வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான இந்து சமய கடவுள்கள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

காப்பகம்[தொகு]

1[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/1

அக்னி தேவன்

அக்னி தேவன் இந்துக்களால் வணக்கப்படும் தெய்வம். இவர் தேவர்களின் புரோகிதராக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார். அக்னி தேவனுக்கு மூன்று உருவங்கள் உண்டு: நெருப்பு, மின்னல், சூரியன். சூரியனின் ஆற்றலாக அக்னி தேவன் விளங்குகிறார்.

இவர் வேதங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றார். நெருப்பின் அதிபதியான இவர் நெருப்பில் இடப்படும் நிவேதனங்களை ஏற்றுக்கொள்பவராக உள்ளார். வேள்விகளில் இடப்படும் நிவேதனங்களை மற்ற தெய்வங்களுக்கு அக்னி தேவனே எடுத்துச்செல்கிறார். அக்னி மற்ற தேவர்களைப் போல என்றும் இளமை உடையவராக கருதப்படுகிறார்.

இவர் தானாக பிறந்ததை குறிக்கும் வகையில், குச்சிகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கடைந்து நெருப்பை உருவாக்கும் அக்னிமத்தனம் சில இந்து சடங்குகளில் மேற்கொள்ளப்படுகிறது.


2[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/2

அக்னி தேவன்

குபேரன் இந்து சமயத்தில் செல்வத்தின் கடவுள் என்றும் செல்வத்தின் அதிபதி என்றும் இந்துக்கள் நம்புகின்றார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு.

குபேரனின் மனைவியாக சித்திரலேகா என்ற பெண்ணை இந்துக்கதைகள் கூறுகின்றன. நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்கள் குபேரனுக்கு இருப்பதாக மகாபாரதக் கதை கூறுகிறது. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.

இராமாயணக் காவியத்தில் இடம்பெற்ற இராவண்ணன், கும்பகர்ணன் இருவரும் இவருடைய மாற்றாந்தாய் பிள்ளையாவார்கள். சூர்ப்பனகை இவருடைய தங்கையாக குறிப்பிடப்படுகிறார். இலங்கையை குபேரன் ஆண்டு கொண்டிருந்ததாகவும், அதை இராவணன் தட்டிப் பரித்ததாகவும் நம்புகிறார்கள்.



3[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/3

அக்னி தேவன்

பிரம்மா இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர் ஆவார். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்களுள் பிரம்மா படைத்தல் தொழிலுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். இவர் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையில் வேதன் என குறிப்பிடப்படுகிறார்.

இந்த தெய்வத்தை வேதாந்தத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் பிரம்மத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

பிரம்மாவின் மனைவியாக சரஸ்வதி இருக்கிறார். மகனாக நாரதரை இந்துக்கள் குறிப்பிடுகின்றனர்,.


4[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/4

பீஷண பைரவர்

பீட்சன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.


5[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/5 கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம். கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் (மூடப்)பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு.


6[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/6

மோகினி

மோகினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோகினி) என்பது இந்து கடவுளான திருமால் எடுத்த பெண் அவதாரமாகும். காண்போரை தன்னுடைய மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடைய இந்த அவதாரம், மோகினி அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்து தொன்மவியலில் மோகினி அவதாரம் பற்றி மகாபாரதத்திலும், பாகவதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால் பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும், பிட்சாடனருடன் இணைந்து தருகாவன ரிசிகளின் ஆணவம் அழிக்கவும், பசுமாசுரனை அழிக்கவும் என பல முறை மோகினியாக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மோகினி, சிவனுடன் உடலுறவில் ஈடுபட்டு சாஸ்தா என்ற குழந்தையை தோற்றுவித்தாகவும், பாரதபோரில் களபலி தருவதற்காக தேர்ந்தெடுக்கப்பெற்ற அரவானின் திருமண ஆசையை நிறைவேற்றியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.


7[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/7

பகவதி

பகவதி (Bhagavathi அல்லது Bhagavati) கேரளாவில் மலையாள மொழியில் இந்துபெண்கடவுளரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. சமசுகிருதத்தில் பெண்கடவுள் எனப் பொருள்படும் இச்சொல் துர்கா, பார்வதி, கண்ணகி, சரசுவதி, இலட்சுமி, காளி என பல்வேறு வடிவங்களில் தொழப்படும் பெண் கடவுள்களைக் குறிப்பதாக அங்கு அமைந்துள்ளது. இக்கடவுளரின் கோவில்கள் பகவதி சேத்திரங்கள் (கோவில்கள்) என்றழைக்கப்படுகின்றன.


8[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/8 காசி (வாரணாசி) நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி வர்ணிக்கப்படுகிறார். கா என்பது காரணத்தையும், ச என்பது அமைதியையும், இ என்பது உடலையும் குறிக்கும். எனவே இந்நகரம் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.

சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், உலகம் மாயை என்றும் இம்மாயையில் உணவும் ஒரு பகுதி எனக் கூற, உணவு உட்பட அனைத்துப் பொருட்களின் கடவுளாக வணங்கப்படும் பார்வதி சீற்றமடைந்தார். இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் (சக்தி) உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார். பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்தது, உலகமே வெறுமையானது. எங்குமே உணவின்றி எல்லாரும் பசியால் வாடினர். மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி, மீண்டும் தோன்றி காசியில் உணவுக்கூடம் அமைத்தார்.

உடனே தன் உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு பார்வதியிடம் சென்ற சிவன், “இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் மாயையல்ல என்றும் அறிந்து கொண்டேன்” என்று கூறுகிறார். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி, தன் கையால் உணவு வழங்கி மகிழ்ந்தார். அப்போதிலிருந்து பார்வதி, நலவாழ்வுக்கான கடவுளாக வணங்கப்படுகிறார்.


9[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/9

இசக்கி அம்மன்

இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம். இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி ,சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன் பள்ளர்,கோனார், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களின் குலத் தெய்வமாகும். இசக்கி அம்மன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

இசக்கி அம்மன் என்பது இயக்கி அம்மன் என்பதன் மருவிய வடிவம். இசக்கி அம்மன் வழிபாடு வட மொழி கலந்த இந்து சமய வழிபாட்டு முறைகளுக்கு உட்பட்டது அல்ல. குறிப்பாக இசக்கி அம்மன் பூசாரிகள் பொதுவாக பள்ளர், கோனார்,நாடார் ஆகிய ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்தே வருகின்றனர்.


10[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/10

சரசுவதி

சரசுவதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரசுவதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.

'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.


பரிந்துரைகள்[தொகு]

[[Image:{{{image}}}|115px|{{{caption}}}]]

{{{text}}}

[[{{{link}}}|மேலும்...]]