்கு பெரிய அத்து மீறலா?
//அண்மையில் செப்டம்பரில் சில பயனர்கள் (அன்டன்) அப்படி குறிப்புகள் எழுதிக் கேள்விகள் கேட்டனர். // அவரின் மறுமொழி என்ன? அவர் எதுவும் கூறாது இருக்கலாமா? இதுதான் ஒரு நிர்வாகியின் நல்நடத்தையா?

4. தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கருத்திடலில் குறை கண்ட இவரும் ஒரு பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லவா? குறைக்கு விளக்கம் சொல்ல வேண்டிய இவர் ஏன் கேள்வி கேட்கிறார்?

ஆதாரம்: பயனர் பேச்சு:Theni.M.Subramani#பத்தாண்டு கொண்டாட்டப் பொறுப்புகள் - விளக்கம் கோரல்
  • இவர் கேள்வி கேட்டார் என்பதற்காக நிருவாகப் பொறுப்பைப் பறிக்க வேண்டுமா? (நானும் இவர் கூறிய தவறான கூற்றுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன்). இவர் மட்டும் கேள்வியும் கேட்கவில்லை. கேள்வி கேட்டவர்கள் எல்லோரையும் பதவிநீக்கம் செய்ய வேண்டுமா?
//நானும் இவர் கூறிய தவறான கூற்றுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன்// ஒரு பொறுப்புள்ள நிர்வாகியாக என்ன பதில் அளித்துள்ளார்? பொறுப்பற்ற நிர்வாகி எதற்கு?

5. பண்பற்று, மிரட்டும் தொனியில், தனி மனிதத் தாக்கதலிலும் ஈடுபட்டுள்ளார். வன் சொற்கள், சுய பெருமை பேசும் இவரின் செயற்பாடுகள் விக்கிக்கு ஏற்றதா? இது ஒரு நிருவாகிக்கு ஏற்றதா?

ஆதாரம்:
  • இவை திருத்திக்கொள்ள வேண்டிய பேச்சுகள். தவறாக முன் வைத்த கூற்றுகள். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்து அவற்றை நீக்கினால் போதாதா? இதே போல பிறரும் கூறியிருக்கின்றார்கள். இதற்காக எல்லாம் பொறுப்பைப் பறிக்க வேண்டுமா?
இவர் திருத்தியுள்ளாரா? இவற்றுக்கெல்லாம் பிறகு "விசமி" என்று ஆலமரத்தடியில் கூறியுள்ளாரே! இவர் தொடர்ந்து இவ்வாறு நடப்பார், பின்பு நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க வருத்தம் தெரிவிக்கலாம் அல்லது கேடிட்டு நீக்கலாம். ஐபி பயணர் தரக் குறைவாகப் பேசினால் தடை, இவருக்கு மட்டும் கண்டன அறிக்கையா?

6. சுப்பிரமணிக்கு ஆதரவாக கருத்திட்ட பயனர்:786haja, அதேகாலத்தில் விசமத்தனத்தில் ஈடுபட்ட‎ பயனர்:Vaarana18 ஆகிய பயனர்களுக்கும் சுப்பிரமணிக்கும் தொடர்பு உண்டா? கைப்பாவைகளா?

ஆதாரம்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள், பயனர்:786haja கணக்கு உருவாக்கியது 5 சனவரி 2012‎, பங்களிப்பு, பயனர்:Vaarana18 கணக்கு உருவாக்கியது 7 அக்டோபர் 2013‎, பங்களிப்பு
  • இக்கணக்குகள் தேனி சுப்பிரமணியினுடையது அல்ல என்று உறுதியாகியுள்ளது. ஆகவே இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் நீக்க வேண்டாமா?
என்னைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் குற்றச் சாட்டு வைத்தீர்களே! நீக்க வேண்டாமா?

7. ‘’நற்கீரன்,சுந்தர் ஆகியோர் இந்நிகழ்வில் என்னுடைய தமிழ் விக்கிப்பீடியா நூல் குறித்து அறிமுகம் செய்யப்படவில்லை என்று நான் ஆதங்கப்பட்டதாகவும், வருந்துவதாகவும் தெரிவித்த கருத்து தவறானது’’ என்ற சுப்பிரமணி பயனர்:Gcsekaran நூலுக்கான அறிமுத்தினைக் கேட்டபோது மறுக்கவில்லை. மறுத்திருந்திருக்கலாமே?

  • இது என்ன குற்றச்சாட்டா? இதற்கு நிருவாகப் பொறுப்பைப் பறிக்க வேண்டுமா? 10-ஆவது ஆண்டு நிறைவின் பொழுது, அதன் வரலாற்றைப் பற்றிக்குறிப்பிடப்படும் பொழுது, ஒரு நூலே தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எழுதியது மட்டும் அல்லாமல் அது தமிழக அரசின் பரிசைப் பெற்றது ஒரு பெருமை அல்லவா? இதனை எடுத்துக்கூறாதது நம் குற்றம் அல்லவா?
சுப்பிரமணி 10-ஆவது ஆண்டு நிறைவின் பொழுது நூல் குறித்து அறிமுகம் செய்யப்படாததால் ஆதங்கப்பட்டவும், வருந்தவும் இல்லையா? ஆம் இல்லது இல்லை என்பதை சுப்பிரமணி கூறட்டும்.

8. உன்னுடைய...., முட்டாள் வழங்கும்... போன்ற நற்பண்பு அற்ற சொற்களை இவர் பயன்படுத்தியுள்ளார்.

ஆதாரம்: பயனர் பேச்சு:Theni.M.Subramani# ???, & [1]
  • இவை கட்டாயம் மிகவும் தவறான கூற்றுகள். இதற்கு அவர் மெய்யான வருத்தம் தெரிவித்து அவற்றை விலக்க வேண்டும். மறுப்பே இல்லை. ஒரு நிருவாகி இப்படியெல்லாம் பண்பில்லாமல் பேசுதல் கூடாது. இதனை வலியுறுத்தலாம். இருபக்கமும் அத்துமீறல்கள் நடந்தாலும், பொறுப்பில் உள்ளவர் அத்து மீறலாகாது.
//இதனை வலியுறுத்தலாம்// அதன்பிறகு? இந்த விடயங்களுக்குப் பிறது "விசமி" என்று ஆலமரத்தடியில் கூறியுள்ளாரே! இவர் தொடர்ந்து இவ்வாறு நடப்பார், நீங்கள் வலியுறுத்திக் கொண்டுதான் இருப்பீர்களா? ஐபி பயணர் தரக் குறைவாகப் பேசினால் தடை, இவருக்கு மட்டும் வலியுறுத்தலா?

9. தனக்கு இ-மெயில் வந்ததாகக் குறிப்பிட்டரே. அந்த திரைக்காட்சியில் இருந்த அனுப்புனரின் இ-மெயில் ஐடி பிழையானது என்பதை யாரும் கவனித்தீர்களா?

ஆதாரம்: [2]
  • இது என்ன குற்றச்சாட்டா? அவர் பொய்யாக இதனைக் கூறுகின்றார் என்கிறீர்களா?
அவர் உண்மை சொல்கிறார் என்கிறீர்களா?

10. இவருக்கு எதிரான கருத்துகளுக்கு முறையாக பதிலளிக்காமல், பேச்சைத் திசை திருப்புகிறார்.

ஆதாரம்:
//என்னுடைய நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையினை அவருடைய போலியான முகமூடிகளைத் தூக்கியெறிந்து விட்டு அவருடைய உண்மையான பயனர் பெயரில் பரிந்துரைக்கலாம். வரவேற்கிறேன்.// //என்னுடைய மின்னஞ்சல் பெயரிலேயே மின்னஞ்சல்களை உருவாக்கிக் கொண்டால் தன்னை யாரென்று கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறார் போல் இருக்கிறது// விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#நெற்றிக் கண் திறப்பினும்...
  • பேச்சைத் திருப்புகின்றார் என்று நிருவாகப் பொறுப்பைப் பறிக்க வேண்டும் என்கின்றீர்களா? கைப்பாவைகளை இயக்கியது தேனி சுப்பிரமணி அல்லர் என்பது உறுதியாகிவிட்டது அல்லவா? நீங்கள்தானே கைப்பாவை நிலையை அறிய வேண்டுகோள் வைத்தீர்கள் (த-வி-யில் முதல் வேண்டுகோள் என நினைக்கின்றேன்)?
மளுப்பலான பதில்களைத் தானே இதுவரைக்கும் தந்துள்ளார்? உங்களைப் போன்றவர்கள் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை. என் மின்னஞ்சலுக்கும் அதைத்தானே அனுப்பினார்? ஒரு நிர்வாகி இப்படி செயற்படலாமா?

11. விக்கிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்.

ஆதாரம்: //தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி வரும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் யாரென்பதை நான் அவருடைய உரையாடல் (எழுத்து நடையினைக் கொண்டு) மூலம் அறிந்து கொண்டேன். // விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#நெற்றிக் கண் திறப்பினும்...
//அடையாளம் காட்டாமல் வந்தாலும் யாரென்பதை நான் கண்டு கொண்டேன். (ஒருவரின் எழுத்து நடையைக் கொண்டே யார் என்பதைக் கண்டறிந்து விட முடியும்)// பயனர் பேச்சு:Theni.M.Subramani# ???
  • என்ன குழப்பம் ஏற்படுத்துகின்றார்? பெயரிலியாக ஐ.பி முகவரியில் இருந்து வந்து செய்பவரகளை விட அதிகமாகச் செய்கின்றாரா? என்ன குழப்பம் ஏற்படுத்துகின்றார்?
பெயரிலியாக பற்றியதல்ல என் கேள்வி. Theni.M.Subramani பற்றியது! அவர் கண்டுபிடித்தார் எனக் குறிப்பிடப்படுபவர்கள் யார்? இதற்கு அவர்தான பதில் சொல்ல வேண்டும் நீங்கள் அல்ல!

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக Theni.M.Subramaniயின் நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • மேற்குறிப்பிட்ட காரணங்கள் என்கின்றீர்கள். அவற்றுள் சில செல்லாதவை (கைப்பாவை), சில மிகவும் எளிமையான பிழைகள் அல்லது குறைபாடுகள். சில பிழைகளே அல்ல. எண் 8 இல் நீங்கள் கூறும் பண்பற்ற பேச்சு கட்டாயம் கண்டிக்கத்தக்கது. ஆனால் இதற்காக நிருவாகப் பொறுப்பைப் பறிக்க வேண்டுமா?

