விக்கிப்பீடியா:2010 கட்டுரைப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு, 2010 சூன் மாதத்தில் கோயம்புத்தூர் நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் ஒன்பதாவது இணையத் தமிழ் இணைய மாநாட்டையும் இணைத்து நடத்தியது. இதனை ஒட்டித் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டிக்கான அறிவிப்பு விக்கிப்பீடியாவில் 'வலைவாசல்:கட்டுரைப்போட்டி' இலும், அரசாங்கத்தால் தமிழ்நாட்டில் நாளிதழ் விளம்பரம், சுவரொட்டிகள் மூலமும் அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் எந்த ஒரு துறையில் கட்டுரை எழுதப்பட்டாலும் மாணவர்களது கட்டுரைகள் கலையும் அறிவியலும் (ASC), வேளாண்மை (AG), மருத்துவம் (MED), கால்நடை மருத்துவம் (VET), தொழில்நுட்பம் (TEC), கல்வியியல் (ED), விளையாட்டு (SP), சட்டம் (LA) ஆகிய எட்டு பெரும் பிரிவுகளுள் ஏதாவது ஒன்றினுள் பகுப்பு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுமக்களது கட்டுரைகள் யாவும் ஒரு தனிப்பிரிவினுள் பகுக்கப்பட்டது (PEP).

இறுதி நிலைத் தேர்வில், சிறந்த கட்டுரைகள் மூன்று முக்கிய பெரும் பிரிவுகளில் பிரிக்கப்பட்டு பிரிவுக்கு மூன்று பரிசுகளாக 9 பரிசுகளும், சிறப்புப் பரிசாக ஒரு பரிசும் வழங்கப்பட்டன. அந்த பிரிவுகளாவன: 1. கலையும் அறிவியலும், 2. உயிரியல், 3. பொறியியலும் பொது. ஒரு சிறப்புப் பரிசானது மிகச்சிறந்த கட்டுரை ஒன்றை வழங்கிய, பொது மக்களில் ஒருவரான அரசாங்கப் பணியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.


விக்கியில் வழங்கப்பட்ட உதவி தகவல் பக்கங்கள்[தொகு]

கட்டுரைப்போட்டி ஒருங்கிணைப்புக் குழு[தொகு]

கட்டுரைப்போட்டியை நடத்துவதற்காக விக்கிப்பீடியாவுக்கு வெளியேயும், விக்கிப்பீடியா பயனர்களைக் கொண்டும் ஒருங்கிணைப்புப் பணியில் பலரும் ஈடுபட்டனர். இப்போட்டிக்கான கட்டுரைகளை இணையத்தளம் மூலம் பெறுவதற்காக இணையத்தள வடிவமைப்பும் http://tamilint2010.tn.gov.in மேற்கொள்ளப்பட்டது. அவ்வடிவமைப்பில் ஈடுபட்ட யுவராஜ் (முதுகலை கணினிப் பயன்பாட்டுப் பிரிவு மூன்றாமாண்டு மாணவர், அண்ணா பல்கலைக்கழகம்-திருச்சி) என்ற மாணவருக்கு, பரிசு வழங்கலின்போது சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.

விக்கிப்பயனர்களில் ஒருங்கிணைப்புக் குழுவில் குறிப்பிடப்படாத சில பயனர்களும் மிகவும் ஈடுபாட்டுடன் உதவினர்.

பரிசுக்கான கட்டுரைகள் தேர்வு[தொகு]

போட்டி தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் கொடுப்பதற்கும், பங்களிப்பாளர்கள் எழுதும் கட்டுரைகளை ஏற்றுக் கொள்வதற்குமாக ஒரு இணையத்தளம் http://tamilint2010.tn.gov.in தமிழ்நாடு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட தளம்பற்றி இங்கே விக்கியில் அறிவிக்கப்பட்டது. போட்டியாளர்கள் கட்டுரைகளை நேரடியாக அந்த இணையத் தளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டனர். போட்டி தொடர்பான எல்லா விபரங்களும் அந்த இணையத் தளத்திலேயும் அறியத் தரப்பட்டிருந்தது. அனேகமான போட்டியாளர்கள் அங்கேயே தமது கட்டுரைகளை பதிவேற்றியிருந்தனர். ஆனாலும் சிலர் மின்னஞ்சல் மூலமாகவும், சிலர் விக்கியிலும் பதிவேற்றம் செய்திருந்தனர். அனைத்து கட்டுரைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மொத்தமாக 1191 கட்டுரைகள் கிடைத்தன.

