வாழ்வு எனும் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வாழ்வு எனும் வட்டம் | |
| இயக்குனர் | கே. எஸ். பாலச்சந்திரன் |
|---|---|
| தயாரிப்பாளர் | எஸ். மதிவாசன் |
| கதை | கே. எஸ். பாலச்சந்திரன் |
| நடிப்பு | எஸ்.மதிவாசன் சித்திரா பீலிக்ஸ் கே.எஸ். பாலச்சந்திரன் பிரசாந்தி பத்மனாதன் துஷி ஞானப்பிரகாசம் அன்ரன் பீலிக்ஸ் ய்சோ கந்தையா சாம் பீலிக்ஸ் |
| இசையமைப்பு | தாரணி மதிவாசன் |
| ஒளிப்பதிவு | இந்திரசித்து பிரியா |
| படத்தொகுப்பு | எஸ். மதிவாசன் |
| விநியோகம் | பாரதி ஆட்ஸ் |
| வெளியீடு | 2004 |
| நாடு | கனடா |
| மொழி | தமிழ் |
இக்குறுந்திரைப்படம் 2004 ஆகஸ்ட் மாதம் 14ந் திகதி நடைபெற்ற 3வது சர்வதேச குறுந்திரைப்படப் போட்டியில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றது.
இக்குறுந்திரைப்படத்தில் மதிவாசன், சித்திரா பீலிக்ஸ், பிரசாந்தி, அன்ரன் பீலிக்ஸ், துஷி ஞானப்பிரகாசம், யசோ கந்தையா, சாம் பீலிக்ஸ் ஆகியோருடன் கே.எஸ்.பாலச்சந்திரனும் நடித்தார்.
இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். பாலச்சந்திரனே ஏற்றுக்கொண்டார்.
இசையை பவதாரணி மதிவாசனும், படப்பிடிப்பை சித்து - பிரியா ஆகியோரும், படத்தொகுப்பு, தயாரிப்பு ஆகியவற்றை எஸ்.மதிவாசனும் கவனித்துக்கொண்டார்கள்.
[தொகு] டிவிடி வடிவில்
பிரான்ஸில் தயாரான "பேரன் பேர்த்தி", "எது மட்டும்" ஆகிய குறுந்திரைப்படங்களுடன், "வாழ்வு எனும் வட்டம்" டிவிடி வடிவில் தொகுப்பாக, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 2006ல் வெளியிடப்பட்டது.