இவற்றை நான் தேனி சுப்பிரமணிக்கு ஆதரவாக எழுப்பிய கேள்விகளாகவோ கருத்துகளாகவோ எண்ண வேண்டாம். யாரொருவர் மேலும் எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தால் ஒருவரின் நிருவாகப் பொறுப்பைத் திரும்பப்பெறவேண்டும் என்னும் கேள்வி பற்றி சிந்திக்கவே இவற்றை எழுப்புகின்றேன். மேலும். பிழைகள் நேர்ந்தால் திருத்திக்கொண்டு இணக்கமான முறையில் ஒருங்கிணைந்து நல்லெண்ணத்துடன் நடக்க முடியாதா? அபபடி நடக்க வேண்டாமா என்றும் கேட்கவே இவற்றை எழுப்புகின்றேன். அச்சமில்லாமல், எல்லோரும் நட்புறவோடு, நல்லாக்கம் இங்கு செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. பகைமை உணர்வோடும், அச்சத்தோடும், சண்டை சச்சரவுகளில் கொண்டு விடுமோ என்னும் தயக்கத்தோடும் பயனர்கள் பணியாற்றக் கூடாது அல்லவா? கட்டாயம் எல்லோரும் பொறுப்புணர்ந்து (பெயரிலியாக ஐ.பி வழியாக பங்களித்தாலும், பயனராகவோ பொறுப்பாளர்களாகவோ இருந்தாலும்) செயலாற்ற வேண்டுவது நம் எல்லோருக்கும் நல்லது.

  • நான் மேலே கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் யாரேனும் கருத்துத் தெரிவிக்க விரும்பினால் தெரிவியுங்கள். ஆனால் விரைவில் நாம் நம் பணியைச் செய்யப் போக வேண்டும். இந்தப் பிணக்கை விரைவில் நன்முறையில் தீர்க்க வேண்டும். --செல்வா (பேச்சு) 06:28, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
செல்வாவின் கருத்துகளுக்கு எனது ஆதரவு.--Kanags \உரையாடுக 09:04, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 02:41, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நேரம் கிடைக்கும்போது, எனது கருத்துக்களை விளக்கமாக இடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:21, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இன்னும் தேனி சுப்பிரமணி பற்றிக் குற்றச்சாட்டுக்கள் வைக்கவுள்ளேன். --Rajan s (பேச்சு) 04:11, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

குழுவினர் கருத்துகள்

சோடாபாட்டில்

இக்குழுவின் உறுப்பினனாக என் நிலைப்பாடு:

நிருவாக அணுக்கத்திற்கு தொடர்பில்லாத குற்றச்சாட்டுகள்:

3) முதற்பக்க கட்டுரை இற்றையில் பிழை செய்தார்
4) ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டே குற்றம் சொன்னார்.
6) கைப்பாவைக் கணக்கை இயக்கினார் (இது பொய் என நிரூபிக்கப்பட்டு, செய்தவர் தடை செய்யப்படுவிட்டார்)
7) தனது நூல் முன்னிறுத்தப்படவில்லை என்ற கருத்து.
9) திரைக்காட்சியில் போலியான மின்னஞ்சல் ஐடி உள்ளது.
தேனியில் சாதிபாகுபாடு பார்த்தார். விக்கியில் அவர் சாதிக்கு மெருகூட்டினார்.

இம்மாதம் நடந்த வாதங்களை வெல்ல செய்தவை. பிணக்கு தடித்தவுடன் நடைபெற்றவை

5) பண்பற்று, மிரட்டும் தொனியில், தனி மனிதத் தாக்கதலிலும் ஈடுபட்டுள்ளார். (தனி மனிதத் தாக்குதல் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இவ்விசயம் வாதம் தடித்தவுடன் இரு தரப்பினரும் செய்ததே. கடந்த காலத்தில் நானும் இதனை செய்திருக்கிறேன்.)
10) பேச்சை திசை திருப்பினார். (தடிக்கும் வாத பிரதிவாதங்களில் இது நாம் அனைவரும் செய்யக் கூடியதே)
11) விக்கிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் (இதுவும் முந்தியதைப் போன்றதே)
ரவி முன்வைத்த விக்கி சமூக அவதூறு குற்றச்சாட்டுகள் (இவை ஒட்டுமொத்த சமூகத்தை அவதூறு செய்வதாகவோ, பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றெல்லாம் நான் கருதவில்லை. பதிலுக்கு பதில் வாதம் தடித்து போனதாகவே தெரிகிறது)

நிருவாகி நடத்தை தேவைகளுக்கு புறம்பானவை எனக் கொள்ளக்கூடியவை

1) அனுசரித்துப் போகும் போக்கற்றவர் - புதிய கட்டுரைகளை நீக்குதல், வார்ப்புரு இடுதல் போன்றவை அனைத்து நிருவாகிகளும் செய்பவை. வேகமாக செய்ய வேண்டாமென்று வேண்டுகோள் வைத்தால் நிருவாகிகள் சற்றே காலம் தாழ்த்தி செய்யப் போகிறார்கள். பிற நிருவாகிகளுக்கும் (என்னையும் உட்பட) தேனி சுப்பிரமணிக்கும் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.
8)”உன்னுடைய...., முட்டாள் வழங்கும்...” - வாதம் தடித்தபின் பயன்படுத்தப்பட்டாலும் நிருவாகியொருவர் எக்காரணமும் பயன் படுத்தக்கூடாதவை
2) தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியான அவதூறு - சற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் புறவெளியில் வைத்து விட்டு, ஆதாரம் கேடகப்பட்டவுடன் அதைப் பற்றி பேச மறுப்பது என்னைப் பொறுத்த வரை கடுமையான வரம்பு மீறல். தவறை ஒத்துக் கொண்டு ஒரு வரியில் தென்காசி சுப்பிரமணியத்திடமும், பார்வதியிடமும் மன்னிப்புக் கேட்டு விடலாம்.
ரவி முன்வைத்த சமூகத்தைக் கலந்தாலோசிக்காமல் அரசுக்குக் கடிதம் எழுதினார் குற்றச்சாட்டு (இது முக்கியமானதென்றாலும், இது குறித்த தெளிவான கொள்கை இல்லாததால், இதனை முன்னெடுக்க இயலாது).
ரவி முன்வைத்த நலமுரண் குற்றச்சாட்டுகள் (கௌதம் பதிப்பகம், அச்சிடல்) - இவை கவனத்தில் கொள்ள வேண்டியவை. முக்கியமானவை ஆனால் நிருவாகச் செயல்பாடுகளுக்கும், பத்தாண்டுக் கொண்டாட்டங்களின் விதிகளிலும் தெளிவாக இவைபற்றிய வழிகாட்டுதல்கள் இல்லாத போது இவற்றை அடிப்படையாகக் கொள்ள இயலாது.

கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தேனி மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப்பெறுவதை ஆராய போதுமானவையாக இல்லை என்பதே என் கருத்து.

இதன் காரணங்களாக நான் காண்பவை

1) நிருவாகிகள் என்ன செய்யலாம் / செய்யக்கூடாது என்ற தெளிவாக இல்லாத வெளிகளில் தேனி மு சுப்பிரமணியின் செயல்பாடுகள் (நலமுரண், அரசுடன் தொடர்பு). இவற்றில் தெளிவான விதிகளை / நடத்தை முறைகளை உருவாக்க வேண்டும். (தனிப்பட்ட முறையில் நான் என்னுடன் தொடர்புடைய எந்த நிறுவனத்தின் / நபரின் கட்டுரையையும் தொடுவதில்லை. விக்கியில் சொல்லாமல் offwiki வேலைகள் எதனையும் செய்வதில்லை)

2) இறுதி எச்சரிக்கை / கருத்து வேண்டல் செய்யப்பட வேண்டியவை - கடுமையான வார்த்தைப் பயன்பாடுகள், விக்கிக்கு வெளியில் அவதூறு போன்றவற்றில் ஆங்கில விக்கியில் repeated infractions, persistent pattern of behaviour போன்றவற்றை அவதானிப்பார்கள். ஒருவர் தொடர்ந்து இதே போல் நடந்து வந்தால் (எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி) அதன் பின்னரே நிருவாக அணுக்கம் மீள்பெறும் உரையாடல் தொடங்கப்படும். இங்கு சொல்லப்பட்டவை பல ஒரு முறை நிகழ்ந்தவை. பலகாலம் நிருவாக அணுக்கம் உடையவர்கள் அனைவரது செயல்பாடுகளையும் ஆராய்ந்தால், பல நிருவாகிகளுக்கும் இதனைத் தயார் செய்யலாம். ஆனால் தெளிவான எச்சரிக்கைக்குப் பின் /கோரிக்கைக்குப் பின்னும் இது போன்று செய்தாரா என்பதே நிருவாக அணுக்கத்தை மீள்பெறுவதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும்

ராஜ்குமார் கீழே குறிப்பிட்டுள்ளது போன்று இப்போதைக்கு நாம் இவ்விரண்டையும் செய்ய வேண்டும். சில விசயங்களில் தேனி மு. சுப்பிரமணிக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட வேண்டும். (இனி இவ்வாறு செய்தால் நிருவாக அணுக்கம் மீள்பெறல் நடவடிக்கை தொடங்கப்படுமென்று). மேலும் நலமுரண், வெளி நிறுவனங்கள், அரசுடன் தொடர்பு கொள்ளுதல் பற்றி சமூக ஒப்புதல் பெறுதல் ஆகியவை பற்றி கொள்கைகளை உருவாக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 15:01, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பழ.இராஜ்குமார்

