வண்ணக் கதிர்ஏற்பளவுமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணக் கதிர்ஏற்பளவுமானி (chromo radiation dosimeter) என்பது கதிர் ஏற்பளவினை அளவிடப் பயன்படும் ஒரு கருவியாகும்.

பொட்டாசியம் குளோரைட், சோடியம் கார்பனேட் போன்றக் கூட்டுப்பொருட்களின் வண்ணம் (நிறம்) கதிர்வீச்சினை ஏற்று மாறுபடுகிறது எனும் உண்மையினை அடிப்படையாக் கொண்டு செயல்படும் கருவி இதுவாகும். மிக உயர்ந்த அளவுகளை (ஆயிரக்கணக்கான கிரே) அளவிட பயனாகிறது. நீரில் கலந்துள்ள குளோரோபார்முடன் சிறிது சாயம் அல்லது வண்ணப் பொருட்கள் கலந்த கரைசல் வண்ணக் கதிர்ஏற்பளவுமானியாகப் பயன்படுத்தப்பட்டது. குளோரபார்மிற்குப் பதில் ஐயோடபார்மும் பயன்படுத்தலாம்.