பின்னர் அனைத்து கட்டுரைகளையும் கணினியில் தரவிறக்கம் செய்து, கட்டுரைப் போட்டியில் உதவிய விக்கிப்பீடியர்களுக்கு பிரித்து வழங்குவதை கலை செய்தார். விக்கிப்பீடியர்கள் பலர் இந்த கட்டுரை தெரிவுப்பணியில் ஈடுபட்டனர். பெரியண்ணன் அவர்கள் கூகிள் விரித்தாள்களை விபரமாகத் தயாரித்தல், கோப்புகளை பிரித்து அனுப்புவதற்காக ஒழுங்குபடுத்தல், கட்டுரைகள் வேறு இணையத் தளங்களிலிருந்து பிரதியெடுக்கப்படாதவை என்பதை உறுதி செய்தல் போன்ற விடயங்களில் மிகவும் உதவியாக இருந்தார்.

முதலாம் கட்ட வடிக்கட்டல்[தொகு]

இந்த முதலாம் கட்ட வடிகட்டலில் பங்களித்த விக்கிப்பீடியர்கள்: பெரியண்ணன், Kanags, குறும்பன், Arafath, Hibayathulla, Mayooranathan, Natkeeran, கலை, சுந்தர் ஆகியோர். பெறப்பட்ட கட்டுரைகள் யாவும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, zip file ஆக்கி ஒவ்வொருவருக்கும் வடிகட்டலுக்காக Dropbox மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்பட்டது. அவை தொடர்பான விபரங்கள் கூகிள் தாளில் பதிவு செய்யப்பட்டு, கட்டுரைப்போட்டி தெரிவில் பங்குகொண்ட அனைத்து விக்கி உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

  • ஒரு தடவைக்கு மேலாக அனுப்பப்பட்டிருந்த, ஒரே உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் இனங்காணப்பட்டு, அவற்றில் ஒன்று மட்டும் போட்டிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • வெற்றுப் பக்கங்கள், சேதமடைந்த திறக்க முடியாத கோப்புகள் தெரிவிலிருந்து அகற்றப்பட்டன.
  • ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.
  • வேறு இடங்களில் இருந்து பிரதியெடுத்த அல்லது Scan செய்யப்பட்டு அப்படியே அனுப்பப்பட்ட கோப்புகள் அகற்றப்பட்டன.
  • கலைக்களஞ்சியத் தலைப்புக்கு பொருத்தமல்லாத கட்டுரைகளும் நீக்கப்பட்டன. ஆனாலும் உள்ளடக்கம் விக்கிக்கு ஏற்ற வகையில் இருப்பின், தலைப்பை ஓரளவு மாற்றி போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது.
  • ஒருங்குறியில் எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தும், பல கட்டுரைகள் ஒருங்குறியில் எழுதப்பட்டிருக்கவில்லை. அவை கூடுமான வரையில் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 532 கட்டுரைகள் அடுத்த கட்ட வடிகட்டலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இவற்றில் அனேகமானவை, அடுத்த நபருக்கு அனுப்பப்படும்போது, மீண்டும் எழுத்துருப் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக pdf ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு Open Office மென்பொருளும் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் கட்டத் தெரிவு[தொகு]