  1. இங்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிருவாக அணுக்கத்தைத் திரும்ப பெறுதலுக்கானது. நிருவாக அணுக்கம் திரும்ப பெற வேண்டுமென்றால் என்ன காரணங்களுக்கு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
  2. நிருவாக அணுக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்பது வேண்டுகோள். அப்பொழுது நிருவாக அணுக்கத்தை திரும்ப பெற்றுவிட்டால், வேண்டுகோள் விடுத்தோர் ஆதாரமாக கொடுக்கப்பட்ட பிணக்குகள் தீருமா ? தீராதா? தீரும் என்றால் அந்த தீர்வை நிருவாக அணுக்கத்தைப் திரும்ப பெறாமலே எட்ட அந்நிருவாகி உறுதி அளிக்கிறாரா? இல்லையா? அளிக்கிறார் என்றால் நிருவாக அணுக்கத்தை திரும்ப பெற வேண்டியதில்லை. அந்நிருவாகி உறுதி அளிக்காமல் இருந்தால் அப்பொழுது நிருவாக அணுக்கத்தை திரும்ப பெறலாம். நிருவாக அணுக்கத்திற்கும், பிணக்குக்கும் தொடர்பு இல்லையெனில் நிருவாக அணுக்கத்தைத் திரும்ப பெறுவதை விடுத்து, அவரை ஒரு பயனரிடம் எவ்வாறு பிணக்கைத் தீர்க்க நடைமுறை எடுக்க வேண்டுமோ, அவ்வாறு எடுக்க வேண்டும்.
  3. இங்கு விடுக்கப்பட்ட பிணக்குகளில், அவர் கட்டுரைகளை நீக்கினார், முதற்பக்கக் கட்டுரையாக தரமற்ற கட்டுரைகளை காட்சிப்படுத்தினார். என்ற இரண்டு மட்டுமே நிருவாக அணுக்கத்துடன் தொடர்புடையது. இவருக்கு நிருவாக அணுக்க இல்லையென்றாலும் கூட பிற பிணக்குகள் நேர வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். நிருவாக அணுக்கம் இல்லையெனில், முதற்பக்கக் கட்டுரையையும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறாது, கட்டுரைப் பக்கத்தை நீக்க முடியாது போயிருக்கும். இப்பொழுது இப்பிணக்குகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தால், அப்பிணக்குகளை அந்நிருவாகி எவ்வாறு இனிமேல் நேராமல் தீர்க்கப் போகிறார் என்று அவரிடம் கேள்வி எழுப்பி, அதற்கான அவரின் பதிலை எதிர் நோக்கி முடிவெடுக்கலாம். அந்நிருவாகி பல முறை பிணக்குகளை பல முறை தொடரமாட்டேன் என உறுதியளித்தும் மீண்டும் மீண்டும் அப்பிணக்குகளை திருத்திக் கொள்ளாமல் இருக்கிறார் என்றால் அப்பொழுது அவரது அணுக்கத்தைத் திரும்ப பெற வேண்டும்.
  4. மேலும் ஒரு கட்டுரைப் பக்கத்தை எப்பொழுது நீக்க வேண்டும் என்ற வழிமுறை மற்றும் முதற்பக்க கட்டுரை காட்சிப்படுத்துவதற்கான வழிமுறை இரண்டும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வழிமுறைகள் இருந்தால், இனி வரும் காலங்களில் அவர் இதனை பின்பற்றுவேன் என உறுதியளிக்க வேண்டும். உறுதியளிக்கவில்லை என்றால் நிருவாக அணுக்கத்தை திரும்ப பெறலாம்.
  5. வழிமுறைகள் இல்லையெனில் அந்நிருவாகியின் அணுக்கத்தை திரும்ப பெற வேண்டியதில்லை. முதலில் வழிமுறைகளை உருவாக்கி, பின் அவ்வழிமுறைகளை அணைத்து நிருவாகிகளும் பின்பற்ற வலியுறுத்த வேண்டும்.
  6. நிருவாக அணுக்கத்திற்கு தொடர்புள்ள பிணக்கு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டபின் அப்பிணக்கு மிக தீவிரமானதாக இருந்து அப்பிணக்கை தீர்க்க நிருவாக அணுக்கம் தடையாக இருந்தால் அப்பொழுது அவரின் அணுக்கத்தை தற்காலிமாக தடை செய்து அப்பிணக்கு தீர்ந்த பின் முடிவெடுக்கப்பட வேண்டும்.

--பழ.இராஜ்குமார் (பேச்சு) 20:11, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இங்கு பிணக்கினை மீண்டும் நேராமல் உறுதியளிக்க அந்நிருவாகியிடம் கேட்கப்பதனால், ஒரு பக்க சார்பாகவோ, நடுநிலை நோக்கற்ற செயலோ, பிணக்கு குற்றம் சாட்டப்பட்டவரினை காப்பாற்றும் முயற்சியோ இல்லை. ஒருவர் சிறிய சிறிய தவறுகளை செய்யும் பொழுது, அவரின் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் அதனைப் பயன்படுத்தி மேலும் மேலும் விக்கிக்கோ, விக்கிப்பயனருக்கோ இடையூறாக இருந்தால், அவரின் அணுக்கத்தை திரும்ப பெற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.--பழ.இராஜ்குமார் (பேச்சு) 20:24, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார்

நிருவாக அணுக்கம் நீக்குதல் தொடர்பாக இதுவரை சரியான வரையறைகள் த.வி. இல் இல்லை. இதை விரைந்து ஆக்குவது பயன்தரும். ஆங்கில விக்கியில் உள்ளதை பின்பற்றி தமிழ் விக்கிச் சூழல், பண்பாடு முதலானவற்றையும் கருதி இதனை ஆக்க வேண்டும். இதற்கு பின்வரும் பிழைவிடுபாடுகள் கருதப்பட வேண்டும்.

  1. பண்பற்று பேசுதல், மிரட்டுதல் அல்லது அச்சுறுத்தல், தனி மனிதத் தாக்கதலிலும் ஈடுபடுதல் முதலியன. (இதில் மிரட்டுதல் அல்லது அச்சுறுத்தல் சிறிதளவும் த.வி சூழலில் இருக்கக் கூடாது., பண்பற்று பேசுதல், தனி மனிதத் தாக்கதல் முதலானவற்றில் மன்னிப்புக் கோருதல், மீண்டும் செய்யதிருக்க சந்தர்ப்பம் அல்லது திருந்தும் சந்தர்ப்பம் என்பன வழங்கப்படலாம்.)
  2. சாதி, நிருவனம், கட்சி முதலியவை சார்ந்து த.வி யைப் பயன்படுத்துதல். தன்னல நோக்கில் விக்கிச் சமூகத்தின் ஒப்புதல் இல்லாமல் விக்கியைப் பயன்படுத்துதல். விக்கியுடன் ஒருவர் ஈடுபடுதலில் இது திட்டமிட்டொ அல்லது திட்டமிடாதவகையிலோ இது நிகழலாம் என்பதால் மன்னிப்புக் கோருதல், மீண்டும் செய்யாதிருக்க சந்தர்ப்பம் அல்லது திருந்தும் சந்தர்ப்பம் என்பன வழங்கப்படலாம். ஆயினும் இத்தகைய பயன்பாடுகளை மேற்கொள்ளாமையை உறுதியளிக்கும் ஒப்புதல் ஒருவர் நிருவாகியாக உள்ளீர்க்கப்படும் போது ஏதோ வகையில் பெறப்படுதல் வேண்டும்)
  3. கைப்பாவைக் கணக்கு, ஆள்மாறாட்டம் மற்றும் நுட்பத்திறனை விசமமாகப் பயன்படுத்துதல். கைப்பாவைக் கணக்கு, ஆள்மாறாட்டம் என்பவற்றை நிருவாகி செய்யக்கூடாது. நுட்பத்திறனை விசமமாகப் பயன்படுத்துவது மன்னிப்புக் கோருதல், மீண்டும் செய்யதிருக்க சந்தர்ப்பம் அல்லது திருந்தும் சந்தர்ப்பம் என்பன வழங்கப்படலாம்.
  4. விக்கிக்கு வெளியில் விக்கியையோ அல்லது அதன் சமூக உறுப்பினர்களையோ அவதூறு செய்தல். இது நிருவாகி செய்யக் கூடாத குற்றம். ஆயினும் மீண்டும் செய்யதிருக்க சந்தர்ப்பம் அல்லது திருந்தும் சந்தர்ப்பம் என்பன வழங்கப்படலாம்.
  5. விக்கிக்குள் குழப்பத்தை எற்படுத்து வகையிலான விசமச் செயற்பாடுகள் அல்லது ஒத்துப்போகாமை. மீண்டும் செய்யதிருக்க சந்தர்ப்பம் அல்லது திருந்தும் சந்தர்ப்பம் என்பன வழங்கப்படலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:47, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
  • இத்தகைய ஒப்பந்தமொன்றில் நிருவாகிகள் ஒப்பமிட்டு அணுக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • இதில் குற்றமொன்று நடந்தால் குற்றத்தை ஏற்றுக் கொள்ளுதல், மன்னிப்புக் கோருதல், தன் தரப்பை உறுதிசெய்தல் பிழைக்கான முறையான வருத்தம் தெரிவித்தல் என்பவை அதிகளவு ஊக்கப் படுத்தப் படவேண்டும்.
  • நிருவாகி கட்டாயம் செய்யகூடாத தவறு ஆயின் நீக்குதலுக்குரிய நடவடிக்கை.
  • தன்மீது அதிக அவதூறு/தாக்குதல் நடத்தப் பட்டுவிட்டநிலையிலும் வெறும் வருத்தம் தெரிவித்தல் பாதிக்கப்பட்டவரை சாந்தப்படுத்தாது எனக் கருதினால் விக்கிச் சமுகத்தின் நடுநிலைவாதத்தில் நிற்பவர்களும் பாதிக்கப்பட்டவரின் துன்பத்தினைப் பகர்ந்துகொள்ளுவதும் அவரை வலுவூட்டுதலும் கட்டாயமாகும்.
  • இதுவரையான அல்லது அண்மைய முரண்பாடுகளில் இத்தகைய குற்றம் இழைத்தவர் குறித்து ஆராய்வதும் அவர் வரண்முறைகளுக்கு முந்திய நிலையில் இவற்றை செய்தார் என்பதால் வருத்தம் மற்றும் மேலும் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியுடன் நிருவாக அணுக்கத்தை பறிக்காமல் தீர்வுக்குள்ளாகலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:42, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அஸ்வின்

தமிழ் விக்கிப்பீடியா இம்மாதிரியான சிக்கல்களிலிருந்து அதிவேகமாக மீண்டு வர வேண்டும். இதற்கான வரையறைகள் வகுப்பது மிக முக்கியம்.

