வஸ்தோக் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| வஸ்தோக் 4 | |||||
|---|---|---|---|---|---|
| திட்டச் சின்னம் | |||||
![]() |
|||||
| திட்ட விபரம் | |||||
| திட்டப்பெயர்: | வஸ்தோக் 4 | ||||
| Call sign: | Беркут (Berkut - "Golden Eagle") | ||||
| பயணக்குழு அளவு: | 1 | ||||
| ஏவுதல்: | ஆகஸ்ட் 12, 1962 08:02:33 UTC Gagarin's Start |
||||
| இறக்கம்: | ஆகஸ்ட் 15, 1962 06:59 UTC |
||||
| கால அளவு: | 2d/22:56 | ||||
| Number of Orbits: | 48 | ||||
| Apogee: | 211 கிமீ | ||||
| Perigee: | 159 கிமீ | ||||
| காலம்: | 88.2 நிமிடங்கள் | ||||
| சுற்றுப்பாதை சாய்வு: | 65.0° | ||||
| திணிவு: | 4728 கிகி | ||||
| தொடர்புள்ள திட்டங்கள் | |||||
|
|||||
வஸ்தோக் 4 என்பது சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3 ஏவப்பட்ட ஒரு நாளில் இதுவும் ஏவப்பட்டது. இதன்மூலம், ஒரே நேரத்தில் இரு மனிதரை ஏற்றிய விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருந்த முதல் நிகழ்வு ஏற்பட்டது. இக் கலத்தில் விண்வெளிவீரர் பவெல் பொப்போவிச் பயணம் செய்தார். இரு விண்கலங்களும் பூமியைச் சுற்றியபோது இரு கலங்களும் 5 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் நெருங்கி வந்ததுடன், இரு கலங்களுக்கும் இடையில் வானொலித் தொடர்பும் நடைபெற்றது.
இத் திட்டம் பெரும்பாலும் திட்டமிட்டபடியே நடைபெற்றாலும், வஸ்தோக் 4 இன் உயிர்காப்பு முறைமை சரியாக இயங்காததால் வெப்பநிலை 10 °ச வரை இறங்கியது. பொப்போவிச் கொடுத்த சமிக்ஞை ஒன்றை, அவர் விரைவாகக் கலத்தைப் பூமிக்குக் கொண்டு வருமாறு கேட்டதாகப் பிழையாகப் புரிந்து கொண்ட தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தினர், வஸ்தோக் 4 இன் பறப்பைத் திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்தனர். இத் திட்டத்தின் மீள்கலம் மாஸ்கோவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இது வஸ்ஹோத் 2 கலத்தைப் போன்ற வடிவில் மாற்றப்பட்டுள்ளது.
|
|
||
|---|---|---|
| ஆளிலாதவை: | ஸ்புட்னிக் 4, ஸ்புட்னிக் 5, ஸ்புட்னிக் 6, ஸ்புட்னிக் 9, ஸ்புட்னிக் 10 | |
| ஆளேற்றியவை: | வஸ்தோக் 1, வஸ்தோக் 2, வஸ்தோக் 3, வஸ்தோக் 4, வஸ்தோக் 5, வஸ்தோக் 6 | |
| திட்டமிடப்பட்டவை: | வஸ்தோக் 7 - 13, வஸ்ஹோத் திட்டத்தின் பகுதியாக்கப்பட்டது. | |
