விக்கிப்பீடியா:ஐபீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐபீம் ஆய்வு (HighBeam Research) என்பது ஆங்கிலத்தில் அமைந்த செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், கல்வியியல் ஆய்விதழ்கள், செய்தி வடங்கள், வணிக இதழ்கள், கலைக்களஞ்சியங்கள் என்பனவற்றிற்கான கட்டண இணையச் சேவையாகும். இத்தளம் 6500இற்கும் மேற்பட்ட வெளியீடுகளிலிருந்து 80 மில்லியன் வரையான கட்டுரைகளுக்கான அணுக்கத்தைக் கொண்டுள்ளது.

இலவச ஏழு நாட்பரிசோதனையைத் தவிர (கடன் அட்டை அவசியம்!), ஐபீமுக்கான அணுக்கத்துக்கு மாதமொன்றுக்கு $30 அல்லது முதலாம் ஆண்டுக்கு $200உம் அடுத்த ஆண்டுகளுக்கு $300உம் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனாலும் மார்ச் 13, 2012இலிருந்து இலவச, முழு அணுக்கக் கணக்குகளை விக்கிப்பீடியர்களுக்கு ஓராண்டுக்கு வழங்குவதற்கு ஐபீம் ஒப்புக்கொண்டது. விக்கிப்பீடியர் ஒருவர் மேற்கூறியபடி கணக்கொன்றைத் தொடங்குவதானால் அவருடைய விக்கிப்பீடியாக் கணக்குத் தொடங்கி ஓராண்டாகவும் அவர் குறைந்தபட்சம் 1000 தொகுப்புகள் செய்தவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு இப்பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:ஐபீம்&oldid=1402307" இலிருந்து மீள்விக்கப்பட்டது