  • இங்கு வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒருவரினால் பல மாதங்கள் கழித்து வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளவை தேனி. மு. சுப்பிரமணி அவர்கள் நிருவாகியாக செய்திருக்கக் கூடாதவை என்று நான் நினைக்கின்றேன்.
  • இவர் எதிர்காலத்தில் இவ்வாறு செய்யாதிருக்க உறுதியளிக்கின், அவர் நிருவாகியாக தொடர்ந்து செயற்படலாம் என்று எண்ணுகின்றேன்.
  • இந்த குற்றச்சாட்டுகளுக்காக அவரின் நிருவாகி தரத்தினைத் திரும்பப் பெறுதல் பற்றி ஆராய்வது தேவையற்றது என்பதே என் கருத்து

--அஸ்வின் (பேச்சு) 16:09, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


தினேஷ்குமார் பொன்னுசாமி

நிருவாக அணுக்கம் பெற்ற ஒருவர், விக்கிப்பீடியா திட்டங்களுக்கு தீங்கு விழைவிக்கும் விதமாக நடக்கும் போது விக்கிமீடியா திட்டங்களில் நிருவாக அணுக்கம் நீக்கம் செய்ய வேண்டியது கட்டாயமகிறது.

நிருவாக அணுக்கத்தை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டவைகளாக, கருதப்படுபவைகளில் சில:

  1. பண்பற்று பேசுதல், தனி மனிதத் தாக்குதல் (”உன்னுடைய...., முட்டாள் வழங்கும்...” ) தேவையற்ற விசம பேச்சுகள் மற்றும் தேவையற்ற குழப்பத்தினை உண்டாக்குமாறு பேசுதல் (எழுதியை வைத்தே இது
  2. திட்டத்தினை பற்றி அவதூறான கருத்துகளை பிறரிடம் தெரிவித்தல் (தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வெளியான அவதூறு)
  3. கைப்பாவைக் கணக்கு, ஆள்மாறாட்டம் மற்றும் நுட்பத்திறனை விசமமாகப் பயன்படுத்துதல்
  4. தவறு என்று தெரிந்தே அதை தொடர்வது, குற்றத்தினை மறைப்பது, குற்றத்தினை மறைக்க முயல்வது
  5. தனி பெயருக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நிருவாக அணுக்கத்தினை முறையற்று பயன்படுத்துதல்
  6. தெரியாமல் தவறு செய்திருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரும் பொழுது தவறுடைய அளவை கருத்தில் கொண்டு முடிவு எட்டப்பட வேண்டும்.
  7. பயனர் தேனி. மு. சுப்பிரமணி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் வருத்தம் தெரிவித்து, மீண்டும் இதுபோன்ற சர்ச்சைக்குறிய காரியங்களில் ஈடுபடாமல் இருக்கும்பட்சத்தில், நிருவாக அணுக்கத்தில் தொடர்ந்து நீடித்து, தமிழ் விக்கிப்பீடியா சிறக்க அவருடைய சீறிய பங்களிப்பை தொடர்ந்து நல்க வேண்டும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:50, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தொகுப்பு

காலம் தாழ்த்தி இதனை இடுவதற்கு என்னை மன்னியுங்கள். மிகுந்த நிதானத்துடனும் நல்ல அமைதியான மனநிலையில் இருக்கும் போது மட்டும் செய்ய வேண்டும் என்பதால் வெகு மெதுவாகவே செய்தேன். அன்ரன் வைத்திருக்கும் கோரிக்கையை இத்தொகுப்பு கருத்தில் கொள்ளவில்லை. மேலே உள்ள குழுவினர் கருத்துகளை மட்டும் சுருக்கி வெளியிடுகிறேன். கருத்து - (ஆதரவு எண்ணிக்கை / எதிர்ப்பு எண்ணிக்கை / நடுநிலை அல்லது கருத்து இல்லை) என்ற முறையைப் பின்பற்றியுள்ளேன். (ஆங்கில விக்கி தீர்ப்பாய முறையினை ஒட்டி)

  1. தேனி மு. சுப்பிரமணியின் நிருவாக அணுக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமளவு ஒழுக்கப் பிறழ்வு இல்லை / அல்லது அதற்கான விதிமுறைகள் இல்லை (4/0/1)
  2. நிருவாகிகளுக்கான நன்னடத்தை விதிகள், புற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறல் கொள்கை ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் (5/0/0)
  3. தேனி. மு. சுப்பிரமணியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் / கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்ய மாட்டேன் என்று அவர் ஐயத்துக்கிடமின்றி உறுதியளிக்க வேண்டும். (5/0/0)
  4. இப்படி உறுதியளிக்காது தொடர்ந்து இது போன்று ஒரு செயலில் ஈடுபட்டாலும், அவரது நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறும் பணியினைத் தொடங்கலாம். (4/0/1)

--சோடாபாட்டில்உரையாடுக 12:49, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கருத்துக்களைக் கூறிய அனைத்து பயனர்களுக்கு நன்றிகள். தொகுத்துந் தந்தமைக்கு நன்றி. மேலும் ஒரு விளக்கம் தேவை:

--Natkeeran (பேச்சு) 14:22, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

  • பதிலளிக்க வேண்டியவை 1) தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில் முதற்பக்கம் பற்றி கட்டுரை எழுதியது
  • உறுதியளிக்க வேண்டியவை 1) தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமை 2) விக்கிக்கு வெளியில் விக்கி பற்றிய கட்டுரைகளில் உண்மைக்குப் புறம்பான, “சில பயனர்கள் கருதுகிறார்கள்” போன்று சொந்தக் கருத்தினை சமூகத்தின் போர்வையில் இருந்து கூறுவது 3) நலமுரணாகக் கூடிய செயல்பாடுகளில் சமூக ஒப்புதல் பெற்றே முனைவது--சோடாபாட்டில்உரையாடுக 16:03, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இதில் 3 வது விடயம் தொடர்பாக தேனியிடம் மறுமொழி எதிர்பார்க்கப்படுகிறது. 2 வது விடயம் தொடர்பாக விக்கிச் சமூகம் தெளிவான கொள்கைகள் வழிகாட்டல்கள் உருவாக்க வேண்டும். நன்றி. இது தொடர்பான அறிவித்தலை ஆலமரத்தடியில்/தேனியின் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன்.--Natkeeran (பேச்சு) 14:33, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

போதிய காலம் கொடுத்தும் குழுவினரின் பரிந்துரைகளை நிறைவேற்ற தேனி சுப்பிரமணி முனையவில்லை என்பதால், குழுவின் இறுதிப்பரிந்துரையைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்த விரும்புகிறேன். விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை அடிப்படையில் தொடர விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:10, 8 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஐவர் குழு பரிந்துரையின் செல்லுபடி

நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பில் சஞ்சீவி சிவகுமார் பின்வருமாறு கருத்திட்டிருக்கிறார்;

//இது குறித்த ஐந்து பேர் கொண்ட பரிந்துரைக் குழுவில் நானும் இருந்தேன். விக்கிச் சமூகம் இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்கின்றதா? இல்லையா? என்பதை முதலில் முறைப்படுத்த வேண்டும். பரிந்துரைகளை ஏற்றால் தேனி சுப்பிரமணி அதற்கு இசையப் பொறுப்புக் கூற வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் பரிந்துரைகளைப் புறந்தள்ளிவிட்டு வாக்கெடுப்பு என்றபேரில் தொடர்ந்து தொடகத்திலிருந்தே விவாதத்தை ஆரம்பிப்பதென்றால் குறைந்தபட்சம் குழுவின் பரிந்துரை ஏற்கப்படவில்லை என்பதையாவது விக்கிச் சமூகம் வெளிப்படுத்த வேண்டும். //

இது குறித்த என்னுடைய கருத்து:

தமிழ் விக்கிப்பீடியா இதற்கு முன் நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கைகளைச் சந்தித்தது இல்லை, இது தொடர்பாக கொள்கை ஏதும் இல்லை என்னும் நிலையில் குழப்பத்தைத் தீர்க்கும் வண்ணம் நற்கீரன் ஐவர் குழு என்ற முற்றிலும் புதிய வழிமுறையை முன்வைத்தார். சுந்தர் பரிந்துரைத்து அனைவரும் ஏற்றுக் கொண்ட பிணக்குத் தீர்வு முறையில் இத்தகைய ad-hoc குழு ஏதும் இல்லையென்றாலும் சிக்கலைத் தீர்ப்பதற்கு வளர்முகமான அணுகுமுறை தேவை என்ற முறையில் அனைவரும் இந்த வழிமுறையை ஏற்றுக் கொண்டனர்.

இக்குழுவின் நோக்கமாக நற்கீரன் முன்வைத்தது என்னவென்றால், இருக்கிற குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த அவை நிருவாக அணுக்க நீக்கல் தொடர்பான செயற்பாடுகளைத் தொடரலாமா என்று பரிந்துரைப்பது தான். இதனைத் தொடர்ந்து தேனி சுப்பிரமணியிடம் சில பரிந்துரைகளைக் குழு முன்வைத்தது. இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நிருவாக அணுக்கம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறியது.

இந்தக் கால கட்டம் வரையிலும் யாரும் ஐவர் குழுவின் பரிந்துரைகள் தவறு என்றோ அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றோ தெரிவிக்கவில்லை என்பதன் அடிப்படையில் ஐவர் குழு பரிந்துரையைத் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக முன்வைக்கப்பட்ட அலுவல் முறையான பரிந்துரை என்றே கருத முடியும்.

இப்பரிந்துரைகளைச் செயற்படுத்த தேனி சுப்பிரமணிக்குப் போதிய காலம் தரப்பட்டது. ஆனால், அவர் அதனைச் செயற்படுத்தவில்லை. இந்நிலையில் நிருவாக அணுக்க நீக்கல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் வைத்தேன். அப்போது ஐவர் குழு அமைத்த நற்கீரன் உட்பட எவரும் அச்செயற்பாடுகளை முன்னெடுக்க வரவில்லை.

இதற்கு இடையில் அன்டன், இரண்டாவதாக இன்னொரு நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கையை முன்வைக்கிறார்.

மீண்டும் மீண்டும் எழும் இது போன்ற கோரிக்கைகளை எதிர்கொள்ள முறையான கொள்கை தேவை என்பதால், முறையான கொள்கை முன்மொழியப்பட்டு, அனைவரின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு, முற்றிலும் திறந்த முறையில் ஒரு கொள்கை உருவாக்கி, அதன் படிமுறைகளைப் பின்பற்றி இப்போது வாக்கெடுப்பு வரை வந்திருக்கிறோம்.

விக்கிப்பீடியாவில் பிணக்குத் தீர்ப்பாயத்தைத் தவிர வேறு எந்தக் குழுவுக்கும் இறுதியான நேரடித் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கிடையாது. ஐவர் குழு இத்தகைய குழு இல்லை என்பதால் நேரடியாக நிருவாக அணுக்கத்தை நீக்குவது சாத்தியம் இல்லை.

ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்வோர் ஐவர் குழுவின் பரிந்துரை தமிழ் விக்கிப்பீடியாவின் அலுவல் முறையான பரிந்துரை என்பதையும் தேனி சுப்பிரமணி இதனைப் புறக்கணித்தார் என்பதையும் கவனித்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், இதனைக் கருத்தில் கொள்ள சிலர் தவறிவிட்டார்கள்.

தமிழ் விக்கிப்பீடியர்களின் அனைத்துப் பிணக்குத் தீர்வு முறைகளையும் கடைபிடித்து, பொறுத்திருந்து, முற்றிலும் வெளிப்படையாக கொள்கை உருவாக்கி அதனைப் பின்பற்றும் போது கூட பழிவாங்கல், குழு சேர்த்தல் என்ற அடிப்படையிலேயே சிலர் இந்தச்சிக்கலை அணுகுவது வருத்தமளிக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 06:13, 5 மார்ச் 2014 (UTC)

கோரிக்கை 2

  1. இதன் முதன்மைப் பக்கத்தில் கோரிக்கை 2 என்று வைக்கப்பட்டிருக்கும் தாக்கலில் புதிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் ஏற்கனவே இருக்கும் குழுவினரே அதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது என் கருத்தும். பார்க்கப் போனால், தன் சொந்தத் தளத்திற்கு நிறையத் தொடுப்புகள் கொடுத்தார் என்பதைத் தவிர அங்கு சேர்த்துக் கொள்ளவும் ஒன்றுமில்லை (எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவை தான்; குழுவின் பார்வையில் உள்ளவை தான்).
  2. முதன்மைப் பக்கம் பூட்டப்பட்டுள்ள நிலையில் எனது கருத்தை இங்கு வைக்கிறேன். பூட்டப்பட்ட பக்கத்தில் நிர்வாக அணுக்கம் இருப்பவர்கள் மட்டும் உரையாடுவது முறையாகத் தெரியவில்லை. பூட்டும் முன்பு இருக்கும் ஒன்றைப் பற்றிய அத்தியாவசியமான இற்றைப்பாடுகள் என்றால் சரி. நிர்வாக அணுக்கம் இல்லாதோர் அதில் கலந்துகொள்ள இயலாத போது புதுக் கருத்துகளை வைப்பது சரியானதல்ல.
  3. வேறொரு இழையில் தமிழ்மன்றம் கூகுள் குழுமத்தில் செல்வாவின் ஆதங்கம் கொண்ட மடலில் இருந்து பொருத்தம் கருதி ஒன்றை மட்டும் வெட்டி ஒட்டுகிறேன். நம்முடைய முதன்மையான பணிகளுக்கு விரைவில் திரும்ப வேண்டும். "70-80 மில்லியன் மக்களாகிய நாம், நம் மொழியை இன்னும் 20 ஆண்டுகளில் ஏறத்தாழ அறவே இழக்கும் தறுவாயில் இருக்கின்றோம்! எதையும் உயர் அறிவோடு உயர் ஒழுக்கத்தோடு உயர் குறிக்கோளுக்காக கூடி உழைக்க மாட்டோம். தமிழர்களுக்குள்ளேயே, அதுவும் பற்றுடையவர்களுக்கு இடையேயே ஆயிரம் பகைமைகள் பொல்லாப்புகள் பாராட்டுவோம்! எப்படி நாம் உருப்படுவோம்?"

--இரா. செல்வராசு (பேச்சு) 11:17, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இராசன் கொண்டு வந்த கோரிக்கைகளுக்கும் இதற்கும் பாரிய வித்தியாசமுண்டு. இரண்டையும் வாசித்தால் அர்த்தம் புரியும். இராசன் தாக்கி விட்டு ஓடும் (hit and run) நபர். நான் அவ்வாறு இல்லை. பூட்டி இருப்பதற்கும் கருத்திடுவதற்கும் உள்ள முரண்பாடு பொருத்தமற்றது. பேச்சுப் பக்கம் திறந்தே உள்ளது. நம்முடைய முதன்மையான பணிகளுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ் மொழியில் ஆர்வம் இருப்பதால்தான் நான் இங்கு இருக்கிறேன். மெளனமாக இருந்த என்னை இந்தளவிற்கு கொண்டு வந்த விட்டதும் தமிழ் மொழியில் ஆர்வம்தான். குருதிக் கறைபடிந்த ஈழத்தில் இருக்கும் என் தமிழ் மொழி ஆர்வம் பேச்சில் மாத்திரம் படிந்தல்ல! --Anton·٠•●♥Talk♥●•٠· 12:48, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

  • அன்ரன், குற்றம் சாட்டிய இருவருக்கான வேறுபாடு தவிரச் சாட்டப்பட்ட குற்றங்களில் பெரிதாக வேறுபாடு தெரியவில்லை. நீங்கள் சொன்னீர்களே என்று மீண்டும் இரண்டு கோரிக்கைகளையும் சென்று படித்துவிட்டுத் தான் சொல்கிறேன். என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. உங்களுக்கு இது ஏற்பில்லை என்றாலும் சரி. இது குறித்து மேலும் நாம் உரையாட வேண்டியதில்லை.
  • பூட்டிய பக்கத்தில் புதிதாக எழுதும்போது சிலருக்கு (நிருவாக அணுக்கம் உடையோர்) அனுமதியும், பிறருக்கு இல்லை என்பதும் தேவையற்ற வேறுபாட்டை உண்டாக்குகிறது. இக்கருத்திலும் உங்களுக்கு ஏற்பில்லை என்றாலும் சரி. ஆனால் விக்கிச்சமூகத்திற்கான ஒரு கேள்வி இது. (தற்போது இவ்வேறுபாட்டினைச் செல்வசிவகுருநாதன் நீக்கி இருக்கிறார். அதற்கு என் நன்றி).
  • யாருடைய தமிழார்வத்தின் மீதான விமர்சனமும் அல்ல இது. செல்வா கூறியதும் அதனைத் தான். அதுவும் பற்றுடையவர்களுக்கு இடையேயே ஆயிரம் பகைமைகள் பொல்லாப்புகள்...
--இரா. செல்வராசு (பேச்சு) 13:25, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

செல்வராசு, நீங்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கிறீர்களா? நான் ஏற்கெனவே 3 இடங்களில் நான் வைத்த கோரிக்கையைக் பற்றி தற்போது பேசத் தேவையில்லை என்றுள்ளேன். என் கோரிக்கை பற்றிப் பேசும்போது நான் அங்கு வைத்தவற்றை விளக்க விருக்கிறேன். அப்போது இன்னும் அதிகமாக விளங்கிக் கொள்ளப்படும். இதனை அதில் குறிப்பிட்டுமிருக்கிறேன். இராசனின் கருத்து எனக்கே விளங்கிக் கொள்ள சிக்கலாக இருக்கிறது. மேலும், இச்சிக்கல் எழுந்ததிலிருந்த சறுக்கல்கள், மாற்றங்கள், மறுப்புக்கள் என பல உள்ளன. அவற்றின் நுணுக்கங்களை என்னால் விளக்க முடியும். நான் குறிப்பிட்ட கோரிக்கைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது அது சாத்தியமாகும். ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடுவதும், ஒதுங்கச் சொல்வதும் சிறந்த கருத்து மதித்தலாக இருக்க முடியாது. --Anton·٠•●♥Talk♥●•٠· 13:38, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இல்லை அன்ரன். உங்கள் பேச்சுரிமையில் நான் தலையிடவில்லை. இங்கு எனது மாற்றுக் கருத்தைப் பதிவு செய்தபிறகு, உங்களுக்கு இன்னும் உங்கள் நிலையில் உறுதி என்றால் அது பற்றித் தொடர்ந்து (இங்கு, என்னுடன்) உரையாட வேண்டியதில்லை என்று மட்டும் கூறினேன். மற்றபடி உங்கள் எண்ணப்படி செயல்பட எந்தத் தடையும் இல்லை. --இரா. செல்வராசு (பேச்சு) 14:32, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


இக் கோரிக்கை தொடர்பான செயலாக்கத்தை (process) வேறு பயனர்கள் முன் எடுக்க வேண்டுகிறேன். அவ்வாறு முன்னெடுக்கும் போது எம்மிடம் இது தொடர்பான தெளிவான கொள்கைகள்/வழிகாட்டல்கள்/விதிகள் இல்லை என்ற முந்திய குழுவின் முடிவுகளையும், பிற முடிவுகளையும், சுமூகமான இணக்கப்பட்டை எப்படி எட்டலாம் என்ற நோக்கை கருத்தில் வைத்து முன் எடுக்கலாம் என்பது என் தனிக் கருத்து. --Natkeeran (பேச்சு) 14:50, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நற்கீரன் வேண்டுகோளுக்கு இணங்க, வேறு யாரும் இப்பணியை மேற்கொள்ள முன்வராததால், நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை அடிப்படையில் தொடர விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:08, 8 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இரு கோரிக்கைகளையும் இணைத்து சிக்கல் அடிப்படையில் அணுகுதல்

ஐவர் குழுவின் பரிந்துரையை சமூக முறையீட்டுக் கூடத்தின் நடவடிக்கையாக கருத எண்ண இடம் உண்டு. நேரடியாக சமுதாய முறையீட்டுக் கூடத்தில் முன்வைத்து முறையீடுகளுக்கும் சமூகம் விரைந்து நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை பரிந்துரைக்கும் முதல் மூன்று படிநிலைகளுக்கு தேனி சுப்பிரமணி போதிய ஒத்துழைப்பு நல்காததால் நேரடியாக வாக்கெடுப்புக்குச் செல்லலாம். எனவே, இராசன், அன்டன் ஆகிய இருவர் முன்வைத்துள்ள நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வாக்கெடுப்பாக நடத்துவது விரைந்து முடிவெடுக்க உதவும் என்று கருதுகிறேன். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஒரு வாரம் பொறுத்திருந்து அடுத்த கட்ட பணி தொடரும்.--இரவி (பேச்சு) 08:17, 8 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Vaaketupin kaaranam enna?

