விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 திட்டப் பக்கம்
பேச்சு
 கட்டுரைகள்
தொடர்புடைய
அண்மைய மாற்றங்கள்
 வார்ப்புருக்கள்
தொடர்புடைய
அண்மைய மாற்றங்கள்
 வரையறைகள் தர மதிப்பீடுகள் பங்குபெறுபவர்கள் 

விக்கித் திட்டம் தனிமங்கள் உங்களை வரவேற்கிறது!!

அண்டத்தில் உள்ள அத்தனைப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்களால் ஆன மூலக்கூறுகளினாலும் ஆனவையே. இந்த விக்கித் திட்டம் தனிமங்கள் அத்தனையும் பற்றி குறுங்கட்டுரைகளாகவாவது இருக்க வேண்டும் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இயற்கையில் கிட்டும் தனிமங்கள் 92 உள்ளன, ஆனால் செயற்கையாக செய்யப்பட்டவையும் சேர்த்தால் 117 வரை இன்றுள்ளன. இத்தொகை வரும் ஆண்டுகளில் கூட வாய்ப்புள்ளது.

தமிழ் விக்கியில் உள்ள தனிமங்கள் பற்றிய கட்டுரைகள் = 118/118 = 100 % இக்கான கட்டுரைகள் உள்ளன. அக்டோபர் 25, 2013

முதன்மையான நோக்கங்கள்[தொகு]

  • எல்லாத் தனிமங்களுக்கும் அடிப்படையான செய்திகளுடன் சிறு அறிமுக கட்டுரைகள் ஆக்குதல்.
  • எல்லா அடிப்படைத் தகவல்களும் தகவற்சட்டம் வழி தருதல் (தற்பொழுது 3 வகையான தகவற்சட்டங்கள் உள்ளன. அவற்றை சீர்தரம் செய்தலின் நன்மைகள் இருப்பினும் செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும்)
  • தனிமங்கள் கட்டுரையில் உள்ள தரவுகளின் படி அணுவெண் வாரியாக பட்டியல், அணுக் குறியீடு வாரியாக பட்டியல், அணுநிறை அல்லது அணுத்திணிவு வாரியாக வரிசைப்படுத்திய பட்டியல் செய்தல், மற்றும், உருகுநிலை, கொதிநிலை முதலான அடிப்படையிலும் கட்டுரைகள் இருத்தல்.
  • இத்திட்டத்தின் இரண்டாம் நிலையாக, தகவற்சட்டத்தில் உள்ள எல்லாப் தனிமங்களின் பண்புகளுக்கும் விளக்கக்கட்டுரைகள் செய்தல்.
  • ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் உள்ளவற்றை சீராக தேர்ந்து தமிழாக்கம் செய்தல்.

விக்கித்திட்டம் கட்டுரை எண்ணிக்கை[தொகு]

  • கட்டுரைகள்: 206 (புதுப்பி) (பட்டியல்களைச் சேர்த்து)
  • வார்ப்புருக்கள்: 73
  • பட்டியல்கள்:8

குறிக்கோள்கள்[தொகு]

பகுப்பு[தொகு]