இந்த இரண்டாம்கட்டத் தேர்வில் 532 கட்டுரைகளையும் பார்வையிட்டு நடுவர்களுக்கு அனுப்புவதற்கான 165 கட்டுரைகளை தெரிவு செய்த விக்கிப்பீடியர்கள்:குறும்பன் (110), Kanags (104), கலை (91), இரவி (70), பெரியண்ணன் (65), சுந்தர் (42), Mayooranathan (30), பரிதிமதி (20).
முதலாவது கட்ட வடிகட்டலில் ஒருவர் பார்த்த கட்டுரையை, இந்த இரண்டாம் கட்டத் தெரிவில் வேறொருவர் பார்க்குமாறு கோப்புக்கள் பகிர்ந்து Dropbox மூலம் அனுப்பப்பட்டது. தெரிவை அனைவரும் ஒரே இடத்தில் பகிர்ந்துகொள்ளவும், பதிவு செய்யவும் ஏதுவாக கூகிள் தாளில் அட்டவணை தயார் செய்யப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது. இருப்பினும் நேரக் குறைபாட்டினால், அனைவராலும் முழுமையாக அதிலுள்ள எல்லா நிரல்களையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஒவ்வொருவரும் அந்த தாளிலேயே, 1. நீக்கப்பட்டவை, 2. நடுவர்களுக்கென தெரிவு செய்யப்பட்டவை, 3. பின்னர் விக்கியில் பயன்படுத்தப்படக் கூடியவை என பகுத்து பதிவு செய்தனர்.

இந்தத் தெரிவில் கருத்திலெடுக்கப்பட்ட விடயங்கள்:-

  • கலைக் களஞ்சியத்துக்கு ஏற்புடைய கட்டுரைகளா என்பதை சரிபார்த்து, அப்படியல்லாதவற்றை நீக்கல், அல்லது விக்கியில் பின்னர் பாவிப்பதற்காக வைத்துக் கொள்ளல்.
  • கட்டுரைகள் வேறு எந்த இணையத் தளங்களிலிருந்தும் பிரதியெடுக்கப்படவில்லை என்பது கூகிள் தேடல் மூலம் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படல்.
  • படியெடுக்கப்பட்ட (Scan) கட்டுரைகளா எனப் பார்க்கப்பட்டு அவற்றையும் நீக்குதல்.
  • கட்டுரைத் தலைப்புக்கள் குறிப்பிட்ட துறைக்குரியதா என சரி பார்க்கப்பட்டு, தேவையேற்படின் மாற்றம் செய்யப்படல். (பொது மக்களின் கட்டுரைகள் (PEP) அனைத்தும் அவற்றின் தலைப்பு, உள்ளடக்கத்திற்கேற்ப மேலே சொல்லப்பட்ட 8 துறைகளினுள் சேர்க்கப்பட்டன).
  • கலைக்களஞ்சியக் கட்டுரையின் தலைப்பு போலல்லாது இருக்கும் கட்டுரைக்கு தகுந்த தலைப்பு வழங்கல்.

நடுவர்கள் மதிப்பீடு[தொகு]

விக்கிப்பீடியர்களால் இரண்டாம் கட்டத் தெரிவில் தேர்வாகிய 165 கட்டுரைகளும் முதலில் துறைவாரியாக பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. பின்னர் துறைசார் நடுவர்களுக்கு pdf ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டிய வழிகாட்டுதலும் அனுப்பி வைக்கப்பட்டது.

நடுவர்கள்[தொகு]

போட்டிக்கு வரும் கட்டுரைகளை இறுதி மதிப்பீடு செய்வதற்காக குறிப்பிட்ட துறைகளில், உயர் தகுதிகள் கொண்ட நடுவர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் வாழும் பல்வேறு துறை அறிஞர்கள் இடம் பெற்றனர். தெரிவு செய்யப்பட்டிருந்த நடுவர்கள் அனைவருக்கும், அவர்கள் மதிப்பீட்டுக்குத் தயாராக உள்ளார்களா எனக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவர்களை மின்னஞ்சல் மூலமாகவே தொடர்புகொள்ள வேண்டியிருந்ததால், அவர்களது வேலைப்பளு காரணமாக அவர்களால் இந்தப் பணியை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியாத நிலையிருக்குமானால், அதனை அறிந்து கொள்ளவே இவ்வாறு நினைவூட்டல் அனுப்பப்பட்டது. இறுதிநேரத் தடங்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது. அவர்களில் மதிப்பீட்டுப் பணிக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் தெரிவித்தவர்களுக்கு pdf வடிவில் கட்டுரைக் கோப்புகள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு, முடிவுகளும் மின்னஞ்சல் மூலமாகவே பெறப்பட்டது.

