கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
வன்வட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வன்தட்டு நிலை நினைவகத்தின் (வநிநி) உள்தோற்றம். செம்பழுப்பு நிறத்தில் தெரிவது காந்தப்பூச்சு கொண்ட வட்டை. வட்டையின் மேல் நடுவே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியின் நுனியில் காத்தத்தன்மையைத் துல்லியமாக உணரும் காந்த உணரி அல்லது காந்த உணர்நுனி உள்ளது. காந்த வட்டை சுழலும் பொழுது, இந்த உணர்நுனி காந்த வடமுனை-தென்முனை அமைப்பை விரைந்து உணர்ந்து அச்செய்தியை கடத்தி தெரிவிக்கவல்லது. அல்லது விரும்பிய வாறு காந்தப் பூச்சுள்ள வட்டையில் வடமுனை-தென்முனைப் பதிவுகளை பதிவிக்க வல்லது (எழுத வல்லது).
வன்தட்டு நிலை நினைவகம் (வநிநி) கணினியில் இருக்கும் நிலை. காந்தப் பூச்சுடைய வட்டையின் மீது தொடாமல் ஆனால் மிக மிக நெஉக்கமாக நகரும் காந்த உணரிநுனியை தாங்கி இருக்கும் கையைப் படத்தில் பார்க்கலாம். வட்டை சுழலும் பொழுது உணரிநுனிக்கை மையத்தை நோக்கியும் மையத்தை விட்டு விலகியும் நகர்வதன் மூலம் வட்டையில் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் 0,1 என்னும் இரும எண்முறையில் தரவுகளைப் பதிவிக்கவும், பதிவித்ததை உணர்ந்து படிக்கவும் முடியும்
வன்தட்டு நிலை நினைவகம் (வநிநி, hard disk drive, HDD) என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக் கணினி, மடிக்கணினி, குறுமடிக்கணினி (net top), போன்ற கணினிகளில் கணினியைப் பயன்படுத்தத் தேவையான இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம் (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (வநிநி) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (வட்டைகளில்), 0,1 என்னும் இரும முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode) செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் மணித்துளிக்கு (நிமிடத்திற்கு) பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லது, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு எழுதுதல் என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் படிக்கவும் முடியும்.
வன்தட்டு நிலை நினைவகமத்தை (வநிநி) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே 1956 இல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது [1]). ஆனால் இன்று இத்தகைய வநிநிகள் கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றது.
வன்தட்டு நிலை நினைவகக் (வநிநி) கொள்ளளவு வளர்ச்சி. 1980இல் 0.005 கிகா பைட் (5 மெகா பைட்) அளவு ஆக இருந்தது இன்று 1000 கிகா பைட் (= ஒரு டெரா பைட்) அளவகாக வளர்ந்துள்ளது. இந்த 28 ஆண்டுகளில் 100,000 மடங்குக்கும் மேல் வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஒர்அடுக்குப்படி வளர்ச்சி (exponential growth). படத்தில் y-அச்சு மடக்கை (logarithmic) அளவில் அமைந்துள்ளதை நோக்கவும்.
- ↑ [1] IBM 350 disk storage unit