விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள்[தொகு]

விக்கியில் பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள் (years long inactive admins) கூட இருப்பதைக் கண்டேன். குறைந்தது 1 ஆண்டுகளுக்கு ஏதேனும் பங்களித்திருந்தால் பரவாயில்லை. அதற்கும் மேலும் நீண்டகாலமாக பங்களிக்காத நிர்வாகிகள் விக்கியில் உள்ளனர். அவர்களின் நிர்வாக அணுக்கத்தை திரும்ப பெற எனது வேண்டுகோள். 3, 4 ஆண்டு பங்களிக்காத நிர்வாகிகளின் அணுக்கத்தை நிச்சயம் திரும்பப் பெற வேண்டும். இது போன்ற நடைமுறைகளால் நிர்வாகப் பணியின் முக்கியத்துவம் பெருகும் என நம்புகிறேன். விக்கித்திட்டங்கள் புதிப்பொலிவடையும் எனவும் நம்புகிறேன். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 20:34, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு பங்களிப்புக்கும் தராத நிருவாகிகளிடம் பேச்சுப் பக்கத்தில் இது பற்றி வினவலாம். அவர்கள் திரும்ப விக்கியில் பங்களிக்கவே போவதில்லை என்று தெரிவித்தால் அவர்கள் அணுக்கத்தை மீளப்பெறலாம். இல்லை, ஒரு நிருவாகியின் கணக்கில் இருந்து விசமத்தொகுப்புகள் வந்தால், அக்கணக்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக கருதி, தற்காலிகமாக அணுக்கம் நீக்கலாம். மற்றபடி, இந்நடவடிக்கை தேவையற்றது. மற்ற அனைத்து விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள் உள்ளது என்பது அடுத்து வரும் பங்களிப்பாளர்களுக்கும் உந்துதல் தரக்கூடியது.--இரவி (பேச்சு) 04:28, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஐந்து நாட்கள் என்பது மிகவும் நீண்ட காலமாக இருக்கிறது என கருதுகிறேன். இதை 3 ஆண்டுகளாகவாவது குறைத்துக் கொண்டால், அவர்களுக்கு பேச்சுப் பக்கத்தில் இது பற்றி வினவினால் நன்று. "கடந்த 3 நாட்களாக தாங்கள் தமிழ் விக்கியில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. நிருவாகி அணுக்கம் பெற்ற நீங்கள் தொடர்ந்து விக்கியில் பங்களிக்க விரும்புகிறீர்களா?" என வினவலாம். இதனால் அவர்கள் மீண்டும் விக்கிக்கு பங்களிக்கவும் நேரிடலாம். இதனால் விக்கிக்கு நன்மைதானே. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 07:53, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இராஜ்குமார் நண்பரே, நிர்வாக அணுக்கம் உள்ளவர்கள் நீண்டகாலம் பங்களிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களின் அணுக்கத்தினை நீக்க பரிந்துரை செய்துள்ளீர்கள். இவ்வாறு செய்வதால் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகள் என்ற எண்ணிக்கை குறைவதைத் தவிற வேறு எப்பயனும் இல்லையென கருதுகிறேன். அதைக் கூட தற்போது செயல்பாட்டில் உள்ள நிர்வாகிகள் என்று வரையரை செய்யும் பட்சத்தில் கணக்கு சரியாக வந்துவிடும். நிர்வாக அணுக்கத்தினை தவறாக பயன்படுத்த ஒருவருக்கு அந்த அணுக்கத்தினை திரும்ப பெற வேண்டியது அவசியமில்லையே. பங்களிப்பே தராத ஒருவருக்கு எதற்கு இந்த அணுக்கம் என்று தாங்கள் நினைக்கின்றீர்களா? என்பதை தெளிவு செய்ய வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:23, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இல்லை இல்லை. அவ்வாறு நினைக்கவில்லை. ஒரு நிருவாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு நிருவாக பணியை மீண்டும் தொடங்குகிறார் என்றால், கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட பல கொள்கை மாற்றங்களும், திட்டங்களைப் பற்றியும், பிற கொள்கைகளையும், அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அவ்வாறு மீண்டும் தனது அவர் பணிக்கு திரும்பும் பொழுது அவர் பல வகைகளில் தடுமாறுவார். மீண்டும் கொள்கைகள் அனைத்தையும் தூசித் தட்டி படித்து நினைவிலிருத்தியபின் மீண்டும் அவரிடம் பிற பயனர்கள் சில கேள்விகள் கேட்டு அவர் கொள்கைகளை சரிவர அறிந்திருக்கிறாரா என உறுதி செய்து அணுக்கத்தை திரும்ப கொடுக்கலாம். ஆங்கில விக்கியில் இது போன்ற நடைமுறைகள் உள்ளன. அவர்கள் 1 ஆண்டுகள் என கொண்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிருவாகி பங்களிக்காமலும், புகுபதிகையும் கூட செய்யாமலும் இருக்கக் கூடிய பயனர்களின் மீது தான் இந்நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஒரு நிருவாகி இருந்தால், "அவர் விக்கியை மூன்று ஆண்டுகளாக முற்றிலும் மறந்துவிட்டார். அதேப் போன்று அவர் விக்கிக் கொள்கைகளையும், பிற நிருவாக செயல்பாடுகளையும் மறந்திருக்கவும், பின்பற்ற இயலாமலும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவர் மீண்டும் தனது தகுதியை உறுதி செய்ய வேண்டும்." என கருத வேண்டும் என்பது என் வேண்டுகோள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:53, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தெளிவான விளக்கத்திற்கு நன்றி நண்பரே. தாங்கள் கூறுவது போல புதிய கொள்கை, திட்ட மாற்றம் குறித்து மறந்தோ, அறியாமலோ நிர்வாகி தவறு செய்யும் வாய்ப்பிருக்கிறது. எனினும் அப்பொழுது நிர்வாக அணுக்கத்தினை தவறாக உபயோகம் செய்கிறார் என நடவெடிக்கை எடுக்கவும், மாறிய கொள்கைகள் குறித்து விளக்கமும் அளிக்க இயலும் என நினைக்கிறேன். இதுவரை இப்படியொரு நிகழ்வு நடந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. நெடுநாள் பயனர்கள் வழிகாட்ட வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:32, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பல ஆண்டுகள் பங்களிக்காத நிர்வாகிகளின் நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப்பெறுவது குறித்து முன்னரும் கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. இவை எங்கேயுள்ளன என்று கண்டுபிடித்து இங்கே இணைப்புக் கொடுத்தால், அப்போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் அறிந்துகொள்ள முடியும். ---மயூரநாதன் (பேச்சு) 15:54, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதன், இதே பக்கத்தில் முதல் வரியில் உள்ளது விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்#முந்திய வேண்டுகோள்கள் --செல்வா (பேச்சு) 18:34, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் தொகுப்புகள் செய்யாவிட்டாலும் தொடர்ந்து அண்மைய மாற்றங்களையும் நமது செயற்பாடுகளையும் கவனித்து வரும் நிறைய முனைப்பான பங்களிப்பாளர்களையும் நிருவாகிகளையும் அறிவேன். கடந்த பத்தாண்டுகளில் வெகு சில கொள்கைகளை மட்டுமே வகுத்திருக்கிறோம். எனவே, சில ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நிருவாகி கொள்கைகளை அறியாமல் தடுமாறுவார் என்று எண்ண இயலாது. அவர்கள் பணிக்குத் திரும்பும் போது அறிந்து கொள்ள வேண்டிய கொள்கை மாற்றங்கள், மற்ற குறிப்புகளுக்கு என ஒரு பக்கம் உருவாக்கி தொடர்ந்து இற்றைப்படுத்தி வரலாம். இப்பக்கத்தை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தாலே போதுமானது. அப்படியே அவர்கள் ஓரிரு பிழைகள் செய்தாலும், மற்றவர்கள் கவனித்துத் திருத்தலாம். எனவே, இந்தக் காரணத்துக்காக நிருவாக அணுக்கத்தை மீளப்பெற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.--இரவி (பேச்சு) 11:03, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஓய்வில் இருக்கும் நிருவாக அணுக்கம் விலக்குதல் கொள்கை[தொகு]

