விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தப் பக்கத்தை நேரடியாக தொகுக்காதீர்கள்.
இந்தப் பக்கம் விக்கப்பீடியாவில் புதிய பக்கத்தை உருவாக்குவதை விளக்குவதற்கானது.

தயவு செய்து இப்பக்கத்தில் தொடர்பில்லாத உள்ளடக்கங்களை இடாதீர்கள் ! இவற்றையும் பாருங்கள்:

மேலும் பார்க்க:

எப்படி புதிய பக்கத்தை உருவாக்குவது[தொகு]

(எ.கா)

1. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க http://ta.wikipedia.org/wiki/விடுதலை என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar)உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தேர்வு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.

2. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க விடுதலை என்ற சொல்லை விக்கிபீடியா தேடு பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிகப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தேர்வு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.

மேலும் எளிய முறை[தொகு]

பின்வரும் பெட்டியினுள் நீங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பினை உட்புகுத்தி கீழே உள்ள பொத்தானை அழுத்தவும். அதன் பின் வரும் ஒரு கட்டத்தினுள் அக்கட்டுரையை உள்ளீடு செய்து சேமிக்கவும்.