மதிப்பீட்டில் பங்கெடுத்த வெளிநடுவர்கள்:

  • முனைவர் இராமகிருஷ்ணன்
  • முனைவர் மா.அருச்சுனமணி
  • மருத்துவர் ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
  • மருத்துவர் கண்ணன் நடராசன்
  • மணி மணிவண்ணன்
  • முனைவர் நா. கோபாலசாமி
  • முனைவர் ஆர். செல்வராஜ்
  • முனைவர் பவுல் லியோன் வறுவேல்
  • முனைவர் மு. இளங்கோவன்
  • பேரா எம். சுந்தரமூர்த்தி
  • முனைவர் வே. அனந்தநாராயணன்
  • பேரா. இ. மறைமலை
  • முனைவர் பாலு விஜய்
  • மருத்துவர் சிவனருள் செல்வன்
  • சுரேஷ் வெங்கடாச்சலம்
  • முனைவர் அண்ணா சுந்தரம்

குறிப்பிட்ட குறுகிய காலத்தில் கட்டுரைகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்ய இரு நடுவர்கள் இல்லாதவிடத்து, அல்லது குறிப்பிட்ட துறையில் தகுந்த நடுவர் உடனடியாக கிடைக்காதவிடத்தும், விக்கிப்பீடியர்களே இரண்டாவது நடுவராகவும் செயற்பட்டனர். அவ்வாறு இறுதி மதிப்பீட்டில் செயற்பட்ட விக்கிப்பீடியர்கள்: குறும்பன், Kanags, கலை, இரவி, பெரியண்ணன், சுந்தர், Mayooranathan, பரிதிமதி, Natkeeran

மதிப்பெண்கள் வழங்கப்பட்ட முறை[தொகு]
உள்ளடக்கம் கட்டுரை நடை
எண் தகவற் செறிவு (15) உசாத் துணைகள் (6) நம்பகத் தன்மை (6) படங்கள் (3) கலைச் சொற்கள் (10) புரியும் படி எழுதல் (10) மொத்த மதிப்பெண் (50)
1
2

ஒவ்வொரு கட்டுரையையும் இரு நடுவர்கள் பார்த்து, ஒவ்வொருவரும் 50 க்கான மதிப்பெண்களை வழங்குமாறும், பின்னர் அவற்றைக் கூட்டி 100 க்கான மதிப்பெண்களைப் பெறவும் முடிவு செய்யப்பட்டது. மாதிரி மதிப்பீட்டுப் படிவத்தில் உள்ளபடி மதிப்பீடு செய்யப்பட்டது. கட்டுரைக்கு படம் அவசியமற்றதென எண்ணுமிடத்து, அதற்கான மதிப்பையும் ஏனைய பிரிவுகளுக்குள் அடக்கி, மொத்த மதிப்பெண்ணை 50 ஆக்கலாம் எனவும் கூறப்பட்டது.

  • பெறப்பட்ட மதிப்பெண்கள் ஒரு கூகிள் தாளில் பதியப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. ஒரு விக்கிப்பீடியர் பதிவு செய்ததை, இன்னொரு விக்கிப்பீடியர் நிச்சயப்படுத்தி தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இதனை கலை, பெரியண்ணன் ஆகியோர் செய்தனர்.

பரிசுபெற்ற கட்டுரைகள் தேர்வு[தொகு]