ஓய்வில் உள்ள நிருவாகிகளின் நிருவாக அணுக்கம் குறித்த கொள்கை அறிவிப்பு தொழினுட்ப ஆலமரத்தடியில் வந்துள்ளது. ஆனால், நிறைய பேர் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறேன். சுருக்கமாக, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓய்வில் உள்ள நிருவாகிகளிடம் விளக்கம் கேட்டு நிருவாக அணுக்கத்தை விலக்கிக் கொள்ள உலக அளவில் முடிவெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு மொழி விக்கித் திட்டத்திலும் இதற்கென தனிக் கொள்கை இல்லையெனில், அவர்களின் நடைமுறை கடைபிடிக்கப்படும். ஒன்று, நாம் இதனை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, நமக்கான நடைமுறையை உருவாக்கி விட்டு அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

என் பரிந்துரை:

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிருவாகத் தொகுப்பு பங்களிப்பும் (பக்கங்களை நீக்குதல் / பூட்டுதல், பயனர்களைத் தடுத்தல் முதலிய பணிகள்) தராத நிருவாகிகளிடம் பேச்சுப் பக்கம், மின்மடல், தொலைப்பேசி முதலிய வழிகளில் இது பற்றி வினவலாம். அவர்கள் திரும்ப விக்கியில் பங்களிக்கவே போவதில்லை என்று தெரிவித்தாலோ தொடர்பு கொள்ள முடியாமலோ மறுமொழி அளிக்காமலோ இருந்தால் அவர்கள் அணுக்கத்தை மீளப்பெறலாம். பங்களிப்புகளைத் தக்க வைக்க எண்ணும் நிருவாகிகள் அடுத்த ஓர் ஆண்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நல்க வேண்டும்.

நிருவாக அணுக்கம் விலக்கப்பட்ட நிருவாகிகள் மீண்டும் நிருவாக அணுக்கம் பெற விரும்பினால் வழமையான நிருவாக அணுக்க தேர்தலில் பங்கு பெறலாம்.--இரவி (பேச்சு) 16:39, 29 சூலை 2014 (UTC)[பதிலளி]


ஐந்து வருடம் என்பது மிக அதிகமாகவே தோன்றுகிறது. இக்கருத்துகளையும் இம்முடிவையும் அடிப்படையாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் என்பது சரியாக இருக்குமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நிருவாக அணுக்கம் என்பது வழமையான பங்களிப்பைவிட அதிகமான தேவைகளைப்பூர்த்தி செய்யவே வழங்கப்படுகிறது. இப்பக்கத்தில் எட்டப்பட்ட முடிவு எனக்கு சரியாகவே படுகிறது, அதாவது

  1. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பங்களிக்காத அனைத்துப் பயனர்களின் அணுக்கத்தினை திரும்ப பெறவேண்டும்.
  2. அதன்பிறகு அவர்களுடைய பேச்சுப்பக்கத்தில் செய்தியை இடவேண்டும்.
  3. ஒருவேளை அவர்கள் தங்களுடைய அணுக்கத்தினை தக்கவைக்க விரும்பினால், அணுக்கத்தினை வழங்கலாம்.

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:57, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

தினேஷ்குமார் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

  • //நிருவாக அணுக்கம் என்பது வழமையான பங்களிப்பைவிட அதிகமான தேவைகளைப்பூர்த்தி செய்யவே வழங்கப்படுகிறது// ஆகவே, குறிப்பிடத்தக்க பங்களிப்பினை 2 வருடங்களில் வழங்க வேண்டும். இதற்கான வரையறை என்ன?
  • //பங்களிப்புகளைத் தக்க வைக்க எண்ணும் நிருவாகிகள் அடுத்த ஓர் ஆண்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நல்க வேண்டும்// பங்களிப்பு எவ்வளவு, எத்தகையது என்பதை தீர்மானிக்க வேண்டும்.

