விக்கிப்பீடியா:தர மேம்படுத்தல் யோசனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு விக்கிப்பீடியாவின் தர மேம்படுத்தலுக்கான யோசனைகள் மற்றும் கருத்துகள் பகிரப்படுகின்றன.

கூகுள் புக்சு[தொகு]

F

மேற்கோள் வடிவமைப்பு[தொகு]

தமிழ் விக்கியில் மேற்கோள் தரும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள்,

  1. மேற்கோள்களுக்கான மூல நூலை மூல நூல்கள் பகுப்பில் கொடுக்க வேண்டும்.
  2. மேற்கோள்களுக்கான மூல நூலின் பக்கம் அல்லது வாக்கியங்களை மேற்கோள்கள் பகுப்பில் கொடுக்க வேண்டும்.

உதாரண கட்டுரை[தொகு]

முதலாம் மொக்கல்லானன் அல்லது முதலாம் முகலன் (பொ.பி. 497 -515) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தில் மூன்றாம் மன்னனாவான். இவனது மாற்றாந்தாய் மகனான முதலாம் கச்சியபன் (பொ.பி. 479 - 497]] மௌரிய மன்னர்கள் வம்சத்தில் முதலாமனவனும் மொக்கல்லானன் மற்றும் காசியபனின் தந்தையுமானவனான தாதுசேனன் என்பவனைச் சிறையில் அடைத்து கொன்றும் விட்டு அரசக்கட்டிலில் ஏறியவன். காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான இந்த மொக்கலானன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான். அவன் திரும்பி வந்து தன்னைத் தாக்கக் கூடும் என்றெண்ணிய காசியப்பன் சீககிரி (தற்போதுள்ள அநுராதபுரத்திலிருந்து தென்கிழக்கே இருக்கும் சிகிரியா) என்னும் மலைக்கோட்டை அரண்மனையைக் கட்டி அங்கிருந்து அரசாண்டான். இவனுடைய பதினட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் மொக்கல்லானன் தன் நண்பர்களான தமிழ்நாட்டு நிகந்தர்களை இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்தான். தான் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தவுடன் காசியப்பன் தன் வாளால் தன் தலையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு முகலனே இலங்கையை அரசாண்டான்.[1]

மேலும் தன் தந்தையான தாதுசேனனை கொல்ல காசியப்பனுக்கு உதவியாய் இருந்த 1000 பேர்களையும் முகலன் கொன்றுவிட்டான். மற்ற சில பேர்களின் மூக்கையும் காதையும் அறுத்து அவர்களை நாடு கடத்தியும் விட்டான். இதனால் தமிழகத்திலிருந்து தன் மீது படையெடுத்து வருவார்கள் என்பதையறிந்த இவன் பல ஏற்பாடுகளை செய்து இலங்கையை 18 ஆண்டுகள் அரசாண்டான்.[2] இவனுக்குப் பிறகு இவனுடைய மூத்த மகனான குமார தாதுசேனன் என்பவன் இலங்கையை அரசாண்டான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சூல வம்சம், 39ஆம் பரிச்சேதம், 1 - 28
  2. சூல வம்சம், 39ஆம் பரிச்சேதம், 29 - 58

மூலநூல்[தொகு]

கவனிக்க வேண்டியவை[தொகு]

  1. இதில் மேற்கோள்கள் தலைப்பில் சூல வம்சத்தின் எத்தனாவது வரியில் இருந்து தகவல் எடுக்கப்பட்டது என்றுளது.
  2. மூல நூல் பகுப்பில் நூல் பற்றிய தகவல் உள்ளது. அதாவது நூலாசிரியர், நூல் அச்சகம், பதிப்பாண்டு போன்றவை இருக்க வேண்டும்.

இந்த முறையை தமிழில் பின்பற்றுவதில்லை என்பது போல் தெரிகிறது. எனக்கும் இது தற்பொதே உரைத்தது. இனிமேல் கட்டுரை இந்த முறையிலேயே உருவாக்க உள்ளேன். பழய கட்டுரைகளையும் மாற்ற வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:13, 9 மே 2012 (UTC)[பதிலளி]

மேற்கோள் சேர்க்கும் கருவி[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போன்று பல்வேறு வகையான மேற்கோள்கள் இணைக்கும் கருவியை (Cite Button, which includes cite web, cite news, cite book, cite journal) கருவிப்பெட்டியில் இணைத்தால் உச்சாத்துணை, குறிப்புகள், மேற்கோள்கள் போன்றவற்றை இணைக்க இலகுவாக இருக்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:28, 9 மே 2012 (UTC)[பதிலளி]

விருப்பத்தேர்வில் ProvIT! கருவியை செயலாக்கி, நீங்கள் கூறியதற்கு நிகரான கருவியைப் பயன்படுத்த முடியும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 10:48, 9 மே 2012 (UTC)[பதிலளி]

ProvIT செயல்படும் முறையை விளக்க ஏதும் பக்கமுளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:57, 9 மே 2012 (UTC)[பதிலளி]

நன்கு வேலை செய்கிறது, ஸ்ரீகாந்த், நன்றி! :-) @தென்காசி சுப்பிரமணியன்: ProvIT செயல்பாட்டிற்கு இலகுவாகவே உள்ளது, முயற்சிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:02, 9 மே 2012 (UTC)[பதிலளி]
ProvIT ஆங்கில உதவிப்பக்கம். இந்த பக்கத்தின் குறுகிய தமிழாக்க உதவிப்பக்கம் இங்கு உருவாக்கினால், பல பயனர்களுக்கு பயன்படும். தொகுத்தல் சுருக்கத்தில் அப்பக்க இணைப்பை சேர்க்கலாம், அதன் மூலம் நிறைய பயனர்கள் ProvIT பற்றி அறிய வாய்ப்புள்ளது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:38, 10 மே 2012 (UTC)[பதிலளி]
தமிழ் உதவிப்பக்கம் விக்கிப்பீடியா:புரூவ் இட்‎‎. சரியான இடத்திற்கு நகர்த்தவும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:21, 10 மே 2012 (UTC)[பதிலளி]