வரிசைமாற்றக்குலத்தில் இணையியத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில் குலக்கோட்பாட்டில், குறிப்பாக, பரிமாற்றலற்ற குலங்களில், இணை இயத்தல் (Conjugation) என்ற செயல்பாடு குலத்தின் உட்கூறுகளை ஆழ்ந்து நோக்கப் பயன்படுகிறது. இக்கட்டுரை வரிசைமாற்றக்குலத்தில் (Permutation group) இச்செயல்பாட்டைப் பற்றிப் பேசுகிறது.

பொருளடக்கம்

[தொகு] இணையியம்

G ஒரு குலம் என்று கொள்க. b \in G, a \in G இனுடைய இணையியம் (Conjugate) என்பதற்கு இலக்கணம்:

ஏதாவதொரு g \in G க்கு, b = gag − 1.

எளிதாகவே இணையியத்தல் ஒருசமான உறவு என்று கண்டுகொள்ளலாம்.

a என்ற ஓர் உறுப்புக்கு இணையியமாக உள்ளதையெல்லாம் ஒரு பகுதியில் போட்டால், a இன் இணையியச் சமானப்பகுதி (Conjugate equivalence class of a)கிடைக்கும். உண்மையில்,

a இன் இணையியச் சமானப்பகுதி = \{gag^{-1} : g \in G\}. இதற்குக்குறியீடு: Cl(a).

[தொகு] அவதானக் குறிப்பு

இணையியத்திற்காக உள்ள வாய்பாடு b = gag − 1 ஐ நினைவில் வைத்துக்கொள்ள பாமர வழக்கில் ஒரு குறிப்பு:

'கண்களை மூடு; பரம்பொருளை மனதில் நிறுத்து; மூடின கண்களைத்திற'. இதுதான் gag − 1.

[தொகு] வரிசைமாற்றக் குலங்களில் எடுத்துக் காட்டுகள்

  • S3 ஐ நோக்குவோம். உறுப்பு (b)(ca), உறுப்பு (a)(bc) இன் இணையியம். ஏனென்றால், g = (c)(ab) என்ற உறுப்பு இணையியத்துக்கு வேண்டிய செயல்பாட்டைச் சரிசெய்கிறது. அதாவது,
((c)(ab))((a)(bc))((c)(ab)) − 1
= ((c)(ab))((a)(bc))((c)(ab));
= ((c)(ab))(acb); ஏனென்றால், a \rightarrow b \rightarrow c, b\rightarrow a\rightarrow a, c \rightarrow c \rightarrow b.
= (b)(ac) ஏனென்றால், a \rightarrow c \rightarrow c, b\rightarrow a \rightarrow b, c \rightarrow b \rightarrow a.
  • மறுபடியும், S3 இல்,
Cl((c)(ab)) = {(c)(ab),(b)(ac),(a)(bc)}
Cl(abc) = {(abc),(acb)}

[தொகு] இணையியமும் சுழலமைப்பும்

தேற்றம்: Sn இல் இரண்டு வரிசைமாற்றங்கள் ஒரே சுழலமைப்புள்ளதாக இருந்தால், இருந்தால்தான், அவை இணையியங்களாக இருக்கும்.

முதலில் 'இருந்தால்தான்' பாகத்தை நிறுவுவோம்.

அதாவது வரிசைமாற்றங்கள் σ வையும் அதன் இணையியம் τστ − 1 ஐயும் பார்ப்போம்.

τστ − 1 = \begin{pmatrix} i \\
\tau(i)
\end{pmatrix} \begin{pmatrix}
i \\
\sigma(i)
\end{pmatrix} \begin{pmatrix}
\tau(i) \\
i
\end{pmatrix}

=\begin{pmatrix}
\tau(i) \\
\tau\sigma(i)
\end{pmatrix} இதன் சுழலமைப்பு σ வின் சுழலமைப்புதான்.

மாறாக, 'இருந்தால்' பாகத்தை நிறுவ, σ σ * என்ற இரண்டு வரிசைமாற்றங்கள் ஒரே சுழலமைப்பைப் பெற்றிருப்பதாகக் கொள்வோம்.இரண்டும் ஒரேசுழலமைப்பைப் பெற்றிருப்பதால்,அவைகளை பின்வருமாறு குறிகாட்டலாம்:

σ = (a1...ar)(b1...bs)(c1...ct)...(f1)(f2)...(fq)
\sigma^* =  (a_1^*...a_r^*)(b_1^*...b_s^*)(c_1^*...c_t^*)...(f_1^*)(f_2^*)...(f_q^*)

இப்பொழுது, σ வும் σ * ம் இணையியங்கள் என்று காட்டுவோம்.

τ என்ற ஒரு வரிசைமாற்றத்தை பின்வருமாறு வரையறை செய்யலாம்:

\tau(a_i) = a_i^*,  i = 1,...,r
\tau(b_i) = b_i^*,  i = 1,...,s
\tau(c_i) = c_i^*,  i = 1,...,t
.....
\tau(f_i) = f_i^*, i = 1,...,q

ஆகக்கூடி, இப்பொழுது, τστ − 1 = σ * என்பதை எளிதில் சரிபார்ர்த்துவிடலாம். \therefore \sigma வும் σ * ம் இணையியங்கள். Q.E.D.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்