--AntonTalk 07:42, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

சர்ச்சைக்குரிய முறையில் செயல்படும் நிருவாகிகளைப் பொறுப்பு விலகச் செய்யவே மிகக் கடுமையான விதிமுறைகள் இருக்கும் போது, சில காலமாக பங்களிக்க வில்லை என்பது ஒரு பெரிய குற்றமேயில்லை. நல்ல பங்களிப்புகளை நல்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் அணுக்கம் தருகிறோமே ஒழிய, கட்டாயம் தொடர்ந்து எப்போதும் முனைப்பான பங்களிப்பைத் தந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. உண்மையில், பெரும்பான்மையான நிருவாகிகள் தாங்கள் நிருவாக அணுக்கம் பெற்ற பிறகு முனைப்பாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். திருமணம், குழந்தை, வேலைப்பளு, பிற ஈடுபாடுகள் என்று பல்வேறு காரணங்கள் காரணமாக சில காலம் ஓய்வாக இருப்பவர்களும் பிறகு மீண்டும் திரும்ப வந்து முனைப்பாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு நாட்டையே ஐந்து ஆண்டுகளுக்கு நம்பி ஒப்படைக்கும் போது விக்கிப்பீடியா அணுக்கம்பெரிய விசயம் இல்லை :) தமிழ் விக்கிப்பீடியாவில் முன்பை விட தற்போது நிருவாகப்பொறுப்பு வகிப்பவர்களின் மீதான எதிர்பார்ப்பும் பொறுப்பும் கூடியுள்ளது. முந்தைய வேகத்தில் அடுத்தடுத்து புதிய நிருவாகிகள் கிடைப்பார்களா என்பது ஐயமே. ஏற்கனவே உள்ளவர்களையும் இக்காரணம் கொண்டு நீக்குவதால் பயன் ஒன்றும் இல்லை. திரும்ப வருபவர்களுக்காக அடிக்கடி தேர்தல் நடத்துவதும் தேவையற்ற உழைப்பு விரயம். எனவே, ஐந்தாண்டு காலம் என்பது போதுமான இடைவெளி. தினேசுகுமார் சொல்வது போல் நீக்கி விட்டு விளக்கம் கேட்காமல், முதலில் விளக்கம் கேட்டுப் பிறகு நிருவாக அணுக்கத்தை விலக்கிக் கொள்ளலாம்.

நிருவாக அணுக்கத்தைத் தக்க வைக்க விரும்பும் நிருவாகிகள் அடுத்த ஒரு ஆண்டில் 500 கட்டுரை வெளித் தொகுப்புகள் உட்பட சில நிருவாகப் பணிகளையும் கவனித்திருந்தால் போதுமானது என்று தோன்றுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 11:27, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

பொதுவாக நிர்வாக அணுக்கம் போன்ற மேலதிக அணுக்கங்களை நீக்குவது பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டே, அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அல்ல :). ஆனால் மற்ற பெரிய விக்கிகளில் உள்ளது போல கடுமையான விதிமுறைகள் இல்லமால் (COI இருக்கலாம், நானும் விக்கி விடுப்பில் தான் உள்ளேன் :P), இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு எந்தவொரு தொகுப்பு/நிர்வாக செயல்பாடு செய்யாத பயனர்களின் அணுக்கத்தை நீக்குவது நல்லது. நீக்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் மின்னஞ்சல் மற்றும் பேச்சுப் பக்கம் மூலம் தெரியப்படுத்திவிட்டு அவர்கள் பதிலளிக்கவில்லை எனில் நீக்குதல் பல விக்கிகளில் நடைமுறையில் உள்ளது.--16:23, 30 சூலை 2014 (UTC)

சரி, உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் :)

  • கடந்த 3 ஆண்டுகளில் நிருவாகத் தொகுப்புகள் செய்யாதவர்களிடம் விளக்கம் கேட்டு நிருவாக அணுக்கம் நீக்கலாம்.
  • நிருவாக அணுக்கத்தைத் தக்க வைக்க விரும்புவோர் அதன் பிறகு வரும் ஆண்டில் 500 முதற்பக்கத் தொகுப்புகள் உள்ளிட்ட சில நிருவாகத் தொகுப்புகளையும் செய்ய வேண்டும். இல்லை எனில், அடுத்த ஆண்டு முடிவில் ஒரு முன் அறிவிப்பு இட்டு நிருவாக அணுக்கம் விலகப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் சூலை 31 அன்று மட்டும் இவ்வாய்வை மேற்கொள்வது போதுமானது.

