வஸ்தோக் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வஸ்தோக் ஏரி
Lake Vostok
வஸ்தோக் ஏரிLake Vostok - செயற்கைக்கோளில் இருந்து வஸ்தோக் ஏரி (நாசா)
செயற்கைக்கோளில் இருந்து வஸ்தோக் ஏரி (நாசா)
புவியமைவுக் கூறுகள் 77°30′S 106°00′E / -77.5, 106அமைவு: 77°30′S 106°00′E / -77.5, 106
வகை பனியாற்றஇ ஏரி
வடிநில நாடுகள் - அண்டார்க்டிக்கா
அதிக அளவு நீளம் 250கிமீ
அதிக அளவு அகலம் 50கிமீ
மேற்பரப்பளவு 15,690கிமீ
சராசரி ஆழம் 344மீ
அதிக அளவு ஆழம் ~1,000 மீ
நீர் கனவளவு 5,400 கிமீ3 ± 1,600 கிமீ3
இருப்புக் காலம் 13,300 ஆண்டுகள்
மேற்பரப்பின் உயரம் ~-500 மீ
தீவுகள் 1
குடியிருப்புகள் வஸ்தோக் மையம்

வஸ்தோக் ஏரி (Lake Vostok, உருசியம்: Озеро Восток, "கிழக்கு ஏரி") என்பது அண்டார்க்டிக்காவின் மேற்பரப்புக்குக் கிட்டவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 140 இற்கும் அதிகமான பனியாற்றடி ஏரிகளில் மிகப் பெரியதாகும். இதன் மேலுள்ள பனி கிட்டத்தட்ட 400,000 ஆண்டுகளாக இருந்தாலும், ஏரியில் உள்ள நீர் 15 முதல்[1][2] 25 மில்லியன் ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது[3].

வஸ்தோக் ஏரி கிழக்கு அண்டார்க்டிக் பனிக்கட்டிப் படலத்தில் தெற்குக் குளிர் முனையில் உருசியாவின் வஸ்தோக் நிலயத்தின் கீழே அமைந்துள்ளது. இந்த நன்னீர் ஏரியின் மேற்பரப்பு பனிக்கட்டி மேற்பரப்பின் கீழே கிட்டத்தட்ட 4,000 மீட்டர்கள் (கடல் மட்டத்திற்குக் கீழே கிட்டத்தட்ட 500 மீ) ஆழத்தில் உள்ளது.

உருசியாவின் ஆய்வாளர் குழு ஒன்று 2012 பெப்ரவரி 5 ஆம் நாள் பனி மேற்பரப்பைத் துளைத்து 3,768 மீ (12,400 அடி) நீள பனித்துளையை உருவாக்கி, வஸ்தோக் ஏரியின் மேற்பரப்பை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்[4]. வஸ்தோக் ஏரியின் நன்னீரின் மாதிரிகளை 2012 ஆம் ஆண்டின் இறுதியில் அண்டார்க்டிக் கோடைக் காலம் ஆரம்பத்திலேயே சேகரிக்க முடியும் என நம்பப்படுகிறது[5]. அதே வேளையில், ஏரியில் இருந்து நன்னீர் மாதிரிகளைச் சேகரிக்க தானியங்கி ஒன்றைக் கீழே அனுப்பவும் உருசியர்கள் தீர்மானித்துள்ளார்கள். பனிக்கட்டியின் கீழே உள்ள சூழ்மண்டலம் பல மில்லியன் ஆண்டுகளாக தனிமைப் படுத்தப்பட்டிருப்பதால் ஏரியின் நீர்ப்பகுதியில் வழக்கத்திற்கு மாறான உயிரினங்கள் அங்கு வாழலாம் எனவும் நம்பப்படுகிறது[5][6][7].

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=வஸ்தோக்_ஏரி&oldid=1386052" இருந்து மீள்விக்கப்பட்டது