வல்ட்டூர்னோ ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வல்ட்டூர்னோ | |
|---|---|
| மூலம் | ரொச்சேட்டா அ வல்ட்டூர்னோ அருகில் |
| வாயில் | திரேனியக் கடல் |
| பாயும் நாடுகள் | இத்தாலி |
| நீளம் | 175 கி.மீ |
| ஏற்றம் | ~ 500 மீ |
| சராசரி வெளியேற்றம் | 82.1 மீ³/வினாடி |
| வடிநிலப்பரப்பு | 5,550 சதுர கி.மீ |
வல்ட்டூர்னோ (Volturno) ஆறு தென் மத்திய இத்தாலியில் பாயும் ஒரு ஆறு. அப்பென்னைன் மலைத் தொடரில் உற்பத்தில் ஆகும் இவ்வாறு 175 கிமீ தூரம் ஓடி நாபொலி நகரருகே திரேனிய கடலில் கலக்கின்றது. ரோம் நகருக்கு தெற்கே அமைந்துள்ள இயற்கை அரண்களுள் ஒன்றாக உள்ளதால் இவ்வாறு வரலாற்றில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.