இவ்விரண்டுக்கும் ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை வாக்குகளை இட்டால், உடன் முடிவெடுக்கலாம். --இரவி (பேச்சு) 21:30, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]


ஆதரவு[தொகு]

நடுநிலை[தொகு]

-- mohamed ijazz(பேச்சு) 07:16, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு[தொகு]

ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்றால் அதற்குமேல் அவரை நிர்வாகப் பயனராக வைத்திருக்க வேண்டியதில்லை. ஐந்து ஆண்டுகள் என்பது மிக அதிகம். ஆனால் நிர்வாக அணுக்கத்தினை இழந்த ஒருவர் மீண்டும் அணுக்கம் கோரினால் அதனை விரைந்து வழங்கும் நடைமுறையினை வேண்டுமானால் தமிழில் வைத்திருக்கலாம். (குறித்த அணுக்கத்தினை இழக்கக்கூடிய ஒருவராக இக்கருத்துக்களைப் பதிவுசெய்கிறேன்) நன்றி. கோபி (பேச்சு) 15:27, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மீண்டும் வழமையான நிருவாக அணுக்கத் தேர்தலில் பங்கு பெறுவதில் சிக்கல் உள்ளதாக உணர்கிறீர்களா? ஒரு பேச்சுக்கு, ஒருவர் 20 ஆண்டுகள் கழித்து வந்து மீண்டும் நிருவாக அணுக்கம் கோரினால் அப்போதுள்ள விக்கிப்பீடியா பயனர் சமூகம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் :)?--இரவி (பேச்சு) 15:42, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சிக்கலென்றில்லை; அது ஒரு மேலதிக சுமையாக இருக்கும். நான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் பின்னர் வர முயன்றேன். குறுங்கட்டுரைத் துப்பரவாக்கம் நோக்கியதாக அது இருந்தது. (துப்பரவாக்கம் முக்கியமல்ல விக்கிக் கொள்கைகளே முக்கியம் எனும் சூழலை உணர்ந்தபோது ஆர்வமிழந்துவிட்டேன்) மீண்டும் தேர்தல் என்றால் எனக்கு ஆர்வமிருந்திருக்காது. அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே மேற்கூறிய கருத்து அமைந்தது. தேர்தலின்றி வருவதற்கான காலத்தினை 5 ஆண்டுகள் என வேண்டுமானால் வரையறுக்கலாம். நன்றி. கோபி (பேச்சு) 13:29, 7 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கருத்து[தொகு]

