லகோத்சே மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லோட்சே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| லகோத்ஸே மலை | |
|---|---|
லகோத்ஸே மலையின் தென் புறம் (சுக்குங் ரி என்னும் இடம்வரை ஏறியபின் தென் படும் தோற்றம்) |
|
| உயரம் | 8,516 மீட்டர்கள் (27,940 அடி) |
| அமைவிடம் | கூம்பு, நேபாளம், சீனா, இமயமலை |
| தொடர் | இமயமலை |
| சிறப்பு | 8,516 மீ உயரத்தில் 4 ஆவது |
| ஆள்கூறுகள் | |
| முதல் ஏற்றம் | மே 18 1956 |
| சுலப வழி | பையாறு,பனிப்பாளம், நுரைபனி |
ல்கோத்ஸே என்னும் மலை (Lhotse, நேபாளத்தில் ल्होत्से, சீனாவில் Lhozê; திபேத்திய மொழியில்: lho rtse; சீன மொழியில்: 洛子峰, பின்யிங்ல்: Luòzǐ Fēng) உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெஸ்ட் மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.