விக்கிப்பீடியா:பொது அறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிக்கடி உரையாடும்போது சில தகவல்கள் பொது அறிவு தானே என்று சொல்லப்படுகின்றன. பல நேரங்களில் இதை பலர் சரியாக பகிர்ந்து கொள்வதில்லை. இது விக்கிப்பீடியாவுக்கும் பொருந்தும்.

விக்கிப்பீடியர்களான நாம் நமது தொகுப்புகளுக்கு தகுந்த ஆதாரங்களை கட்டுரையில் வழங்க வேண்டும். இன்னொருவர் உங்கள் தொகுப்பு தவறானது எனக் கூறினால் அதை நிரூபிக்க ஆதாரம் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், ஆதாரமற்ற அத்தொகுப்பானது நீக்கப்படும்.

பல விக்கிப்பீடியர்கள் தங்கள் தொகுப்புகள் ஏற்கக்கூடியன என்று வெளியிணைப்புகளையோ ஆதாரங்களையோ தராமல் விட்டுவிடுகின்றனர். எனவே, எங்கே, எப்போதெல்லாம் ஆதாரம் தேவைப்படும், எதுவெல்லாம் பொது அறிவு என்று கீழே எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.

பொது அறிவென ஏற்கக் கூடிய சில எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • காலம் தொடர்பான தகவல்கள் (எ.கா: வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளன. சித்திரைக்குப் பின் வைகாசி, ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போன்றவை)
  • நன்கறியப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் (எ.கா: சோழர் தமிழர் ஆவார். கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.)
  • வரைபடத்தைக் கொண்டு எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய புவியியல் தொடர்பான, நிலம் தொடர்பான தகவல்கள் (மதுரை தமிழ்நாட்டில் உள்ளது, யாழ்ப்பாணம் இலங்கையில் அமைந்துள்ளது. திருவரங்கம் திருச்சிக்கருகில் அமைந்துள்ளது)
  • நாடு தொடர்பான பொதுத் தகவல்கள் (தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் தமிழ் பேசுவார்கள்)
  • அடிப்படைக் கணித, ஏரண கோட்பாடுகள், சூத்திரங்கள் (1+1=2)
  • பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் உலகமே ஏற்றுக்கொண்ட தகவல்கள் (சனவரியில் தொடங்குவது கிரிகோரியன் நாட்காட்டி ஆகும், தமிழ் நெடுங்கணக்கில் அ விற்குப் பின் ஆ வரும்)

எப்போது அறிவுடையோரின் உதவியை நாட வேண்டும்[தொகு]

சில வகை தகவல்களை பொது அறிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆதாரங்கள் தேவைப்படும். அப்படிப்பட்டவைகளில் சில:

  • முரண்பாடான கருத்துகள், ஆதாரங்கள்
    • விக்கிப்பீடியர்களைப் பற்றிய தகவல்கள் அனைவராலும் ஏற்கப்பட்டவை அல்ல.
    • அரசியல், சமயம் தொடர்பான முரண்பாடான விவாதங்கள்
    • முரண்பாடான தலைப்புகளைப் பார்க்க, விக்கிப்பீடியா:முரண்பாடானவற்றின் பட்டியல்
    • சோதித்தறியப்படாத கருத்துகள்
    • விக்கிப்பீடியாவின் கொள்கைகளின்படி, உங்களது சொந்த ஆராய்ச்சிகளோ, கருத்துகளோ, வாதங்களோ எதுவாயினும், ஏற்கனவே நிறுவப்பட்ட கோட்பாடுகளை, கருத்துகளைக் கொண்டிருந்தாலும், ஏற்கக் கூடியவை அல்ல.
    • சரியென்று கோருபவரைத் தவிர விக்கிப்பீடியர்களால் உறுதிப்படுத்த முடியாதவை.
  • தொழினுட்ப அறிவு
    • ஒரு தகவலை அறிவியல் உண்மை எனக் கூறுவது. ஏற்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் மேற்பார்வையிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.
    • மருத்துவத் தகவல்கள்: மருத்துவம் தொடர்பான பல தகவல்களில் தவறான தகவல்களும், முரண்பாடுகளும் உள்ளன. எனவே முக்கியமான தகவல்களை மட்டுமே வழங்கவே வேண்டுகிறோம்.

மருத்துவரை அணுகாமல் விக்கிப்பீடியாவில் அறிந்து கொள்வதை விடுத்து விக்கிப்பீடியாவை படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துமாறு கோருகிறோம். இருப்பினும், யாரேனும் இங்குள்ள தகவல்களை படித்து எந்த தவறும் செய்து தீய விளைவுகள் ஏற்படுத்திக் கொள்வதை நாம் விரும்புவதில்லை. சராசரி விக்கிப்பீடியருக்கு தெரிந்ததைவிட அதிகமான தகவல்கள் எழுத்துப்பூர்வமாக வெளியாகி உள்ளன.