  1. //500 முதற்பக்கத் தொகுப்புகள் உள்ளிட்ட சில நிருவாகத் தொகுப்புகளையும் செய்ய வேண்டும்.// 500 முதற்பக்கத் தொகுப்புகள்? கட்டுரை வெளி தொகுப்புகள் என நினைக்கிறேன். சில நிர்வாகத் தொகுப்புகள் எனில் எவ்வளவு என வரையறுத்தல் நல்லது. மேலும் எவை எவை நிர்வாகத் தொகுப்புகள் (நீக்கல், தடுத்தல், பூட்டுதல், காக்கப்பட்ட பக்கத்தை தொகுத்தல் போல) எனவும் வரையறுத்தல நல்லது, இல்லையெனில் பிற்காலத்தில் இதில் முரண்பாடுகள் எழலாம். //* ஒவ்வொரு ஆண்டும் சூலை 31 அன்று மட்டும் இவ்வாய்வை மேற்கொள்வது போதுமானது.// அப்படியெனில் ஆகஸ்ட் மாதத்தில் ஒருவரின் மூன்று வருடம் முடிந்தால் அடுத்த வருடம் ஜூலை வரை காத்திருக்க வேண்டுமா?--சண்முகம்ப7 (பேச்சு) 16:17, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
    • மேலும் இது போல கொள்கை உரையாடல்கள் நடக்கும் பொது தள அறிவிப்பு இடலாமே? --சண்முகம்ப7 (பேச்சு) 16:19, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
      • ஆம், கட்டுரை வெளித் தொகுப்புகள் தான் (தூக்கக் கலக்கம் :) ). பக்கங்களை நீக்கல், பூட்டுதல், பயனர்களைத் தடுத்து வைத்தல், பக்கங்களை வரலாற்றுடன் ஒன்றிணைத்தல், மீடியாவிக்கி பெயர்வெளியில் தொகுத்தல் ஆகியவற்றை நிருவாகச் செயற்பாடுகளாக கருதலாம். இது போல் அடுத்து வரும் ஆண்டில் 50 தொகுப்புகளாவது செய்திருக்க வேண்டும் எனக் கொள்வோமா? ஒவ்வொரு நிருவாகியையும் தனித்தனியாக அலசிப்பார்த்து ஆண்டு முழுக்க இது போன்ற விளக்கம் கேட்க வேண்டாமே என்று தான் குறிப்பிட்ட ஒரு நாளைப் பரிந்துரைத்தேன். ஒரு சிலரின் ஓய்வுக் கால வரையறை முன்னே பின்னே மாறும் என்பது அவ்வளவு பெரிய சிக்கலாகத் தோன்றவில்லை. இதில், இவ்வளவு இறுக்கம் தேவையில்லே. நீங்களே சொன்னது போல் இது ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு, பராமரிப்பு நடவடிக்கை தான். இறுக்கம் தேவை இல்லை. --இரவி (பேச்சு) 19:13, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]
        • அடுத்து வரும் ஆண்டில் 50 நிர்வாகத் தொகுப்புகளாவது செய்திருக்க வேண்டும் எனபது சரியாகப் படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை என்பதை விட வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை அல்லது மற்ற விக்கிகளில் உள்ளது போல காலக்கெடு முடிந்தவுடன் செயல்படுத்துதல் நல்லது எனத் தோன்றுகிறது :). Shanmugamp7--15:56, 1 ஆகத்து 2014 (UTC)
  2. //கடந்த 3 ஆண்டுகளில் நிருவாகத் தொகுப்புகள் செய்யாதவர்களிடம் விளக்கம் கேட்டு நிருவாக அணுக்கம் நீக்கலாம்// செயற்பட்டுக்கொண்டு இருக்கும் ஒரு நிர்வாகி கட்டாயம் நிர்வாகத் தொகுப்புக்கள் செய்யவேண்டும் என்பதில்லை. எனவே, நிர்வாகத் தொகுப்புக்களைச் செய்யாதவர்களின் நிர்வாக அணுக்கம் நீக்க வேண்டும் என்பது சரியாகாது. நிர்வாக அணுக்கத்தை நீக்குவது பாதுகாப்புக் காரணங்களுக்கே என்றால், செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிர்வாகி தனது அணுக்கத்தைத் தக்கவைப்பதற்கு நிர்வாக அணுக்கத்தைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற விதி தேவையற்றது. ஆனால் "செயற்படுகின்ற நிர்வாகி" என்பதற்கான வரைவிலக்கணம் என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஒருவர் நிர்வாக அணுக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு (குறைந்தது 100?) தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் கடைசி ஆண்டில் 50க்கு மேல் தொகுப்புக்கள் செய்திருந்தால் இந்த 100 தொகுப்பு எண்ணிக்கை நிபந்தனை கவனிக்கப்படத் தேவையில்லை.
    • நிர்வாக அணுக்கம் நீக்குவதற்கான விளக்கம் கேட்டபின் வரும் ஆண்டில் குறைந்தது 100 தொகுப்புக்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கலாம்.
    • சாதாரண சூழ்நிலைகளில் செயற்படாத நிர்வாகிகளின் அணுக்கம் நீக்குவது அவசரமான ஒரு விடயம் அல்ல என்பதால், ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஆய்வை மேற்கொள்வது போதுமானது என்பதே எனது கருத்து. அவசரமான தேவை ஏற்படும் சூழ்நிலைகளைக் கையாள்வதற்காகச் சிறப்பு வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதும் சாத்தியமே.
