வத்திக்கான் நகர்
| Status Civitatis Vaticanae Stato della Città del Vaticano வத்திக்கான் நகர-நாடு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் ஓ பேறுபெற்ற உரோமையே (இலத்தீன் மொழி) Hymn and Pontifical March |
||||||
| தலைநகரம் | வத்திக்கான் நகர்1 |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | இலத்தீன்2, இத்தாலிய மொழி, பிரெஞ்சு and யேர்மன் மொழி. | |||||
| அரசு | Theocratic Absolute elective3 monarchy |
|||||
| - | திருத்தந்தை | பிரான்சிசு | ||||
| - | வெளியுறவு அமைச்சர் Secretary of State | கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே Tarcisio Cardinal Bertone | ||||
| - | பொறுப்பாளர் | பேராயர் ஜொவான்னி லஜோலோGiovanni Lajolo | ||||
| தன்னாட்சி | இத்தாலி பேரரசிடமிருந்து | |||||
| - | இலாத்தரன் உடன்படிக்கை | பெப்ரவரி 11 1929 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 0.44 கிமீ² (232வது) 0.17 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2009 மதிப்பீடு | 826 (229வது) | ||||
| நாணயம் | ஐரோ (€)4 (EUR) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .va | |||||
| தொலைபேசி | +395 | |||||
| 1 Vatican City is a city-state. 2 Used for official purposes. De facto languages are Italian, German, Spanish, French, and Portuguese, with Italian the most commonly used. The language of the Papal Swiss Guard is German. The diplomatic language is French. 3 Suffrage limited to the College of Cardinals (see Government section below). 4 Prior to 2002, the Vatican lira (on par with the Italian lira). 5 ITU-T assigns code 379 to Vatican City. However, Vatican City is included in the Italian telephone numbering plan and uses the Italian country code 39. |
||||||
வத்திக்கான் நகர் (தமிழக வழக்கு:வாட்டிகன் நகர்) (Vatican City) இத்தாலி நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு சுதந்திர (தன்னாட்சி/இறையாண்மை) நாடாகும். மொத்தப் பரப்பளவு 44 எக்டயார் (எக்டேர்), (108.7 ஏக்கர்) மட்டுமேயான ஒரு சிறிய நாடாகும். உலகின் மிகச் சிறிய நாடும் இதுவே. இதன் தலைவர் திருத்தந்தையாவார். இவர் போப்பாண்டவர், பாப்பரசர் என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். வத்திக்கான் நகரத்தில் பாப்பரசரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூது (அப்போஸ்தலிக்க) அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் சமய மற்றும் முகாமைத்துவ மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது.
| வத்திக்கான் நகர் Vatican City* |
|
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | திருப்பீடம் (Holy See) |
| வகை | கலாச்சாரம் சார் |
| ஒப்பளவு | i, ii, iv, vi |
| மேற்கோள் | 286 |
| பகுதி† | ஐரோப்பா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1984 (8ஆவது அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் பெரும்பாலும் இலத்தீன் மொழியிலும் பிறப்பிக்கப்படுகின்றதன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் தனி-தனி கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடல்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் சாதாரண கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. ஆனால் இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.
1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த பாப்பரசு மாநிலங்களின்(756-1870) சுவடாக யாரும் கருதவில்லை. 1860-ஆம் ஆண்டு அப்பாப்பரசு நிலப்பகுதிகள் முழுதுமே இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. முடிவாக,ரோம் நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.
