விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 9: சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 39,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது (படம்).
- 1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
- 1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.