வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வவ்வால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வௌவால்
புதைப்படிவ காலம்: 52–0 Ma
Late Paleocene – Recent
டௌன்செண்டி என்னும் பெருங்காது வௌவால்Townsend's big-eared bat, Corynorhinus townsendii
டௌன்செண்டி என்னும் பெருங்காது வௌவால்
Townsend's big-eared bat, Corynorhinus townsendii
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
உள்வகுப்பு: யூத்தேரியா
பெருவரிசை: Laurasiatheria[1]
வரிசை: கைச்சிறகிகள்
Chiroptera

Blumenbach, 1779
Suborders

See article

வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி. பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இவ்வௌவால்தான். இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரினங்களைத் தேர்ந்து வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்களான வகையியலாளர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera என்னும் வரிசையில் வைத்துள்ளார்கள். இவ்வௌவால்கள் பெரும்பாலும் (சுமார் 70%) எலி போன்ற சிறு முகம் (குறுமுகம்) உடையனவாகவும் பூச்சிகளையுண்பனவாகவும் உள்ளன.

இட மெய்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வெளவாலின் முப்பரிமாண காட்சிகளை காணச்செய்கிறது என ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது.[2] ஆங்கில அறிவியல் இதழான சயன்சு இல், ஏப்ரல் 18 அன்று ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ரெளசெட்டசு அகிப்தியக்கசு (Rousettus aegyptiacus) எனப்படும் எகிப்திய பழங்கள் உண்ணும் வெளவால் தன் இட மெய்மிகளாலேயே தனது முப்பரிமாண காட்சிகளை அனுபவித்துவருகிறது என கூறப்பட்டுள்ளது.[3][4]

பொருளடக்கம்

வகைகள் [தொகு]

Lavia frons
Scotophilus dinganii

இவ்வகை வௌவால்களை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்னும் உட்பிரிவில் உள்ள துரிஞ்சில்கள் என்பார்கள். மற்றுமோர் உட்பிரிவாகிய பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) வகை சற்றே உடல் பெரிதாகவும் நீண்ட முகம் (நெடுமுகம்) உடையதாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் பழம் தின்னிகள் ஆகும். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றை பறக்கும் நரி (flying fox) என்றும் அழைப்பர். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன.

குறும் கைச்சிறகி வகையச் சேர்ந்த சில வௌவால்கள் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பனவாகவும்(குருதியுறுஞ்சும் வௌவால்) உள்ளன. சில மீன் உண்ணுகின்றன.

உட்பிரிவுகள் [தொகு]

உடற்கூறு [தொகு]

தமிழகச் சிற்றின வௌவால்குஞ்சு
வௌவாலின் எலும்புக் கூடு

வௌவால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிறிய வௌவால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வௌவால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் ஃபாக்ஸ் (Flying fox) வௌவால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வௌவால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வௌவால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும்.

வௌவாலின் கடியினால் ஏற்படும் வெறிநோய் (rabies) [தொகு]

வெறிநாய் கடியினால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகிய ராபீசு போலவே பிற விலங்குகளில் இருந்தும் இவ்வகை நோய் உண்டாகலாம். பூனை, நரி, ராக்கூன் மற்றும் வௌவால் மூலமாகவும் இந்நோய் பற்றிக் கொள்ளலாம்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]

  1. Eick et al. (2005). "A Nuclear DNA Phylogenetic Perspective on the Evolution of Echolocation and Historical Biogeography of Extant Bats (Chiroptera)". Molecular Biology and Evolution 22: 1869. doi:10.1093/molbev/msi180. பப்மெட் 15930153. "Several molecular studies have shown that Chiroptera belong to the Laurasiatheria (represented by carnivores, pangolins, cetartiodactyls, eulipotyphlans, and perissodactyls) and are only distantly related to dermopterans, scandentians, and primates (Nikaido et al. 2000; Lin and Penny 2001; Madsen et al. 2001; Murphy et al. 2001a, 2001b; Van Den Bussche and Hoofer 2004).". 
  2. http://www.sciencenews.org/view/generic/id/349761/description/News_in_Brief_Bats_are_3-D_cartographers
  3. http://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
  4. http://www.sciencemag.org/content/340/6130/367

உசாத்துணை [தொகு]

  • கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு, சென்னை, 1963.
  • Nowak, Ronald M. 1994. " Walker's BATS of the World". The John Hopikins University Press, Baltimore and London.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வௌவால்&oldid=1406098" இருந்து மீள்விக்கப்பட்டது