வடிவவியல் உருமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவவியல் உருமாற்றம் (geometric transformation) என்பது சில வடிவவியல் அமைப்புகளைக் கொண்ட கணத்திலிருந்து அதே கணத்தை அல்லது அதைப்போன்ற வேறொரு கணத்தைத் தொடர்புபடுத்தும் ஒரு இருவழிக்கோப்பு ஆகும். குறிப்பாக, "வடிவவியல் உருமாற்றம் என்பது புள்ளிகளின் கணங்களை ஆட்களமாகவும் வீச்சாகவும் கொண்ட சார்பாகும். பெரும்பாலும் ஒரு வடிவவியல் உருமாற்றத்தின் ஆட்களம், வீச்சு இரண்டுமே R2 அல்லது R3 ஆக இருக்கும். பெரும்பான்மை வடிவவியல் உருமாற்றங்கள் 1-1 சார்புகளாக இருப்பதால் அவற்றுக்கு நேர்மாறு உண்டு." [1] இந்த உருமாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமாக வடிவவியலைத் தெரிந்து கொள்ளலாம்.[2]

வடிவவியல் உருமாற்றங்களின் ஆட்களங்களின் பரிமாணங்களைக் கொண்டு அவற்றை வகைப்படுத்தலாம். அதாவது அவை தள உருமாற்றங்களா அல்லது வெளி உருமாற்றங்களா எனக் காணலாம். மேலும், அவை பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டும் அவற்றை வகைப்படுத்தலாம்:

இவை ஒவ்வொன்றும் முந்தைய வகை உருமாற்றத்தை உள்ளடக்கியவையாகும்.[4]

ஒரேவகையைச் சேர்ந்த உருமாற்றங்கள் அனைத்தும் சார்புகளின் தொகுப்பு செயலைப் பொறுத்து ஒரு குலம் ஆகும். இவை பிற உருமாற்றங்களின் உட்குலங்களாகவும் அமையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zalman Usiskin, Anthony L. Peressini, Elena Marchisotto – Mathematics for High School Teachers: An Advanced Perspective, page 84.
  2. Venema, Gerard A. (2006), Foundations of Geometry, Pearson Prentice Hall, p. 285, ISBN 9780131437005
  3. 3.0 3.1 வடிவவியல் உருமாற்றம், p. 131, கூகுள் புத்தகங்களில்
  4. 4.0 4.1 Leland Wilkinson, D. Wills, D. Rope, A. Norton, R. Dubbs – ''வடிவவியல் உருமாற்றம், p. 182, கூகுள் புத்தகங்களில்

மேலும் வாசிக்க[தொகு]

  • John McCleary – Geometry from a Differentiable Viewpoint.
  • A. N. Pressley – Elementary Differential Geometry.
  • David Hilbert, Stephan Cohn-Vossen – Geometry and the Imagination.
  • David Gans – Transformations and geometries.
  • Irving Adler – A New Look at Geometry.
  • Isaak Yaglom|Yaglom, I. M. (1962, 1968, 1973, 2009) . Geometric Transformations (4 vols.). Random House (I, II & III), Mathematical Association of America (I, II, III & IV).
  • Zoltán Pál Dienes|Dienes, Z. P.; Golding, E. W. (1967) . Geometry Through Transformations (3 vols.): Geometry of Distortion, Geometry of Congruence, and Groups and Coordinates. New York: Herder and Herder.
  • Modenov, P. S.; Parkhomenko, A. S. (1965) . Geometric Transformations (2 vols.): Euclidean and Affine Transformations, and Projective Transformations. New York: Academic Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவவியல்_உருமாற்றம்&oldid=3754962" இலிருந்து மீள்விக்கப்பட்டது