லைலத்துல் கத்ர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97 : 1-5)"

திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது எனவும் இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான் அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் (21,23,25,27 மற்றும் 29வது இரவுகளில் )அமைந்திருக்கும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

லைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. இந்த கருத்து தவறு என்பதை உணர்ந்து கொள்ள, இதனைப் பற்றிய ஹதீஸ்:

எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மேற்கோள்கள்[தொகு]

சத்தியமார்க்கம்.காம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைலத்துல்_கத்ர்&oldid=1696830" இலிருந்து மீள்விக்கப்பட்டது