  • பரிசு பெறப்போகும் கட்டுரைகளைத் தேர்வு செய்வதற்காக புதிய கூகிள் தாள்கள் துறைவாரியாகத் தயாரிக்கப்பட்டன.
  • கலையும் அறிவியலும் (ASC), வேளாண்மை (AG), மருத்துவம் (MED), கால்நடை மருத்துவம் (VET), தொழில்நுட்பம் (TEC), கல்வியியல் (ED) ஆகிய 6 பிரிவுகளுக்கும் தனித்தனியான தாள்கள் தயாரிக்கப்பட்டன.
  • விளையாட்டு (SP), சட்டம் (LA) ஆகிய இரு பிரிவுகளில் மிகக் குறைவான கட்டுரைகளே பெறப்பட்டிருந்தமையால், அவை இரண்டையும் ஒன்றாக்கி, அவற்றிற்கான ஒரு தாளும் தயாரிக்கப்பட்டது.
  • பொது மக்களின் கட்டுரைகள் (PEP) அனைத்தும் அவற்றின் தலைப்பு, உள்ளடக்கத்திற்கேற்ப மேற்கூறிய 7 தாள்களில் ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தன.
  • பின்னர் ஒவ்வொரு தாளிலும் கட்டுரைகள் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
  • பரிசுக்குரிய பிரிவுகளாக மூன்று முக்கிய பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு, பரிசுக்கான கட்டுரைகள் தெரிந்தெடுக்கப்பட்டது.
  • பரிசுக்கான கட்டுரைகளை எழுதியவர்களின் விபரங்கள் http://tamilint2010.tn.gov.in தளத்திலிருந்து பெறப்பட்டு அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்த இறுதி நேரப்பணியை கலை, இரவி மேற்கொண்டனர். பின்னர் பரிசுக்குரியவர்களை தொடர்புகொண்டு, விபரங்களைக் கூறி பரிசு வழங்கலுக்கான ஏற்பாடுகளை இரவி செய்தார்.

பரிசுபெற்ற கட்டுரை பிரிவுகள்[தொகு]
கலையும் அறிவியலும் (ASC)[தொகு]

இதிலேயே மிக அதிகளவில் கட்டுரைகள் பெறப்பட்டிருந்தன. இந்தப் பிரிவில் முதல் மூன்று கட்டுரைகளைத் தெரிவு செய்தபோது, அதில் ஒரு கட்டுரை ஒரு அரசாங்க ஊழியரால் அனுப்பப்பட்டிருந்தமையால் அந்தக் கட்டுரைக்கு சிறப்புப் பரிசு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. எனவே சிறப்புப்பரிசை விட்டு வேறு மூன்று சிறந்த கட்டுரைகள் பரிசைப் பெற்றன.

உயிரியல்[தொகு]

இதில் வேளாண்மை (AG), மருத்துவம் (MED), கால்நடை மருத்துவம் (VET) ஆகிய மூன்று துறைகளும் கருத்தில் எடுக்கப்பட்டன. துறைக்கு ஒன்றாக மூன்று கூடிய மதிப்பெண் கொண்ட கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றின் மதிப்பெண்களின் அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முடிவு செய்யப்பட்டன.

பொறியியல், பொது[தொகு]

இதில் தொழில்நுட்பம் (TEC), கல்வியியல் (ED), விளையாட்டு + சட்டம் (SP+LA) என்ற பிரிவுகளில், பிரிவுக்கு ஒன்றாக மூன்று கூடிய மதிப்பெண் கொண்ட கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றின் மதிப்பெண்களின் அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முடிவு செய்யப்பட்டன.

பரிசு வழங்கல்[தொகு]

அறிய வேண்டியவை[தொகு]

ஏற்பட்ட பிரச்சனைகள்[தொகு]

அதிக நேரம் தேவைப்பட்டது[தொகு]
  • பெறப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் துறைகள் வாரியாகப் பிரித்து, அவற்றை ஒழுங்கு செய்து, தனிக் கோப்புகளாக்கி அனுப்ப வேண்டியிருந்தது.
  • சில கட்டுரைகள் தவறான துறையில் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றையும் சரிபார்க்க வேண்டியிருந்தது. * எந்தவொரு கட்டுரையும் தவறவிட்டு விடப்படக்கூடாது என்ற கவனத்துடன் செயற்படும்போது, பல விடயங்களை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது.
  • மின்னஞ்சல் மூலமாகவே தொடர்புகளை கொண்டிருந்ததனால், நேர வலய வேறுபாடுகள், அவரவர் சொந்த வேலைப்பளுக்கள் காரணமாக உடனுக்குடன் தொடர்பு கொள்வதில் சிரமமும், நேரச் சிக்கலும் இருந்தது.
கட்டுரைகளை அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல்[தொகு]