Vakketupin kaaranam enna entre vilakapadavilaye?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:44, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Uncyclopedia கட்டுரை

//தமிழ் விக்கிப்பீடியா பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை அச்சு இதழ் ஒன்றில் பரப்புதல். அதற்கு மறுப்பு வெளியிடுமாறு கோரினாலும் ஏற்றுக் கொள்ளாமை. சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே இதழில் அண்மையில் Uncyclopedia என்னும் விக்கிப்பீடியா நையாண்டித் தளத்தைப் பற்றி முழுமையான கட்டுரையை எழுதியுள்ளார் என்பது வெந்த புண்ணில் வேல்.//

Uncyclopedia பற்றிய கட்டுரை எப்போது வெளியானது எனத் தெரிந்து கொள்ளலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:58, 17 பெப்ரவரி 2014 (UTC)

தமிழ் கம்பியூட்டர், பிப்ரவரி 01-15, 2014 - https://www.facebook.com/subramani.muthusamy.5/posts/617020965019708?stream_ref=10

--இரவி (பேச்சு) 18:15, 17 பெப்ரவரி 2014 (UTC)

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளிக்குப் பின் நான் இங்கு வந்து பார்த்தால், இன்னமும் இந்தப் பிணக்கு ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது எனக்கு வியப்பையும் வருத்தத்தையும் தருகின்றது. நான் இதில் பங்குகொள்ள இயலாமல் உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேற்கொண்டு இது பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.--செல்வா (பேச்சு) 03:12, 26 பெப்ரவரி 2014 (UTC)

செல்வா, இதனை ஒரு சிலருக்கு இடையிலான பிணக்காக நோக்குவது தவறு. தேனி சுப்பிரமணி மீது பல கொள்கை மீறல் முறையீடுகள் உள்ளன. இது வரை அவர் இவற்றுக்கு விளக்கம் அளிக்கவோ எந்த விதமான ஒத்துழைப்பைநல்கவுமோ இல்லை. இராசன், ஆன்டன் ஆகியோரின் நிருவாக அணுக்க நீக்கல் முறையீடுகளை அடுத்து தமிழ் விக்கிப்பீடியர்களின் சார்பாக ஐவர் குழு அமைக்கப்பட்டு சில பரிந்துரைகளைத் தந்தது. இப்பரிந்துரையை ஏற்றுச் செயற்பட்டிருந்தால் மூன்று மாதங்கள் முன்பே விசயம் முடிந்திருக்கும். அதன் பிறகு, நிருவாக அணுக்கம் நீக்கல் தொடர்பாக முறையாக கொள்கை வகுக்கப்பட்டு தற்போது உள்ள வாக்கெடுப்பு நடந்து வருகிறது. கொள்கை மீறல் முறையீடுகளைக் கண்டு கொள்ளாமல் விடுவது தமிழ் விக்கிப்பீடியாவின் நலனுக்கு உகந்தது அன்று. நன்றி. --இரவி (பேச்சு) 07:12, 26 பெப்ரவரி 2014 (UTC)

நான் நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கு வந்து பார்த்தால் தேனியார் பலர் கேட்டுக்கொண்ட பிறகும் தன் தவறான கருத்துக்களை குறைந்தபட்சம் விக்கிப்பீடியாவில் கூட திரும்பி வாங்கிக்கொள்ளாதது எனக்கு மிகுந்த வேதனையையும் ஏகப்பட்ட வருத்தத்தையும் தருகின்றது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:03, 26 பெப்ரவரி 2014 (UTC)

வாக்கிடும் காலத்தில் உரையாடலைத் தவிர்க்க வேண்டுகோள்

நடைபெற்று வரும் வாக்கெடுப்பு தொடர்பாக உரையாடுவதற்கான காலம் முடிந்து விட்டது. எனவே, புதிய உரையாடல்களைத் தொடங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உரையாடுவதற்குத் தந்திருந்த காலத்தில் எழுந்த உரையாடல்களை மட்டுமே தொகுத்து எழுத முடியும். எனவே, புதிதாக எதையும் தொகுத்து எழுத வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கவனிக்க: பயனர்:மாயவரத்தான் --இரவி (பேச்சு) 13:26, 3 மார்ச் 2014 (UTC)

இராசனின் முறையீடு செல்லுபடி குறித்து

//திசம்பர் 1, 2013க்கு முன்பு பயனர் கணக்கு பதிந்து 150+ தொகுப்புகள் கொண்டிருப்போரின் வாக்குகள் மட்டும் செல்லும்.// அதே வேளையில், எவ்வித பங்களிப்பும் இன்றி முறைப்பாடு பதியவும் முடியாது. ஆதலால், இராசனின் முறைப்பாடுகளை முற்றாக இப்பக்கத்தில் இருந்தே நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:55, 5 மார்ச் 2014 (UTC)
கனக சிறீதரன், தமிழ் விக்கிப்பீடியாவின் அலுவல் முறை குழுவான ஐவர் குழு இராசனின் முறையீட்டை விசாணைக்கு ஏற்றுக் கொண்ட போதே அது செல்லுபடி பெற்றதாகி விடுகிறது.

நிருவாக அணுக்க நீக்கல் கொள்கை கூற்றின் படியும்,

//குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராவது பதிவு செய்திருக்க வேண்டும். மொத்தம் 500 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். இதற்குக் குறைவான தகுதி கொண்ட ஆனால் பதிவு செய்த பயனர் யாராவது குற்றச்சாட்டு வைத்தால் அவ்வாறு குற்றச் சாட்டு வைத்து ஏழு நாட்களுக்குள் முன் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட இன்னொரு பயனர் அதை வழிமொழிந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது ஏழு நாட்களுக்குப்பின் குற்றச்சாட்டுத் தானகவே காலாவதி ஆகிவிடும்.//

அன்டனின் இரண்டாவது முறையீட்டை இராசனின் முறையீட்டுக்கான வழிமொழிதாக பார்க்கலாம். தற்போதைய நிலவரம் வரை பலர் நிருவாக அணுக்க நீக்கலை ஆதரித்தும் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளனர். இவையெல்லாமே பிரச்சினை உள்ளது என்பதற்கான வழிமொழிதலே. இராசன் முன்மொழிவா, அன்டன் முன்மொழிவா என்பதைத் தாண்டி என்ன பிரச்சினை என்பதிலேயே உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

வாக்கெடுப்பு நிலையில் இருக்கும் போது வேட்பு மனு செல்லாது என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம்.

வாக்கெடுப்பு முடிவு / பிணக்குத் தீர்ப்பாயத்தின் முடிவை ஏற்று, இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துத் தான் பொறுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இப்படி, ஏரணம் இல்லாத வாதங்களை முன்வைத்து நிலைமையை இழுத்தடித்துச் சிக்கலாக்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால், இப்போதே தேனி சுப்பிரமணி 3 என்ற பெயரில் புதிய நிருவாக அணுக்க நீக்கல் முறையீட்டை முன்வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. நான் 2005 முதல் பங்களிக்கிறேன். 20,000 தொகுப்புகளை நெருங்கி உள்ளேன். இந்தப் பங்களிப்புகள் முறையீட்டை முன்வைக்க போதுமானவையா?. புதிய கொள்கைக்கு அடுத்து வந்த புதிய முறையீடு. இதையாவது ஏற்றுக் கொள்வீர்களா இல்லை இதற்கும் ஏதாவது ஏரணம் கண்டுபிடிப்பீர்களா?--இரவி (பேச்சு) 07:18, 5 மார்ச் 2014 (UTC)

இங்கு எல்லாம் "நானே இராசா நானே மந்திரி.--Kanags \உரையாடுக 09:32, 5 மார்ச் 2014 (UTC)

சிறீதரனது கருத்து இரவியே இராசன் என்று சொல்வதாகவும் விளங்கப்படலாம். கோபி (பேச்சு) 11:53, 5 மார்ச் 2014 (UTC)

இல்லை கோபி, நான் அப்படிச் சொல்ல வரவில்லை. அப்படி விளங்கப்படும் என்றால் நான் அதனைத் திரும்ப எடுத்துக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 12:38, 5 மார்ச் 2014 (UTC)

ஒரு கணம் நானே அவ்வாறு நினைத்து விட்டேன் (மன்னிக்கவும்) என்பதால் திரும்ப எடுத்துக் கொள்வதே நல்லதென நினைக்கிறேன். தற்போது நிலவும் சூழல் வேதனை தருகிறது. எவரும் மனம் நோகாது இச்சிக்கல் சுமூக முடிவுக்கு வரவேண்டும். நன்றி. கோபி (பேச்சு) 12:46, 5 மார்ச் 2014 (UTC)

என்னுடைய கருத்துப்படி இராசனின் கருத்தை வாக்கு எண்ணிக்கையாக கருதக்கூடாது. இங்கு வாக்களித்தவர்களில் அனைவரையும் நம்மில் ஒருவராவது பார்த்திருப்போம். அனைவரும் வேறு வேறு என்பது உறுதி. ஆனால் இராசன் விக்கிப்பீடியாவில் நல்ல பழக்கமுள்ள ஒரு பயனர், திடீரென வெளியில் இருந்து வந்தவர், கையாள் இப்படி பல கோனங்களில் பார்க்கப்படுகிறார்.

ஆனால் அவரின் முறையீட்டை புறக்கணிப்பது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. நிறைய பேர் பாதுகாப்பு குறித்து வேறு பெயரில் வந்து பங்களிக்க வாய்ப்புண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:42, 5 மார்ச் 2014 (UTC)

சுட்டிக்காட்டிய கோபிக்கும் கருத்தைத் திரும்ப பெற்றுக் கொண்ட கனக சிறீதரனுக்கும் நன்றி.

தென்காசி சுப்பிரமணியன், நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை எதிர்கொள்ளும் நிருவாகி / கோரிக்கையை முன்வைப்போர் ஆகிய இருவருக்கும் வாக்கிடும் உரிமை இல்லை என்று தெளிவாக கொள்கையில் உள்ளது. எனவே, இராசனின் கருத்துகள் வாக்காக கருதப்படுமோ என்ற குழப்பம் தேவையில்லை. --இரவி (பேச்சு) 11:32, 7 மார்ச் 2014 (UTC)

வாக்களிக்கும் பயனர்களைப் பற்றிய கருத்துகள்

இங்கு வாக்கெடுப்பு நடக்கையிலும் நிர்வாக அணுக்க நீக்கம் தொடர்பாக வேறு இடங்களில் உரையாடுகையிலும் அதில் வாக்களிப்பவர்/கருத்துக்கூறுபவர் இதற்கு ஆதரவு அளித்தால் அவரை அடாவடித்தனக்காரர் என்றும் எதிராக வாக்களித்தால்/கருத்துக் கூரினால் அவர் நடுநிலை முகமூடி போட்டுக்கொண்டு கருத்துக்களைக் கூறுகிறார் என்று இருதரப்பில் உள்ள சிலராலும் தொடர்ந்து திசை திருப்பப்பட்டு வருகிறது. வாக்கெடுப்பு நடக்கையில் 2 பக்கங்களில் எதில் வேண்டுமானாலும் வாக்களிக்க உரிமையுண்டு. அதனால் வாக்காளர்களின் கருத்துக்களின் மீது கேள்வியையும் கருத்தையும் வைப்பதை விட்டுவிட்டு ஏதோ அனைத்தும் உணர்ந்த மன நல மருத்துவர்கள் போல் வாக்காளர்கள் மீது அடாவடித்தனம், முகமூடிக்காரர் போன்ற பழிகளை போடுவதை தவிர்க்கலாம்.

முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன். உள்நோக்கம் கொண்டு வாக்களிக்கிறார் என்ற பழியும் விழுகிறது. வாக்களிக்களிப்பு வெளிப்படையாக நடக்கையில் எப்படி உள்நோக்கம் வரும். வாக்களிப்பவர் ஒவ்வொருவர் மேலும் எதிர்தரப்புகள் பழிபோடுவதை விட்டுவிட்டு கருத்துகள் விக்கிமரபின் படி ஏற்கத்தக்கதா இல்லையா என்று மட்டும் உரையாடினால் நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:51, 5 மார்ச் 2014 (UTC)

நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான காலக்கோடு

பார்க்க - பயனர்:Ravidreams/தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்கல் நீக்கல் காலக்கோடு--இரவி (பேச்சு) 11:28, 7 மார்ச் 2014 (UTC)

வேண்டுகோள்

உரையாடல் வேண்டாம் என்றிருக்க, காரணம் காட்டி உரையாடல், சாடல், கண்டனம் என்று செல்வதைத் தவிருங்கள். உரையாடல் தொடரப் போகிறீர்களா? ஆம் என்றால் தொடருவோம்.

இங்கு பகிரப்படும் கருத்துக்கள் பல சிக்கலான தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. தேவை கருதி அவற்றை குறிப்பிடாமல் சில கருத்துக்கள்:

  • ஆரம்பம் தொட்டு (10 வருட கொண்டாட்டம்) நான் இங்கு நடந்த கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை. தொடர்ந்து அமைதியாக செயற்படும்படி பொதுவாகவே கேட்டு வந்தேன் (ஆதாரம்: ஆலமரத்தடி தொகுப்புக்கள்). அங்கு இருந்த சார்ப்புப் போக்கு ஓர் தீர்க்கமான செயலுக்கு இட்டுச் சென்றது. தற்போது, சுப்பிரமணி எதிர்பாளர்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு எதற்காக? நீங்கள் சுப்பிரமணி ஆதரவாளர்களா?
  • இங்கு சுப்பிரமணி எதிர்பாளர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. நீண்ட உரையாடலுக்கு வழி ஏற்படுத்திகிறீர்களா? அல்லது நீங்கள் கருத்திட மற்றவர்கள் மெளனமாக இருக்க வேண்டுமா?
  • பயனர்கள் பிழை விடுகையில் சுட்டிக் காட்டிச் சரிசெய்யவே நிர்வாகிப் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறிருக்கையில் பல ஆண்டுகளாகப் பிழைவிடும் ஒருவருக்கு நிர்வாக அணுக்கம் எதற்கு? ஆகவே, அணைத்து நிருவாகிகளினதும், அதிகாரிகளினதும் பொறுப்புக்கள் நீக்கப்பட்டு, புதிதாக நிருவாகிகளும், அதிகாரிகளும் தெரிவு செய்யப்படட்டும்.
  • குற்றம் எதுவுமே செய்யாதவர் முதற் கல்லை விட்டெறியலாம் என இயேசு தத்துவம் பேசப்பட்டிருக்க, மகாபாரதம் நினைவுக்கு வருகிறது: பாஞ்சாலி சீலையை உரிந்தாலும் பரவாயில்லை என துரியோதனனை ஏற்றுக் கொண்டு போருக்குச் சென்ற பீஷ்மரும், துரோணரும் கொல்லப்படக் காரணம் அறம் விலகிச் சென்றமையே!--AntonTalk 16:22, 7 மார்ச் 2014 (UTC)
அன்ரன், இதனை நீங்கள் தான் எழுதினீர்களா? உங்கள் எழுத்து வடிவம் இல்லை.--Kanags \உரையாடுக 07:45, 8 மார்ச் 2014 (UTC)

தேனி சுப்பிரமணியிடம் உறுதி மொழி கோருவது குறித்து

தேனி சுப்பிரமணி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 'இனி இவ்வாறு நடைபெறாது' என்று அவர் உறுதிமொழி தருவாரானால் தொடர்ந்து நிருவாகியாக நீடிக்கலாம் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள கொள்கையில், வாக்கெடுப்புக் கட்டத்தில் இத்தகைய செயல்பாட்டுக்கு இடம் இல்லை என்பதனை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேனி சுப்பிரமணி தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு பல்வேறு கட்டங்களில் ஏற்கனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன.

அவையாவன:

  • ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாக அவரது பேச்சுப் பக்கத்தில் சுட்டிக் காட்டி மாற்றங்களைக் கோரல்.
  • முறையீட்டுக் கூடத்தில் பிரச்சினைகளை முன்வைத்தல்
  • ஐவர் குழு பரிந்துரையைச் செயற்படுத்துமாறு வேண்டுதல்
  • நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பின் முதற்கட்டமாக அவரது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு தருதல்.

ஏற்கனவே கொடுத்துள்ள வாய்ப்புகளுக்கு எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்காத நிலையில், கொள்கையிலும் இல்லாத நிலையில், தேனி சுப்பிரமணியிடம் இந்தக் கட்டத்தில் உறுதி மொழி கோருவதற்கு இடம் இல்லை.--இரவி (பேச்சு) 07:35, 8 மார்ச் 2014 (UTC)

இறுக்கமும், இழுக்கும்

  1. இத்தளத்தில் பல அயலகச் சொற்களை வேரறுத்து, அதற்கு மாற்றாகத் தமிழ்ச் சொற்களை நிலைநாட்ட, அதிக அளவில் கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. அவ்வகையில் இங்கு கையாளப்படும், குற்றம் (விதிமீறல்), நிருவாகி (பொறுப்பாளர்) போன்ற பொருத்தமற்ற அயலகச்சொற்கள் மாற்றப்பட வேண்டும். இவை புரிந்துணர்வை மட்டுப்படுத்தி, மனஇறுக்கத்தினை உருவாக்கி உள்ளன. எனவே, நாம் முதலில் சொற்களைச் சீராக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
  2. இதுவரை எந்த விக்கிச்சமூகத்திலும், இந்தஅளவு இறுக்கமான உரையாடல்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. எந்த சீரியப்பங்களிப்பும் செய்யாமல், தொடங்கப்பட்டுள்ள இச்சிந்தனைச் சிக்கல் ஒன்றும் புதியதல்ல. வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு விதமாக, வெவ்வேறு சூழ்நிலைகளில் தொடரப்பட்டு, அதற்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது. தொடரும் இதுபோன்ற 'புதியவருக்கான அணுமுறை' வேதனை அளிக்கிறது.
  3. வருடகணக்கில் பங்களிப்பு செய்தவர்களிடையே, எந்த பங்களிப்பும் செய்யாத ஒருவர் மன இறுக்கங்களை உருவாக்குவது, நமது சமூகவரலாற்றில், நமது நடைமுறை கொள்கைகளுக்கு இழுக்கு ஆகும். நேற்று நடந்த பொதுவக ஊடகப்போட்டி வாக்கெடுப்பில் முதலில் ஒருவரின் தகுதி] முடிவு செய்யப்படுகிறது. பிறகு தான் உள்ளே சென்று, நமது வாக்கினை இடமுடியும்.
    எடுத்துக்காட்டாக, நான் இந்திய குடிமகன் என்பதற்காக, இங்குள்ள அணுகுமுறை போல, எடுத்தவுடன் யாரையும்'குற்றம்' என கூற இயலுமா? நான் கூறுவதில் உள்ள உண்மைகளை, யாரும் ஆயப்போவதில்லை. எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே முதற்கேள்வி. அனைத்து தீர்ப்பாய, நீதிமன்ற விதிகளிலும் முதலில் தகுதியே பின்பற்றப்படுகின்றன. எனவே, இதற்கான அணுகுமுறை விதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
  4. பிற சமூகங்கள், நல்கையினைப் பெற்று, வளருவதற்கான சூழ்நிலை உள்ளது. நம் சமூகத்தில் அத்தகைய வளங்களை என்று பயன்படுத்தத் தொடங்குவது? ஏதேனும் திட்டங்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். அணியப்படுத்த ஆவலாக உள்ளேன்.விக்கித்திட்டங்கள் அனைத்திலும் எனது பங்களிப்புகளை இங்கு காணலாம். --≈ உழவன் ( கூறுக ) 09:13, 8 மார்ச் 2014 (UTC)

த.உழவன்

1. குற்றம் தமிழ்ச் சொல் இல்லையா? "பழி" என்பது கூட தூய தமிழ்ச் சொல் தான். அதனால், மன இறுக்கம் வருவதில்லையா? நல்ல, நேர்மறையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது நல்ல பரிந்துரை தான். இப்போது இருக்கும் சிக்கலில் இதனையும் சேர்த்து அணுக வேண்டாம்.

2. எல்லா விக்கிச்சமூகங்களிலும் பிணக்குகள் உள்ளன. இதை விட மோசமான பிணக்குகளும் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு பக்கத்துக்குமே தீவிர பிணக்குகள் வருவதுண்டு. தேவைப்படும் இடங்களில் இரு பக்கத்து நோக்குகளை எடுத்து வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் தான். பூசி மொழுக இது கூட்டுக் குடும்பம் இல்லை. ஒரு கட்ட வளர்ச்சிக்குப் பிறகு கூட்டுக் குடும்ப அணுகுமுறை உதவாது. ஆனால், அந்தந்த பிணக்குகளில் எழும் கருத்து வேறுபாடுகளை வேறு இடங்களுக்கும் கடத்தாமல் பிரச்சினைகளைத் தனித்தனியாகப் பார்க்கும் பக்குவத்தை ஊக்குவிக்க வேண்டும். இது வரை தமிழ் விக்கிப்பீடியா அவ்வாறே செயல்பட்டு வந்துள்ளது. எனவே, கவலை வேண்டாம். இப்போது நடைபெறும் உரையாடல், பிரச்சினைகள் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. பலரும் இரண்டு நிலைகளுக்கும் ஆதரித்து வாக்களித்து இருக்கும் போது, யார் இந்த முறையீடுகளை முன்வைத்தார்கள் என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை. இதில் ஒரு இழுக்கும் இல்லை.

