வடகிழக்கு பருவமழை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது. [1]
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமும் மழையளவும் [தொகு]
(இராச)மன்னார்குடியில் வடகிழக்கு பருவமழை மேகத்திரள்
| வருடம் |
தொடக்க தேதி |
பெய்த மழையின் அளவு (mm) |
சராசரி மழையளவு (mm) |
வேறுபாடு (%) |
| 1990 |
19 அக்டோபர் |
468 |
483 |
- 3 |
| 1991 |
20 அக்டோபர் |
488 |
477 |
+ 2 |
| 1992 |
2 நவம்பர் |
514 |
470 |
+ 9 |
| 1993 |
21 அக்டோபர் |
784 |
479 |
479 |
| 1994 |
18 அக்டோபர் |
534 |
418 |
+ 12 |
| 1995 |
23 அக்டோபர் |
260 |
479 |
- 46 |
| 1996 |
11 அக்டோபர் |
592 |
477 |
+ 24 |
| 1997 |
13 அக்டோபர் |
810 |
478 |
+ 70 |
| 1998 |
28 அக்டோபர் |
619 |
478 |
+ 30 |
| 1999 |
21 அக்டோபர் |
517 |
483 |
+ 7 |
| 2000 |
2 நவம்பர் |
346 |
483 |
-28 |
| 2001 |
16 அக்டோபர் |
382 |
483 |
-21 |
| 2002 |
25 அக்டோபர் |
395 |
483 |
-14 |
| 2003 |
19 அக்டோபர் |
435 |
469 |
-7 |
| 2004 |
18 அக்டோபர் |
435 |
432 |
+ 1 |
| 2005 |
12 அக்டோபர் |
773 |
432 |
+ 79 |
| 2006 |
19 அக்டோபர் |
497 |
432 |
+ 15 |
|
[2]
வெளியிணைப்புகள் [தொகு]
-
- செயற்கைக்கோள் படங்களுக்கு [3]
- இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை [4]
- மாவட்ட-வாரியாக மழையளவு [5]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ india meteorological department [1]
- ↑ imd chennai [2]
|
|