அதிகமான கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது, அவை அதிக இடத்தைப் பிடித்ததால் அனுப்ப முடியவில்லை. Zip file ஆக மாற்றி அனுப்பினாலும், சிலர் அது தங்களால் திறக்க முடியவில்லை. வேறு வழியில் அனுப்பும்படி கேட்டார்கள். பின்னர் மீண்டும் அவற்றை Rar file ஆக மாற்றியோ, அல்லது அவற்றைப் பிரித்து சிறிய கோப்புகளாகவோ அனுப்ப வேண்டியிருந்தது. ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதில் அதிக நேரம் செலவானது. Dropbox மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட வேளைகளில் இந்தப் பிரச்சனை ஓரளவு தீர்ந்தது.

ஒருங்குறி மாற்றம்[தொகு]

பல கட்டுரைகள் ஒருங்குறியில் இருக்கவில்லை. அவற்றை ஒருங்குறிக்கு மாற்ற முடிவு செய்திருந்தமையால், ஒவ்வொரு கட்டுரையாக வெவ்வேறு முறைகளை போட்டுப் பார்த்து ஒருங்குறிக்கு மாற்ற முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அதற்கு அதிக நேரம் செலவானது. சுரதா தமிழ் எழுதி, NHM Converter Online, Jaffnalibarary.com போன்றன இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. சில கட்டுரைகளை ஒருங்குறிக்கு மாற்றும்போதுகூட சில எழுத்துக்கள் தவறாகவே இருந்தன. அப்படியான நிலைகளில் எழுத்துத் திருத்தமும் செய்ய வேண்டியிருந்தது. அப்படி ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட கோப்புகள், மீண்டும் எழுத்துருப் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக pdf ஆக மாற்றம் செய்யப்பட்டு அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட கோப்புகள் மட்டும் தனியாக பதிவு செய்யப்பட்ட ஒரு நிலையில், கட்டுரைகள் பிரதியெடுக்கப்படாதவை என்பதை உறுதிப்படுத்த, அவற்றிலிருந்து சில வசனங்களை கூகிள் தேடலுக்காக pdf இலிருந்து வெட்டி ஒட்டி போட முடியாமல் போனதால், மீண்டும் மூலக் கோப்பைத் தேட வேண்டியும் வந்தது.

பிரதியெடுக்கப்பட்ட கட்டுரைகள்[தொகு]

பல கட்டுரைகள் இணையத்தளங்களிலிருந்து வரிக்குவரி மாறாமல் எழுதப்பட்டிருந்தன. ஒரு சில கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்தே பிரதி செய்யப்பட்டிருந்தது. சிலர் எங்கேயோ இருந்து Scan செய்து அதை அப்படியே கோப்பாக அனுப்பியிருந்தனர். இதில் புத்தகங்களிலிருந்து வரிக்குவரி மாறாமல் பார்த்து எழுதப்பட்டதா என்பதை கண்டு பிடிப்பது கட்டுரைகள் தெரிவு நிலையில் முடியாத விடயமாகும்.

தவறுகளும், திருத்தும் வழி முறைகளும்[தொகு]

ஏற்பட்ட தவறுகள்[தொகு]
திருத்திக் கொள்ளக்கூடிய வழிமுறைகள்[தொகு]
  • நேரடியாக விக்கியிலேயே கட்டுரைகள் தனியான ஒரு பயனர் வெளியில் பதிவு செய்யப்பட்டால் வேலை இலகுவாக்கப்படும்.
  • ஒருங்குறியில் மட்டுமே கட்டுரைகள் பெறப்பட்டால் வேலைப்பளு குறையும்.

கட்டுரைகளை விக்கியில் பதிவேற்றும் பணி[தொகு]

கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற, விக்கியில் பதிவேற்றக் கூடியவை என அடையாளம் காணப்பட்ட கட்டுரைகளை விக்கியில் பதிவேற்றும் பணியை ஏற்கனவே விக்கியிலுள்ள பயனர்கள் செய்கின்றனர். பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரைகள் ஒரு பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் இவை கட்டுரைப் போட்டியில் பெறப்பட்ட கட்டுரைகள் என்பது ஒரு வார்ப்புரு மூலம் குறிக்கப்பட்டு வருகிறது.