3. பேரரசர் ஆடையின்றி திரிகிறார் என்று சொன்னது ஒரு சிறுவன் தான். https://en.wikipedia.org/wiki/The_Emperor%27s_New_Clothes எனவே, இங்கு புதியவர், மூத்த பயனர் போன்ற பாகுபாடுகள் தேவை இல்லை. அவரவர் சொல்லும் கருத்தை ஆய்ந்து தேவையான எதிர்வினை ஆற்றும் பக்குவம் அனைவருக்கும் உண்டு. இப்பிரச்சினையின் காலக்கோடு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. பார்க்க - பயனர்:Ravidreams/தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்கல் நீக்கல் காலக்கோடு. நிருவாக அணுக்கல் நீக்கல் கோரிக்கையை யார் முன்வைக்கலாம், யார் வாக்கிடலாம் என்று தெளிவாகவே கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதி இல்லாதோரால் இச்சிக்கல் உருவாக்கப்பட்டுள்ளதாக திரிக்க வேண்டாம்.

4. பத்தாண்டு விழா கொண்டாட்டம், கட்டுரைப் போட்டி எல்லாம் நல்கை பெற்று தான் நடக்கிறது. இரு ஆண்டுகள் முன்பு நடந்த ஊடகப் போட்டியும் அவ்வாறே. https://meta.wikimedia.org/wiki/Grants:IEG நல்கையை தனியாட்களாகவோ கூட்டாகவோ சேர்ந்தே பெறலாம். இதற்குச் ஒட்டு மொத்த விக்கிச்சமூகங்களின் ஒப்புதல் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் மேலே உள்ளோரின் உத்தரவையோ முயற்சியையோ எதிர்நோக்கி இராமல், நீங்களே முனைப்புடன் தொடங்குங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 10:17, 8 மார்ச் 2014 (UTC)

ஆக, யாரும் எவரும், எவ்வித பங்களிப்புகளும் இல்லாமல் ஒரு பயனராகப் பதிவு செய்து ஒருவரின் நிருவாக அணுக்கலை நீக்கக் கோரலாம் என ஐவர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது என்கிறீர்கள். இதன் மூலம் இது இப்போது தமிழ் விக்கிக் கொள்கை ஆகி விட்டது. ஆனால், எவ்வித பங்களிப்புகளும் இல்லாமல் நிருவாக அணுக்கல் வாக்கெடுப்பில் பங்கெடுக்க முடியாது அப்படித்தானே. அரட்டைகளில் மட்டும் பெருமளவு பங்கு பற்றி போதுமான அளவு பங்களிப்புகளை சேகரிப்பவர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம். இது தான் விக்கி நடை முறை. இது தெளிவு படுத்தப்பட வேண்டும்?--Kanags \உரையாடுக 10:35, 8 மார்ச் 2014 (UTC)
கனக சிறீதரன், ஒரு முறையீட்டுக்கு முன்னேயே யார் முறையிடலாம் என்பது குறித்து கொள்கை இருந்தால், அதன் அடிப்படையில் செயற்படலாம். அப்படி இல்லாத போது, முறையீட்டை விசாரிப்பது தான் உலக அறம். இராசன் முறையிட்ட போது நிருவாக அணுக்கம் தொடர்பாக நம்மிடம் கொள்கை ஏதும் இல்லை. எனவே, ஐவர் குழு அம்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தான் முறை. இராசனின் பெரும்பான்மையான முறையீடுகளை நிராகரித்த சில குறித்த பரிந்துரைகளை மட்டுமே தந்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையிலேயும், தொடர்ந்து அன்டன் வைத்த முறையீட்டின் அடிப்படையிலும் பயனர்களின் உரையாடல் அடிப்படையிலுமேயே வாக்கிட்டு வருகிறோம். இங்கு என்ன கருத்து, அது நடவடிக்கை எடுப்பதற்கான தகுதி மட்டும் தான் பார்க்கப்பட்டுள்ளது. யார் கூறிய கருத்து என்றில்லை. அது தான் விக்கி நடைமுறை. நிற்க! தற்போது, நிருவாக அணுக்க நீக்கல் தொடர்பாக கொள்கை உள்ளதால், குறித்த தகுதி உடையவர் மட்டும் தான் முறையீடு பதிய முடியும். ல்லது, குறித்த தகுதி இல்லாதவரின் முறையீட்டை தகுதி உடைய ஒருவர், 7 நாட்களுக்குள் வழி மொழிய வேண்டும். இல்லாவிட்டால், முறையீடு தானாக செல்லாமல் போய் விடும். இது கொள்கையில் தெளிவாக இருக்கும் போது, வருங்காலத்தில் புதிய பயனர்கள் வந்து குழப்பலாம் என்ற பதற்றம் தேவையற்றது.--இரவி (பேச்சு) 10:50, 8 மார்ச் 2014 (UTC)
//நிருவாக அணுக்க நீக்கல் தொடர்பாக கொள்கை உள்ளதால், குறித்த தகுதி உடையவர் மட்டும் தான் முறையீடு பதிய முடியும்.// இக்கொள்கை எங்கே புதிதாக எழுதப்பட்டுள்ளது? காட்ட முடியுமா?--Kanags \உரையாடுக 11:08, 8 மார்ச் 2014 (UTC)

பார்க்க - விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை

//நிருவாக அணுக்கம் நீக்குவதற்கான கோரிக்கையை முன்வைப்பவருக்கான குறைந்தபட்ச தகுதி:

குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராவது பதிவு செய்திருக்க வேண்டும். மொத்தம் 500 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். இதற்குக் குறைவான தகுதி கொண்ட ஆனால் பதிவு செய்த பயனர் யாராவது குற்றச்சாட்டு வைத்தால் அவ்வாறு குற்றச் சாட்டு வைத்து ஏழு நாட்களுக்குள் முன் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட இன்னொரு பயனர் அதை வழிமொழிந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது ஏழு நாட்களுக்குப்பின் குற்றச்சாட்டுத் தானகவே காலாவதி ஆகிவிடும்.//

தவிர, இது கொள்கையின் நான்காவது படி தான். இந்தப் படிக்கு வரும் முன் புதியவரோ நெடுநாள் பயனரோ மூன்று படிகளைத் தாண்டி வர வேண்டும். முதல் மூன்று படிகளில் நிருவாகி தகுந்த ஒத்துழைப்பு தர மறுக்கும் பட்சத்திலேயே வாக்கெடுப்பு நிலையை எட்ட முடியும். --இரவி (பேச்சு) 16:53, 8 மார்ச் 2014 (UTC)

நீங்கள் தந்த கொள்கை எப்போது யாரால் எழுதப்பட்டது? ஐவர் குழு பரிந்துரைத்ததா? அல்லது நீங்கள் இப்போது எழுதியுள்ளீர்களா? அல்லது ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தீர்களா? மேலும், //இராசன் முறையிட்ட போது நிருவாக அணுக்கம் தொடர்பாக நம்மிடம் கொள்கை ஏதும் இல்லை.// அதனால் இராசனின் முறையீட்டை ஏற்றுக் கொண்டீர்கள். அது போன்றே, நீக்கல் தொடர்பாக எவ்விதக் கொள்கையும் அப்போது இருக்க வில்லை என்றே தெரிகிறது. அவ்வாறிருக்க கொள்கை ஏதும் இல்லாமல் அதற்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எவ்வாறு ஒரு கொள்கை வகுத்து விசாரிக்க முடியும் என்பதே எனது வாதம். எனக்கு என்ன தெரிகிறதென்றால், இரவி வைத்ததே இங்கு சட்டம், வேறு ஒருவரும் சட்டம் பேச முடியாது. தான் விரும்பிய போது கொள்கை எழுதுவார். விக்கிப்பீடியாவுக்கு இவர் ஒருவரால் நாசம் பிடித்து விட்டது.--Kanags \உரையாடுக 21:24, 8 மார்ச் 2014 (UTC)
சிறீதரன், உரையாடல் விரக்தியில் தீவரமான முறையில் உங்கள் கருத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். ரவி, சிறப்பாக பல கொள்கைகளை முறைப்படி உருவாக்கி உள்ளார். எ.கா விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள கட்டுரைகள், விக்கிப்பீடியா பேச்சு:பிற நிறுவனங்களுடனான உறவாட்டம் குறித்த கொள்கை. மேலும், எந்தக் கொள்கையையும் எப்போதும் எந்தப் பயனரும் கேள்விக்கு உட்படுத்தலாம். விக்கிப்பீடியாவின் முதன்மை விழுமியங்களில் ஒன்று, நீங்களே திருத்துங்கள் என்பது ஆகும். ஆனால், குறிப்பான இக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக எனக்கு விமர்சனம் உண்டு.
இந்த முன்மொழிவு கொள்கையானது எப்படி என்று விளங்கவில்லை. பிற பரிந்துரைகள் உள்ளன, எ.கா விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு), விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/செய்முறை/வரைவு. முக்கியமான, சர்ச்சைக்குரிய இம் மாதிரிக் கொள்கைக்கு இணக்க முடிவு எட்டுதல் வேண்டும். பேச்சுப் பக்கத்தில் கொள்கை முன்மொழிவு தொடர்பாக கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. ஆனால் இணக்க முடிவு எட்டப்படவில்லை. இரண்டாம் வரைவு டிசம்பர் 30 இல் உருவாக்கப்பட்டுள்ளது. அது சனவரி 8 எந்த உரையாடல்கள், கருத்துக் கோரல்களும் இன்றி கொள்கை ஆக மாறி உள்ளது. முக்கியமான, சர்ச்சைக்குரிய, தற்போதைய செயலாக்கங்களைப் பாதிக்கக் கூடிய, பிற விக்கிகளில் இல்லாத கொள்கையை ஒருவர் தன்னிச்சையாக கொள்கையாக அறிவித்தல் முறையன்று. --Natkeeran (பேச்சு) 23:33, 8 மார்ச் 2014 (UTC)

தமிழ்க்குரிசில் கருத்து

மனக் கசப்பு கொண்ட உரையாடல் வருத்தம் அளிக்கிறது. பழைய மனக் கசப்புகளை மறந்து, மீண்டு வர வேண்டுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:27, 11 மார்ச் 2014 (UTC)