வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழை உலக அளவில் உற்பத்தி மற்றும் உணவாக உட்கொள்வதிலும் வாழை நான்காவது இடத்தை பெறுகிறது. இவைகள் ஆசியாவில் தோன்றி, பரவி, இன்று உலகின் 130 நாடுகளில் வளர்க்கின்றன. 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோராயமாக ஆயிரம் கோடி டன்ஸ் விளைவிக்கப்படுகிறது 1. வாழையில் ஏற்படும் பக்டேரியா, பூஞ்சை, தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியெய் கடுமையாக பாதிக்ககூடியன 2,3 . வேதி மருந்துகளினால் பக்டேரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயெய் அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.

வாழையெய் தாக்கும் தீ நுண்மங்கள்

வாழை நுனி மொசைக் நுண்மம் 4 - Banana bract mosaic virus

இவைகள் நேர்மறை (+) கொண்ட,ஓரிழை ஆர்.என்.எ தீ நுண்மம் (RNA) ஆகும். இவைகள் போட்டி (Poty) பிரிவில் வருபவை ஆகும்.

வாழை குறை மொசைக் நுண்மம் 5 - Banana mild mosaic virus , வாழை தீ நுண்மம் X 6- Banana virus X (BVX) இவை இரண்டும் பிலேக்ஸ்சி விரிடே (Flexiviridae) குடும்பத்தில் வருபவை ஆகும்.

வாழை இழை கொத்து தீ நுண்மம் 7- Banana bunchy top virus

இவைகள் ஓரிழை உடைய டி.என்.எ ( DNA) தீ நுண்மம் ஆகும். நானோ நுண்மந்தில் (nano virus) என்னும் பிரிவில் வருபவை.

வாழை வரி நுண்மம்- 8 Banana streak virus

பார ரெட்ரோ நுண்மந்தில் (pararetro virus) வருவது. மேலும் மரபு இழையில் உள்ள வேறுபாட்டை பொருந்து, மூன்று வகையாக பிரிக்கலாம்.

வாழை வரி தங்க விரல் நுண்மம் -Banana streak Gold Finger virus (BSGFV),

வாழை வரி மைசூர் நுண்மம்- Banana streak Mysore virus (BSMyV)

வாழை வரி ஒபனோ ல் எவாய் நுண்மம் - Banana streak Obeno L’Ewai virus (BSOLV)

வாழை மறு- இறத்தல் நுண்மம் 9- Banana die-back virus, நைசிரியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மேலும் தீ நுண்மங்களின் பல்கி பெருகும் போது, அதன் மரபு இழைகள் நகலாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வினைகளின் ஈடுபடும் நொதிகள் செயல்கள் மிகையாக இருந்தாலும், மரபுஇழைகளின் ஏற்படும் பிழை-ஒற்றுகளை (தவறுகளை) (mis-match) சரி செய்ய முடியாத தன்மையில் உள்ளன (Proof-reading activity). இதனால் ஒரே தீ நுண்மந்தின் மரபு இழைகளின் வரிசையில் பல மாறுதல்கள் அல்லது வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும் ஒரே வாழையெய் வேறுபட்ட குடும்பத்தை சேர்ந்த பல தீ நுண்மங்கள் தாக்கும் பொழுது, அவைகளிடையெய் ஏற்படும் உள்-இணைவுகள் அல்லது மறு-கலத்தல்கள் (Recombination) புதிய தீ நுண்மங்களை ஏற்படுத்துகின்றன. இவைகள் முன்பை விட வீரியம் கூடுதலாகவும் பெருத்த இழப்புகளையும் ஏற்படுத்த வல்லன.

கலைச்சொற்கள்[தொகு]

பிழை-ஒற்று-mis-match

மேற்கோள்கள்[தொகு]

1. Arias, P., Dankers, C., Liu, P., Pilkauskas, P., 2003. Overview of world banana production and trade. In: The world banana economy, 1985-2002. Food and Agriculture Organization of the United Nations (FAO), Rome, pp 1–97

2. Panhwar, M.H., 1991. The banana epidemic in Sindh: Imported disease or deliberate sabotage? Sindh Quarterly 19, 12-23.

3. Smith, M.C., Holt, J., Kenyon, L., Foot, C., 1998. Quantitative epidemiology of banana bunchy top virus disease and its control. Plant Pathol. 47, 177-187.

4.Thomas, J.E., Geering, A.D.W., Gambley, C.F., Kessling, A.F., White, M., 1997. Purification, properties and diagnosis of Banana Bract Msaic Potyvirus and its distinction from Abaca Mosaic Potyvirus. Phytopathol. 87, 698-705.

5. Gambley, C.F., Thomas, J.E., 2001. Molecular characterization of Banana mild mosaic virus, a new filamentous virus in Musa spp.. Arch. Virol. 146, 1369-1379.

6. Teycheney, P.Y., Marais, A., Svanella-Dumas, L., Dulucq, M.J., Candresse, T., 2005. Molecular characterization of banana virus X (BVX), a novel member of the Flexiviridae family. Arch. Virol. 150, 1715-1727

7. . Harding, R.M., Burns, T.M., Hafner, G.J., Dietzgen, R.G., Dale, J.L., 1993. Nucleotide sequence of one component of the banana bunchy top virus genome contains a putative replicase. J. Gen. Virol. 74, 323-328

8. . Jaufeerally-Fakim, Y., Khorugdharry, A., Harper, G., 2006. Genetic variants of Banana streak virus in Mauritius. Virus Res. 115, 91-98

9. Hughes, J.d’A., Speijer, P.R., Olatunde, O., 1998. Banana die-back virus: a new virus infecting banana in Nigeria. Plant Dis. 82, 129.