    • அதே வேளை தொகுப்பு நிபந்தனைகளை நிறைவு செய்யாத நிர்வாகிகள் வேறு வழிகளில் தமிழ் விக்கியின் பணிகளில் ஈடுபட்டிருக்கக்கூடும். இத்தகையவர்களின் நிர்வாக அணுக்கங்கள் நீக்கப்படாமல் இருப்பதற்கான மாற்று வழிமுறைகளும் தேவை.
    • ---மயூரநாதன் (பேச்சு) 20:01, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
    1. //அதே வேளை தொகுப்பு நிபந்தனைகளை நிறைவு செய்யாத .. // 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 02:41, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
  3. முதலில் அணுக்கம் பெற்றவர்களை, தொகுப்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும். அல்லது அணுக்க நீக்க உள்ளவர்களை வரிசைப்படுத்த வேண்டும். பிறகு அவர் எம்முன்னேற்றத்தை தமிழ்விக்கியில் செய்தார் என்ற அலகைப் பின்பற்றுவது, நன்அழகாகும்;)
    • முன்னேற்றத்தை தமிழ் விக்கிக்கு தந்த ஒருவரிடம், பிற மொழியினரின் நீக்கல்விதியைக் கூறி அவரின் கருத்தறிய வேண்டும். அது அனைவருக்கும் பொருத்தமானதாக இருப்பின், அதனை பொதுவிதி ஆக்கலாம். இத்தகைய விதித் தொகுப்பு அவரை மதிப்பதாகவும் இருக்கும், விக்கியின் வளர்ச்சிக்கும் நிரந்தரமாக உதவும்.
    • ஒவ்வொன்றுக்கும் நாம் விதிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கத் தேவையில்லை. பிற மொழியினர் பின்பற்றும் நடைமுறை நமக்கு ஒவ்வாது என்றால் மட்டுமே, அது குறித்தே, உரையாட விருப்பம். இதனால் காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. நமது கட்டுரைத்தரவுகளில் பெரும்பாலானவை பிற மொழியினரின் கட்டுரைத் தரவு தானே? அதுபோல நடைமுறைகளின் தரவைப் பின்பற்றவே எனக்கு விருப்பம். விக்கிமீடியாத் தேரை இழுக்கும் வடங்களுள், தமிழ் வடமும் ஒன்றே. அனைவரும் ஒன்றுகூடி, அனைத்துத் திட்டங்களையும் வளர்ப்போமாக!வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:41, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்க விலக்கல் தொடர்பான உலகளாவிய விதியை ஒரே வரியில் சொல்லலாம்: இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நிருவாகப் பங்களிப்பு அளிக்காவிட்டால், நிருவாக அணுக்கம் விலக்கிக் கொள்ளப்படும். இது போல் எளிமையான விதியை வகுப்பது நன்று. மேலும் மேலும், துணை விதிகளையும் நடைமுறைகளையும் சேர்ப்பது நிருவாக அணுக்கத்தை ஒரு பதவி, பொறுப்பு, மரியாதை, சிறப்பு என்ற நோக்கில் அணுகுவதாலே வருகிறதோ என்று தோன்றுகிறது. இந்த அணுகுமுறை வேறு பல வகைகளில் தமிழ் விக்கிப்பீடியா சூழலுக்கு இடர்களைக் கொண்டு வரலாம். எனவே, நிருவாக அணுக்கம் தொடர்பான பிம்பத்தை உடைப்பதும் நன்றே. நல்ல பங்களிப்பாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அணுக்கத்தைத் திரும்பவும் தேர்தல் மூலம் பெற முடியும். எப்படி ஆயினும், எளிமையான விதி ஒன்றை இணக்க முடிவுடன் எட்டுவது நன்று. அண்மைய பல உரையாடல்களைப் போல் இதில் இணக்க முடிவு காண முடியவில்லை என்றால், உலகளாவிய விதி தானாகவே நடைமுறைக்கு வரும் என்பதையும் கவனிக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 05:17, 2 ஆகத்து 2014 (UTC) 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:36, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்
இப்பிரச்சினையைக் கையாள விக்கிமீடியா நிறுவனத்திடமே விட்டு விடலாம் என்பது எனது கருத்து.--Kanags \உரையாடுக 02:47, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
விக்கிமீடியா நிறுவனத்திடமே விட்டு விடலாம். --AntonTalk 03:28, 6 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 03:32, 6 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் விக்கிமீடியா நிறுவனத்திடமே விட்டு விடுவதால் பெரிய இழப்பு எதுவும் நேராதென நினைக்கிறேன். --மணியன் (பேச்சு) 04:01, 6 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

