வலை 3.0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Web 3.0 (வலை 3.0) விரைவில் இணைய உலகை ஆளப்போவதாக பலராலும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் அது கொண்டுள்ள சிறப்பியல்புகளான சொற்பொருள் சார்ந்த இணையம்(Semantic Web) மற்றும் சுயமயமாக்கல் (Personalization) என்பனவே எனவும் கூறப்படுகிறது.

வலை 1.0 மற்றும் வலை 2.0

இதற்கு முன்பு இருந்த(வலை 1.0), இருக்கும்(வலை 2.0) வலை தொழில்நுட்பங்களை இங்கே காணலாம். இதில் வலை 1.0 ஆனது இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது. அப்போது பயன்பாட்டில் இருந்த இணையதளங்கள் வெறும் தகவல்களையும்(Information), மீத்தொடுப்புகளையும்(Hyperlinks) மட்டுமே கொண்டிருந்தவை. அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும். நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த வலை 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வலை 2.0 ஆனது சில அம்சங்களான இணைய பின்னூட்டம்(Comments), குறிச்சொல்(Tags), கூட்டுருவாக்கம்(Collaboration) மூலம் அறியப்பட்டது. இதனை சமூக வலை(Social Web)எனவும் கூறலாம். உதாரணமாக நம் விக்கிபீடியாவையே கூறலாம். பலரது "கூட்டுருவாக்கத்தில்" இது உருவாக அது சார்ந்து இருக்கும் சமூக இணைய அமைப்பே காரணம். இங்கே கண்ட அனைத்து வலை தொழில்நுட்பங்களும் வெறும் கருத்தளவில் மட்டுமே பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டு இருக்கின்றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இணையம் என்பது எப்போதும் இணையம் தான். நாம் அதை பயன்படுத்தும் முறையில், வேறு பல தொழில்நுட்பங்களால் தான் வளர்ச்சியே தவிர வேறு வழியில் இல்லை. அதனால் வலை 1.0, 2.0, 3.0 எனப்படுபவை எவராலும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறமுடியாது. பயன்பாட்டின் அடிப்படையில் வளரும் ஒன்றிற்கு நாம் சில பெயர்களை வைத்து அழைக்கிறோம். சிலர் முதன் முதலில் அந்த பெயர்களை கூறி அழைத்தனர்.

வலை 3.0

வலை 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் நுண்ணறிவு உள்ள தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். வ்லை 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். வலை 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். வலை 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். வலை 3.0 கால இணையம் சொற்பொருள் சார்ந்த இணையம்(Semantic Web) என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. சுயமயமாக்கலின் அடிப்படையில் உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே வலை 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்து கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, வலை 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.

ஒருவரின் தகவல் தேடிய வரலாறை கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க வலை 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே வலை 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது வலை 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் வலை 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் இணைய செயலிகளுக்கு வழியமைத்தது. தற்போது வலை 3.0 ஆனது தகவல்களை சிறப்பான வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் வலை 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Twitter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலை_3.0&oldid=2969896" இலிருந்து மீள்விக்கப்பட்டது