வரிச்சுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியலில் ஒரு குழு அல்லது நபரின் வரிச்சுமை (Tax incidence or Tax burden) என்பது அவர்கள் கட்டவேண்டிய வரியின் அளவைக் குறிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வரி வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு விகிதத்தில் விதிக்கப்படலாம். வரிவிகிதத்தை மட்டும் கருத்தில் கொண்டால், அக்குழுவின் மீது அவ்வரியின் தாக்கம் என்ன என்பதை முழுமையாக அறிய முடியாது. மாற்றாக, அக்குழு சுமக்கும் முழு வரிச்சுமையின் அளவே அவ்வரியின் தாக்கத்தை உணர்த்துகிறது. நலப்பணிப் பொருளியல் முறையில், ஒரு குறிப்பிட்ட வரியின் தாக்கத்தை ஆராய வரிச்சுமை கணக்கு உதவுகின்றது. தேவை மற்றும் வழங்கலின் விலை நெகிழ்ச்சியினை விளக்கவும் இக்கலைச்சொல் பயன்படுகிறது. ஒரு பண்டத்தின் மீதோ அல்லது ஒரு சேவையின் மீதோ புதிய வரியொன்று விதிக்கப்பட்டால், வழங்கலை விட தேவை அதிகமாக இருப்பின் வாங்குவோரின் வரிச்சுமை கூடுகின்றது. தேவையை விட வழங்கல் அதிகமாக இருப்பின் விற்போரின் வரிச்சுமை கூடுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிச்சுமை&oldid=2718745" இலிருந்து மீள்விக்கப்பட்டது