லைக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லைக்கா (பெண் நாய்)

லைக்கா (Laika, ரஷ்ய மொழி: Лайка), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குதிரியாவ்க்கா" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.[1]

லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "விண்ணில் முதல் நாய் பற்றிய செய்திகள் 45 ஆண்டுகள் கழித்து வெளிவந்தது". Dogs in the News (2002-11-03). பார்த்த நாள் 4 அக்டோபர், 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:

"http://ta.wikipedia.org/w/index.php?title=லைக்கா&oldid=1750236" இருந்து மீள்விக்கப்பட்டது