விக்கிப்பீடியா:பெப்ரவரி 20, 2011 விக்கிப் பட்டறை புதுச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிப்ரவரி 20, 2011 அன்று புதுச்சேரியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு இரா.சுகுமாரன் +9194431 05825

நேரம், இடம்[தொகு]

நாள்: பிப்ரவரி 20, 2011.

நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை.

இடம்:

வணிக அவை (சிறிய அரங்கம்), பாரதி பூங்கா அருகில், புதுச்சேரி.

நிகழ்ச்சி நிரல்[தொகு]

  • 10:00 - தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
  • 11:00 - விளக்கப் பயிற்சிகள்
  • 12:00 - கலந்துரையாடல்

நிகழ்ச்சிக் குறிப்பு[தொகு]

நிகழ்வு 11 மணிக்குத் தொடங்கி 1 மணிக்கு முடிந்தது. ஏறத்தாழ 30 பேர் வந்திருந்தனர். முதலில் விக்கிப்பீடியா வரலாறு, தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்த விதம், த.வி.யின் முக்கியத்துவம், பிற தமிழ் விக்கித் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கினேன். பிறகு ஒரு புதிய கட்டுரையை எப்படித் தொடங்குவது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை எப்படி திருத்துவது போன்ற விசயங்களைச் செயல்முறையாக விளக்கினேன். வந்திருந்தோர் அனைவரும் கணினி, இணைய இணைப்பு உடையவர்கள். விக்கி பற்றி ஏற்கனவே அறிந்தவர்கள் என்பதால், விக்கியில் எப்படி எழுதுவது என்ற செயல்முறை விளக்கத்தில் கூடுதல் ஆர்வம் காட்டினார்கள். நம்பகத் தன்மை காக்கப்படுவது எப்படி, தகவல்களுக்கு எந்த அளவு பொறுப்பு ஏற்பீர்கள் போன்ற அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் நிறைய வந்தன். விழுப்புரத்தில் இருந்து வந்திருந்த மூத்த பொறியாளர் தமிழநம்பியும் அவரது நண்பர் தாமரைக்கோ அவர்களும் அரசும் பல்கலைகளும் ஏற்கனவே வெளியிட்டுள்ள அகரமுதலிகளைத் தமிழ் விக்சனரியில் சேர்க்க வேண்டும் என்று கோரினர். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அகரமுதலிகளை எவ்வாறு பதிவேற்றினோம் என்பதை விளக்கி, இதே போல் தொடர்புகளைப் பெற்றுத் தந்தால் பல வளங்களைச் சேர்க்கலாம் என்று குறிப்பிட்டேன். நிகழ்வு முடிந்த பின்னும் பலரும் தனிப்பட்ட முறையில் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. சுகுமாரன் தானே முன்வந்து இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதற்கென குறிப்பிடத்தக்க பொருட்செலவு, உழைப்பில் விளம்பரத் துண்டு பிரசுரங்கள், நிகழ்ச்சிப் பதாகை, அரங்க வாடகை, கருவிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்திருந்தார். ஏற்கனவே தமிழிணையம் தொடர்பான பல விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். நண்பர் இரா. சுகுமாரனுக்கும், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு: நிகழ்ச்சி பற்றிய துண்டுப்பதிப்பிலும் செய்திக் குறிப்பிலும் என்னை நிருவாகி என்று குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக, நாம் எவருமே எங்கும் இவ்வாறு முன்னிறுத்துவதில்லை. எனினும், பொறுப்புகளைக் குறிப்பிடுவதால் நிகழ்வுக்கு இன்னும் கூடுதல் பேர் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டதால், அவ்வாறு குறிப்பிட ஒப்புக்கொண்டேன்.

படங்கள்:

பங்கு கொள்வோர்[தொகு]

ஊடகங்களில்[தொகு]

வலைப்பதிவுகளில்[தொகு]

வாழ்த்துகள்[தொகு]

  • நிகழ்ச்சி நடக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள் --குறும்பன் 05:10, 22 பெப்ரவரி 2011 (UTC)
  • இரா. சுகுமாரனுக்கும், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்--சோடாபாட்டில்உரையாடுக 05:37, 22 பெப்ரவரி 2011 (UTC)
  • இதற்குழைத்த அனைவருக்கும், எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்.--தகவலுழவன் 16:31, 22 பெப்ரவரி 2011 (UTC)
  • சிறப்பாக பட்டறை நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துக்கள். ஒழுங்கமைத்து செய்த சுகுமாரனுக்கு நன்றிகள். --Natkeeran 01:47, 23 பெப்ரவரி 2011 (UTC)
  • புதுவையில் அருமையாக நிகழ்ச்சியாக நடத்திய அனைவருக்கும் நன்றிகள்! வாழ்த்துகள்! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 03:18, 23 பெப்ரவரி 2011 (UTC)
  • அனைவரும் பாராட்டுக்குரியவர், கலந்து கொண்டோரும் நடத்தியோரும். வாழ்த்துகள்.--பரிதிமதி 03:32, 23 பெப்ரவரி 2011 (UTC)
  • சிறப்பாகப் பட்டறையை ஒருங்கிணைத்த புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்கும் இரா.சுகுமாரனுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் !! அறிமுகப்படுத்தி செயல்முறை விளக்கங்கள் தந்த இரவிக்கும் பாராட்டுக்கள் !!--மணியன் 09:33, 23 பெப்ரவரி 2011 (UTC)
  • பாராட்டிய அனைவருக்கும் நன்றி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் கீழே உள்ள நண்பர்களும் தான் இந்த பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, ஏ.வெங்கடேசு, ம.இளங்கோ, தமிழநம்பி, அ.சந்திரசேகரன், ஓவியர் இராசராசன், சு.காளிதாசு, பா.மார்கண்டன், கலைவாணன், கோ.பழநி, பா.காளிதாசு மற்றும் விக்டர் ஆகியோர் இந்த வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் .--இரா.சுகுமாரன் 14:32, 23 பெப்ரவரி 2011 (UTC)