வலன்டீனா டெரெஷ்கோவா
| வலன்டீனா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா Valentina Vladimirovna Tereshkova Валенти́на Влади́мировна Терешко́ва |
|
|---|---|
வலன்டீனா டெரெசுகோவா,1963 |
|
| Cosmonaut | |
| தேசியம் | ரஷ்யர் |
| பிறப்பு | |
| வேறு தொழில் | விமானி |
| படிநிலை | மேஜர் ஜெனரல், சோவியத் விமானப்படை |
| விண்பயண நேரம் | 2நா 22ம 50நி |
| தெரிவு | 1962 பெண்கள் பிரிவு |
| பயணங்கள் | வஸ்தோக் 6 |
| பயண சின்னம் |
150px |
வலன்டீனா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா (Valentina Vladimirovna Tereshkova; ரஷ்ய மொழி: Валенти́на Влади́мировна Терешко́ва; பிறப்பு: மார்ச் 6 1937), என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வஸ்தோக் 6 விண்கலத்தில் ஜூன் 16 1963 அன்று விண்வெளிக்கு சென்று அங்கு 3 நாட்களுக்குச் சற்றுக் குறைவாக தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
1961 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலெண்டினா திரஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.
வோஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
ஜூன் 19 ம் தேதி விண்கலம் பூமிநோக்கி பாய்ந்து வந்தபோது, தரையிரங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார். ‘ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்’ என்ற மெடலுடன் ‘லெனின் விருது’ மற்றும் பல விருதுகள் குவிந்தன. இந்த வெற்றி அத்தனையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தார் வாலெண்டினா.