அதே உலகளாவிய விதியை, வேறு துணை விதிகள் இன்றி, நாமும் பின்பற்றலாம். ஆனால், விளக்கம் கேட்கும் பொறுப்பை நாமே வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம், ஆங்கிலத்தில் சரியாக விளக்கம் முடியாத பயனர்கள் தமிழில் முறையான விளக்கம் அளிக்கலாம். தெரியாத மேல்-விக்கிக்காரர்களிடம் (அதிகாரிகள்?) விளக்கிக் கொண்டிருப்பதை விட, தம்மைத்தேர்ந்தெடுத்த சமூகத்திடமே விளக்கம் தருவது முறையாக இருக்கும். தவிர, அந்தந்த விக்கிச்சமூகங்களில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாத போது தான் நிருவாக அணுக்கம் தர, விலக்க மேல் விக்கியை நாடுவார்கள். மிகக் கூடுதலான நிருவாகிகளை கருத்தொருமித்து தேர்ந்தெடுக்க முடிந்த நாம், அணுக்கத்தை விலக்கும் பொறுப்பையும் நம் கையில் வைத்திருப்பது நமது தன்னாட்சிக்குத் தகுந்ததாக இருக்கும். --இரவி (பேச்சு) 06:04, 6 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மேல் விக்கி கொள்கையை பின்பற்றுவது நல்ல முடிவு. இதனை மேலாளர்கள் செயல்படுத்துவர். குறிப்பிட்ட இடைவெளிகளில் அனைத்து விக்கிகளிலும் இரண்டு ஆண்டுகாலத்திற்கு மேல் பங்களிக்காதவர்களை script மூலம் கண்டறிந்து அவர்களின் பேச்சுப் பக்கத்தில் தெரிவிப்பார். அந்த குறிப்பிட்ட பயனர் தொடர்ந்து பங்களிக்க விரும்பினால் தனது விக்கியில் ஆலமரத்தடி போன்ற பொது பக்கத்தில் உரையாட வேண்டும். நாம் ஏதாவது முடிவெடுத்து மேலாளர்களிடம் தெரிவித்தால் அவர்கள் நீக்க மாட்டார்கள் இல்லையேல் ஒரு மாதம் கழித்து குறிப்பிட்ட பயனரின் அனுமதி நீக்கப்படும்--சண்முகம்ப7 (பேச்சு) 16:44, 6 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இந்த ஏற்பாடு போதுமானது. ஆதரவு.--இரவி (பேச்சு) 19:14, 6 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 04:21, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 05:23, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]