    • ஆதாரங்கள் ஏற்கக்கூடியவை/ ஏற்கக்கூடியவை அல்ல.: சட்டம், அரசாணை போன்றவை தவறானவை என்றோ சரியானவை என்றோ கூறப்பட்டால் ஆதாரம் தேவை.
    • முனைவர் பட்டம் பெற்று ஆராயக் கூடிய அளவுக்கு ஆழம் மிகுந்த தகவல்களுக்கு ஆதாரம் தேவை.
    • வரலாற்றுத் தகவல்கள்: வரலாற்றாய்வாளரின் தகவல் கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே அதுகுறித்து எழுதப்பட்ட தகவல்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்
    • மொழியியல்: ஒரே மொழியிலேயே இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுபாடு இருக்கும். சொற்புழக்கம் குறித்த ஐயம் ஏற்படின் ஆதாரம் தேவை. வட்டார சொல் வேறுபாட்டினால் தவறான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
  • நேரிடையாக இன்றி பிறர் மூலம் பெற்ற அறிவு (Indirect knowledge)
    • நீங்கள் சில தகவல்களை எங்கேனும் கேட்டிருக்கவோ, படித்திருக்கவோ கூடும். அப்படி படித்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ, உங்களால் ஆதாரம் சேர்க்க முடியுமே! கிசுகிசுப்புகளாக வெளிவந்த செய்திகள் முதலில் சொன்னவரிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்க வாய்ப்புண்டு.
    • விக்கிப்பீடியர்கள் நேராக தனிப்பட்ட அனுபவமின்றி எழுதப்படுபவை. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு விண்வெளிப் பயணம் குறித்தோ, சங்க காலம் குறித்தோ தெரியாது. ஆனால் பொதுவாக, நம் சுற்றுவட்டாரம் தொடர்பானவற்றை, இசைகளை அறிந்திருப்போம்.

எனவே நம்முடைய சமூகத்தில் வழக்கிலிருக்கும் சொற்களை அறிந்திருப்போம். அதிருக்கட்டும், உங்கள் தொகுப்பு சரியானதுதான் என்று நீங்கள் அறிந்திருந்தாலும், பிறர் கேட்கும்போது ஆதாரம் காட்டியாக் வேண்டும்.

மேலதிக விவரங்களுக்கு, விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்பதைப் பார்க்கவும்.

பிற தொகுப்பாளர்களின் கூற்றை நான் ஏற்க வேண்டுமா?[தொகு]

எப்படி பிற முதன்மை ஆதாரங்களை மதிப்பிடுவீர்களோ அப்படியே விக்கிப்பீடியர்களின் கருத்தையும் சரியானதா என ஆய்ந்து அறிய வேண்டும். எடுத்த எடுப்பிலேயே, ‘நீங்கள் பொய் கூறுகிறீர்கள்’ என்றோ, “கருத்தில் நடுநிலைமை இல்லை” என்றோ கூறாதீர்கள். பிறர் தவறாக நினைக்கக் கூடும். பதிலாக, ‘நீங்கள் கூறுவது பொருத்தமானதில்லை என்று நினைக்கிறேன்’ என்றோ ‘இந்த ஆதாரம் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகவில்லை’ என்றோ கூறுங்கள். அனைவருமே நம் தொகுப்பு ஏற்கப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம்.

ஏதேனும் ஐயம் எழுந்தால், ‘கருத்து பொருந்தவில்லையே’ என்று குறிப்பிடுங்கள். இக்கருத்தை முன்வைத்தால் தொடர்புடைய துறையினர் ஏற்பார்களா என்றோ, நடுநிலையான ஒருவர் இதை சோதித்து சரியென்னும் அளவுக்கு இருக்கிறதா, இதற்கு வேறு ஏதேனும் பொருத்தமான ஆதாரம் கிடைக்குமா என்று வினவுங்கள்.

இது எப்போதுமே இப்படித் தானா?[தொகு]

பொது அறிவு என்று இன்றளவும் கருதப்படும் தகவல்கள் தெளிவற்றவையாகவோ, முற்காலத்தில் அறியப்படாததாகவோ இருக்கலாம். எனவே, இத்தகைய தகவல்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்பது போன்ற தகவல்களைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, வானில் இருக்கும் பெரிய நெருப்பு உருண்டை சூரியன் என்பதைக் கூறும்போது, அதற்கு ஆதாரம் தேவையில்லை. அகராதியில் தேடி அறிந்துகொள்ளலாம். ஆனால், புவி சூரியனை சுற்றுகிறது என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதல்ல. இதற்கு ஆதாரம் தேவை. இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் தேவை.

இதே போன்றே அகர எழுத்து தமிழ் நெடுங்கணக்கு என்பது எளிதில் அறியக் கூடிய தகவல். ஆனால், இவ்வெழுத்து எப்படித் தோன்றியது என்று கூறுவதற்கு ஆதாரம் தேவை. அந்நிலையில், அவ்வெழுத்தின் வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கலாம்.

மேற்கோளாக சுட்டும்போது[தொகு]

சில நேரங்களில், அவர் அதைச் சொன்னார், இவர் இதைச் சொன்னார் எனக் குறிப்பிடக்கூடாது. மாற்றாக, கூறியவரின் கருத்தையும் தொடர்புடைய ஆதாரங்களையும் சேர்க்க முனைய வேண்டும்.

மேலும் பார்க்கவும்[தொகு]