லெவியாதன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெவியாதன்
Frontispiece of "Leviathan," by Abraham Bosse, with input from Hobbes.
நூலாசிரியர்தாமசு ஆபீசு
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம், இலத்தீன்
வெளியிடப்பட்ட நாள்
1651
ஊடக வகைதாள்

லெவியாதன் அல்லது பொதுநலவாய சமயம் மற்றும் குடிமையின் பொருள், வடிவம் மற்றும் அதிகாரம் (Leviathan or The Matter, Forme and Power of a Common Wealth Ecclesiasticall and Civil) — பொதுவாக லெவியாதன் எனக் குறிப்பிடப்படும்— நூல் தாமசு ஆபீசால் (1588–1679) எழுதப்பட்டு 1651இல் பதிப்பிக்கப்பட்டதாகும். இதன் தலைப்பு விவிலிய லெவியாதனிடமிருந்து பெறப்பட்டது. இந்த நூல் சமூக கட்டமைப்பையும் சட்டபூர்வ அரசையும் குறித்தானது;இது சமூக உடன்பாட்டுக் கொள்கைக்கான மிகத் தொன்மையான, மிகுந்த தாக்கமுள்ள எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.[1] லெவியாதன் பன்னாட்டு உறவில் அதிகாரம் குறித்த செவ்வியல் மேற்கத்திய படைப்பாக நிக்கோலோ மாக்கியவெல்லியின் தி பிரின்சுக்கு இணையாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் போது (1642–1651) எழுதப்பட்ட லெவியாதன் சமூக உடன்பாட்டிற்காகவும் முழுமையான இறையாண்மையுள்ள அரசால் ஆளப்படும் தேவையையும் வாதிடுகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் அதனால் எழுந்த வன்முறை இயல்நிலையும் ("அனைவரும் அனைவருடனும் சண்டை") வலுவான பிளவற்ற அரசால் தவிர்க்க முடியும் என எழுதினார்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவியாதன்_(நூல்)&oldid=2133060" இலிருந்து மீள்விக்கப்பட்டது