சண்முகம்ப7, மேற்கண்ட புரிந்துணர்வை தனிக் கொள்கையாக மேல் விக்கியில் தெரிவிக்க வேண்டுமா இல்லை இப்படியே விட்டு விடலாமா? ஒரு மாத ஆலமரத்தடி உரையாடல், அதன் பிறகு தமிழ் விக்கியின் முடிவை மேலாளர்கள் செயற்படுத்துவது என்பதைத் தனிக் கொள்கையாக அறிவிக்க வேண்டுமா?--இரவி (பேச்சு) 13:40, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மேலே நான் குறிப்பிட்டது மேல் விக்கியில் உள்ள கொள்கை தான். எனவே நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. இதன் படி Santhoshguru மற்றும் Trengarasu நிர்வாக அணுக்கம் ஆகஸ்ட் 17க்குப் பிறகு நாம் ஏதும் தெரிவிக்கவில்லையெனில் தானாகவே நீக்கப்படும்.--சண்முகம்ப7 (பேச்சு) 08:38, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சரி, சண்முகம்ப7. அப்படியென்றால் இந்த உரையாடலை இத்துடன் முடித்துக் கொள்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 19:45, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

குறிப்பு[தொகு]

நீக்கம் என்பது தவறாகச் செயல்படுவோருக்கு மட்டுமே இருத்தல் வேண்டும்.
செயல்படாதவர்களை நீக்குதல் நன்றன்று
முன்பு செயல்பட்டதற்கு நன்றி நீக்கமா? பண்போடு செயல்படுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 09:59, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]