வட்டப்புழு
| வட்டப்புழு (நேமதோடா) Nematodes |
||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
![]() ஈரமண்ணில் உள்ள ஒரு வட்டப்புழு.
|
||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||
|
||||||||
| வகுப்புகள் | ||||||||
|
||||||||
| வேறு பெயர்கள் | ||||||||
|
Nematoidea Rudolphi, 1808 |
வட்டப்புழு (roundworm) என்பவை நேமதோடா (phylum: nematoda) என்னும் தொகுதியை (phylum) சார்ந்தவைகளாகும். இந்த தொகுதியின் கீழ் வாழும் இந்த புழுக்களில் ஏறத்தாழ 80,000 சிற்றினங்கள் உள்ளன. அவற்றுள் 15000 ஒட்டுண்ணிகள் வகையை சார்ந்தது ஆகும். மேலும் இந்த தொகுதியின் கீழ் வாழும் கணக்கில் உள்ள மற்றும் கணக்கில் இல்லாத சிற்றினங்கள் மொத்தம் 500,000 இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வட்டப்புழுக்கள் நீளமான குழை போன்ற உடல் அமைப்பினை கொண்டவை.
[தொகு] வாழிடம்
வட்டப்புழுக்கள் எந்த வகையான வாழ்சூழலியலிலும் வாழப் பழகிகொண்டவை. பனிப் பிரதேசங்கள், சமவெளிகள், காடுகள்] என அனைத்து இடங்களிலும் இவை காணப்படும். அண்டார்டிக்கா போன்று மனிதர்கள் வாழ முடியாத இடங்களில் கூட இவைகள் வாழும். ஆழ் கடலில் காணப்படும் 90 விழுக்காடு உயிர்கள் வட்டப்புழு வகையை சார்ந்தவைகள். இதனை அவைகள் க்ரிப்டோபயோசிஸ் (cryptobiosis) என்கிற வழிமுறை மூலம் செய்கின்றன. க்ரிப்டோபயோசிஸ் மூலம் வட்டப்புழுக்கள் தங்களின் வளர்சிதைமாற்றத்தை (Metabolism) தற்காலிகமாக நிறுத்திக் கொள்கின்றன.
