வர்ணகுலசிங்கம் முருகதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முருகதாசன்

வர்ணகுலசிங்கம் முருகதாசன் (Varnakulasingham Murugathasan) (டிசம்பர் 2, 1982 - பெப்ரவரி 12, 2009) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர்.

அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்[1].

இலங்கையின் உள்நாட்டுப் போரை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 2009, பெப்ரவரி 12 தீக்குளித்து மரணமடைந்த முருகதாஸ் விரும்பியிருந்தார் என்று லண்டன் பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[2].

ஈகப்பேரொளி முருகதாசனின் இறுதிவணக்கம் பிரித்தானியாவில் மார்ச் 7, 2009 நடைபெற்றது.[3]

பொருளடக்கம்

[தொகு] இறுதி சாசனம்

Wikisource-logo.svg
விக்கிமூலத்தில் பின் வரும் தலைப்புக்கான மூலம் தொகுக்கப்பட்டுள்ளது:

முருகதாசனின் இறுதி மரண சாசனக் கடிதம் ஏழு பக்கங்களைக் கொண்ட நீண்ட கடிதம். இக்கடிதத்தில் கூடுதலான பக்கங்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதோடு, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. உரிமையை காக்க போராடுவதில் என்ன தவறு என்றும் அவர் கேட்டுள்ளார். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறி, உண்மைக்காக உயிர் தருவதாகதெரிவித்து தனது மரணசாசனத்தை முடித்துள்ளார்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்; மரணசாசன அறிக்கை இணைப்பு
  2. http://news.bbc.co.uk/1/hi/uk/7929236.stm
  3. http://www.tamilwin.org/view.php?2a26QVP4b33Z9ECe4d46Wn5cb0bf7GU24d2YYpD4e0dVZLu0ce03g2hF0cc3tj0Cde

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி